Google Business Profile கொள்கைகள் குறித்த மேலோட்டப் பார்வை

பயனர்கள் தங்களின் Business Profileலில் சேர்க்கும் உள்ளடக்கத்தில், சம்பந்தப்பட்ட இருப்பிடத்தைத் துல்லியமாகக் குறிப்பிடுவதுடன் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். மீறல்கள் நடக்கும்போது, உள்ளடக்கம் காட்டப்படுவதைத் தடுக்கவோ சுயவிவரம் அல்லது வணிகர் கணக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

Google Business Profile தொடர்பான அனைத்து கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்

எங்களின் முக்கியக் கொள்கைகள் குறித்த மேலோட்டத்தை வழங்குவதோடு வணிகர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகவும் பொதுவான சிக்கல்களையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது, ஆனால் அனைத்தையும் இது உள்ளடக்கியது அல்ல. Google Business Profile கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் முழுமையான பட்டியலைப் பாருங்கள்.

தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம்

Business Profileலில் சேர்க்கப்படும் உள்ளடக்கம் அனைத்தும் Googleளின் தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளுடன் இணங்க வேண்டும். கருத்துகள், படங்கள், வீடியோக்கள் போன்ற அனைத்து உள்ளடக்க வடிவங்களுக்கும் இந்தக் கொள்கைகள் பொருந்தும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத சுயவிவரங்களும் உள்ளடக்கமும் Googleளில் வெளியிடப்படாது.

கணக்கு அளவிலான கட்டுப்பாடுகள்

பின்வரும் காரணங்களால் தங்கள் Business Profileலுக்கான அணுகலை வணிகர்கள் இழக்கலாம் அல்லது அவர்களின் அணுகல் கட்டுப்படுத்தப்படலாம்:

Google கணக்கு நல்ல நிலையில் இல்லை
Google கணக்கு நல்ல நிலையில் இல்லாவிட்டால் (எ.கா. முடக்கப்பட்டிருந்தால், இடைநிறுத்தப்பட்டிருந்தால் அல்லது நீக்கப்பட்டிருந்தால்) தனது Google Business Profileலை அணுக, சிக்கலைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை வணிகர் எடுக்க வேண்டும்.
Business Profile செயல்பாட்டில் இருந்து கணக்கு கட்டுப்படுத்தப்பட்டிருத்தல்

Google Business Profile கொள்கைகளை அடிக்கடி மீறும்போது வணிகரின் Business Profileலுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம்.

வணிகரின் கணக்கு கட்டுப்படுத்தப்பட்டால் அந்தக் கணக்குடன் தொடர்புடைய அனைத்து Business Profileகளும் இடைநிறுத்தப்படும்.

கணக்கு கட்டுப்படுத்தப்பட்டால் அந்தக் கணக்கில் சேர்க்கப்படும் உள்ளடக்கம் நிராகரிக்கப்படும். முன்பு அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்கு முன்னரோ சுயவிவரத்தில் புதிய உள்ளடக்கத்தைச் சேர்க்கும் முன்னரோ முதலில் கணக்கை மீட்டெடுக்க வேண்டும்.

பிற Google தயாரிப்பில் உள்ள கணக்கிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின் காரணமாகச் சுயவிவரம் இடைநிறுத்தப்பட்டிருத்தல்

மற்றொரு Google தயாரிப்புடன் தொடர்புடைய கணக்கின் மூலம் Business Profile உருவாக்கப்பட்டிருந்தால் Business Profile அல்லாத அந்தத் தயாரிப்பில் உள்ள கணக்கிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டின் காரணமாக Business Profile இடைநிறுத்தப்படலாம்.

Business Profile அல்லாத கணக்கு கட்டுப்படுத்தப்பட்டால், கட்டுப்படுத்தப்பட்ட கணக்கின் மூலம் பிசினஸ் சுயவிவரத்தில் சேர்க்கப்படும் உள்ளடக்கம் நிராகரிக்கப்படலாம். சுயவிவரத்தை மீட்டெடுக்கும் முன், Business Profile அல்லாத கணக்கை மீட்டெடுக்க வேண்டும்.

