அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கைகள்

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள்

அனைத்து Google வெளியீட்டாளர் கொள்கைகளையும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளையும் புதிய வெளியீட்டாளர் கொள்கைகள் உதவி மையத்திற்கு நகர்த்தி ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளோம். இப்போதைக்கு, அனைத்துக் கொள்கைகளையும் நீங்கள் தொடர்ந்து AdMob, AdSense, Ad Manager ஆகியவற்றின் உதவி மையங்களில் பார்க்கலாம். 

வெளியிடும் உள்ளடக்கத்தின் மூலம் வெளியீட்டாளர்கள் வருமானம் ஈட்டுவதற்கும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள, பொருத்தமான தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரதாரர்கள் வழங்குவதற்கும் இலவசமான, அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் இணையச் சேவை கிடைக்க Google உதவுகிறது.

குறிப்பிட்ட விளம்பரதாரர்களிடம் இருந்து வரும் விளம்பரங்களைப் பெறுவதற்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள உள்ளடக்கம் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளால் கண்டறியப்படும். உங்கள் உள்ளடக்கத்தின் விளம்பர இருப்பு ‘கட்டுப்பாடுகளைக் கொண்டது’ என லேபிளிடப்பட்டிருந்தால் அதை ஏலத்தில் எடுக்க, குறைவான விளம்பரதாரர்களே தகுதிபெறுவார்கள். இதன் விளைவாகச் சில சந்தர்ப்பங்களில் எந்த விளம்பரதாரர்களும் உங்கள் ’இருப்பில்’ உள்ளவற்றை ஏலம் எடுக்காமல் போகலாம், உங்கள் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் காட்டப்படாமலும் போகலாம். கவனத்திற்கு: இத்தகைய கட்டுப்பாடுகளுடன் லேபிளிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தில் Google விளம்பரங்கள் (முன்பு AdWords) காட்டப்படாது. எனவே இந்த Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் உள்ளடக்கத்தை வருமானம் ஈட்டுவதற்காகத் தேர்வு செய்யும்போது, அவை கட்டுப்படுத்தப்படாத உள்ளடக்கத்தை விடக் குறைவான விளம்பரங்களையே பெறக்கூடும்.

பின்வரும் வகைகளில் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன:

உங்களின் Google வெளியீட்டாளர் தயாரிப்புகள் உபயோகத்தை நிர்வகிக்கும் பிற கொள்கைகளுடன் சேர்த்து கூடுதலாக இந்தக் கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொள்கை தொடர்பான சொற்கள் குறித்தும் சொற்களஞ்சியத்தில் அவற்றின் அர்த்தம் என்ன என்பது குறித்தும் மேலும் அறிந்துகொள்ளுங்கள். 

உள்ளடக்கக் கட்டுப்பாடுகள்

பாலியல் உள்ளடக்கம்

இவற்றில்:

  • நிர்வாண உள்ளடக்கம்.
  • பாலியல் இச்சைக்குத் தீனி போடும் விதமான, பாலுணர்வைத் தூண்டக்கூடிய அல்லது அத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்கும் உள்ளடக்கம் இருக்கும்.

    உதாரணங்கள்: மார்பகங்கள், பிட்டங்கள், பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் க்ளோஸ்-அப் காட்சிகள், மெல்லிய ஆடை உடுத்தி வருதல், மங்கலாக்கப்பட்ட ஆபாசமான உடற்பாகங்கள் அல்லது பாலுணர்வைத் தூண்டும் விதமாகப் போஸ் கொடுக்கும் அல்லது ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்/பெண்களின் படங்கள்

  • விசித்திர பாலியல் இச்சைகள்.

    உதாரணங்கள்: பிறரின் அந்தரங்கச் செயல்பாடுகளைப் பார்த்து இன்பம்பெறுதல், பாலியல் ரீதியான பாத்திரம் ஏற்று நடித்தல், கட்டிப் போடுதல், எஜமானாகவும் அடிமையாகவும் நடத்தல், வலி/அவமானத்தைக் கொடுத்தும் பெற்றும் இன்பம் பெறுதல்

  • பாலியல் பொழுதுபோக்கு தொடர்பானவை.

    உதாரணங்கள்: ஆபாசத் திரைப்பட விழாக்கள், வயதுவந்தோருக்கான வெப்கேம் சேவைகள், ஸ்ட்ரிப் கிளப்கள்

  • பாலியல் தொடர்பான விற்பனைப் பொருட்களை விளம்பரப்படுத்தல்.

