எந்த முறையில் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்தல்

ரசிகர் நிதியளிப்பு மற்றும் Shopping அம்சங்களுக்கான முன்கூட்டிய அணுகல் பல கிரியேட்டர்களுக்குக் கிடைக்கும் வகையில் நாங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தை (YPP - YouTube Partner Program) விரிவுபடுத்துகிறோம். இந்த நாடுகள்/பிராந்தியங்களில் உள்ள தகுதிபெறும் கிரியேட்டர்களுக்கு விரிவாக்கப்பட்ட YouTube கூட்டாளர் திட்டம் கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, கென்யா, கேமன் தீவுகள், லிதுவேனியா, லக்சம்பர்க், லாத்வியா, மாஸிடோனியா, வடக்கு மரியானா தீவுகள், மால்டா, மலேசியா, நைஜீரியா, நெதர்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஃபிரெஞ்சு பாலினீசியா, பபுவா நியூ கினியா, ஃபிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், கத்தார், ரோமானியா, செர்பியா, ஸ்வீடன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, செனகல், டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகள், தாய்லாந்து, துர்க்கியே, உகாண்டா, விர்ஜின் தீவுகள், வியட்நாம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள தகுதிபெறும் கிரியேட்டர்களுக்கு இந்த விரிவாக்கத் திட்டத்தின் பலன்கள் அடுத்த மாதத்தில் கிடைக்கும். YPPயில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

நீங்கள் மேலேயுள்ள நாடுகள்/பிராந்தியங்களைச் சேர்ந்தவர் இல்லையெனில் உங்களுக்கான YouTube கூட்டாளர் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. YPP குறித்த மேலோட்டப் பார்வையையும் அதில் சேர்வதற்கான தகுதிநிலையையும் விண்ணப்பம் தொடர்பாக உங்களுக்குப் பொருந்தும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம்.

விரிவாக்கப்பட்ட YouTube கூட்டாளர் திட்டத்திற்குத் தகுதிபெற்றுள்ளீர்களா எனப் பாருங்கள். இன்னும் நீங்கள் தகுதிபெறவில்லையெனில் YouTube Studioவின் வருமானம் ஈட்டுதல் பிரிவில் உள்ள அறிவிப்பைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுங்கள். விரிவாக்கப்பட்ட YPP திட்டம் உங்களுக்குக் கிடைத்து, தகுதிநிலைக்கான வரம்புகளை நீங்கள் பூர்த்திசெய்த பிறகு, அதுகுறித்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புவோம். 

நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் (YPP - YouTube Partner Program) சேர்ந்திருந்து, வரம்புகள் மற்றும் தகுதிபெறுவதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்தால் பின்வரும் வருமானம் ஈட்டுதல் அம்சங்கள் மூலம் வருமானம் ஈட்டலாம்:

சேனலுக்கான வரம்புகள் வருமானம் ஈட்டுதல் அம்சங்கள்
  • 500 சந்தாதாரர்கள்
  • கடந்த 90 நாட்களில் 3 பொதுப் பதிவேற்றங்கள்
  • இவற்றில் ஏதேனுமொன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
    • கடந்த 365 நாட்களில் நீள வடிவ வீடியோக்களில் 3,000 பொதுப் பார்வைக் காலம்
    • கடந்த 90 நாட்களில் 30 லட்சம் பொது Shorts பார்வைகள்
  • 1,000 சந்தாதாரர்கள்
  • இவற்றில் ஏதேனுமொன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
    • கடந்த 365 நாட்களில் நீள வடிவ வீடியோக்களில் 4,000 பொதுப் பார்வைக் காலம்
    • கடந்த 90 நாட்களில் 1 கோடி பொது Shorts பார்வைகள்

ஒவ்வொரு வருமானம் ஈட்டுதல் அம்சத்திற்கும் தகுதிபெறுவதற்கான தேவைகள் மாறுபடும். நீங்கள் தகுதிபெறும் பட்சத்தில் இந்த அம்சங்களை இயக்குவதற்கான வழிமுறைகளை இந்தக் கட்டுரை விவரிக்கும்.