தகுதிநிலை

Googleளில் Business Profileகளுக்குப் பின்வரும் கட்டுப்பாடுகளும் தகுதிநிலைகளும் உள்ளன:

தகுதிபெறாத பிசினஸ்கள்

Googleளில் Business Profile பெறுவதற்குத் தகுதிபெற, குறிப்பிட்டுள்ள வணிக நேரத்தின்போது அந்த பிசினஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரில் சேவை வழங்க வேண்டும்.

உதாரணமாக, பின்வரும் பிசினஸ்கள் Business Profile பெறுவதற்குத் தகுதிபெறாது:

  • உங்கள் பிசினஸிற்குச் சொந்தமில்லாத அல்லது அதைப் பிரதிநிதித்துவப்படுத்த அங்கீகரிக்கப்படாத இருப்பிடத்தில் நடக்கும் தொடர் சேவை, வகுப்பு அல்லது மீட்டிங்.
  • லீட் உருவாக்கும் ஏஜெண்ட்டுகள் அல்லது நிறுவனங்கள்.
  • பிராண்டுகள், நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்லைனில் மட்டும் செயல்படும் பிற பிசினஸ்கள்.
  • விடுமுறைக் கால வீடுகள், மாடல் வீடுகள், காலி அபார்ட்மெண்ட்டுகள் போன்ற வாடகை அல்லது விற்பனைக்கான சொத்துகள்.

தகுதிநிலை குறித்து மேலும் தெரிந்துகொள்ள பிசினஸிற்கான தகுதிநிலை மற்றும் உரிமை என்பதைப் பார்க்கவும்.

குறிப்பிடும் இடத்தில் பிசினஸ் இல்லை

Googleளில் உள்ள தரவை முடிந்தவரை துல்லியமாக வைத்திருக்க பயனர் அறிக்கைகள், உரிமம் பெற்ற உள்ளடக்கம் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களை Google பயன்படுத்துகிறது.

நீங்கள் குறிப்பிடும் இடத்தில் உங்கள் பிசினஸ் இல்லை என்று கண்டறிந்தால் Google உங்கள் சுயவிவரத்தை முடக்கும்.

முகவரிக்குப் பதிலாக அஞ்சல்பெட்டி எண்
முகவரிக்குப் பதிலாக அஞ்சல்பெட்டி எண்ணைக் கொண்டிருக்கும் பிசினஸ்கள் Google Business Profileலில் அனுமதிக்கப்படாது. வணிகர்கள் தங்கள் பிசினஸின் முகவரிக்குப் பதிலாக அஞ்சல்பெட்டி எண்ணை வழங்கியிருந்தால் அவர்களின் சுயவிவரம் இடைநிறுத்தப்படும்.

உரிமை

Business Profile உரிமையில் உள்ள சிக்கல்களில் அடங்குபவை:

அங்கீகரிக்கப்படாத சுயவிவர அணுகல்
பிசினஸ் சுயவிவரத்தின் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர் வேறொரு வணிகர் என்பது உறுதிசெய்யப்பட்டால் அங்கீகரிக்கப்படாத பிற பயனர்களுக்கான அணுகல் ரத்துசெய்யப்படும்.
செயலில் இல்லாத உரிமையாளர்
நீண்ட காலமாகத் தங்கள் Google Business Profileலை அணுகாத வணிகர்களின் அணுகல் ரத்துசெய்யப்படலாம். அத்துடன் போதுமான எச்சரிக்கைகளுக்குப் பிறகு உள்ளடக்கமும் அகற்றப்படலாம்.

இடுகையிடுவதற்கான கட்டுப்பாடுகள்

சுயவிவரத்திற்கான பயனர் பங்களிப்புகள் உதவிகரமாக இல்லாமலோ, தீங்கு விளைவிக்கக்கூடியதாகவோ, தலைப்புக்குத் தொடர்பற்றதாகவோ Google கொள்கைகளைப் பொதுவாக மீறுவதாகவோ எப்போதும் இருந்தால் அந்தச் சுயவிவரத்திற்கான பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது இடைநிறுத்தலாம். எடுத்துக்காட்டு: பிசினஸிற்குச் சம்பந்தமில்லாத நோக்கங்களால் ஒரு பிசினஸைப் பற்றி மோசமான கருத்துகளைத் தொடர்ந்து வழங்குவது. இடுகையிடுவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து மேலும் அறிக.

சமர்ப்பிக்கப்படும் உள்ளடக்கம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்

Business Profileலில் சேர்க்கப்படும் உள்ளடக்கம் நிராகரிக்கப்பட பல காரணங்கள் உள்ளன.

நீக்கப்பட்ட சுயவிவரம்
உள்ளடக்கத்தை Google மதிப்பாய்வு செய்வதற்கு முன்னரோ வெளியிடுவதற்கு முன்னரோ, தொடர்புடைய சுயவிவரத்திற்கான அணுகல் உள்ள பயனரால் சுயவிவரம் நீக்கப்பட்டால் உள்ளடக்கம் மற்றும் மறுபரிசீலனைக் கோரிக்கைகளை Google நிராகரிக்கலாம்.
முடக்கப்பட்ட சுயவிவரம்

உள்ளடக்கத்தை Google மதிப்பாய்வு செய்வதற்கு முன்னரோ வெளியிடுவதற்கு முன்னரோ, தொடர்புடைய சுயவிவரம் முடக்கப்பட்டால் உள்ளடக்கத்தையும் மறுபரிசீலனைக் கோரிக்கைகளையும் Google நிராகரிக்கலாம்.

சுயவிவரத்தில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதற்கு முன், முடக்கப்பட்ட சுயவிவரங்களை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.

முடக்கப்பட்ட சுயவிவரங்களை மீட்டெடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இடைநிறுத்தப்பட்ட சுயவிவரம்

உள்ளடக்கத்தை Google மதிப்பாய்வு செய்வதற்கு முன்னரோ வெளியிடுவதற்கு முன்னரோ, தொடர்புடைய சுயவிவரம் இடைநிறுத்தப்பட்டால் உள்ளடக்கத்தையும் மறுபரிசீலனைக் கோரிக்கைகளையும் Google நிராகரிக்கலாம்.

சுயவிவரத்தில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதற்கு முன், இடைநிறுத்தப்பட்ட சுயவிவரங்களை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.

இடைநிறுத்தப்பட்ட சுயவிவரங்களை மீட்டெடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சரிபார்ப்பு அவசியம்

Googleளில் உங்கள் பிசினஸ் பெயரையும் பிற தகவல்களையும் மாற்ற வேண்டுமென்றால் முதலில் உங்கள் பிசினஸ் சரிபார்க்கப்பட வேண்டும். சரிபார்க்கப்படாத சுயவிவரங்களில் சேர்க்கப்படும் உள்ளடக்கத்தை Google நிராகரிக்கலாம்.

சரிபார்க்கப்படுவது குறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உள்ளடக்கம் வெளியிடப்படாமல் இருப்பது அல்லது மறுபரிசீலனைக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கான பிற காரணங்கள்

கொள்கை மீறல் அல்லாத வேறு காரணங்களுக்காக, சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கம் சில சமயங்களில் வெளியிடப்படாமல் இருக்கலாம். அத்தகைய காரணங்களில் சில:

சுயவிவரமோ உள்ளடக்கமோ ஏற்கெனவே வெளியிடப்பட்டிருத்தல், திருத்தப்பட்டிருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல்
உள்ளடக்கத்தை ஏற்கெனவே Google ஏற்றுக்கொண்டதால், வணிகர் சேர்த்த சில உள்ளடக்கங்கள் சேர்க்கப்படாமல் போகலாம். எடுத்துக்காட்டு: ஏற்கெனவே நீங்கள் சேர்த்த படத்தையோ ஃபோன் எண்ணையோ மீண்டும் சேர்ப்பது.
அதேபோல, உள்ளடக்கம் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருப்பது, நீக்கப்பட்டிருப்பது அல்லது திருத்தப்பட்டிருப்பதன் காரணமாக மறுபரிசீலனை குறித்து முடிவெடுக்க முடியாதபோது மறுபரிசீலனைக் கோரிக்கைகளை Google நிராகரிக்கக்கூடும்.
சமர்ப்பித்தல் பிழை
உங்கள் உள்ளடக்கத்தைச் செயலாக்கும்போது பிழை ஏற்பட்டது. பிறகு முயலவும் அல்லது Google Business Profile உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6509409329123600322
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false