YouTubeன் சமூக வழிகாட்டுதல்கள்

நீங்கள் YouTubeஐப் பயன்படுத்தும்போது உலகம் முழுவதுமுள்ள மக்கள் சமூகத்தில் இணைகிறீர்கள். எல்லோரும் YouTubeஐ மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் பயன்படுத்த உதவும் வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்களை மீறுவதாகத் தெரியும் உள்ளடக்கத்தை நீங்கள் பார்த்தால் அதைப் புகாரளிக்கவும்.

சில நேரங்களில், எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கருதப்படக்கூடிய உள்ளடக்கத்தில் கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை (EDSA - Educational, Documentary, Scientific or Artistic) சார்ந்த சூழல் இருந்தால் YouTubeல் அது அனுமதிக்கப்படக்கூடும். இந்தச் சூழல்களில் EDSA விதிவிலக்கை உள்ளடக்கம் பெறும்.

எங்கள் பிளாட்ஃபார்மில் உள்ள பட்டியலிடப்படாத மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம், கருத்துகள், இணைப்புகள், சமூக இடுகைகள், சிறுபடங்கள் உட்பட அனைத்து வகையான உள்ளடக்கத்திற்கும் இந்தக் கொள்கைகள் பொருந்தும். இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.

பகுத்தறிவுடன் உருவாக்குதல்: YouTube சமூக வழிகாட்டுதல்கள்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

ஸ்பேம் & ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள்

YouTube சமூகம் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டதாகும். பிற பயனர்களை மோசடி செய்யும், தவறாக வழிநடத்தும், ஸ்பேம் செய்யும் மற்றும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட வீடியோக்களுக்கு YouTubeல் அனுமதியில்லை.

உணர்வுப்பூர்வமாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கம் 

பார்வையாளர்கள், கிரியேட்டர்கள் மற்றும் குறிப்பாக சிறுவர்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். அதற்காகவே சிறுவர்களைப் பாதுகாத்தல், பாலியல் & நிர்வாணம், தன்னைத்தானே காயப்படுத்துதல் ஆகியவை தொடர்பான விதிகளை உருவாக்கியுள்ளோம். YouTubeல் அனுமதிக்கப்படும் வீடியோக்கள் குறித்தும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றாத வீடியோவை நீங்கள் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிந்துகொள்ளுங்கள்.

வன்முறை அல்லது ஆபத்தான உள்ளடக்கம்

வெறுப்பைத் தூண்டும் பேச்சு, முறைகேடான நடத்தை, கொடூரமான வன்முறை, தீங்கிழைக்கும் தாக்குதல்கள், தீங்குவிளைவிக்கும் அல்லது ஆபத்தான நடத்தைகளை ஊக்குவிக்கும் வீடியோக்கள் YouTubeல் அனுமதிக்கப்படுவதில்லை.

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பொருட்கள்

குறிப்பிட்ட சில பொருட்களை YouTubeல் விற்க முடியாது. அனுமதிக்கப்பட்டவை—அனுமதிக்கப்படாதவை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

தவறான தகவல்

தவறாக வழிநடத்தி அல்லது ஏமாற்றி அதன் விளைவாக மிக மோசமான தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான உள்ளடக்கம் கொண்ட சில வகையிலான வீடியோக்கள் YouTubeல் அனுமதிக்கப்படுவதில்லை. தீங்கு விளைவிக்கக்கூடிய தீர்வுகள்/சிகிச்சை முறைகளை ஊக்குவித்தல், தொழில்நுட்பரீதியில் மாற்றியமைக்கப்பட்ட குறிப்பிட்ட சில வகை வீடியோக்கள், ஜனநாயகச் செயல்பாடுகளில் குறுக்கிடும் வீடியோக்கள் போன்றவற்றில் இருக்கும், நிகழ் உலகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய குறிப்பிட்ட வகையிலான தவறான தகவல்கள் இதில் அடங்கும்.

 

கல்வி, ஆவணப்படம், அறிவியல் மற்றும் கலை (EDSA) சார்ந்த சூழல் உள்ள உள்ளடக்கம்

YouTubeஐப் பாதுகாப்பான சமூகமாக ஆக்குவதே எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். சில நேரங்களில், எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கருதப்படக்கூடிய உள்ளடக்கத்தில் கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை (EDSA) சார்ந்த சூழல் இருந்தால் YouTubeல் அது அனுமதிக்கப்படக்கூடும். இந்தச் சூழல்களில் EDSA விதிவிலக்கை உள்ளடக்கம் பெறும். 

YouTube கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த கிரியேட்டருக்கான உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்.

இந்த விதிகளைப் பின்பற்றுவது முக்கியமானதாகும். YouTube பிளாட்ஃபார்மில் மற்றும்/அல்லது அதற்கு வெளியே ஒரு YouTube கிரியேட்டரின் நடத்தை எங்களின் பயனர்களுக்கோ சமூகத்திற்கோ பணியாளர்களுக்கோ சூழ்மண்டலத்திற்கோ தீங்கிழைப்பதாக இருந்தால் அந்தச் செயல் எவ்வளவு மோசமானது, அவர் இயல்பாகவே இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடக் கூடியவரா என்பன போன்ற பல காரணிகளின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கக்கூடும். நடத்தையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, கிரியேட்டரின் சிறப்புரிமைகளை இடைநிறுத்தி வைப்பது முதல் கணக்கை நிரந்தரமாக முடக்குவது வரை எங்களது நடவடிக்கை இருக்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12078978873116190301
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false