அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கைகள்

Google வெளியீட்டாளர் கொள்கைகள்

(மார்ச் 23, 2022) உக்ரைனில் நடைபெறும் போரின் காரணமாக, அந்தப் போரைத் தவறாகப் பயன்படுத்துகின்ற, நிராகரிக்கின்ற அல்லது ஏற்கின்ற உள்ளடக்கம் மூலம் வருமானம் ஈட்டுவதை நாங்கள் இடைநிறுத்துவோம்.

(மார்ச் 10, 2022): சமீபத்தில் Google விளம்பரப்படுத்தல் சிஸ்டங்கள் ரஷ்யாவில் இடைநிறுத்தப்பட்ட நிலையில், ரஷ்யாவில் உள்ளவர்கள் AdSense, AdMob, Google Ad Manager ஆகியவற்றில் புதிய கணக்குகளை உருவாக்குவதை இடைநிறுத்தவுள்ளோம். அத்துடன், ரஷ்யாவில் இருக்கும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களை உலகளவில் Google தயாரிப்புகள் மற்றும் நெட்வொர்க்குகளில் காட்டுவதையும் இடைநிறுத்துவோம்.

(மார்ச் 3, 2022) உக்ரைனில் தற்போது நடைபெறும் போர் காரணமாக, ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்படும் விளம்பரச் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம்.

(பிப்ரவரி 26, 2022) உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக, ரஷ்யன் ஃபெடரேஷன் அரசின் நிதியுதவியில் இயங்கும் மீடியாவிற்கு Googleளின் வருமானம் ஈட்டுதலை இடைநிறுத்துகிறோம். 

இந்தச் சூழலை நாங்கள் தொடர்ந்து கவனமாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்வோம்.

அனைத்து Google வெளியீட்டாளர் கொள்கைகளையும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளையும் புதிய வெளியீட்டாளர் கொள்கைகள் உதவி மையத்திற்கு நகர்த்தி ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளோம். இப்போதைக்கு, அனைத்துக் கொள்கைகளையும் நீங்கள் தொடர்ந்து AdMob, AdSense, Ad Manager ஆகியவற்றின் உதவி மையங்களில் பார்க்கலாம். 

Google விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் உள்ளடக்கம் மூலம் வருமானம் ஈட்டுகிறீர்கள் எனில் பின்வரும் கொள்கைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். இந்தக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறினால் உங்கள் உள்ளடக்கத்தில் காட்டப்படும் விளம்பரங்களை Google தடுக்கவோ உங்கள் கணக்கை இடைநிறுத்தவோ முழுமையாக நிறுத்திவிடவோ வாய்ப்புள்ளது.

உங்களின் Google வெளியீட்டாளர் தயாரிப்புகளின் உபயோகத்தை நிர்வகிக்கும் பிற கொள்கைகளுடன் சேர்த்து கூடுதலாக இந்தக் கொள்கைகளும் பொருந்தும்.

வெளியிடும் உள்ளடக்கத்தின் மூலம் வெளியீட்டாளர்கள் வருமானம் ஈட்டவும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள மற்றும் பொருத்தமான தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரதாரர்கள் வழங்கவும், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான இலவச இணைய சேவை கிடைக்க Google உதவுகிறது. விளம்பரச் சூழலமைப்பில் பயனர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வருமானம் ஈட்டும் உள்ளடக்கத்திற்கான வரம்புகளை அமைக்க வேண்டியது அவசியம்.

பின்வரும் வகைகளில் Google வெளியீட்டாளர் கொள்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன:

பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொள்கை தொடர்பான சொற்கள் குறித்தும் சொற்களஞ்சியத்தில் அவற்றின் அர்த்தம் என்ன என்பது குறித்தும் மேலும் அறிந்துகொள்ளுங்கள். 

உள்ளடக்கக் கொள்கைகள் 

சட்டவிரோதமான உள்ளடக்கம்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • சட்டவிரோதமானவை, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பவை அல்லது மற்றவர்களின் சட்ட உரிமைகளை மீறுபவை.

 சட்டவிரோதமான உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

அறிவுசார் உடைமையைத் தவறாகப் பயன்படுத்துதல்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • பதிப்புரிமையை மீறும் உள்ளடக்கம். டிஜிட்டல் மில்லேனியம் பதிப்புரிமைச் சட்டம் (DMCA - Digital Millennium Copyright Act) குறிப்பிடும் மீறல்கள் தொடர்பான புகார்களுக்குப் பதிலளிப்பது எங்கள் கொள்கையாகும். இந்தப் படிவத்தின் மூலமாக எதிர் அறிவிப்பை நீங்கள் தாக்கல் செய்யலாம்.
  • போலித் தயாரிப்புகளை விற்பனை செய்தல் அல்லது அவற்றின் விற்பனையை விளம்பரப்படுத்துதல் குறித்த உள்ளடக்கம். போலியான பொருட்களில் வேறொரு பொருளின் வர்த்தகமுத்திரையைப் போன்றே தோற்றமளிக்கும் அல்லது அதிலிருந்து அதிகளவில் பிரித்தறிய முடியாத வகையில் இருக்கும் லோகோ அல்லது வர்த்தகமுத்திரை இருக்கும். பிராண்டு உரிமையாளரின் அசல் தயாரிப்பு என்று பிறரை நம்பவைப்பதற்காக அசல் பிராண்டின் அனைத்து அம்சங்களையும் போலியான முறையில் இவை உள்ளடக்கியிருக்கும்.

அறிவுசார் உடைமையைத் தவறாகப் பயன்படுத்துதல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஆபத்தான அல்லது இழிவுபடுத்தும் உள்ளடக்கம்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • தனி நபரின் மீதோ குழுவினரின் மீதோ அவர்களின் இனம், பிறப்பு, மதம், இயலாமை, வயது, பிறந்த நாடு, சேவை நிலை, பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையிலோ ஒழுங்குமுறைப் பாகுபாடு அல்லது தீண்டாமையுடன் தொடர்புடைய பண்புகளின் அடிப்படையிலோ வெறுப்புணர்வைத் தூண்டி, பாகுபாட்டை ஏற்படுத்திக் கேவலப்படுத்தும் விதமான உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: வெறுப்புணர்வுள்ள குழுக்களையோ வெறுப்புணர்வுடன் ஆயுதமேந்தும் குழுக்களையோ விளம்பரப்படுத்துவது, தனிநபரையோ குழுவினரையோ மனிதத் தன்மையற்றவர்கள் என்றும் கீழானவர்கள் என்றும் வெறுக்கத்தக்கவர்கள் என்றும் மற்றவர்கள் நம்புமாறு ஊக்குவிப்பது குறித்த உள்ளடக்கம்

  • தனிநபருக்கோ குழுவினருக்கோ தொல்லை கொடுக்கக்கூடிய, அச்சுறுத்தக்கூடிய அல்லது மிரட்டக்கூடிய உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: தவறான முறையில் நடத்துவதற்கோ தொல்லை கொடுப்பதற்கோ ஒருவரைத் தனிமைப்படுத்துவது, குறிப்பிட்ட துயரமான நிகழ்வு எதுவும் நிகழவில்லை என்பதைக் குறிப்பாக உணர்த்துவது அல்லது அதில் பாதிக்கப்பட்டவர்களோ, அவர்களின் குடும்பத்தினரோ பொய்யாக நடிக்கிறார்கள் என்று கூறுவது அல்லது அந்த நிகழ்வை மறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது

  • தனக்கோ பிறருக்கோ உடல் அல்லது மனரீதியாகத் தீங்கு ஏற்படும்படி ஊக்குவிக்கும்/அச்சுறுத்தும் உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: தற்கொலை, உணவு வெறுப்பு அல்லது தன்னைத்தானே காயப்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிப்பது, உயிருக்குத் தீங்கு விளைவிக்கப்போவதாக ஒருவரை அச்சுறுத்துவது அல்லது பிறரை உடல்ரீதியாகத் தாக்குவதற்கு அழைப்பது, மற்றவர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பது, அதைப் பெருமைப்படுத்துவது அல்லது நியாயப்படுத்துவது, பயங்கரவாதக் குழுக்களாலோ சர்வதேச அளவில் போதை மருந்துகளைக் கடத்தி விற்பனை செய்யும் அமைப்புகளாலோ அவற்றுக்கு ஆதரவாகவோ உருவாக்கப்பட்டது, அத்தகைய குழுக்களுக்கும் அமைப்புகளுக்கும் ஆட்களைச் சேர்த்தல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, பயங்கரவாதத் தாக்குதல்களைக் கொண்டாடுவது குறித்த உள்ளடக்கம்

  • மிரட்டல் மூலம் சுரண்டிப் பணம் சம்பாதிப்பது குறித்த உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: முறைகேடாகப் பணம் பறிப்பது, பழிவாங்குவதற்காக ஆபாசப் படங்களை வெளியிடுவது, ரகசியங்களை வெளியிடுவதாக அச்சுறுத்துவது

ஆபத்தான மற்றும் இழிவுபடுத்தும் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் கொடுமை அல்லது தேவையற்ற வன்முறையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை ஊக்குவித்தல் (சேவல் சண்டை, நாய் சண்டை போன்றவை)

  • அருகிவரும் அல்லது அபாய நிலையிலிருக்கும் உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட தயாரிப்புகளின் விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: புலிகள், சுறா மீனின் துடுப்புகள், யானைத் தந்தம், புலித் தோல், காண்டாமிருகத்தின் கொம்பு, டால்ஃபின் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்தல்

விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கம்

தவறான பிரதிநிதித்துவம்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • வெளியீட்டாளர் அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கியவர் பற்றியோ உள்ளடக்கத்தின் நோக்கம் அல்லது உள்ளடக்கம் பற்றியோ தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது, தவறாகக் கூறுவது அல்லது அவற்றைப் பற்றிய தகவல்களை மறைப்பது.
  • மற்றொரு தனிநபர், அமைப்பு, தயாரிப்பு/சேவையுடன் கூட்டு வணிகம் புரிவதாகவோ அங்கீகாரம் பெற்றிருப்பதாகவோ தவறான எண்ணத்தைப் பயனர்களிடம் ஏற்படுத்தும் உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: Google பெயரில் வேறு தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவது, நிறுவன லோகோக்களைத் தவறாகப் பயன்படுத்துவது

 தவறான பிரதிநிதித்துவம் பற்றி மேலும் அறிக

நம்பகமற்ற மற்றும் தீங்கிழைக்கும் உரிமைகோரல்கள்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • வெளிப்படையாகத் தவறான தகவல்களைக் கூறி தேர்தல் அல்லது ஜனநாயகச் செயல்பாட்டில் பங்கேற்பதையோ அதில் நம்பிக்கை வைப்பதையோ கணிசமாகக் குறைப்பதற்கு வழிவகுக்கும் உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: பொது வாக்களிப்பு நடைமுறைகள், வயது/பிறந்த இடத்தின் அடிப்படையில் அரசியல் வேட்பாளரின் தகுதி, தேர்தல் முடிவுகள் அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்றல் ஆகியவை குறித்த அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வப் பதிவுகளுடன் முரண்படும் வகையிலுள்ள தகவல்கள்

  • தீங்கிழைக்கக்கூடிய சுகாதார உரிமைகோரல்களை ஊக்குவிப்பது அல்லது நடப்புச் சூழ்நிலை, சுகாதாரம் தொடர்பான நெருக்கடியான காலகட்டங்கள், அதிகாரப்பூர்வ அறிவியல் ரீதியான கருத்துகளுடன் முரண்படுவது ஆகியவை குறித்த உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: தடுப்பூசிக்கு எதிராக வாதிடுவது, எய்ட்ஸ், COVID-19 போன்ற நோய்கள் இருப்பதை மறுப்பது, ஓரினச்சேர்க்கையைக் குணமாக்கும் சிகிச்சை

  • காலநிலை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான, அறிவியல்ரீதியான கருத்துகளில் இருந்து முரண்படும் உள்ளடக்கம்.

 நம்பகமற்ற மற்றும் தீங்கிழைக்கும் உரிமைகோரல்கள் பற்றி மேலும் அறிக

ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள்

இவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • பயனர்களைத் தவறான/தெளிவில்லாத பாசாங்குகளின் மூலம் உள்ளடக்கத்தைப் படிக்கத் தூண்டுதல்.
  • தனிப்பட்ட தகவல்களைத் திருட முற்படுதல் அல்லது பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்படி தூண்டுதல்

    உதாரணம்: ஃபிஷிங் போன்ற சமூகப் பொறியியல்

  • தவறான, நேர்மையற்ற அல்லது ஏமாற்றும்படியான வாக்குறுதிகளின் மூலம் உள்ளடக்கத்தையோ தயாரிப்புகளையோ சேவைகளையோ விளம்பரப்படுத்துதல்.

    உதாரணங்கள்: "விரைவில் பணக்காரர் ஆகுங்கள்" திட்டங்கள்

  • அரசியல், சமூகப் பிரச்சனைகள் அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் விஷயங்கள் தொடர்பான உங்கள் உள்ளடக்கத்தில் பிற வலைதளங்கள்/கணக்குகளுடன் ஒருங்கிணைந்து உங்கள் அடையாளத்தையோ உங்களைப் பற்றிய பிற விவரங்களையோ மறைத்தல்/தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.

  • சொந்த நாட்டையோ உங்களைப் பற்றிய பிற முக்கிய விவரங்களையோ தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தி/மறைத்து நீங்கள் சார்ந்திராத நாட்டிலுள்ள பயனர்களுக்கு அந்த நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சமூகப் பிரச்சனைகள் அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் விஷயங்கள் தொடர்பான உள்ளடக்கத்தை வெளியிடுதல்.

 ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள் பற்றி மேலும் அறிக

உள்நோக்குடன் மாற்றியமைக்கப்பட்ட மீடியா

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • அரசியல், சமூகப் பிரச்சனைகள் அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் விஷயங்கள் தொடர்பாகப் பொய்யாகப் புனையப்பட்ட செய்திகளை ஊடகங்கள் மூலம் வழங்கி பயனர்களை ஏமாற்றும் உள்ளடக்கம்.

 உள்நோக்குடன் மாற்றியமைக்கப்பட்ட மீடியா பற்றி மேலும் அறிக 

மோசடி நடவடிக்கையில் ஈடுபடுதல்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • மற்றவர்களைத் தவறாக வழிநடத்த உதவும் உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: பாஸ்போர்ட்கள், கல்விச் சான்றிதழ்கள் அல்லது தர மதிப்பீடு தொடர்பான போலியான அல்லது தவறான ஆவணங்களை உருவாக்குவது; வினாத்தாள்கள், ஆய்வுக் கட்டுரை எழுதுதல் அல்லது தேர்வுகள் எழுதுவதற்கான சேவைகள் ஆகியவற்றை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது; ஊக்கமருந்துப் பரிசோதனைகளில் எளிதாகத் தேர்ச்சி பெறுவதற்கான தகவல்களையோ தயாரிப்புகளையோ வழங்குவது

  • ஏதாவது ஹேக்கிங் அல்லது கிராக்கிங் செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவது மற்றும்/அல்லது சாதனங்கள், மென்பொருட்கள், சேவையகங்கள் அல்லது வலைதளங்களை மாற்றியமைக்கவோ அவற்றுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலை வழங்குவதற்கோ வழிமுறைகள், கருவிகள் அல்லது மென்பொருட்களைப் பயனர்களுக்கு வழங்குவது.

    உதாரணங்கள்: செல்ஃபோன்களுக்கோ, பிற தகவல்தொடர்புச் சாதனங்களுக்கோ, உள்ளடக்க விநியோக அமைப்புகளுக்கோ அல்லது வேறு சாதனங்களுக்கோ சட்டவிரோத அணுகலை வழங்கும் பக்கங்கள் அல்லது தயாரிப்புகள்; டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை மீறுவது உள்ளிட்ட பதிப்புரிமைப் பாதுகாப்பை மீறும் தயாரிப்புகள் அல்லது சேவைகள்; இலவசமான சேவைகளைப் பெறுவதற்காக கேபிள்களையோ சாட்டிலைட் சிக்னல்களையோ சட்டவிரோதமாகச் சிதைக்க உதவும் தயாரிப்புகள்; உள்ளடக்க வழங்குநரால் தடைசெய்யப்பட்டிருந்தாலும் ஸ்ட்ரீமிங் வீடியோக்களைப் பதிவிறக்க பயனர்களுக்கு உதவும் பக்கங்கள்

  • மற்றொரு நபரையோ அவரின் செயல்பாடுகளையோ அங்கீகாரமின்றிக் கண்காணிக்கவோ மேற்பார்வையிடவோ பயனரை அனுமதிப்பவை அல்லது அவ்வாறு அனுமதி வழங்கும் தயாரிப்புகளையும் சேவைகளையும் ஊக்குவிப்பவை.

    உதாரணங்கள்: மற்றொரு நபரின் உரைகள், ஃபோன் அழைப்புகள், உலாவல் வரலாறு ஆகியவற்றைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்பைவேர்/மால்வேர்; அனுமதியின்றி ஒருவரை உளவு பார்க்கவோ கண்காணிக்கவோ குறிப்பாக விளம்பரப்படுத்தப்படும் GPS கண்காணிப்புக் கருவிகள்; உளவு பார்க்கும் நோக்கத்திற்கென்றே விளம்பரப்படுத்தப்படும் கண்காணிப்பு உபகரணங்கள் (கேமராக்கள், ஆடியோ ரெக்கார்டர்கள், டேஷ் கேமராக்கள், ரகசியக் கேமராக்கள்) ஆகியன போன்ற நெருக்கமானவர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்பைவேர் & தொழில்நுட்பம்

    இதில் அடங்காதவை: (அ) தனியார் புலனாய்வுச் சேவைகள் அல்லது (ஆ) வயதில் மிகவும் குறைவான சிறுவர்களைக் கண்காணிக்கவோ மேற்பார்வையிடவோ பெற்றோருக்காக உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகள்.

 மோசடி நடவடிக்கையை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • அப்பட்டமான பாலியல் உரை, படம், ஆடியோ, வீடியோ அல்லது கேம்களைக் கொண்ட உள்ளடக்கம்.

    உதாரணங்கள் : பிறப்புறுப்பு, ஆசனவாய் மற்றும்/அல்லது வாய்வழி செக்ஸ் போன்ற பாலியல் செயல்கள், சுய இன்பம், கார்ட்டூன் மூலமான ஆபாசப் படம் அல்லது ஹெண்டாய், வெளிப்படையான நிர்வாணம்

  • பலவந்தமான பாலியல் காட்சிகளை உண்மையாகவோ உருவகப்படுத்தியோ காட்டும் உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: பாலியல் வன்புணர்வு, தகாத உறவு, விலங்குகளுடன் பாலுறவு, பிணங்களின் மீதான பாலுணர்வு, கொடுமைப்படுத்தி வன்புணர்வு செய்து கொலைசெய்தல், லோலிடா அல்லது டீன் ஏஜர்களை ஈடுபடுத்தும் ஆபாசப் படம், வயது குறைந்தவர்களுடன் டேட்டிங் ஆகியவை குறித்த உள்ளடக்கம்

  • வெளிப்படையாகப் பாலியல்ரீதியில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட/மாற்றப்பட்ட அல்லது நிர்வாணத்தைக் கொண்டிருக்கும் உள்ளடக்கத்தின் உருவாக்கத்தையோ விநியோகத்தையோ ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்கித் தருவதாகத் தெரிவிக்கும் தளங்கள் அல்லது ஆப்ஸ், டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள், டீப்ஃபேக் ஆபாசச் சேவைகளை ஆதரித்தல் அல்லது ஒப்பிடுதல்

    வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஆதாயத்திற்காக மேற்கொள்ளும் பாலியல் செயல்கள்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • பணம் பெற்றுக்கொண்டு செய்யும் பாலியல்ரீதியான செயலை விளம்பரப்படுத்துவதாகப் பயனர்கள் கருதும்படியான உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: விபச்சாரம், பாலியல் மற்றும் இதர தேவைகளுக்குத் தற்காலிகத் துணைவர்களை வழங்கும் எஸ்கார்ட் சேவைகள், நெருக்கமான மசாஜ், கட்டிப்பிடித்துக் கொள்ள ஆட்களைக் காட்டும் வலைதளங்கள்; காம்பன்சேட்டட் டேட்டிங் அல்லது பாலியல்ரீதியான ஏற்பாடுகள் (இவற்றில் ஈடுபடும் நபர்களில் ஒருவர் மற்றொருவருக்குப் பணம், கிஃப்ட்டுகள், நிதி சார்ந்த ஆதரவு, வழிகாட்டுதல் அல்லது ”சுகர்” டேட்டிங் போன்ற பிற மதிப்புமிக்க பலன்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது)

     ஆதாயத்திற்காக மேற்கொள்ளும் பாலியல் செயல்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மெயில் ஆர்டர் பிரைடுகள்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • வெளிநாட்டினரைத் திருமணம் செய்வதற்கு உதவக்கூடிய உள்ளடக்கம்.

    உதாரணங்கள்: மெயில் ஆர்டர் பிரைடுகள், சர்வதேசத் திருமணத் தரகர்கள், திருமணத்திற்காகப் பெண்களைத் தேடிச் செல்லும் பயணங்கள் ஆகியவை தொடர்பான உள்ளடக்கம்

      மெயில் ஆர்டர் பிரைடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

குடும்பத்திற்கு ஏற்ற உள்ளடக்கத்தில் வயதுவந்தோருக்கான தீம்கள்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • பொதுப் பார்வையாளர்களுக்கு ஏற்ற வலைதளங்களாகத் தோன்றினாலும் அவர்கள் பார்க்கத் தகாத பாலியல், வன்முறை, ஆபாசம் உள்ளிட்ட பெரியவர்களுக்கான உள்ளடக்கத்தையோ சிறுவர்கள்/பிரபலமான சிறுவர்களின் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் மோசமான சித்தரிப்புகளையோ கொண்டிருக்கும் உள்ளடக்கம்.

       குடும்பத்திற்கேற்ற உள்ளடக்கத்தில் வயதுவந்தோருக்கான தீம்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் தவறாகப் பயன்படுத்துதல்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • சிறார்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துதல் / தவறாகப் பயன்படுத்துதல் அல்லது இதுபோன்றவற்றைக் காட்டும் உள்ளடக்கம். சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் அனைத்தும் இதில் அடங்கும்.
  • சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவை உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல):
    • ‘சிறாரைத் தவறான எண்ணத்துடன் அணுகுதல்’ (உதாரணமாக, சிறாரை ஆன்லைன்/ஆஃப்லைனில் பாலியல் ரீதியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஆன்லைனில் அவர்களுடன் நட்பாகப் பழகுதல், பாலியல் ரீதியான படங்களை அவர்களுடன் பரிமாறிக்கொள்ளுதல் போன்றவை);
    • ‘ஒருவரின் பாலியல் ரீதியான படங்களைக் காட்டி, அவரை மிரட்டி பணம் பறித்தல் அல்லது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல்’ (உதாரணமாக, சிறாரின் அந்தரங்கப் படங்களைக் காட்டியோ அவற்றை வைத்திருப்பதாகக் கூறியோ அவரை அச்சுறுத்துதல் அல்லது மிரட்டுதல்);
    • வயது வராதோரைப் பாலியல் வன்கொடுமை செய்தல் (உதாரணமாக, சிறார்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துதல் / தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குறிக்கும், ஊக்குவிக்கும் அல்லது விளம்பரப்படுத்தும் உள்ளடக்கம்); மற்றும்
    • குழந்தைக் கடத்தல் (உதாரணத்திற்கு: வர்த்தக நோக்கத்துடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்த, குழந்தைகளை விளம்பரப்படுத்துதல் அல்லது பணத்திற்காக விற்றுவிடுதல்).

கணக்குகளை முடக்குவதோடு காணாமல் போனவர்களுக்கான & சிறார் கடத்தலுக்கு எதிரான தேசிய மையத்தில் (National Center for Missing & Exploited Children - NCMEC) புகாரளிப்பது உள்ளிட்ட தகுந்த நடவடிக்கையையும் எடுப்போம். ஒரு குழந்தை பாலியல் கொடுமை, தவறான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுதல், குழந்தைக் கடத்தல் போன்ற ஆபத்தில் இருப்பதாகவோ இவற்றுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவோ நீங்கள் நம்பினால் காவல் துறையை உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். எங்கள் தயாரிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துவதால் ஒரு குழந்தை ஆபத்தில் இருப்பதாக நீங்கள் கருதினால் அந்தத் தயாரிப்பின் செயல்பாடு குறித்து Googleளுக்குப் புகாரளிக்கலாம்.

        சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் அவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்


செயல்பாட்டுக் கொள்கைகள் 

நேர்மையற்ற அறிவிப்புகள்

Google விளம்பரப்படுத்தல் சிஸ்டங்களைப் பயன்படுத்துவதற்கும் அவற்றுடன் செயல்படுவதற்கும் வெளியீட்டாளர்கள் வழங்கிய தகவல்கள்:

  • பொருளுள்ளபடி துல்லியமாகவும் முழுமையானதாகவும் தவறாக வழிநடத்துவதாக இல்லாமலும் இருக்க வேண்டும்; மற்றும்
  • ஏமாற்றக்கூடிய அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் வெளிகாட்டக்கூடாது.

    உதாரணங்கள்: வெளியீட்டாளரால் வழங்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் அல்லது பேமெண்ட் விவரங்கள் முழுமையாகவோ தெளிவாகவோ துல்லியமாகவோ இல்லாமல் இருப்பது. வெளியீட்டாளரின் இணையதளம் குறித்து (எ.கா., ads.txt கோப்பில்) அல்லது ஆப்ஸ் குறித்து (எ.கா. app-ads.txt கோப்பில்) வழங்கப்பட்ட தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பது. பகுதியளவுள்ள/துல்லியமற்ற URLகள் அல்லது AppIDகள்.

               நேர்மையற்ற அறிவிப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

விளம்பரங்களின் குறுக்கீடு 

பயனரின் செயல்பாடுகளில் குறுக்கிடக்கூடிய Google வழங்கும் விளம்பரங்கள்

பின்வரும் வகையிலான Google வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • வழிகாட்டுதல் அல்லது பிற செயல்களை மறைக்கும்படியோ அவற்றுக்கு அருகிலோ எதிர்பாராதவிதமாகக் கிளிக் செய்துவிடும் வகையில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள்,
  • உள்ளடக்கத்தைப் பார்ப்பதில் கடுமையாக இடையூறு ஏற்படுத்தும் விளம்பரங்கள் (எ.கா. உள்ளடக்கத்தை மறைத்தல், உள்ளடக்கத்தை காட்சி பகுதிக்கு வெளியே தள்ளுதல்),
  • பயனர் விளம்பரத்தைக் கிளிக் செய்யாமல் திரையை விட்டு வெளியேற முடியாத வகையில் பக்கத்தின் முடிவில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள். 

               விளம்பரங்களின் குறுக்கீடு குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

விளம்பர இருப்பின் மதிப்பு

வெளியீட்டாளரின் உள்ளடக்கம் இல்லாத பக்கங்களில் காட்டப்படும் Google வழங்கும் விளம்பரங்கள்

இவ்வகை பக்கங்களில், Google வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • வெளியீட்டாளர் உள்ளடக்கம் இல்லாத அல்லது குறைவான மதிப்புடைய உள்ளடக்கம் உள்ள பக்கங்கள்,
  • உருவாக்கத்திலுள்ள பக்கங்கள்,
  • அறிவிப்புகள், வழிகாட்டுதல் அல்லது பிற செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பக்கங்கள்

வெளியீட்டாளரின் உள்ளடக்கம் இல்லாத பக்கங்களில் காட்டப்படும் Google வழங்கும் விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

சூழலுக்குத் தொடர்பற்ற விளம்பரங்கள்

பின்வரும் சூழல்களில் Google வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • பின்னணியில் இயங்கும் ஆப்ஸிலோ இணையப்பக்கங்களிலோ காட்டப்படும் விளம்பரங்கள்,
  • காட்சிப் பகுதிக்கு வெளியே காட்டப்படுவது,
  • விளம்பரம் காட்டப்படும் திரை அல்லாது வேறு ஏதேனும் ஒன்றின் மீது பயனரின் கவனம் இருப்பது.

விளம்பரம் எந்த வெளியீட்டாளரின் உள்ளடக்கத்துடன் தொடர்புடையது என்பது பயனருக்குத் தெளிவாகப் புரியும் வகையில் இருக்க வேண்டும்.

சூழலுக்குத் தொடர்பற்ற விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஒரே உள்ளடக்கத்தைக் கொண்ட பக்கங்களில் காட்டப்படும் Google வழங்கும் விளம்பரங்கள்

இவ்வகை பக்கங்களில் Google வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • கூடுதல் கருத்துகளைச் சேர்க்காமலோ ஒழுங்குபடுத்தாமலோ வேறு எந்த வகையிலும் மதிப்பைச் சேர்க்காமலோ பிறரிடமிருந்து உட்பொதிக்கப்பட்ட அல்லது பிரதியெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட பக்கங்கள்.

எங்கள் அறிவுசார் உடைமையைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைக்கும் நீங்கள் இணங்க வேண்டும்.

ஒரே உள்ளடக்கத்தைக் கொண்ட பக்கங்களில் காட்டப்படும் Google வழங்கும் விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

வெளியீட்டாளரின் உள்ளடக்கத்தை விட அதிகமாக இருக்கும் விளம்பரங்கள் அல்லது கட்டண விளம்பரங்களின் உள்ளடக்கம்

இவ்வகை பக்கங்களில் Google வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • வெளியீட்டாளரின் உள்ளடக்கத்தை விட விளம்பரங்களும் மற்ற கட்டண விளம்பர உள்ளடக்கமும் அதிகமாக இருக்கும் பக்கங்கள்.

வெளியீட்டாளரின் உள்ளடக்கத்தை விட அதிகமாக இருக்கும் விளம்பரங்கள் அல்லது கட்டண விளம்பரங்களின் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

 

 ஆதரிக்கப்படாத மொழிகள்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

ஆதரிக்கப்படாத மொழிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

 

 


வீடியோ தொடர்பான கொள்கைகள்

வீடியோ இருப்புக்கான கொள்கைகள்

வீடியோ இருப்புக்கான வருமானம் ஈட்டுதல் என்பது வீடியோ உள்ளடக்கத்திற்குக் கூடுதல் மதிப்பைக் கொண்டுவருவதற்கான ஒரு முறையாகும். இது வெளியீட்டாளர்கள், பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்குப் பயனளிக்கிறது. Google விளம்பரக் குறியீட்டுடன் ("வீடியோ இருப்பு") வருமானம் ஈட்டும் வீடியோ இருப்பு வெளியீட்டாளர்கள், பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு நேர்மறையான அனுபவத்தை வழங்குவதை உறுதிசெய்ய, வீடியோ இருப்பின் தன்மை மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான தேவைகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

இருப்பைத் துல்லியமாக விவரித்தல்

  1. துல்லியமான சிக்னல்களுடனான அறிவிப்புகளை வீடியோ இருப்பு வழங்க வேண்டும் (Ad Managerருக்கு, VAST விளம்பரக் குறிச்சொல் URL அளவுருக்களைப் பார்க்கவும்), இவை உட்பட:
    • விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்தின் ஒலிக்கும் தன்மை: இயல்பாகவே ஒலியுடன் இருத்தல் அல்லது ஒலியடக்கப்பட்டிருத்தல் (Ad Managerருக்கு, vpmute அளவுருவைப் பார்க்கவும்).
    • விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்தின் வகை: வீடியோ உள்ளடக்கத்தைக் கொண்ட வீடியோ பிளேயர்களில் காட்டப்படும் வீடியோ விளம்பரங்கள் 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' அல்லது 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய' விளம்பரத்தைக் காட்டுமிடங்கள் எனத் துல்லியமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் (Ad Managerருக்கு, plcmt அளவுருவைப் பார்க்கவும்). வீடியோ பிளேயர் அல்லாத மற்ற இடங்களில் காட்டப்படும் வீடியோ விளம்பரங்களுக்கு அறிவிப்புகள் தேவையில்லை. இருப்பு வடிவமைப்பின் அடிப்படையில் 'இடையீட்டு' அல்லது 'தனியாக' உள்ள விளம்பரங்களைக் காட்சிப்படுத்துமிடங்கள் எவை என்பதை Google தானாகத் தீர்மானிக்கும்.
      • 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' விளம்பரங்கள் என்பவை வீடியோ அல்லது ஆடியோ உள்ளடக்கத்தின் ஸ்ட்ரீமில் இயங்கும் வீடியோ அல்லது ஆடியோ விளம்பரங்களாகும். அந்த வீடியோ அல்லது ஆடியோ உள்ளடக்கமானது பயனர் வருவதற்குக் காரணமானதாகவோ பயனர் வெளிப்படையாகக் கேட்டதாகவோ இருக்கும்.

        உதாரணம்: பயனர் கேட்ட வீடியோ உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்வதற்கு முன்போ நடுவிலோ பிறகோ இயங்கும் வீடியோ விளம்பரம்.

      • 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய' விளம்பரங்கள் என்பவை பயனர் பார்க்க வந்த முதன்மையான வீடியோ உள்ளடக்க ஸ்ட்ரீமுடன் இயக்கப்படும் வீடியோ விளம்பரங்களைக் குறிக்கின்றன. இந்த வீடியோ உள்ளடக்கமானது பயனர் வருவதற்குக் காரணமானதாகவோ அவர் வெளிப்படையாகக் கேட்டதாகவோ இருக்காது. உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய விளம்பரங்கள் தோன்றும் இடங்கள் பக்கத்திற்குள் ஏற்றப்பட்டு இயல்பாக ஒலியடக்கப்பட்டிருக்க வேண்டும்.

        உதாரணம்: ஒலியடக்கப்பட்ட வீடியோ உள்ளடக்கத்தின் ஸ்ட்ரீமிற்கு முன்போ நடுவிலோ பின்போ, முக்கியமான எடிட்டோரியல் பக்கத்தின் சிறு பகுதியில் காட்டப்படும் வீடியோ விளம்பரம்.

      • "இடையீட்டு விளம்பரம்" என்பது வேறெந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கமும் இடம்பெறாமல் உள்ளடக்கத்திற்கு இடையே மாறும்போது காட்டப்படும் வீடியோ விளம்பரமாகும். இங்கு வீடியோ விளம்பரமே பக்கத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதுடன் காட்சிப் பகுதியின் பெரும்பகுதியில் காட்டப்படும்.

        உதாரணம்: உள்ளடக்கத்திற்கு இடையே கிடைக்கும் இயல்பான இடைவேளை அல்லது உள்ளடக்கத்திற்கு இடையே மாறும்போது வேறு எந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கமும் இல்லாமல் முழுக் காட்சியில் காட்டப்படும் வீடியோ விளம்பரம்.

      • 'தனியாகக்' காட்டப்படும் விளம்பரங்கள் என்பவை வேறெந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கமும் இல்லாமல் இயக்கப்படும் வீடியோ விளம்பரங்களாகும். இவற்றில் அந்த வீடியோ விளம்பரம் பக்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்காது.

        உதாரணம்: வேறெந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கத்தையும் சாராமல், செய்திக் கட்டுரைப் பக்கத்தின் வலதுபக்க ரெயிலில் உள்ள பேனரில் தோன்றும் வீடியோ விளம்பரம்.

குறிப்பு: Ad Managerருக்கு, இந்தக் கொள்கைகளில் குறிப்பிட்டுள்ளபடி, உதவி மையப் பக்கங்களிலும் தயாரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளிலும் உள்ள 'இன்-ஸ்ட்ரீம்' / 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' ஆகிய சொற்கள், 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய', 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய' ஆகிய இரண்டையும் குறிக்கும். இந்தக் கொள்கைகளின்படி 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடியது' அல்லது 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடியது' என்று இருக்கும் Ad Manager வீடியோ இருப்பு, இந்தக் கொள்கைகளில் உள்ள தேவைகளுக்கு இணங்க வேண்டும்.

ஆதரிக்கப்படும் நடைமுறைகளைப் பயன்படுத்துதல்

  1. ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய அல்லது உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய விளம்பரத்தைக் காட்டுமிடமானது Googleளின் அதிகாரப்பூர்வ பீட்டா திட்டம் மூலம் வழங்கப்படவில்லையெனில், ஆதரிக்கப்படும் பிளாட்ஃபார்ம்களில் Googleளின் உடன் பங்கேற்கத்தக்க ஊடக விளம்பரங்களுக்கான SDK அல்லது Google நிரல் சார்ந்த அணுகல் லைப்ரரியைப் பயன்படுத்த வேண்டும்.
    • கூட்டாளர்களும் வெளியீட்டாளர்களும், உடன் பங்கேற்கத்தக்க ஊடக விளம்பரத் தயாரிப்புகளை YouTube உள்ளடக்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவதற்குப் பயன்படுத்த முடியாது. YouTube கூட்டாளர் திட்டம் மூலம் மட்டுமே YouTube உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி கூட்டாளர்களும் வெளியீட்டாளர்களும் வருமானம் ஈட்ட வேண்டும்.
  2. இடையீட்டு அல்லது தனியாக விளம்பரத்தைக் காட்டுமிடங்கள் Google வழங்கும் இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டும்: இணையத்தில் Google வெளியீட்டாளர் குறிச்சொற்கள் மற்றும் ஆப்ஸில் Google மொபைல் விளம்பரங்கள் SDKயைப் பயன்படுத்த வேண்டும். (Ad Managerருக்கு; AdMobக்கு).
    • கேம்களில் உள்ள விளம்பரத்தைக் காட்டுமிடங்களைத் தவிர்த்து, இடையீட்டு அல்லது தனியாக விளம்பரத்தைக் காட்டுமிடங்களில் Googleளின் பங்கேற்கத்தக்க ஊடக விளம்பரங்கள் SDKயைப் பயன்படுத்தக்கூடாது.

விளம்பரதாரர் மதிப்பைப் பாதுகாத்தல்

  1. விளம்பர உள்ளடக்கம், கட்டுப்பாடுகள் (வழங்கப்பட்டால்) உட்பட, வீடியோ இருப்பு உள்ளடக்கம் அல்லது கட்டுப்பாடுகள் (உதாரணமாக, இயக்குதல், இடைநிறுத்துதல், ஒலியடக்குதல், தவிர்த்தல், நிராகரித்தல்), மறைக்கப்பட்டோ தடுக்கப்பட்டோ செயல்படாமலோ இருக்கக்கூடாது.
  2. ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய விளம்பரத்தைக் காட்டுமிடங்களில், ஆடியோ விளம்பரங்கள் ஒலியடக்கப்பட்டு கேட்கப்பட/வழங்கப்படக் கூடாது.

பயனருக்கு மதிப்பளித்தல்

  1. பின்வரும் சூழ்நிலைகளில், வீடியோ இருப்பு தானாக இயக்கப்படலாம்:
    • விளம்பரத்தைக் காட்டும் அனைத்து வகைகளிலும் ஒரே ஒரு வீடியோ இருப்பு மட்டுமே ஒலியுடன் எந்த நேரத்திலும் தானாக இயக்கப்படலாம்.
      • கூடுதலாக, ஸ்ட்ரீமிங்கின்போது அல்லது உள்ளடக்கத்துடன் விளம்பரத்தைக் காட்டுமிடங்களில், காட்சியில் இருக்கும்போது ஒரே ஒரு வீடியோ பிளேயர் மட்டுமே எந்த நேரத்திலும் தானாக இயக்கப்படலாம்.
    • விளம்பரத்தின் விளம்பர யூனிட்டில் குறைந்தது 50% காட்டப்படும் வரை அது தானாக இயங்கக்கூடாது.
  2. பின்வரும் சூழ்நிலைகளில், வீடியோ இருப்பு நிலையாகப் பொருந்தியிருக்கலாம்:
    • வீடியோ அல்லது விளம்பர உள்ளடக்கம் முழுவதும் ‘நிராகரி’ எனும் விருப்பம் காட்டப்பட வேண்டும். இந்த விருப்பம் மறைக்கப்பட்டோ தடுக்கப்பட்டோ செயல்படாமலோ இருக்கக்கூடாது.
    • ஸ்ட்ரீமிங்கின்போது அல்லது உள்ளடக்கத்துடன் விளம்பரத்தைக் காட்டுமிடங்களுக்கு, முக்கிய உள்ளடக்கத்தில் வீடியோ பிளேயர் இயங்கத் தொடங்க வேண்டும். பயனர் ஸ்க்ரோல் செய்யும்போது வீடியோ பிளேயர் பக்கத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே நிலையாகப் பொருந்தியிருப்பதாக மாற வேண்டும்.
குறிப்பு: Google விளம்பரக் குறியீட்டுடன் வருமானம் ஈட்டக்கூடிய கிரியேட்டர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் உள்ளடக்க வகையை எங்கள் கொள்கைகள் வரையறுக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவைகள் விளம்பரதாரர்களுக்கு அவர்கள் வாங்கும் விளம்பரக் காட்சிப்படுத்துமிடங்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளிக்காது.

            வீடியோ இருப்புக்கான கொள்கைகள் குறித்து மேலும் அறிக


தனியுரிமை தொடர்பான கொள்கைகள்

தனியுரிமை வெளியிடுதல்கள்

வெளியீட்டாளர்கள் செய்யவேண்டியவை:

  • Google தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் எந்தவொரு வலைதளம், ஆப்ஸ், மின்னஞ்சல் வெளியீடு அல்லது பிற உடைமைகளில் செய்யப்படும் தரவுச் சேகரிப்பு, பகிர்வு மற்றும் உபயோகம் பற்றிய விவரங்களைத் தெளிவாக வெளிப்படுத்தும் தனியுரிமைக் கொள்கையைக் கொண்டிருப்பதோடு அதனுடன் இணங்கவும் வேண்டும். மூன்றாம் தரப்பினர் உங்கள் பயனர்களின் உலாவிகளில் குக்கீகளைச் சேர்த்துப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் வலைதளங்களில் விளம்பரங்களைக் காண்பிப்பதன் விளைவாக இணைய பீக்கான்களைப் பயன்படுத்தித் தகவல்களைச் சேகரிக்கலாம் என்பதைப் பயனர்களுக்குத் தனியுரிமைக் கொள்கை தெரிவிக்க வேண்டும்.

    Googleளின் தரவுப் பயன்பாடு தொடர்பான வெளியீடு அவசியம் என்ற கட்டாயத் தேவையுடன் இணங்க, எங்கள் கூட்டாளர்களின் வலைதளங்களையும் ஆப்ஸையும் நீங்கள் பயன்படுத்தும்போது Google எவ்வாறு தரவைப் பயன்படுத்துகிறது என்பதைப் பயனர்களுக்குத் தெரிவிக்கும் முக்கியமான இணைப்பை உங்கள் வலைதளத்தில் வெளியிடலாம்.

           தனியுரிமை வெளியிடுதல்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

Google டொமைன்களில் குக்கீகள்

வெளியீட்டாளர்கள் செய்யவேண்டியவை:

  • Googleளின் டொமைன்களில் குக்கீகளை அமைக்கவோ அவற்றில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட குக்கீகளை மாற்றவோ இடைமறிக்கவோ நீக்கவோ கூடாது.

           Google டொமைன்களில் உள்ள குக்கீகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

பயனர்களைக் கண்டறிதல்

வெளியீட்டாளர்கள் செய்ய வேண்டியவை:

  • சாதனக் கைரேகைகளையோ, HTTP குக்கீகள் அல்லாத பயனரின் கம்ப்யூட்டரில் பகிரப்படும் மற்ற பொருட்களையோ (எ.கா. ஃபிளாஷ் குக்கீகள், உலாவி உதவிப் பொருட்கள், HTML5 லோக்கல் சேமிப்பகம்), விளம்பரப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட பயனர் மாற்றியமைக்கக்கூடிய மொபைல் சாதன அடையாளங்காட்டிகளையோ பயன்படுத்தக் கூடாது. மோசடியைக் கண்டறிவதற்காக IP முகவரியைப் பயன்படுத்துவதை இது தடுக்காது.
  • தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவலாக Google பயன்படுத்தக்கூடிய அல்லது வகைப்படுத்தக்கூடிய எந்தத் தகவல்களையோ, குறிப்பிட்ட சாதனத்தை நிரந்தரமாகக் கண்டறியப் பயன்படுத்தும் தகவல்களையோ (மொபைல் ஃபோனின் மாற்றியமைக்க முடியாத தனித்துவ சாதன அடையாளங்காட்டி போன்றவை) Google தரவுடன் பகிரக்கூடாது.
  • பயனர்களைக் கண்டறியவோ தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவலுடன், முறையான அறிவிப்பு இல்லாமலும் பயனரின் முன்கூட்டிய (ஒப்புதலளிப்புச் செயல்முறை மூலம்) ஒப்புதலைப் பெறாமலும், முன்பு தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடியது இல்லை எனச் சேகரிக்கப்பட்ட தகவலை அடையாளம்காணவோ ஒன்றிணைக்கவோ பயன்படுத்தக்கூடாது. பயனர்களின் ஒப்புதல் எதுவாக இருந்தாலும், Google மொத்தமாக அறிக்கையிட்டுள்ள தரவைப் பிரிக்க நீங்கள் முயலக்கூடாது.

    மேலும் தகவல்களுக்கு, பயனர் கண்டறிதல் கொள்கையுடன் இணங்கும் வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.

  • ஐரோப்பிய ஒன்றியப் பயனர் ஒப்புதல் கொள்கையுடன் இணங்க வேண்டும்.

           பயனர்களைக் கண்டறிதல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

சாதனத்தையும் இருப்பிடத் தரவையும் பயன்படுத்துதல்

GPS, வைஃபை அல்லது மொபைல் டவர் தரவைப் பயன்படுத்தி இறுதிப் பயனரின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிகின்ற அல்லது கண்டறியப் பயன்படுத்தக்கூடிய தகவல்களை வெளியீட்டாளர் சேகரிக்கவோ, செயலாக்கவோ, வெளியிடவோ செய்தால்,

வெளியீட்டாளர்கள் செய்யவேண்டியவை:

  • பயனரின் தரவு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படக்கூடும் (பொருந்தக்கூடிய விளம்பரப் பிரத்தியேகமாக்கல், பகுப்பாய்வுகள், பெயர் குறிப்பிடுதல் ஆகியவை உட்பட) என்பதை அந்தப் பயனருக்கு இடையீட்டு அல்லது உடனடி அறிவிப்பாகத் தெரிவிக்க வேண்டும். கூட்டாளர்களுடன் பகிரப்படக்கூடிய தரவும் இதில் உள்ளடங்கும்;
  • அத்தகைய தகவல்களைச் சேகரிப்பதற்கோ, செயலாக்குவதற்கோ, வெளியிடுவதற்கோ முன்பு இறுதிப் பயனர்களிடம் இருந்து ஒப்புதல் (எ.கா., 'ஏற்கிறேன்' என்ற ஒப்புதல்) பெற வேண்டும்;
  • அத்தகைய தகவல்களை என்க்ரிப்ஷன் செய்த நிலையிலோ என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஒரு வழிமுறையிலோ Googleளுக்கு அனுப்ப வேண்டும்; மற்றும்
  • பொருந்தக்கூடிய அனைத்துத் தனியுரிமைக் கொள்கைகளின் அடிப்படையில் அத்தகைய தகவல்களைச் சேகரிப்பதையோ செயலாக்குவதையோ வெளியிடுவதையோ உங்கள் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

            சாதனத்தையும் இருப்பிடத் தரவையும் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக

சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (COPPA - Children’s Online Privacy Protection Act)

சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் (COPPA) கீழ்வரும் ஆப்ஸிலோ, வலைதளத்திலோ, வலைதளத்தின் ஒரு பிரிவிலோ ஏதேனுமொரு Google விளம்பரச் சேவையைச் செயல்படுத்தினால், நீங்கள் செய்யவேண்டியவை:

  • COPPAவின் கீழ்வரும் அத்தகைய வலைதளங்களையோ வலைதளத்தின் பிரிவுகளையோ Google Search Console மூலம் Googleளுக்குத் தெரியப்படுத்த வேண்டும், AdMob SDK மூலம் விளம்பரக் கோரிக்கையைக் குறியிட வேண்டும், அல்லது சிறுவர்களை மையப்படுத்தும் உள்ளடக்கமாக உங்கள் வலைதளத்தையோ, ஆப்ஸையோ, விளம்பரக் கோரிக்கையையோ குறியிட வேண்டும்;
  •  பின்வரும் சூழல்களில் பயனர்களை இலக்கிடுவதற்கு விருப்பம் சார்ந்த விளம்பரத்தை (ரீமார்க்கெட்டிங் உட்பட) பயன்படுத்தக் கூடாது:
    • 13 வயது நிரம்பாதவர்கள் என்று உங்களுக்குத் தெரிந்த பயனர்களின் கடந்தகால அல்லது தற்போதைய செயல்பாடுகள், அல்லது
    • 13 வயது நிரம்பாதவர்களுக்கான வலைதளங்களில் இருந்து சேகரிக்கப்படும் கடந்தகால அல்லது தற்போதைய செயல்பாடுகள்.

               சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (COPPA) குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்


தேவைகள் & பிற தரநிலைகள்

Google Web Search சேவைக்கான ஸ்பேம் கொள்கைகள்

நீங்கள் செய்யக்கூடாதது:

               Google Web Search சேவைக்கான ஸ்பேம் கொள்கைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

வலிந்து திணிக்கப்பட்ட அனுபவங்கள் 

நீங்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாதவை:

               வலிந்து திணிக்கப்பட்ட அனுபவங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மால்வேர் அல்லது தேவையற்ற மென்பொருள்

நீங்கள் செய்யக்கூடாதவை:

  • ஒரு கம்ப்யூட்டருக்கோ சாதனத்திற்கோ நெட்வொர்க்கிற்கோ தீங்கிழைக்கக்கூடிய அல்லது அவற்றை அங்கீகாரமற்ற முறையில் அணுகக்கூடிய 'மால்வேரை' (தீங்கிழைக்கும் மென்பொருள்) கொண்டுள்ள திரைகளில் 'Google வழங்கும் விளம்பரங்களைக்' காட்டுதல்.

    உதாரணங்கள்: கம்ப்யூட்டர் வைரஸ்கள், ரேன்ஸம்வேர், வோர்ம்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், ரூட்கிட்கள், கீ-லாகர்கள், டயலர்கள், ஸ்பைவேர், போலியான பாதுகாப்பு மென்பொருள் மற்றும் பிற தீங்கிழைக்கும் புரோகிராம்கள்/ஆப்ஸ்

  • தேவையற்ற மென்பொருள் தொடர்பான Googleளின் கொள்கையை மீறும் திரைகளில் 'Google வழங்கும் விளம்பரங்களைக்' காட்சிப்படுத்துதல்.

    உதாரணங்கள்: மென்பொருள் வழங்கும் செயல்பாடுகள் குறித்தோ மென்பொருளை நிறுவுவதால் ஏற்படும் முழுமையான தாக்கங்கள் குறித்தோ பயனர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருத்தல்; சேவை விதிமுறைகளையோ இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தத்தையோ வலைதளத்தில் சேர்க்காமல் இருத்தல்; பயனர்களுக்குத் தெரிவிக்காமல் மென்பொருட்களையோ ஆப்ஸையோ தொகுத்தல்; பயனரின் ஒப்புதலின்றி சிஸ்டத்தில் மாற்றங்கள் செய்தல்; மென்பொருளை முடக்கும்/நிறுவல்நீக்கும் செயல்முறையைப் பயனர்களுக்குக் கடினமாக்குதல்; Google சேவைகளையும் தயாரிப்புகளையும் உபயோகிக்கும்போது அனைவருக்கும் பொதுவாகக் கிடைக்கும் Google APIகளை முறையாகப் பயன்படுத்தாமல் இருத்தல்

   மால்வேர் அல்லது தேவையற்ற மென்பொருள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

சிறந்த விளம்பரத் தரநிலைகள் 

நீங்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாதவை:

               சிறந்த விளம்பரத் தரநிலைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

அங்கீகரிக்கப்பட்ட விளம்பர இருப்பு

நீங்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாதவை:

  • ads.txt ஃபைல்களைப் பயன்படுத்தும் டொமைனில் Google வழங்கும் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவதில், ads.txt ஃபைலில் அங்கீகரிக்கப்பட்ட இருப்பு விற்பனையாளராக நீங்கள் சேர்க்கப்படாமல் இருப்பது. 

தற்காலிக ஒன்றிணைப்புக் கூட்டாளர்களுக்கு, உபநிலை வெளியீட்டாளர் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களாக முதல்நிலை வெளியீட்டாளர்களைக் குறிப்பிட்டு, உபநிலை டொமைன்களில் ads.txt ஃபைலை உபநிலை வெளியீட்டாளர் உடனடியாகச் சேர்ப்பதை முதல்நிலை வெளியீட்டாளர் உறுதிசெய்ய வேண்டும்.

               அங்கீகரிக்கப்பட்ட விளம்பர இருப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

தடைகளுக்கான இணக்கம்

அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC - Office of Foreign Assets Control), வணிகத் துறை ஆணையத்தின் தொழில்துறை & பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்படும் தடைகள் மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கும் பொருந்தக்கூடிய பிற தடைகளுக்கும் Google இணங்க  வேண்டியுள்ளது. இதனால் பின்வரும் நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள வெளியீட்டாளர்களால் Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாது:

  • கிரிமியா
  • கியூபா
  • தன்யெத்சுக் மக்கள் குடியரசு (Donetsk People's Republic - DNR) மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (Luhansk People's Republic - LNR) என அழைக்கப்படும் பிராந்தியங்கள் 
  • ஈரான்
  • வடகொரியா
  • சிரியா

மேலே பட்டியலிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட நாடுகள்/பிராந்தியங்களில் உள்ள வெளியீட்டாளர்களோ அவர்களின் சார்பாகப் பிறரோ Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாது. 

இவை மட்டுமல்லாமல், பொருந்தக்கூடிய வர்த்தகத் தடைகள் மற்றும் ஏற்றுமதி இணக்கச் சட்டங்களின்படி தடைசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனங்களோ தனிநபர்களோ Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாது. தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கோ தனிநபர்களுக்கோ சொந்தமான, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, அவர்களுக்காகவும் அவர்கள் சார்பாகவும் செயல்படுகின்ற நிறுவனங்களும் தனிநபர்களும் Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாது. 

OFAC தடைகள் உட்பட பொருத்தக்கூடிய தடைகளுக்கும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கும் வெளியீட்டாளர்கள் கண்டிப்பாக இணங்க வேண்டும். அத்துடன் இந்த விதிமுறைகளை Google மீறாமல் பார்த்துக்கொள்வதையும் ஏற்கிறீர்கள். தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்காகவோ தனிநபர்களுக்காகவோ அவர்களின் சார்பாகவோ நீங்கள் Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாது. தடைசெய்யப்பட்ட நாடுகள்/பிராந்தியங்களில் உள்ள நிறுவனங்களுக்காகவோ தனிநபர்களுக்காகவோ அவர்களின் சார்பாகவோ நீங்கள் Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியாது.

               தடைகளுக்கான இணக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12041560469724393766
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false