அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கைகள்

AdSense கொள்கை மாற்றங்களுக்கான பதிவு

AdSenseஸிற்கான கொள்கைகளிலும் கட்டுப்பாடுகளிலும் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் Google அறிவிக்கிறது. கொள்கைகளில் செய்யப்படும் மாற்றங்களைப் பற்றி வெளியீட்டாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு அவற்றுக்கு எப்போதும் இணங்கி இருக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய பயனர் ஒப்புதல் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் (ஜூலை 2024)

ஜூலை 31, 2024 முதல் சுவிட்சர்லாந்தில் உள்ள பயனர்களுக்குப் பொருந்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பயனர் ஒப்புதல் கொள்கையின் வரம்பை Google விரிவுப்படுத்தும். Google விளம்பரத் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சட்டப்பூர்வத் தேவைகளுக்கு ஏற்ப குக்கீகள் அல்லது பிற லோக்கல் சேமிப்பகத்தைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காகத் தனிப்பட்ட தரவைச் சேகரித்தல், பகிர்தல், பயன்படுத்துதல் போன்றவற்றுக்கும் சுவிஸ் பயனர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (European Economic Area - EEA) மற்றும் யுனைடெட் கிங்டம் பயனர்களுக்கான தற்போதைய தேவைகளுடன் இதுவும் சேர்க்கப்படுகிறது.

(ஏப்ரல் 2024ல் இடுகையிடப்பட்டது)

தேடலுக்கான AdSense கொள்கைகள் தொடர்பான மாற்றங்கள் (மார்ச் 2024)

மார்ச் 27, 2024 அன்று தேடலுக்கான AdSense (AFS - AdSense for Search) கொள்கைகளில் Google பின்வரும் மாற்றங்களைச் செய்யும்:

  1. பின்வரும் மூன்று ஆதாரங்களில் ஒன்றில் இருந்து வரும் தெளிவான பயனர் தேடல் நோக்கத்திலிருந்து வினவல்கள் உருவாக்கப்படக்கூடும் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்:
  2. சிறந்த தெளிவுத்தன்மை மற்றும் வாசிப்புத்திறனுக்காக உள்ளடக்க மாற்றங்களைச் செய்யுங்கள். இந்த உள்ளடக்க மாற்றங்கள் கொள்கைகளின் வரம்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

Googleளின் தேடலுக்கான AdSense தயாரிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட அம்சங்களில் அவற்றைத் தெளிவுபடுத்த, புதிய கொள்கைகளையும் அறிமுகப்படுத்துவோம்:

  1. பின்வரும் AFS தயாரிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட அம்சங்களின் வகை தற்போது கிடைக்கிறது: தொடர்புடைய விளம்பரங்கள்
  2. AFS தயாரிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட அம்சங்களை, தேடலுக்கான AdSense (AFS) கொள்கைகளுக்கு இணங்கிப் பயன்படுத்த வேண்டும்.
  3. Google AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்காத உள்ளடக்கத்தில் AFS தயாரிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட அம்சங்களைக் காட்டக்கூடாது (Google வெளியீட்டாளர் கொள்கைகளும் இன்ன பிறவும் உட்பட).

(மார்ச் 2024ல் வெளியிடப்பட்டது)

AdSense திட்டக் கொள்கைகள் தொடர்பான மாற்றங்கள் (பிப்ரவரி 2024)

பிப்ரவரி 9, 2024 அன்று AdSense திட்டக் கொள்கைகளில் "உணர்வுப்பூர்வ நிகழ்வுகள்" தொடர்பான புதிய கொள்கையை Google அறிமுகப்படுத்தும்.

"உணர்வுப்பூர்வ நிகழ்வு" என்பது உயர்தரமான, தொடர்புடைய தகவல்களையும் நடைமுறை உண்மையையும் வழங்கக்கூடிய, அத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருமானம் ஈட்டுதல் அம்சங்களில் உணர்வுகளை மதிக்காத அல்லது முறைகேடான உள்ளடக்கத்தைக் குறைக்கக்கூடிய Googleளின் திறனுக்குக் கணிசமான அபாயத்தை ஏற்படுத்தும் எதிர்பாராத நிகழ்வு அல்லது சூழலாகும். ஓர் உணர்வுப்பூர்வ நிகழ்வின்போது, இந்த அபாயங்களைச் சரிசெய்ய நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்.

