YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கொள்கைகள்

ட்ரீம் டிராக் மூலம் உருவாக்கப்பட்ட இசையை நீள வடிவ வீடியோவில் பயன்படுத்தும்போது, விளம்பரங்கள் அல்லது சந்தா (YouTube Premium) வருவாய்ப் பகிர்வு மூலம் உங்கள் வீடியோ வருமானம் ஈட்டாது.

மார்ச் 10, 2022: ரஷ்யாவில் உள்ள Google விளம்பரப்படுத்தல் சிஸ்டங்கள் சமீபத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் AdSense, YouTubeக்கான AdSense, AdMob, Google Ad Manager ஆகியவற்றில் புதிய கணக்குகளை உருவாக்குவதை இடைநிறுத்தவுள்ளோம். கூடுதலாக, ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட விளம்பரதாரர்களுக்கு உலகளாவிய Google தயாரிப்புகள் மற்றும் நெட்வொர்க்குகளில் விளம்பரங்களை இடைநிறுத்தவுள்ளோம். இதன் விளைவாக, ரஷ்யாவில் உள்ள கிரியேட்டர்களால் தற்போது புதிய YouTube கூட்டாளர் திட்டத்தில் (YPP - YouTube Partner Program) பதிவுசெய்ய முடியாது.

மார்ச் 3, 2022: உக்ரைனில் தற்போது நடைபெறும் போரின் காரணமாக, ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு Google மற்றும் YouTube விளம்பரங்களைக் காட்டுவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம். அத்துடன், ரஷ்யாவில் உள்ள பார்வையாளர்களுக்கு வருமானம் ஈட்டுதல் அம்சங்கள் அனைத்திற்குமான (சேனல் மெம்பர்ஷிப்கள், Super Chat, Super Stickers, விளம்பர நோக்க விற்பனைப் பொருள் போன்றவை) அணுகலையும் இடைநிறுத்துகிறோம். மேலும் அறிக.

பிப்ரவரி 25, 2022: உக்ரைனில் நடைபெற்றுவரும் போரின் காரணமாக, ரஷ்யன் ஃபெடரேஷன் அரசின் நிதியுதவியில் இயங்கும் மீடியா சேனல்கள் YouTubeல் வருமானம் ஈட்டுவதை இடைநிறுத்துகிறோம். 

இந்தச் சூழலை நாங்கள் தொடர்ந்து கவனமாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்வோம்.

ஏப்ரல் 2024ல் புதுப்பித்தது: கிரியேட்டர்களுக்கு, ஒரே மாதிரியான உள்ளடக்கத்திற்கும் பிறரின் உள்ளடக்கத்திற்குமான அர்த்தத்தைத் தெளிவுபடுத்தும் வகையில் எங்கள் திட்டக் கொள்கைகளின் மொழி நடை மாற்றப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான மற்றும் பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான எங்கள் உள்ளடக்கக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.

நீங்கள் YouTubeல் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் உங்கள் சேனல் YouTube வருமானம் ஈட்டுதல் கொள்கைகளைப் பின்பற்றுவது முக்கியம். YouTubeன் சமூக வழிகாட்டுதல்கள், சேவை விதிமுறைகள், பதிப்புரிமை, உரிமைகள் அனுமதி சரிசெய்தல் கொள்கைகள், எங்கள் திட்டக் கொள்கைகள் ஆகியவற்றுடன் கீழே குறிப்பிட்டுள்ள கொள்கைகளும் இவற்றுள் உள்ளடங்கும்.

ஏற்கெனவே YouTube கூட்டாளர் திட்டத்தில் இருப்பவர்களுக்கும் அதில் சேர விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் இந்தக் கொள்கைகள் பொருந்தும். YouTubeல் Shorts மூலம் வருமானம் ஈட்டுகிறீர்கள் எனில் YouTube Shorts வருமானம் ஈட்டுதல் கொள்கைகளும் பொருந்தும்.

விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டும் அனைத்து உள்ளடக்கமும் எங்களுடைய விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். ரசிகர் நிதியளிப்பு அம்சங்களில் இருந்து வருவாய் ஈட்ட, முதல் முறைப் பயனர்கள் ஒவ்வொரு அம்சத்தையும் இயக்குவதற்கு முன்பு வர்த்தகத் தயாரிப்பு மாடியூலை (CPM - Commerce Product Module) ஏற்க வேண்டும். ரசிகர் நிதியளிப்பு அம்சங்கள் மூலம் வருமானம் ஈட்டும்போது வர்த்தகத் தயாரிப்புகள் தொடர்பான வருமானம் ஈட்டுதல் கொள்கைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு முக்கியமான கொள்கையையும் பற்றிய விரைவான மேலோட்டப் பார்வை இதோ: ஒரு சேனல் வருமானம் ஈட்டுவதற்கு ஏற்றதா என்பது இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்தியே தீர்மானிக்கப்படுவதால் ஒவ்வொரு கொள்கையையும் முழுவதுமாகப் படிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வருமானம் ஈட்டும் சேனல்கள் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனவா என்று எங்கள் மதிப்பாய்வாளர்கள் தொடர்ந்து சரிபார்ப்பார்கள். எங்கள் கொள்கைகளை எப்படி அமல்படுத்துகிறோம் என்பது குறித்து மேலும் அறிக.