    உதாரணங்கள்: செக்ஸ் பொம்மைகள், லூப்ரிகண்ட்டுகள், பிறப்புறுப்பின் வீரியத்தைக் கூட்டும் உபகரணங்கள்

  • சட்டவிரோதமான பாலியல் உறவுகள் மற்றும்/அல்லது நடவடிக்கைகளை ஆதரித்தல்.

    உதாரணங்கள்: கள்ளத் தொடர்பு, தம்பதிகள் தங்களுக்குள் ஜோடிகளை மாற்றி உறவுகொள்ளுதல், ஹூக்-அப் அல்லது ஃபிலிங் டேட்டிங்

  • பாலியல் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள்.

    உதாரணங்கள்: பாலியல் ஆலோசனைகள்

  • பாலியல் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மருந்துகளையோ ஊட்டச்சத்துப் பொருட்களையோ ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: ஆண்குறி விறைப்பின்மைக்கான மாத்திரைகள், பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துப் பொருட்கள்

  பாலியல் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கம்

இவற்றில்:

  • கொடூரமான, கோரமான அல்லது அருவருப்பான உள்ளடக்கமோ படங்களோ இருக்கும்.

    உதாரணங்கள்: இரத்தம், குடல், உறைந்த இரத்தம், பாலியல் திரவங்கள், விலங்கு அல்லது மனிதக் கழிவுகள், குற்றக் காட்சிகள் அல்லது விபத்துகள் அடங்கிய படங்கள்

  • வன்முறை செயல்கள்.

    உதாரணங்கள்: துப்பாக்கிச் சூடுகள், குண்டு வெடிப்புகள் தொடர்பான உள்ளடக்கம் அல்லது படங்கள்; மரணதண்டனை வீடியோக்கள்

  • குறிப்பிடத்தக்க வகையில் ஆபாசமான அல்லது கீழ்த்தரமான மொழி உபயோகம்.

    உதாரணங்கள்: தகாத சொற்கள், கீழ்த்தரமான சொற்களைக் குறிப்பால் உணர்த்தும் சொற்கள்

கேம்பிளே காட்சிகளுக்கான விதிவிலக்கு: கேம்பிளே காட்சிகளைப் பொறுத்தவரை "கோரமான, கொடூரமான, அருவருப்பான உள்ளடக்கம்/படம்" அல்லது "வன்முறைச் செயல்களைச் சித்தரித்தல்" என்று உள்ளடக்கம் கருதப்படும், பின்வருபவை இடம்பெற்றிருந்தால் மட்டுமே:

  • சித்திரவதை.

    உதாரணங்கள்: கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குக் கடுமையான வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்தும் வன்முறைச் செயல்

  • பாலியல் வன்முறை.
  • சிறார்களுக்கு எதிரான வன்முறை.
  • அசல் பிரபலங்களுக்கு எதிரான வன்முறை.

    உதாரணங்கள்: நிஜ உலகில் ஜனாதிபதிகளாக இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் மீதான எந்த வகையான வன்முறைகளும்

  • திட்டமிட்டுச் செய்யப்படும் பாகுபாடு/ஒதுக்குமுறையுடன் தொடர்புடைய நடத்தையின் அடிப்படையில் தனிநபர் அல்லது குழுவினருக்கு எதிரான வன்முறை.
  • உதாரணங்கள்: தனிநபரின் இனம், பிறப்பு, மதம், இயலாமை, வயது, பிறந்த நாடு, ராணுவப் பணி அனுபவ நிலை, பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம் போன்றவற்றின் அடிப்படையில் அவருக்கு எதிரான வன்முறை

  அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

வெடிபொருட்கள்

இவற்றில்:

  • வெடித்துச் சிதறி அருகிலுள்ள மக்களுக்கோ பொருட்களுக்கோ சேதத்தை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: ஆணி குண்டுகள், இரசாயன குண்டுகள், கையெறி குண்டுகள், பட்டாசுகள் அல்லது வெடிக்கும் தன்மையுடைய பிற பொருட்கள்

  • வெடிப் பொருட்களை ஒன்றிணைத்தல், மேம்படுத்துதல் அல்லது வாங்குதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள்.

    உதாரணங்கள்: வெடிப் பொருட்களைச் செய்வதற்கான வழிமுறைகள்; கையெறி குண்டுகள், வெடிப் பொருட்கள் அல்லது மற்ற வெடிக்கக்கூடிய சாதனங்கள் ஆகியவற்றின் பாகங்களை 3D முறையில் அச்சிடுவதற்கான மென்பொருள் அல்லது கருவி

  வெடிபொருட்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

துப்பாக்கிகள், துப்பாக்கி உதிரிபாகங்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகள்

இவற்றில்:

  • தவறாகப் பயன்படுத்தினால் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் விளையாட்டு அல்லது பொழுதுபோக்கிற்கான துப்பாக்கிகள் அல்லது அசல் துப்பாக்கி போல இருப்பவற்றின் விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: கைத் துப்பாக்கிகள், குழல் துப்பாக்கிகள், ஷாட்கன்கள், வேட்டைத் துப்பாக்கிகள், பயன்படுத்த முடியும் நிலையில் இருக்கும் பழங்காலத் துப்பாக்கிகள், ஏர்சாஃப்ட் துப்பாக்கிகள், பெயிண்ட்பால் துப்பாக்கிகள், BB துப்பாக்கிகள், 3D அச்சிடப்பட்ட துப்பாக்கிகள்

  • துப்பாக்கியின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய உதிரிபாகங்கள் அல்லது அதற்கு அத்தியாவசியமானவை (செய்து முடிக்கப்பட்டோ முடிக்கப்படாமலோ இருப்பவை) ஆகியவற்றின் விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: வெடிமருந்துகள், தோட்டா வைக்கும் கிளிப்புகள், சைலன்ஸர்கள், துப்பாக்கிகளுக்கான டிரைபாடுகள், பைபாடுகள், ஸ்டாக்குகள், முழுத் துப்பாக்கியாக உருவாக்குவதற்கான உதிரி பாகங்கள், துப்பாக்கியின் பிடிமானங்கள், ஸ்கோப்புகள் மற்றும் குறிபார்க்கும் கருவிகள், பம்ப் ஸ்டாக்குகள்

  • இவ்வகையான உள்ளடக்கத்தில் துப்பாக்கிகளை ஒன்றிணைப்பது அல்லது அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கும்.

  துப்பாக்கிகள், துப்பாக்கி உதிரிபாகங்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மற்ற ஆயுதங்கள்

இவற்றில்:

  • விளையாட்டு, தற்காப்பு அல்லது சண்டையில் எதிராளியைக் காயப்படுத்தப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட மற்ற ஆயுதங்களின் விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: த்ரோயிங் ஸ்டார்ஸ், டேசர்கள், பிராஸ் நக்குல்ஸ், பெப்பர் ஸ்ப்ரே

  • சண்டைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கத்திகளின் (மாறுபட்ட தோற்றமுள்ள ஆயுதங்கள், அவற்றைத் திறப்பதற்கு உதவும் முறைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்) விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: பட்டாக் கத்திகள், சண்டைக் கத்திகள், வாளுக்கான உறைகள், பாலிஸாங்குகள், இராணுவக் கத்திகள், புஷ் டேகர்ஸ், வீசுகோடாரிகள்

  • இவ்வகையான உள்ளடக்கத்தில் "மற்ற ஆயுதங்கள்" எனும் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஓர் ஆயுதத்தை ஒன்றிணைப்பது, மேம்படுத்துவது அல்லது வாங்குவதற்கான வழிமுறைகள் இருக்கும்.

  மற்ற ஆயுதங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

புகையிலை

இவற்றில்:

  • புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களின் விற்பனையை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: சிகரெட்டுகள், சுருட்டுகள், புகையிலைப் பைப்புகள், ரோலிங் பேப்பர்கள், மெல்லும் புகையிலை, எலக்ட்ரிக் சிகரெட்டுகள்

   புகையிலை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

பொழுதுபோக்கிற்கான போதை மருந்துகள்

இவற்றில்:

  • போதைக்காக மனநிலையை மாற்றக்கூடிய பொருட்களையும் "உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய” பொருட்களையும் விளம்பரப்படுத்துதல்.

    உதாரணங்கள்: கொக்கைன், கிரிஸ்டல் மெத், ஹெராயின், கஞ்சா, கொக்கைனுக்கான மாற்றுப் பொருட்கள், மெஃபெட்ரோன் மற்றும் "சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டும் பொருட்கள்”

  • பொழுதுபோக்கிற்கான போதை மருந்துகளின் உபயோகத்தை எளிதாக்கி, அவற்றைச் சந்தைப்படுத்தும் தயாரிப்புகளையோ சேவைகளையோ விளம்பரப்படுத்துதல்.

    உதாரணங்கள்: போதை மருந்துகளை வைத்துப் புகைக்கும் பைப்புகள், புகைப்பான்கள், கஞ்சா காஃபி ஷாப்கள்

  • பொழுதுபோக்கிற்கான போதை மருந்துகளை உற்பத்தி செய்தல், வாங்குதல் அல்லது உபயோகித்தல் குறித்த வழிமுறைகள்.

    உதாரணங்கள்: போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளையும் பரிந்துரைகளையும் பரிமாறிக்கொள்ளும் மன்றங்கள்

  பொழுதுபோக்கிற்கான போதை மருந்துகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மது விற்பனை செய்தல் அல்லது அதைத் தவறாகப் பயன்படுத்துதல்

இவற்றில்:

  • ஆன்லைன் மதுபானங்கள் விற்பனையை ஊக்குவித்தல்.
  • அதிகப்படியாக மது குடிப்பதை ஊக்குவித்தல்.

    உதாரணங்கள்: ஒரே நேரத்தில் மொத்தமாக மது அருந்துதல் அல்லது போட்டியில் வெல்வதற்காக அதிகப்படியாக மது அருந்துதல் ஆகியவற்றைப் பெருமையாகக் காட்டுதல்

  மது விற்பனை செய்தல் அல்லது அதைத் தவறாகப் பயன்படுத்துதல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஆன்லைன் சூதாட்டம்

இவற்றில்:

  • ஆன்லைனில் உண்மையான பணத்தை வைத்து ஆடும் சூதாட்டம் அல்லது பணத்தையோ வேறு மதிப்புள்ள பொருட்களையோ ஈடாக வைத்து ஆடி, வெற்றி பெற்றால் பணத்தையோ வேறு பரிசுகளையோ வெல்ல வாய்ப்பளிக்கும் ஆன்லைன் கேம்களில் பயனர்கள் பங்குகொள்வதை அனுமதிக்கும்.

    உதாரணங்கள்: ஆன்லைனில் நடத்தப்படும் சூதாட்ட விடுதிகள் அல்லது சூதாட்டங்களுக்குப் பந்தயம் கட்டுதல், ஆன்லைனில் லாட்டரி சீட்டுகளையோ ஸ்கிராட்ச் கார்டுகளையோ விற்பனை செய்தல், விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை வைத்து ஆன்லைனில் பந்தயம் கட்டுதல், ஆன்லைன் சூதாட்டத்திற்கான பக்கங்களை ஒருங்கிணைக்கின்ற அல்லது அவற்றுடன் கூட்டு வணிகம் புரிகின்ற வலைதளங்கள்

   ஆன்லைன் சூதாட்டம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகள்

இவற்றில்:

  • மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்தல்.

    உதாரணங்கள்: மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகள், ஆன்லைன் மருந்தகங்கள்

   மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

அங்கீகரிக்கப்படாத மருந்துகள் & ஊட்டச்சத்துப் பொருட்கள்

இவற்றில்:

  • அங்கீகரிக்கப்படாத மருந்துகளையும் ஊட்டச்சத்துப் பொருட்களையும் விற்பனை செய்தல்.

    உதாரணங்கள்: அங்கீகரிக்கப்படாத மருந்துகளும் ஊட்டச்சத்துப் பொருட்களும் பட்டியலில் (முழுமையான பட்டியல் இல்லை) இருக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்தல்; எஃபேத்ராவை உட்பொருளாகக் கொண்ட தயாரிப்புகள்; செயலூக்கம் மிக்க மருந்துகளையோ ஆபத்தான உட்பொருட்களையோ கொண்ட மூலிகைப் பொருட்களையும், ஊட்டச்சத்துப் பொருட்களையும் விற்பனை செய்தல்; பொதுவான விற்பனைக்கு அங்கீகரிக்கப்படாத மருந்துக்கோ, ஊட்டச்சத்துப் பொருளுக்கோ, கட்டுப்பாடுள்ள பொருளுக்கோ இருக்கும் பெயர்களுடன் குழப்பிக்கொள்ளும் விதமான பெயர்களில் தயாரிப்புகளை விற்பனை செய்தல்

  அங்கீகரிக்கப்படாத மருந்துகள் & ஊட்டச்சத்துப் பொருட்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

Google Play Storeரிலிருந்து அகற்றப்பட்ட ஆப்ஸ்

இந்த ஆப்ஸ்: 

 Google Play Storeரில் இருந்து அகற்றப்பட்ட ஆப்ஸ் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்


செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் 

விளம்பரங்களின் குறுக்கீடு 

உள்ளடக்கத்தை மறைக்கும் Google வழங்கும் விளம்பரங்கள்

பின்வரும் வகையிலான Google வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • உள்ளடக்கத்தை முழுமையாகவோ பகுதியாகவோ (எந்தக் கால அளவிற்கும்) மறைப்பவை

  உள்ளடக்கத்தை மறைக்கும் Google வழங்கும் விளம்பரங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள் 

Google வழங்கும் விளம்பரங்களை மறைக்கும் உள்ளடக்கம் 

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • Google வழங்கும் விளம்பரங்களை முழுமையாகவோ பகுதியாகவோ மறைப்பவை.

  Google வழங்கும் விளம்பரங்களை மறைக்கும் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்  

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2700101458335996323
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false