(ஜனவரி 2024ல் இடுகையிடப்பட்டது)

வீடியோ வெளியீட்டாளர் கொள்கையை Google வெளியீட்டாளர் கொள்கையாக மாற்றுதல் (ஏப்ரல் 2024)

ஏப்ரல் 1, 2024 அன்று, தற்போது AdSense மற்றும் Ad Managerருக்குப் பொருந்தும் வீடியோ வெளியீட்டாளர் கொள்கையை, AdMob உட்பட அனைத்து வீடியோ இருப்புக்கும் Google வெளியீட்டாளர் கொள்கைகளின் கீழ் பொருந்தும் வகையில் Google மாற்றும். அனைத்து Google தயாரிப்புகளிலும் கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், தற்போதைய தொழில்துறைத் தரத்துக்கு ஏற்ப இருப்பதற்காகவும் இந்தக் கவரேஜ் விரிவாக்கம் செய்யப்படுகிறது (எ.கா., IAB OpenRTB).

கீழே குறிப்பிட்டுள்ளபடி, Google விளம்பரக் குறியீட்டுடன் ("வீடியோ இருப்பு") வருமானம் ஈட்டும் AdSense, Ad Manager மற்றும் AdMob வீடியோ இருப்புக்கு, மாற்றப்பட்ட கொள்கைகள் பொருந்தும்:

விளம்பர இருப்பைத் துல்லியமாக விவரித்தல்

  1. துல்லியமான சிக்னல்களுடனான அறிவிப்புகளை வீடியோ இருப்பு வழங்க வேண்டும் (Ad Managerருக்கு, VAST விளம்பரக் குறிச்சொல் URL அளவுருக்களைப் பார்க்கவும்), இவை உட்பட:
    • விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்தின் ஒலிக்கும் தன்மை: இயல்பாகவே ஒலிக்கும் தன்மையில் இருத்தல் அல்லது ஒலியடக்கப்பட்டிருத்தல் (Ad Managerருக்கு, vpmute அளவுருவைப் பார்க்கவும்).
    • விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்தின் வகை: வீடியோ உள்ளடக்கத்தைக் கொண்ட வீடியோ பிளேயர்களில் வழங்கும் வீடியோ விளம்பரங்கள் 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' அல்லது 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய' விளம்பரத்தைக் காட்டுமிடங்கள் எனத் துல்லியமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் (Ad Managerருக்கு, plcmt அளவுருவைப் பார்க்கவும்). வீடியோ பிளேயர் அல்லாத மற்ற இடங்களில் காட்டப்படும் வீடியோ விளம்பரங்களுக்கு அறிவிப்புகள் தேவையில்லை. இருப்பு வடிவமைப்பின் அடிப்படையில் 'இடையீட்டு' அல்லது 'தனியாக' உள்ள விளம்பரங்களைக் காட்சிப்படுத்துமிடங்கள் எவை என்பதை Google தானாகத் தீர்மானிக்கும்.
      • 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' விளம்பரங்கள் என்பவை வீடியோ அல்லது ஆடியோ உள்ளடக்கத்தின் ஸ்ட்ரீமில் இயங்கும் வீடியோ அல்லது ஆடியோ விளம்பரங்களாகும். அந்த வீடியோ அல்லது ஆடியோ உள்ளடக்கமானது பயனர் வருவதற்குக் காரணமானதாகவோ பயனர் வெளிப்படையாகக் கேட்டதாகவோ இருக்கும்.

        உதாரணம்: பயனர் கேட்ட வீடியோ உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்வதற்கு முன்போ நடுவிலோ பிறகோ இயங்கும் வீடியோ விளம்பரம்.

      • 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய' விளம்பரங்கள் என்பவை பயனர் பார்க்க வந்த முதன்மையான வீடியோ உள்ளடக்க ஸ்ட்ரீமுடன் இயக்கப்படும் வீடியோ விளம்பரங்களைக் குறிக்கின்றன. இந்த வீடியோ உள்ளடக்கமானது பயனர் வருவதற்குக் காரணமானதாகவோ அவர் வெளிப்படையாகக் கேட்டதாகவோ இருக்காது. உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய விளம்பரங்கள் தோன்றும் இடங்கள் பக்கத்திற்குள் ஏற்றப்பட்டு இயல்பாக ஒலியடக்கப்பட்டிருக்க வேண்டும்.

        உதாரணம்: ஒலியடக்கப்பட்ட வீடியோ உள்ளடக்கத்தின் ஸ்ட்ரீமிற்கு முன்போ நடுவிலோ பின்போ, முக்கியமான எடிட்டோரியல் பக்கத்தின் சிறு பகுதியில் காட்டப்படும் வீடியோ விளம்பரம்.

      • 'இடையீட்டு' விளம்பரங்கள் என்பவை ஸ்ட்ரீம் செய்யப்படும் வேறெந்த வீடியோ உள்ளடக்கமும் இல்லாமல் உள்ளடக்கத்திற்கு இடையே மாறும்போது காட்டப்படும் வீடியோ விளம்பரங்களாகும். இவற்றில் அந்த வீடியோ விளம்பரமே பக்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதோடு காட்சிப் பகுதியின் பெரும்பகுதியில் காட்டப்படும்.

        உதாரணம்: உள்ளடக்கத்திற்கு இடையே கிடைக்கும் இயல்பான இடைவேளை அல்லது உள்ளடக்கத்திற்கு இடையே மாறும்போது வேறு எந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கமும் இல்லாமல் முழுக் காட்சியில் காட்டப்படும் வீடியோ விளம்பரம்.

      • 'தனியாகக்' காட்டப்படும் விளம்பரங்கள் என்பவை வேறெந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கமும் இல்லாமல் இயக்கப்படும் வீடியோ விளம்பரங்களாகும். இவற்றில் அந்த வீடியோ விளம்பரம் பக்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்காது.

        உதாரணம்: வேறெந்த ஸ்ட்ரீமிங் வீடியோ உள்ளடக்கத்துடனும் இணைக்கப்படாமல், செய்திக் கட்டுரைப் பக்கத்தின் வலது பக்கப்பட்டியலில் உள்ள பேனரில் தோன்றும் வீடியோ விளம்பரம்.

ஆதரிக்கப்படும் நடைமுறைகளைப் பயன்படுத்துதல்

  1. ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய அல்லது உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய விளம்பரத்தைக் காட்டுமிடமானது Googleளின் அதிகாரப்பூர்வ பீட்டா திட்டம் மூலம் வழங்கப்படவில்லையெனில், ஆதரிக்கப்படும் பிளாட்ஃபார்ம்களில் Googleளின் உடன் பங்கேற்கத்தக்க ஊடக விளம்பரங்களுக்கான SDK அல்லது Google நிரல் சார்ந்த அணுகல் லைப்ரரியைப் பயன்படுத்த வேண்டும்.
    • கூட்டாளர்களும் வெளியீட்டாளர்களும், உடன் பங்கேற்கத்தக்க ஊடக விளம்பரத் தயாரிப்புகளை YouTube உள்ளடக்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவதற்குப் பயன்படுத்த முடியாது. YouTube கூட்டாளர் திட்டம் மூலம் மட்டுமே YouTube உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி கூட்டாளர்களும் வெளியீட்டாளர்களும் வருமானம் ஈட்ட வேண்டும்.
  2. இடையீட்டு அல்லது தனியாக விளம்பரத்தைக் காட்டுமிடங்கள் Google வழங்கும் இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டும்: இணையத்தில் Google வெளியீட்டாளர் குறிச்சொற்கள் மற்றும் ஆப்ஸில் Google மொபைல் விளம்பரங்கள் SDKயைப் பயன்படுத்த வேண்டும். (Ad Managerருக்கு; AdMobக்கு).
    • கேம்களில் உள்ள விளம்பரத்தைக் காட்டுமிடங்களைத் தவிர்த்து, இடையீட்டு அல்லது தனியாக விளம்பரத்தைக் காட்டுமிடங்களில் Googleளின் பங்கேற்கத்தக்க ஊடக விளம்பரங்கள் SDKயைப் பயன்படுத்தக்கூடாது.

விளம்பரதாரர் மதிப்பைப் பாதுகாத்தல்

  1. விளம்பர உள்ளடக்கம், கட்டுப்பாடுகள் (வழங்கப்பட்டால்) உட்பட, வீடியோ இருப்பு உள்ளடக்கம் அல்லது கட்டுப்பாடுகள் (உதாரணமாக, இயக்குதல், இடைநிறுத்துதல், ஒலியடக்குதல், தவிர்த்தல், நிராகரித்தல்), மறைக்கப்பட்டோ தடுக்கப்பட்டோ செயல்படாமலோ இருக்கக்கூடாது.
  2. ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய விளம்பரத்தைக் காட்டுமிடங்களில், ஆடியோ விளம்பரங்கள் ஒலியடக்கப்பட்டு கேட்கப்பட/வழங்கப்படக் கூடாது.

பயனருக்கு மதிப்பளித்தல்

  1. பின்வரும் சூழ்நிலைகளில், வீடியோ இருப்பு தானாக இயக்கப்படலாம்:
    • விளம்பரத்தைக் காட்டும் அனைத்து வகைகளிலும் ஒரே ஒரு வீடியோ இருப்பு மட்டுமே ஒலியுடன் எந்த நேரத்திலும் தானாக இயக்கப்படலாம்.
      • கூடுதலாக, ஸ்ட்ரீமிங்கின்போது அல்லது உள்ளடக்கத்துடன் விளம்பரத்தைக் காட்டுமிடங்களில், காட்சியில் இருக்கும்போது ஒரே ஒரு வீடியோ பிளேயர் மட்டுமே எந்த நேரத்திலும் தானாக இயக்கப்படலாம்.
    • விளம்பரத்தின் விளம்பர யூனிட்டில் குறைந்தது 50% காட்டப்படும் வரை அது தானாக இயங்கக்கூடாது.
  2. பின்வரும் சூழ்நிலைகளில், வீடியோ இருப்பு நிலையாகப் பொருந்தியிருக்கலாம்:
    • வீடியோ அல்லது விளம்பர உள்ளடக்கம் முழுவதும் ‘நிராகரி’ எனும் விருப்பம் காட்டப்பட வேண்டும். இந்த விருப்பம் மறைக்கப்பட்டோ தடுக்கப்பட்டோ செயல்படாமலோ இருக்கக்கூடாது.
    • ஸ்ட்ரீமிங்கின்போது அல்லது உள்ளடக்கத்துடன் விளம்பரத்தைக் காட்டுமிடங்களுக்கு, முக்கிய உள்ளடக்கத்தில் வீடியோ பிளேயர் இயங்கத் தொடங்க வேண்டும். பயனர் ஸ்க்ரோல் செய்யும்போது வீடியோ பிளேயர் பக்கத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே நிலையாகப் பொருந்தியிருப்பதாக மாற வேண்டும்.

கூடுதலாக Ad Managerருக்கு, மாற்றப்பட்ட கொள்கைகளின்படி, உதவி மையப் பக்கங்களிலும் தயாரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளிலும் உள்ள 'இன்-ஸ்ட்ரீம்' அல்லது 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' ஆகிய சொற்கள், 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடிய' மற்றும் 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடிய' ஆகிய இரண்டையும் குறிக்கும். மாற்றப்பட்ட கொள்கைகளின்படி 'ஸ்ட்ரீமிங்கின்போது காட்டக்கூடியது' அல்லது 'உள்ளடக்கத்துடன் காட்டக்கூடியது' என்று இருக்கும் Ad Manager வீடியோ இருப்பு, அவற்றின் கொள்கைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

மாற்றப்பட்ட கொள்கைகள் ஏப்ரல் 1, 2024 அன்று அமலுக்கு வரும். மாற்றப்பட்ட கொள்கைகளைப் படித்துப் பார்த்து, அவை உங்கள் வீடியோ இருப்பைப் பாதிக்கின்றனவா என்பதைத் தீர்மானிக்கவும். இதற்கு முன் வீடியோ இருப்பு ