அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

புதியவர்களுக்கான வழிகாட்டி

AdSense கொள்கைகள்: புதியவர்களுக்கான வழிகாட்டி

AdSenseஸில் பங்கேற்கும் அனைத்து வெளியீட்டாளர்களும் Googleளுடன் நீண்டகாலத்திற்கு வெற்றிகரமான கூட்டாளர்களாக இருப்பார்கள் என நம்புகிறோம். இதைச் சாத்தியமாக்க AdSense திட்டக் கொள்கைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியது முக்கியம். கொள்கைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பதன் மூலம் Google விளம்பரங்களைக் காட்டும் உங்களின் வலைதளங்களும் பக்கங்களும் AdSense கொள்கைகளுக்கேற்ப இணக்கமாக இருக்கக்கூடும்.

எனவே வழக்கமாக மீறப்படும் மிக முக்கியமான கொள்கைகள் சிலவற்றைக் கீழே தனிப்படுத்திக் காட்டியுள்ளோம். இந்தச் சில விதிமுறைகளில் மட்டுமே எங்களது அனைத்துக் கொள்கைகளும் அடங்கிவிடவில்லை. எனினும் இவற்றைப் பின்பற்றுவது உங்கள் கணக்கை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.

கிளிக்குகளும் இம்ப்ரெஷன்களும்

உங்கள் நலனையும் எங்கள் விளம்பரதாரர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் தானியங்கு சிஸ்டங்களையும் குழுவினரின் மதிப்பாய்வுகளையும் பயன்படுத்தி, எங்கள் நிபுணர்கள் Google விளம்பரங்களுக்குக் கிடைக்கும் கிளிக்குகளையும் இம்ப்ரெஷன்களையும் கவனமாகக் கண்காணிக்கின்றனர். செயற்கையான கிளிக்குகளால் ஏற்படும் அதிகப்படியான செலவுகளிலிருந்து எங்கள் விளம்பரதாரர்களைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்கிறோம். முடிந்த அளவு மிகத் தரமான டிராஃபிக்கை உங்கள் வலைதளங்களில் வழங்குவதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • உங்களின் சொந்த Google விளம்பரங்களைக் கிளிக் செய்ய வேண்டாம்.
    உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் விளம்பரதாரர்களில் ஒருவரைப் பற்றிய தகவல்களை மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் உலாவியின் முகவரிப் பட்டியில் விளம்பரத்தின் URLலை நேரடியாக உள்ளிடவும்.
     
  • உங்கள் Google விளம்பரங்களைக் கிளிக் செய்யும்படி யாரிடமும் கேட்க வேண்டாம்.
    நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்களின் சொந்த வலைதளத்திலோ மூன்றாம் தரப்பு வலைதளங்களிலோ மின்னஞ்சல் மூலமாகவோ உங்களின் Google விளம்பரங்களைக் கிளிக் செய்யுமாறு பயனர்களை ஊக்குவிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. விளம்பரப்படுத்தப்படும் சேவைகளின் மீதுள்ள ஆர்வத்தினால் மட்டுமே Google விளம்பரங்களைப் பயனர்கள் கிளிக் செய்ய வேண்டுமே தவிர, உங்கள் வலைதளத்தின் வருமானத்தை அதிகரிக்கவோ அவர்களுக்கு ஏதேனும் ரிவார்டு கிடைக்கும் என்பதற்காகவோ வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடாது.
     
  • உங்கள் விளம்பரங்களுக்கான இடத்தைக் கவனமாகத் தேர்வுசெய்யுங்கள்.
    விளம்பரங்களில் தற்செயலான கிளிக்குகளைப் பெறுவதற்கான உத்திகளையோ ஏமாற்றக்கூடிய செயல்பாடுகளையோ வெளியீட்டாளர்கள் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. உங்கள் வலைதளத்தின் விளம்பரங்கள் சரியான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளுங்கள். விளம்பரங்களுக்கும் பங்கேற்கத்தக்க உறுப்புகளுக்கும் நடுவே இடைவெளி இருக்க வேண்டும், அருகிலுள்ள உள்ளடக்கத்தைப் போன்று அவை இருக்கக்கூடாது, தவறான தலைப்புகளுக்குக் கீழே அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது.
    • விளம்பரங்களுக்கும் பக்கக் கட்டுப்பாடுகளுக்குமிடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். உதாரணமாக கேம்களுக்கான வலைதளத்தில் கேம் கட்டுப்பாடுகளுக்கு மிக அருகில் விளம்பரங்களை வைப்பதைத் தவிர்க்கவும். பொதுவாக, ஃபிளாஷ் பிளேயருக்கும் விளம்பரத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 150 பிக்சல்கள் இடைவெளி இருக்க வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
    • இடையே தோன்றும் பக்கங்கள், கேம் இடைமுகங்கள், ஸ்ட்ரீமிங் வீடியோக்களுக்கெனத் தனியாக இருக்கும் வலைதளங்கள் ஆகியவற்றில் உள்ளடக்க விளம்பரங்களைச் சேர்க்க வேண்டாம். மேலே அடுக்குவது, இன்-ஸ்ட்ரீம், இடையீட்டு விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் உங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங்/கேம் பக்கத்தில் இருந்து வருமானம் பெற விரும்பினால் வீடியோவிற்கான AdSense, கேம்களுக்கான AdSense அல்லது YouTube கூட்டாளர் திட்டத்தைப் பாருங்கள்.
  • வலைதளத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்பது குறித்துக் கவனமாக இருங்கள்.
    டிராஃபிக்கை வாங்கும்போதோ மூன்றாம் தரப்பினருடன் விளம்பரங்களை அமைக்கும்போதோ வெளியீட்டாளர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு விளம்பர நெட்வொர்க்குடனும் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு முன்பு, உங்கள் வலைதளத்தைப் பாப்-அப்களிலோ ஏதேனும் மென்பொருள் ஆப்ஸில் செய்யும் செயல்களின்போதோ அவை எப்போதும் காட்டாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியீட்டாளர்கள் எந்த வகையான ஆன்லைன் விளம்பரங்களைப் பயன்படுத்தினாலும் Googleளின் முகப்புப் பக்கத் தர வழிகாட்டுதல்களுடன் அவை இணங்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
     
  • Google Analyticsஸைப் பயன்படுத்துங்கள்.
    நீங்கள் இதுவரை Google Analyticsஸைப் பயன்படுத்தவில்லை எனில் உங்கள் வலைதளத்தின் டிராஃபிக்கை நன்றாகப் புரிந்துகொள்ளவும் மேம்படுத்தவும் அதை நிறுவுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். டிராஃபிக் எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வது உங்கள் வலைதளத்திலிருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும். Analytics குறித்து அதன் வலைதளத்தில் மேலும் அறிந்துகொள்ளுங்கள். அல்லது Analytics YouTube சேனலிலுள்ள பயனுள்ள வீடியோக்களைப் பாருங்கள்.
     

உள்ளடக்க வழிகாட்டுதல்கள்

விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள உள்ளடக்கத்திற்கு வெளியீட்டாளர்களே பொறுப்பாவார்கள் (அதை வேறொருவர் உருவாக்கியிருந்தாலும்). உதாரணமாக, பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள வலைதளங்கள்.

விளம்பரச் செயலாக்கம்

உங்கள் கணக்கில் குறியீட்டை உருவாக்கிய பிறகு அதை மாற்றவோ விளம்பரக் காட்சிப்படுத்துமிடம் தொடர்பான கொள்கைகளை மீறும் எந்த இடத்திலும் (எ.கா. பாப்-அப்கள், மென்பொருள், Googleளைப் போன்று தோற்றமளிக்கும் வலைதளங்கள்) வைக்கவோ கூடாது.
  • AdSense குறியீட்டில் மாற்றம் செய்யக்கூடாது.
    குறியீட்டை நீங்கள் உருவாக்கிய பிறகு எக்காரணத்திற்காகவும் (குறிப்பாக Google அனுமதியளிக்காத வரை) அதன் எந்தவொரு பகுதியையும் மாற்றக்கூடாது அல்லது தளவமைப்பு, செயல்பாடு, இலக்கிடுதல், விளம்பரங்களின் விநியோகம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.
     
  • பாப்-அப் அறிவிப்புகளையோ தானாக நிறுவப்படும் மென்பொருட்களையோ பயன்படுத்த வேண்டாம்.
    இணையத்தில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த Google தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொறுப்பான மென்பொருள் கொள்கைகளை ஊக்குவிக்கிறது. Google விளம்பரங்களைக் காட்டும் வலைதளங்கள் பயனர்களின் சாதனங்களில் மென்பொருட்களை நிறுவுமாறு அறிவுறுத்தக்கூடாது. உலாவியின் முகப்புப் பக்கங்களைத் தானாகவோ பாப்-அப் அறிவிப்புகள் மூலமாகவோ மாற்றும்படி வெளியீட்டாளர்கள் பயனர்களைத் தூண்டவும் கூடாது.
     
  • Google வர்த்தக முத்திரைகளை மதித்திடுங்கள்.
    Google பக்கங்களைப் போன்ற போலியான பக்கங்களை உருவாக்குவதோ வடிவமைப்பதோ Google பிராண்டு அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான எங்கள் வழிகாட்டுதல்களின்படி தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், Googleளிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெறாமல் Google வர்த்தக முத்திரைகள், லோகோக்கள், இணையப் பக்கங்கள், ஸ்கிரீன்ஷாட்டுகள் போன்ற Google பிராண்டு அம்சங்களை வெளியீட்டாளர்கள் பயன்படுத்தக்கூடாது.

முடக்கப்பட்ட விளம்பரங்கள் அல்லது கணக்கு:

உங்கள் வலைதளத்திலோ கணக்கிலோ உள்ள விளம்பரங்களை எப்போதாவது நாங்கள் முடக்கும்பட்சத்தில் அதுதொடர்பான அறிவிப்பு மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து எங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விளம்பரங்களை மீண்டும் இயக்க முடியும்.

  • தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    உங்கள் கணக்கு குறித்து எப்போதாவது உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி சமீபத்தியதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். AdSense குழுவினரால் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை வெளியீட்டாளர்கள் கவனமாகப் படிப்பதோடு கோரிக்கைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக எங்களுக்கு மின்னஞ்சலில் பதில் அனுப்ப வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களது வலைதளத்தில் தேவையான நடவடிக்கையை எடுத்தால் போதுமானது. ஒரு வலைதளத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தினால், அதற்கென நேரம் ஒதுக்கி பிற பக்கங்களிலும் வலைதளங்களிலும் உள்ள சிக்கல்களைச் சரிசெய்துகொண்டு உங்கள் வலைதளங்களின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் AdSenseஸின் அனைத்துக் கொள்கைகளுடனும் இணங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
AdSense திட்டக் கொள்கைகளுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளுக்கும் இணங்கி வெளியீட்டாளர்கள் செயல்படுகிறார்களா என்பதைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறோம். விளம்பரங்களைக் காட்டும் ஒரு வலைதளம் இந்தக் கொள்கைகளை மீறுவதாக நீங்கள் கருதினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11562816733617828258
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false