YouTubeல் பணம் சம்பாதிப்பது குறித்த அறிமுகம்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.
வருமானம் ஈட்டுவதற்கான எல்லா வழிகளையும் பயன்படுத்த, உங்கள் YouTube சேனலுக்கு வருமானம் ஈட்டுதலை இயக்குவதற்கான அனைத்துப் படிகளையும் நிறைவுசெய்துள்ளதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை அணுகுதல்

YPPயில் சேர்ந்தபிறகு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளைப் பெற, தகுதிபெறும் ஒப்பந்த மாடியூல்களில் இருந்து கூட்டாளர்கள் வேண்டியவற்றைத் தேர்வுசெய்யலாம். மேலும் இது கிரியேட்டர்களுக்கு அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதோடு அவர்கள் சேனலுக்குப் பொருத்தமான வருமானம் ஈட்டுதல் வாய்ப்புகள் எவை என முடிவெடுக்கவும் உதவும்.

  1. YouTube Studioவில் உள்நுழையவும்
  2. இடதுபுற மெனுவில் உள்ள வருமானம் ஈட்டுதல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விருப்பமான ஒவ்வொரு மாடியூலுக்கும் விதிமுறைகளைப் படித்து ஏற்க, தொடங்குக என்பதைக் கிளிக் செய்யவும்

வீடியோ முகப்புப் பக்க விளம்பரங்கள்

2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் மத்தியில் இருந்து YPPயில் ஏற்கெனவே இருக்கும் YouTube கூட்டாளர்கள் வீடியோ முகப்புப் பக்கத்திலிருந்து விளம்பர வருவாய் ஈட்டுவதைத் தொடர, வீடியோ முகப்புப் பக்கத்திற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலைப் படித்து ஏற்க வேண்டும்.

வீடியோ முகப்புப் பக்கத்தில் உங்கள் வீடியோக்கள் தொடங்குவதற்கு முன்பும், அவை பிளே செய்யப்படும்போதும், அவை முடிந்தபிறகும், அவற்றுக்கு அருகிலும் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டலாம். YouTube Premium சந்தாதாரர் உங்கள் வீடியோக்களை வீடியோ முகப்புப் பக்கத்தில் பார்க்கும்போதும் நீங்கள் வருமானம் ஈட்டலாம்.

YouTube, YouTube Music, YouTube Kids ஆகியவற்றில் உங்கள் நீள வடிவ அல்லது நேரடி ஒளிபரப்பு வீடியோக்கள் பார்க்கப்படுகின்ற மற்றும் வீடியோவின் விளக்கம் இருக்கின்ற பக்கமே பிரத்தியேக வீடியோ பக்கம் ஆகும். பிரத்தியேக வீடியோ பக்கத்திலோ மற்ற தளங்களில் YouTube வீடியோ பிளேயரில் உட்பொதிக்கப்பட்டதிலோ பார்க்கப்பட்ட நீள வடிவ அல்லது நேரடி ஒளிபரப்பு வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர மற்றும் YouTube Premium வருவாயைப் பெற வீடியோ முகப்புப் பக்கத்திற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை நீங்கள் ஏற்க வேண்டும்.

Shorts ஊட்ட விளம்பரங்கள்

Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்பதன் மூலம் Shorts ஊட்டங்களில் வீடியோக்கள் இடையே பார்க்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் பெறப்படும் வருவாயை உங்கள் சேனல் பகிரலாம். நீங்கள் இந்த மாடியூலை ஏற்கும் தேதியில் இருந்து Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வு தொடங்கும். Shortsஸில் விளம்பர வருவாய்ப் பகிர்வு எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு YouTube Shorts வருமானம் ஈட்டுதல் கொள்கைகளைப் படித்துப் பாருங்கள்.

வர்த்தகத் தயாரிப்பு மாடியூல்

வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் (மற்றும் முன்னதாகக் கிடைத்த வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கை) உங்கள் ரசிகர்களுடன் நீங்கள் இணையும்போது ரசிகர் நிதியளிப்பு அம்சங்கள் மூலம் வருவாய் பெற அனுமதிக்கிறது. ரசிகர் நிதியளிப்பு அம்சங்களில் சேனல் மெம்பர்ஷிப்கள், Super Chat, Super Stickers, Super Thanks ஆகியவை அடங்கும். ரசிகர் நிதியளிப்பு அம்சங்களில் இருந்து வருவாய் ஈட்ட, நீங்கள் வர்த்தகத் தயாரிப்பு மாடியூலை (CPM - Commerce Product Module) ஏற்று தனிப்பட்ட அம்சங்களை இயக்க வேண்டும். வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கையில் (CPA - Commerce Product Addendum) கையொப்பமிட்ட கிரியேட்டர்கள் புதிய வர்த்தகத் தயாரிப்பு மாடியூலில் கையொப்பமிட வேண்டியதில்லை. ரசிகர் நிதியளிப்பு அம்சங்கள் மற்றும் பொருந்தும் கொள்கைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, YouTubeல் வர்த்தகத் தயாரிப்புகள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கொள்கைகளைப் பாருங்கள்.

வீடியோ முகப்புப் பக்க விளம்பரங்களை இயக்குதல்

எங்களின் விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்களை உங்கள் வீடியோ பூர்த்திசெய்தால் விளம்பரங்களை நீங்கள் இயக்கலாம். உங்கள் வீடியோ தகுதிபெறுகிறதா என உறுதியாகத் தெரிவில்லையெனில் அந்தப் பக்கத்திலுள்ள சுயமதிப்பீடு வழிகாட்டுதலையும் உதாரணங்களையும் பார்க்கலாம். விளம்பரங்களை இயக்குவதற்குத் தேர்வுசெய்துவிட்டாலே வீடியோவில் விளம்பரங்கள் தானாகவே காட்டப்படும் என்று அர்த்தமாகாது. எந்தவொரு விளம்பரமும் காட்டப்படும் முன், எங்கள் வழிகாட்டுதல்களை வீடியோ பூர்த்திசெய்கிறதா என்று வழக்கமான செயல்முறை மூலம் சரிபார்க்கப்படும். இது தானியங்கு முறை மூலமோ எங்கள் குழுவினரின் மதிப்பாய்வுகள் மூலமோ மேற்கொள்ளப்படும்.

YouTube வீடியோக்களில் விளம்பரங்களை இயக்குவதன் மூலம், வீடியோக்களில் உள்ள விஷுவல் மற்றும் ஆடியோ கூறுகளுக்குத் தேவைப்படும் அனைத்து உரிமைகளையும் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

ஒவ்வொரு வீடியோவுக்கும் விளம்பரங்களை இயக்குதல்

 நீங்கள் ஏற்கெனவே பதிவேற்றியுள்ள வீடியோவுக்கு விளம்பரங்களை இயக்க:

  1. YouTube Studioவிற்குச் செல்லவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தொடர்புடைய வீடியோவிற்கு அடுத்துள்ள வருமானம் ஈட்டுதல்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வருமானம் ஈட்டுதல் கீழ்த்தோன்றலில் இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களுக்கு விளம்பரங்களை இயக்குதல்

நீங்கள் ஏற்கெனவே பதிவேற்றியுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களுக்கு விளம்பரங்களை இயக்க:

  1. YouTube Studioவிற்குச் செல்லவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் வருமானம் ஈட்ட விரும்பும் வீடியோ சிறுபடத்தின் இடதுபுறம் உள்ள சாம்பல் நிறப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் வீடியோ பட்டியலுக்கு மேற்புறத்தில் இருக்கும் கருப்புப் பட்டியிலுள்ள கீழ்த்தோன்றலில் மாற்று அதன் பிறகு வருமானம் ஈட்டுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வருமானம் ஈட்டுதல் கீழ்த்தோன்றலில் இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • 'வீடியோவின் மத்தியில் விளம்பரங்களுக்கு' விளம்பர அமைப்புகளை மொத்தமாக மாற்ற: மாற்று அதன் பிறகு விளம்பர அமைப்புகள் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்துவிட்டு “வீடியோவின்போது விளம்பரங்களைக் காட்சிப்படுத்து (வீடியோவின் மத்தியில் விளம்பரம்)” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்து, விளம்பர இடைவேளைகள் இல்லாத வீடியோக்களுக்கு அல்லது அனைத்து வீடியோக்களுக்கும் தானியங்கும் 'வீடியோவின் மத்தியில் விளம்பரங்கள்' காட்டப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கலாம்.
  6. வீடியோக்களைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு "இந்தச் செயலின் விளைவுகளைப் புரிந்துகொண்டுள்ளேன்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்து அதன் பிறகு புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