இந்தப் பக்கத்தில் வீடியோ என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தினால் அது Shorts, நீள வடிவ வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். வீடியோ முகப்புப் பக்கம் (YouTube, YouTube Music, YouTube Kids ஆகியவற்றுக்குள் உள்ள பக்கங்கள்), YouTube வீடியோ பிளேயர் (பிற தளங்களில் YouTube வீடியோக்களை உட்பொதிக்கும் பிளேயர்), YouTube Shorts பிளேயர் (Shorts வீடியோக்களைக் காட்டும் பிளேயர்) என வீடியோ பார்க்கப்படும் இடங்கள் அனைத்திற்கும் இந்தக் கொள்கைகள் பொருந்தும்.

உங்கள் சேனலை மதிப்பாய்வு செய்யும்போது நாங்கள் கவனிப்பவை

நீங்கள் YouTubeல் வருமானம் ஈட்டுகிறீர்கள் எனில், உங்கள் உள்ளடக்கம் அசலானதாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். அதாவது உங்கள் உள்ளடக்கம் பின்வருமாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்: 

  • உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். நீங்கள் வேறொருவரிடம் இருந்து உள்ளடக்கத்தைப் பெற்றிருந்தால், அதில் கணிசமான அளவில் மாற்றங்கள் செய்து உங்கள் சொந்தப் படைப்பாக அதை மாற்ற வேண்டும்.
  • நகலாகவோ ஒரே மாதிரியானதாகவோ இருக்கக்கூடாது. பார்வைகளைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், பார்வையாளர்களை மகிழ்விக்கவும் அவர்களுக்குக் கற்பிக்கவும் உங்கள் உள்ளடக்கம் உருவாக்கப்பட வேண்டும். 

உங்கள் சேனலும் உள்ளடக்கமும் எங்கள் கொள்கைகளுடன் இணங்குகின்றனவா என எங்கள் மதிப்பாய்வாளர்கள் சரிபார்ப்பார்கள். அவர்களால் ஒவ்வொரு வீடியோவையும் தனித்தனியாகச் சரிபார்க்க முடியாது என்பதால் உங்கள் சேனலில் இவற்றின் மீது அவர்கள் கவனம் செலுத்தக்கூடும்:

  • மையக் கருத்து
  • அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள்
  • புதிய வீடியோக்கள்
  • அதிகம் 'பார்த்த நேரம்' கொண்ட வீடியோக்கள்
  • வீடியோவின் தரவுத்தகவல் (தலைப்புகள், சிறுபடங்கள், விளக்கங்கள் உட்பட)
  • சேனலின் “அறிமுகம்” பிரிவு

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை எங்கள் மதிப்பாய்வாளர்கள் மதிப்பாய்வு செய்யக்கூடிய உள்ளடக்கத்திற்கான உதாரணங்கள் மட்டுமே ஆகும். உங்கள் சேனல் எங்கள் கொள்கைகளுக்கு முழுவதுமாக இணங்குகிறதா என்பதைப் பார்க்க, உங்கள் சேனலின் பிற பகுதிகளையும் எங்கள் மதிப்பாய்வாளர்கள் சரிபார்க்க முடியும், சரிபார்க்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

YouTube சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்

பார்வையாளர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் சிறந்த சமூகமாக YouTube நிலைத்திருக்க இந்த வழிகாட்டுதல்கள் உதவுகின்றன. YouTubeல் உள்ள அனைவரும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு உள்ளடக்கமும் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

எங்கள் வழிகாட்டுதல்கள் தனித்தனி வீடியோக்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்தச் சேனலுக்கும் பொருந்தும் என்பதை வருமானம் ஈட்டும் கிரியேட்டர்கள் அறிந்திருக்க வேண்டும். YouTubeன் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோக்கள் வருமானம் ஈட்டுவதற்குத் தகுதிபெறாது. மேலும் அவை YouTubeல் இருந்து அகற்றப்படும்.
எங்கள் திட்டக் கொள்கைகளைப் பின்பற்றுதல்
வீடியோக்களில் இருந்து ஈட்டப்படும் வருமானம் YouTube கூட்டாளர்களுக்கு YouTubeக்கான AdSense மூலம் வழங்கப்படுகிறது. எங்களின் திட்டக் கொள்கைகளையும் YouTubeன் சேவை விதிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

ஒரே மாதிரியான உள்ளடக்கம்

பார்வையாளர்கள் வீடியோக்களுக்கிடையே வித்தியாசங்களை உணர முடியாத அளவுக்கு ஒத்தத்தன்மையுடன் இருக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் சேனலையே ஒரே மாதிரியான உள்ளடக்கம் என்பது குறிக்கிறது. வீடியோக்களில் எந்த மாறுபாடும் இல்லாத அல்லது குறைவான மாறுபாட்டைக் கொண்டுள்ள டெம்ப்ளேட்டுடன் உருவாக்கப்பட்டதுபோல் தோன்றும் உள்ளடக்கம் அல்லது கணிசமான அளவில் ஒரே மாதிரியாக இருக்கும் உள்ளடக்கம் இதிலடங்கும்.

உங்கள் முழுச் சேனலுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். அதாவது, எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் பல வீடியோக்களை நீங்கள் பதிவேற்றியிருந்தால் உங்கள் முழுச் சேனலுக்கும் வருமானம் ஈட்டுதல் அகற்றப்படக்கூடும்.

வருமானம் ஈட்டுவதற்கு அனுமதிக்கப்படுபவை:

வருமானம் ஈட்டும் வீடியோக்கள் பார்வையாளர்களைக் கவரக்கூடியதாகவும் பார்ப்பதற்கு சுவாரசியமானதாகவும் இருப்பதை இந்தக் கொள்கை உறுதிசெய்கிறது. அதாவது, உங்கள் சேனலில் உள்ள ஒவ்வொரு வீடியோவிலும் வெவ்வேறு உள்ளடக்கம் உள்ளதென பார்வையாளர் கூறும்படி இருந்தால் வருமானம் ஈட்டலாம். பல சேனல்கள் ஒரே மாதிரியான வீடியோக்களை உருவாக்குகின்றன என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஒவ்வொரு வீடியோவின் சாராம்சமும் வெவ்வேறாக இருப்பது முக்கியமாகும்.

வருமானம் ஈட்ட அனுமதிக்கப்படுபவற்றின் உதாரணங்கள் (இவையும் இன்ன பிறவும்):

  • வீடியோக்களின் தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெரும்பான்மையான உள்ளடக்கம் வித்தியாசமாக இருத்தல்
  • உள்ளடக்கம் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு வீடியோவிலும் நீங்கள் காட்டும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிப் பேசும் வீடியோ
  • ஒரே மாதிரியான பொருட்களைக் கொண்டு ஒன்றிணைக்கப்பட்டதைக் காட்டி அந்தப் பொருட்களுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி விவரிக்கும் சிறிய வீடியோ கிளிப்கள்

இந்த வழிகாட்டுதலை மீறும் வீடியோக்கள்

YouTubeல் ஆர்வமூட்டும் சுவாரசியமான வீடியோக்களைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் ஒரே மாதிரியான வீடியோக்கள் உள்ள சேனலைப் பார்க்கும்போது ஏமாற்றமடையலாம். அதாவது, ஒரு சேனலில் உள்ள வீடியோக்களுக்கு இடையே மிகச்சிறிய வேறுபாடு மட்டுமே இருந்தால், அவை வருமானம் ஈட்ட அனுமதிக்கப்படாது. சுருக்கமாகச் சொன்னால், ஒரே டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உள்ளடக்கமும் கணிசமான அளவில் ஒரே மாதிரியாக இருக்கும் உள்ளடக்கமும் உங்கள் சேனலில் இருக்கக்கூடாது.

வருமானம் ஈட்ட அனுமதிக்கப்படாதவற்றுக்கான உதாரணங்கள் (இந்தப் பட்டியல் முழுமையானதல்ல):

  • உங்கள் சொந்தப் படைப்பு அல்லாதவற்றை இணையதளங்கள், செய்தி ஊட்டங்கள் போன்றவற்றில் இருந்து எடுத்து வாசிப்பதையே பிரத்தியேகமாகக் காட்டும் வீடியோக்கள்
  • பாடலின் ஸ்ருதியையோ வேகத்தையோ மாற்றித் திருத்தப்பட்டிருந்தாலும் மற்ற எல்லாமே அசலைப் போல் இருத்தல்
  • தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வீடியோக்கள் அல்லது கற்பிக்கும் நோக்கம், ஆடியோ விவரிப்பு அல்லது விளக்கங்கள் மிகக் குறைவாக இருக்கும் அர்த்தமற்ற வீடியோக்கள்
  • அதிகளவில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது பல்வேறு வீடியோக்களில் ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தும் உள்ளடக்கம்
  • கற்பிக்கும் நோக்கத்தையோ ஆடியோ விவரிப்பையோ விளக்கங்களையோ மிகக் குறைவாகக் கொண்டுள்ள அல்லது முற்றிலும் இல்லாத பட ஸ்லைடுகாட்சிகள் அல்லது நகரும் வார்த்தைகள்

பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல்

பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது என்பது YouTube அல்லது வேறொரு ஆன்லைன் பிளாட்ஃபார்மில் ஏற்கெனவே இருக்கும் உள்ளடக்கத்தில் அசல் விவரிப்பு, குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் அல்லது கற்பித்தல்/பொழுதுபோக்கு மதிப்பு ஆகியவற்றைக் கணிசமான அளவில் சேர்க்காமல் அவற்றை உங்கள் சேனல்களில் பயன்படுத்துவதாகும். பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது என்பது ஒத்த/நகலெடுத்த உள்ளடக்கம் என்றும் அழைக்கப்படலாம் (பிற இணையதளங்களில் இருந்து தனித்துவமான அல்லது அசல் உள்ளடக்கத்தை எடுத்து அதை உங்கள் சொந்தப் படைப்பாக வெளியிடுவது). 

பிறரின் உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா என்பதைக் கண்டறிய, உங்கள் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், அதில் உங்கள் பங்கேற்பு அல்லது அதைத் தயாரித்த விதம் குறித்துப் புரிந்துகொள்ள எங்கள் மதிப்பாய்வாளர்கள் உங்கள் சேனலைச் சரிபார்ப்பார்கள். அவர்கள் பின்வருபவற்றை உங்கள் சேனலில் சரிபார்க்கக்கூடும்: 

  • வீடியோக்கள் 
  • சேனல் பற்றிய விளக்கம்
  • வீடியோ தலைப்பு
  • வீடியோ விளக்கங்கள்

பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கை உங்கள் மொத்தச் சேனலுக்கும் பொருந்தும். எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் வீடியோக்கள் உங்கள் சேனலில் இருந்தாலோ உள்ளடக்கத்தை நீங்கள்தான் உருவாக்கியுள்ளீர்கள் என்று எங்களால் தெளிவாகக் கூற முடியாவிட்டாலோ, உங்கள் மொத்தச் சேனலில் இருந்தும் வருமானம் ஈட்டுதல் அகற்றப்படக்கூடும்.

வருமானம் ஈட்டுவதற்கு அனுமதிக்கப்படுபவை:

பார்வையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நம்பகத்தன்மை உடைய, அசல் உள்ளடக்கத்தை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு நாங்கள் பலன்களை வழங்க விரும்புகிறோம். உங்களுக்குச் சொந்தமில்லாத உள்ளடக்கத்தில் வேடிக்கையான/சிந்தனைமிக்க விஷயங்களைச் சேர்த்தால் (கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் வழிமுறைகளுக்கு இணங்க) ஏதோ ஒரு வகையில் அந்த உள்ளடக்கத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த வகையான உள்ளடக்கம் உங்கள் சேனலில் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீடியோவும் பதிப்புரிமைக் கொள்கை போன்ற பிற கொள்கைகளுக்கு உட்படுத்தப்படலாம். அதாவது அசல் வீடியோவுக்கும் உங்கள் வீடியோவுக்கும் இடையே நியாயமான வேறுபாடு இருப்பதாகப் பார்வையாளர்களால் கூற முடிந்தால் பிறரின் உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்த நாங்கள் அனுமதிப்போம்.

கவனத்திற்கு: இதுபோன்ற வீடியோக்கள் பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான வருமானம் ஈட்டுதல் கொள்கையை மீறவில்லை என்றாலும் பதிப்புரிமைக் கொள்கை போன்ற பிற கொள்கைகள் இவற்றுக்குப் பொருந்தும்.

வருமானம் ஈட்ட அனுமதிக்கப்படுபவற்றின் உதாரணங்கள் (இவையும் இன்ன பிறவும்):

  • விமர்சனம் செய்வதற்காகக் கிளிப்புகளைப் பயன்படுத்துதல்
  • ஒரு திரைப்படத்திலிருந்து உரையாடலையும் பின்னணிக் குரலையும் மாற்றியமைத்து உருவாக்கிய காட்சி
  • போட்டியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நுணுக்கமான விஷயங்களை விளக்கும் விளையாட்டுப் போட்டியின் ரீப்ளேகள்
  • அசல் வீடியோ குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கும் ரியாக்‌ஷன் வீடியோக்கள்
  • பிற கிரியேட்டர்களின் வீடியோக்களில் கூடுதல் கதைக்களம் மற்றும் வர்ணனையைச் சேர்த்து எடிட் செய்யப்பட்ட காட்சிகள்
  • Shortsஸில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட வீடியோவின் எடிட் செய்யப்படட்ட காட்சிகள் (ஓர் அசல் உள்ளடக்கத்திற்கு எங்கள் லைப்ரரியில் உள்ள ஒரு பாடலைச் சேர்த்தல், பிற வீடியோக்களில் உள்ள அசல் ஆடியோ/வீடியோ பகுதியை உங்கள் உள்ளடக்கத்தில் சேர்த்தல் போன்றவை)
  • பதிவேற்றும் கிரியேட்டரை வீடியோவில் முதன்மையாகக் காட்டும் உள்ளடக்கம்
  • ஆன்லைனில் பிற இடங்களில் இருந்து உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் (அதில் கிரியேட்டர் தோன்றியிருக்க வேண்டும் அல்லது உள்ளடக்கத்தில் அவர் சேர்க்கப்பட்ட விதம் குறித்து விளக்கியிருக்க வேண்டும்)
  • வீடியோவில் பிறரின் உள்ளடக்கம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியாத அளவிற்கு ஆடியோ மற்றும் விஷுவல் எஃபெக்ட்டுகள் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ காட்சி, இது குறிப்பிடத்தக்க அளவில் எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும், உங்கள் சேனலின் தனித்துவ வீடியோவாகத் தோன்ற வேண்டும்

இந்த வழிகாட்டுதலை மீறும் உள்ளடக்கம்

பிறரின் உள்ளடக்கத்தை எடுத்து அதில் சிறியளவிலான மாற்றங்களைச் செய்து அதை உங்கள் சொந்தப் படைப்பு என்று கூறுவது இந்த வழிகாட்டுதலை மீறுவதாகும். உள்ளடக்கம் உங்களுடையதுதான் என்று எங்களால் கூற முடியாவிட்டால், அது பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கைக்கு உட்படுத்தப்படலாம். நீங்கள் அசல் கிரியேட்டரிடம் அனுமதி பெற்றிருந்தாலும் கூட இந்தக் கொள்கை பொருந்தும். பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் YouTubeன் பதிப்புரிமை அமலாக்கத்திலிருந்து வேறுபட்டதாகும். அதாவது இது பதிப்புரிமை அனுமதியையோ நியாயமான பயன்பாட்டையோ அடிப்படையாகக் கொண்டதில்லை. அதாவது சிலநேரங்களில் உங்கள் உள்ளடக்கத்திற்கு எதிராக உரிமைகோரல்களைப் பெற மாட்டீர்கள். இருப்பினும் பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல் கொள்கைகளை உங்கள் சேனல் மீறக்கூடும் என்பதாகும்.

வருமானம் ஈட்ட அனுமதிக்கப்படாதவற்றுக்கான கூடுதல் உதாரணங்கள் (இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல):

  • உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியின் தருணங்களைக் குறைவான வர்ணனையுடனோ வர்ணனையே இல்லாமலோ எடிட் செய்த கிளிப்கள்
  • பிற சமூக ஊடக வலைதளங்களிலிருந்து நீங்கள் தொகுத்த சிறிய வீடியோக்கள்
  • வெவ்வேறு கலைஞர்களின் பாடல்களின் தொகுப்புகள் (அவர்களின் அனுமதியைப் பெற்றிருந்தாலும் கூட)
  • பிற கிரியேட்டர்களால் பல முறை பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம்
  • பிறரின் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துதல் (உங்களிடம் அசல் கிரியேட்டரின் அனுமதி இருந்தாலும் கூட)
  • மற்றொரு ஆன்லைன் பிளாட்ஃபார்மில் இருந்து பதிவிறக்கி/நகலெடுத்து, குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் செய்யாமல் பயன்படுத்தப்படும் உள்ளடக்கம் 
  • குரல் வர்ணனை சேர்க்கப்படாமல் உங்கள் வீடியோக்களுக்கான ரியாக்‌ஷன்களில் இருந்தே பெரும்பாலான பார்வைகளைப் பெறும் உள்ளடக்கம்
சிறுவர்களுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற உள்ளடக்கத்திற்கான தரக் கொள்கைகள்
எங்கள் தளத்தில் சிறந்த தரத்திலான வீடியோக்களை வழங்கும் கிரியேட்டர்களுக்குப் பலனளிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறியும் அதே நேரத்தில், சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் YouTubeல் பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.

"சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை” என அமைக்கப்பட்ட வீடியோக்கள் உங்கள் சேனலில் இருந்தால், அவற்றின் வருமானம் ஈட்டும் நிலையைத் தீர்மானிக்க சிறுவர்களுக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற வீடியோக்களுக்கான YouTubeன் தரக் கொள்கைகளை நாங்கள் பயன்படுத்துவோம்.

“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை” என அமைக்கப்பட்ட சேனலில் குறைந்த தரம் கொண்ட வீடியோக்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கண்டறியப்பட்டால் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்து அந்தச் சேனல் இடைநிறுத்தப்படலாம். இந்தத் தரக் கொள்கைகளை மீறும் தனி வீடியோ கண்டறியப்பட்டால் அந்த வீடியோவில் குறைவான விளம்பரங்களோ விளம்பரங்கள் இல்லாமலோ இருக்கக்கூடும்.

“சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை” என அமைக்கப்பட்ட வீடியோக்கள் குறைந்த தரத்தில் உள்ளனவா அல்லது சிறந்த தரத்தில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வீடியோக்களின் தனித்தன்மையும் சூழலும் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. வழிகாட்டுதல்களுக்கும் உதாரணங்களுக்கும் எங்களின் சிறுவர்கள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற வீடியோக்களுக்கான சிறந்த நடைமுறைகள் பக்கத்தைப் பார்க்கவும்.

வருமானம் ஈட்டுவதற்கான தகுதிநிலைச் சரிபார்ப்பில் தரக் கொள்கைகளைப் பயன்படுத்துதல்

குறிப்பிட்ட வீடியோவின் ஒட்டுமொத்தத் தரத்தையும் பாதிக்கக்கூடிய குறைந்த தரக் கொள்கைகள் பல உள்ளன. வருமானம் ஈட்டுதலுக்கு வீடியோ தகுதிபெறுகிறதா எனச் சரிபார்க்கும்போது ஒவ்வொரு கொள்கையையும் ஒரு காரணியாகக் கருத்தில் கொள்கிறோம். சிறுவர்கள் மற்றும் குடும்பத்திற்கேற்ற வீடியோக்களுக்கு எதிராக இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறைவான தரக் கொள்கைகளைத் தற்போது அமல்படுத்துகிறோம். காலப்போக்கில் இன்னும் அதிகமான தரக் கொள்கைகளைச் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது.

  • தவறான செயல்பாடுகள் அல்லது அணுகுமுறைகளை ஊக்குவித்தல்: ஆபத்தான செயல்பாடுகள், பொறுப்பற்ற முறையில் இருப்பது, மிரட்டுதல், நேர்மையின்மை, பிறருக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது போன்றவற்றை ஊக்குவிக்கும் வீடியோக்கள் (எ.கா. அபாயகரமான/பாதுகாப்பற்ற குறும்புச் செயல்கள், ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கங்கள்).
  • மிகவும் தொழில்ரீதியிலானவை அல்லது விளம்பரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை: தயாரிப்புகளை வாங்கச் செய்யவோ பிராண்டுகளையும் லோகோக்களையும் விளம்பரப்படுத்தவோ அதிக முக்கியத்துவம் அளிக்கும் வீடியோக்கள் (எ.கா. பொம்மைகள், உணவு). மக்களின் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வீடியோக்களும் இதில் அடங்கும். YouTube Kidsஸின் மிகவும் தொழில்ரீதியான வீடியோக்கள் குறித்து மேலும் அறிக.
  • கல்வி வீடியோக்கள் என ஏமாற்றுபவை: வீடியோவின் தலைப்பிலோ சிறுபடத்திலோ கல்வி தொடர்பானதுபோல் காட்டிவிட்டு, உண்மையில் சிறுவர்களுக்கான வழிகாட்டுதலோ விளக்கமோ இல்லாத வீடியோக்கள் அல்லது அவர்களுக்குத் தொடர்பில்லாத வீடியோக்கள். உதாரணத்திற்கு, தலைப்புகளிலோ சிறுபடங்களிலோ “வண்ணங்களை அறிந்துகொள்ளுங்கள்”, “எண்களை அறிந்துகொள்ளுங்கள்” எனப் பார்வையாளர்களுக்குக் காட்டிவிட்டு அதற்குச் சம்பந்தமில்லாத தவறான தகவல்களைக் கொண்டுள்ள வீடியோக்கள்.
  • புரிந்துகொள்வதைக் கடினமாக்குதல்: சிந்தனையற்ற, விஷயத்தை ஒருங்கிணைந்த வகையில் சொல்லாத அல்லது புரிந்துகொள்ள முடியாத வீடியோக்கள் (எ.கா. ஆடியோ தெளிவின்றி இருத்தல்). குறைந்த நேரத்தில் அதிக வீடியோக்களை உருவாக்குவது, தானாக வீடியோக்களை உருவாக்குவது போன்றவை பெரும்பாலும் இந்த வகை வீடியோவிற்குக் காரணமாக உள்ளன.
  • பரபரப்பை ஏற்படுத்துதல் அல்லது தவறாக வழிநடத்துதல்: பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட, விசித்திரமான, பிறர் கருத்து அடிப்படையிலான மற்றும் சிறுவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கள். “முக்கியச் சொற்களை நிரப்புதல்” அல்லது சிறுவர்களைக் கவரும் பிரபலமான முக்கியச் சொற்களை மீண்டும் மீண்டுமோ திருத்தியோ மிகைப்படுத்தியோ பயன்படுத்தும் வீடியோக்களும் இதில் உள்ளடங்கும். முக்கியச் சொற்களை அர்த்தமற்ற வகையில் பயன்படுத்துவதும் இதில் அடங்கக்கூடும்.
கிரியேட்டரின் பொறுப்புகள்
YouTube உள்ளடக்கத்துடன் விளம்பரதாரர்கள் தங்கள் பிராண்டுகளை இணைத்துக்கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் சேனல் மற்றும் YouTube கூட்டாளர் திட்டத்தின் வெற்றி இருக்கும். விளம்பரதாரர்கள் நம்பிக்கை இழக்கும்போது அது அனைத்து YouTube கிரியேட்டர்களின் வருமானத்தையும் மோசமாகப் பாதிக்கும்.
சமூகத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மோசமான செயல்பாடுகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. YouTubeலும் அதற்கு வெளியிலும் உங்கள் பார்வையாளர்கள், சக கிரியேட்டர்கள், விளம்பரதாரர்களுடன் நீங்கள் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் சாராம்சமாகும்.
இந்தக் கொள்கையை மீறினால் வருமானம் ஈட்டுதல் தற்காலிகமாக முடக்கப்படலாம் அல்லது உங்கள் கணக்குகள் நிறுத்தப்படலாம். தற்போதுள்ள உங்களின் அனைத்துச் சேனல்களுக்கும், நீங்கள் உருவாக்கும் புதிய சேனல்களுக்கும், நீங்கள் அடிக்கடி தோன்றும் சேனல்களுக்கும் இது பொருந்தக்கூடும்.
உங்கள் சேனல்களில் ஒன்றின் வருமானம் ஈட்டுதல் முடக்கப்பட்டாலோ சேனல்கள் முடித்துவைக்கப்பட்டாலோ புதிய சேனல்களை உருவாக்கி (அல்லது ஏற்கெனவே உள்ள சேனல்களைப் பயன்படுத்தி) இந்தக் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தொடர்புடைய சேனல்களைக் கொண்டு YPP திட்டத்திற்கு விண்ணப்பிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படலாம்.
கிரியேட்டரின் பொறுப்புகள் குறித்து மேலும் அறிக.
கிரியேட்டரின் நம்பகத்தன்மை

YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ள கிரியேட்டர்கள் அவர்களின் அடையாளத்தை உண்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவர்களது YouTube செயல்பாடுகளை மாற்றியமைப்பதன் மூலமோ ஏமாற்றக்கூடிய செயல்பாடுகளின் மூலமோ தங்களைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்றும் எதிர்பார்க்கிறோம்.

அதாவது பார்வைகள், சந்தாதாரர்கள், விருப்பங்கள், பார்த்த நேரம், விளம்பர இம்ப்ரெஷன்கள் போன்று ஒரு சேனலுக்குக் கிடைக்கும் ஈடுபாட்டைக் கிரியேட்டர்கள் செயற்கையாக அதிகரிக்கக்கூடாது. அதேபோல, இணக்கமில்லாத வீடியோவை நீக்குவதற்கு முன்போ அதற்கான அணுகலைக் கடினமாக்குவதற்கு முன்போ அதற்குத் தானாகக் கிடைக்கும் ஈடுபாடுகளைக் கிரியேட்டர்கள் ஊக்குவிக்கக்கூடாது. இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்து நீங்கள் அகற்றப்படலாம் அல்லது உங்கள் சேனல்கள் முடக்கப்படலாம். கூடுதல் தகவல்களுக்கு எங்கள் திட்டக் கொள்கைகளைப் பாருங்கள்

சட்டவிரோதமான, மோசடியான அல்லது ஏமாற்றக்கூடிய பணப் பரிமாற்றங்களுக்கு எங்கள் வருமானம் ஈட்டுதல் அம்சங்களைப் பயன்படுத்துவது போன்ற பொருளாதார ரீதியாக முறைகேடான செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் பயனர்களையும் YouTubeஐயும் கிரியேட்டர்கள் தவறாக வழிநடத்தக்கூடாது. இந்தக் கொள்கையை மீறினால் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்து உங்களை நாங்கள் அகற்றலாம் அல்லது உங்கள் சேனல்களை முடக்கலாம்.

கொள்கை மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும் முறை

YouTube தனது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வருகிறது. மேலும் அதைப் பயனர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டும் வருகிறது. சட்டம், ஒழுங்குமுறை அல்லது பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக எங்கள் சேவையில் செய்யப்படுகின்ற மாற்றங்களைப் பிரதிபலிக்க, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலும் கொள்கைகளிலும் நாங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். இவற்றில் சேவை விதிமுறைகள், YouTube கூட்டாளர் திட்ட விதிமுறைகள், எங்கள் கொள்கைகள், பிற ஒப்பந்த ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

உங்களைப் பாதிக்கக்கூடிய மாற்றங்களை நாங்கள் செய்யும்போது எழுத்துப்பூர்வமாக உங்களுக்குத் தெரிவிப்போம். திருத்தப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்காத பட்சத்தில் தொடர்புடைய அம்சத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளலாம் அல்லது எங்களுடனான ஒப்பந்தத்தை ரத்துசெய்து கொள்ளலாம்.

கொள்கை மாற்றங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள உதவும் வகையில் அறிவிப்புகள் தொடர்பான நிரந்தரப் பதிவையும் நாங்கள் பராமரிக்கிறோம். மாற்றங்கள் குறித்த எங்களின் பதிவை இங்கே பாருங்கள்.

YouTube வருமானம் ஈட்டுதல் கொள்கைகளை நாங்கள் அமலாக்கும் விதம்

YouTube மூலம் வருமானம் ஈட்டும் அனைவரும் YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான எங்களின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். எங்கள் கொள்கைகள் எதையேனும் நீங்கள் மீறினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை YouTube எடுக்கக்கூடும்.

நிறுத்தி வைத்தல், சரிகட்டல், வருவாயைத் திரும்பப் பெறுதல் அல்லது வழங்கவுள்ள வருவாயையோ பேமெண்ட்டையோ குறைத்தல்

YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கொள்கைகளை மீறினால், அந்த மீறல்களுடன் தொடர்புடைய வீடியோக்களின் வருமானத்தை நாங்கள் நிறுத்திவைக்கக்கூடும் அல்லது சரிகட்டக்கூடும். இன்னும் வழங்கப்படாத YouTubeக்கான AdSense பேலன்ஸில் இருந்து தொடர்புடைய வருமானத்தை நாங்கள் திரும்பப் பெறக்கூடும் அல்லது அந்தப் பணத்தை உங்களுக்கு வழங்கவுள்ள வருமானத்திலிருந்து குறைக்கக்கூடும்.

அவ்வாறான மீறல்கள் நடைபெறும்போது, வருமானத்தை நிறுத்திவைப்பதா சரிகட்டுவதா குறைப்பதா என்பதை முடிவெடுக்க எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவைப்படும். இதன் காரணமாக 90 நாட்கள் வரையிலோ மூன்றாம் தரப்பு உரிமைகோரல்களை நாங்கள் தீர்க்கும் வரையிலோ பேமெண்ட்டுகள் தாமதமாகக்கூடும்.

மீறல்கள் காரணமாக உங்கள் வருமானத்தை நிறுத்திவைப்பது அல்லது சரிகட்டுவது தொடர்பான உதாரணங்கள் இதோ (ஆனால் இவை மட்டுமே அல்ல):

YouTube கூட்டாளர் திட்டத்திலிருந்து உங்கள் சேனல் முடக்கப்பட்டிருந்தாலோ இடைநீக்கப்பட்டிருந்தாலோ வருவாய் ஈட்டத் தகுதிபெறமாட்டீர்கள். வருமானத்தையும் YouTube நிறுத்தி வைக்கலாம். அத்துடன் விளம்பரதாரர்கள்/பார்வையாளர்களின் பர்ச்சேஸ்களுக்கான பணத்தையும் திருப்பியளிக்கலாம் (பொருத்தமாகவும் சாத்தியமாகவும் இருக்கும் பட்சத்தில்).

எங்கள் கொள்கைகளை அமலாக்க வேண்டியிருக்கும்போது மின்னஞ்சல் மூலம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்போம் அல்லது அந்த அறிவிப்பைத் தயாரிப்பிலேயே காட்டுவோம். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய விருப்பங்களையும் தெரியப்படுத்துவோம்.

உங்கள் வீடியோக்களுக்கான விளம்பர வருவாயை வரம்பிடுதல்

எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்களை உங்கள் வீடியோக்கள் பூர்த்திசெய்தால் மட்டுமே YouTube கூட்டாளர் திட்டத்தின் உறுப்பினராக நீங்கள் அந்த வீடியோக்கள் மூலம் விளம்பர வருவாய் ஈட்ட முடியும். அத்துடன், உங்கள் வீடியோக்கள் எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற வழிகாட்டுதல்களைப் பூர்த்திசெய்யவில்லை என்றாலோ வயதுக் கட்டுப்பாடு, பதிப்புரிமை வழிகாட்டுதல்கள் போன்ற எங்களின் பிற கொள்கைகளை மீறினாலோ அவற்றுக்கு விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுதல் குறைவாகவோ முற்றிலும் இல்லாமலோ போகக்கூடும்.

வீடியோக்கள் வருமானம் ஈட்டுவதற்குத் தகுதிபெறாததற்கான காரணங்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு YouTube Studioவுக்கான வருமானம் ஈட்டுதல் ஐகான் வழிகாட்டியைப் பாருங்கள்

YouTube கூட்டாளர் திட்டத்தில் நீங்கள் பங்கேற்பதை இடைநிறுத்துதல்

YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான எங்கள் கொள்கைகளை மீறினால் உங்களின் ஒரு கணக்கிலோ எல்லாக் கணக்குகளிலுமோ வருமானம் ஈட்டுதல் இடைநிறுத்தப்படலாம் அல்லது நிரந்தரமாக முடக்கப்படலாம். உங்கள் சேனல் இனி வருமானம் ஈட்டுவதற்கான தகுதியை இழந்துவிட்டதாகத் தீர்மானிக்கப்பட்டால் YouTube கூட்டாளர் திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்டுவது தொடர்பான கருவிகள், அம்சங்கள், மாடியூல்கள் அனைத்திற்குமான அணுகலைச் சேனல் இழக்கக்கூடும். கிரியேட்டர்களுக்கான உதவி மையத்தைத் தொடர்புகொண்டு குறிப்பிட்ட வருமானம் ஈட்டுதல் மாடியூல்களில் இருந்து எப்போது வேண்டுமானாலும் நீங்கள் விலகிக்கொள்ளலாம்.

தரவுத் தக்கவைப்பு

YouTube உடனான உங்கள் வருமானம் ஈட்டுதல் ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் கூட, கிரியேட்டர்களுக்கான உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் திட்டத்தில் நீங்கள் பங்குபெற்ற காலத்திற்கான YouTube பகுப்பாய்வுகளின் தரவைக் கோரலாம்.

பிழையறிந்து திருத்துவதற்கான உதவிக்குறிப்புகள், திட்டத்தில் சேர மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை குறித்த விவரங்கள் போன்றவை உட்பட கணக்கு இடைநிறுத்தங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு எனது சேனலுக்கு வருமானம் ஈட்டுதல் முடக்கப்பட்டது என்ற பக்கத்தைப் பாருங்கள்

உங்கள் YouTube சேனலை இடைநிறுத்துதல்/முடக்குதல்

தவிர்க்க முடியாத சூழல்களில் பிளாட்ஃபார்மின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அல்லது எங்கள் பயனர்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க ஒரு சேனலையோ கணக்கையோ சேவைக்கான பயனரின் அணுகலையோ நாங்கள் முடக்கக்கூடும். உங்கள் சேனல்/கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது என நீங்கள் நினைத்தால் அதுகுறித்து என்ன செய்வது என்பது உட்பட சேனல் முடக்கங்கள், முடக்கப்பட்ட Google கணக்குகள் போன்றவை குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வருமானம் ஈட்டுதலைப் பாதிக்கும் செயல்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் விதம்

எங்கள் கொள்கைகளை அமலாக்க வேண்டியிருக்கும்போது மின்னஞ்சல் மூலம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்போம் அல்லது அந்த அறிவிப்பைத் தயாரிப்பிலேயே காட்டுவோம். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய விருப்பங்களையும் தெரிவிப்போம்.

உங்களைப் பாதிக்கும் சிக்கல்கள் தொடர்பாக உதவி பெறுவது எப்படி?

நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்தால் எங்கள் கிரியேட்டர் உதவிக் குழுவுக்கான அணுகலைப் பெறலாம்.

குறிப்பிட்டவொரு சிக்கலை நீங்கள் எதிர்கொண்டாலோ ஒரு கிரியேட்டராக YouTube மூலம் அதிகப் பலன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள விரும்பினாலோ நாங்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்:

  • YouTubeஐ நீங்கள் பயன்படுத்தும் விதத்தை மேம்படுத்துதல்
  • எங்கள் பகுப்பாய்வுக் கருவிகளில் அதிகப் பலன்களைப் பெறும் விதத்தைப் புரிந்துகொள்ளுதல்
  • YouTubeன் தொழில்நுட்பம் அல்லது சேவை சார்ந்த உதவிக்குறிப்புகளைப் பெறுதல்
  • கொள்கை மற்றும் பதிப்புரிமை வழிகாட்டுதல்களை அணுகுவது குறித்து அறிந்துகொள்ளுதல்
  • கணக்கு மற்றும் சேனல் நிர்வாகம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களைப் பெறுதல்
  • Content ID மற்றும் உரிமைகளுக்கான நிர்வாகம் சார்ந்த சிக்கல்களைச் சரிசெய்தல்
  • உங்கள் கணக்கிலுள்ள பிழைகள்/சிக்கல்களை அறிந்து சரிசெய்தல்

கிரியேட்டர்களுக்கான உதவிக்குழுவைத் தொடர்புகொள்வது மற்றும் YouTube கிரியேட்டராக உதவி பெறுவது எப்படி என்பது குறித்த கூடுதல் விரிவான வழிமுறைகளை நீங்கள் பார்க்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11588635212688639324
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false