Shorts ஊட்ட விளம்பரங்களை இயக்குதல்

விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டும் அனைத்து உள்ளடக்கமும் எங்களின் விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். Shortsஸில் எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் உள்ளடக்கத்தின் பார்வைகள் மட்டுமே வருவாய்ப் பகிர்வுக்குத் தகுதிபெறும். Shorts ஊட்டங்களில் வீடியோக்களுக்கிடையே பார்க்கப்பட்ட விளம்பரங்களில் இருந்து ஈட்டிய வருவாயைப் பகிர, YouTube Studioவின் வருமானம் ஈட்டுதல் பிரிவில் இருக்கும் Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலைப் படித்துப் பார்த்துவிட்டு ஏற்கவும்.​​​​​​

சேனல் மெம்பர்ஷிப்களை இயக்குதல்

சேனல் மெம்பர்ஷிப்கள் மூலம் பார்வையாளர்கள் மாதாந்திரப் பேமெண்ட்டுகளைச் செலுத்தி உங்கள் சேனலில் இணைந்து நீங்கள் வழங்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமான சலுகைகளுக்குரிய (பேட்ஜ்கள், ஈமோஜி மற்றும் பிற பலன்கள்) அணுகலைப் பெறலாம். தகுதிநிலை மற்றும் சேனல் மெம்பர்ஷிப்களை இயக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

Shoppingகை இயக்குதல்

Shopping மூலம் கிரியேட்டர்கள் தங்கள் ஸ்டோரை YouTube உடன் இணைக்கலாம், தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தலாம், வருமானம் ஈட்டலாம். நீங்கள் தகுதிபெற்றால், உங்கள் உள்ளடக்கத்தில் பிற பிராண்டுகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி வருமானம் ஈட்டலாம். தகுதிநிலை, Shopping செயல்படும் விதம் ஆகியவை குறித்து மேலும் அறிக.

Super Chat, Super Stickers ஆகியவற்றை இயக்குதல்

Super Chat, Super Stickers என்பவை லைவ் ஸ்ட்ரீம்கள், பிரீமியர்கள் ஆகியவற்றின்போது ரசிகர்கள் கிரியேட்டர்களுடன் இணைவதற்கான வழிகளாகும். நேரலை அரட்டையில் தங்கள் மெசேஜை ஹைலைட் செய்ய Super Chatsஸையோ நேரலை அரட்டையில் தோன்றக்கூடிய அனிமேட் செய்யப்பட்ட படத்தைப் பெற Super Stickersஸையோ ரசிகர்கள் வாங்கலாம். தகுதிநிலை குறித்தும் Super Chat & Super Stickersஸை எப்படி இயக்குவது என்பது குறித்தும் மேலும் அறிக.

Super Thanks அம்சத்தை இயக்குதல்

Super Thanks அம்சம் மூலம், தங்கள் வீடியோக்களுக்குக் கூடுதலாக நன்றி தெரிவிக்க விரும்பும் பார்வையாளர்கள் மூலம் கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டலாம். ஒருமுறை தோன்றும் அனிமேஷனை ரசிகர்கள் வாங்கலாம். அத்துடன் வீடியோவின் 'கருத்து' பிரிவில் தனித்துவமான, வண்ணமயமான மற்றும் பிரத்தியேகமாக்கக்கூடிய கருத்தையும் அவர்கள் இடுகையிடலாம். தகுதிநிலை மற்றும் Super Thanksஸை இயக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

YouTube Premium வருவாயை இயக்குதல்

YouTube Premiumமின் சந்தாதாரராக இருக்கும் பார்வையாளர் உங்கள் வீடியோவைப் பார்த்தால் YouTube Premium சந்தாவிற்கு அவர் செலுத்தியுள்ள கட்டணத்தின் ஒரு பகுதியை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் (எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பூர்த்திசெய்பவை) YouTube Premium வருவாய்க்குத் தகுதிபெறும். YouTube Premium வருவாயைப் பெற:

  • நீள வடிவ வீடியோக்கள்: வீடியோ முகப்புப் பக்கத்திற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்று, வீடியோ முகப்புப் பக்க விளம்பரங்களை இயக்குங்கள்
  • Shorts: Shorts ஊட்டங்களின் வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்றுக்கொள்ளுங்கள்

YouTube Premium குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15226907471639913401
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false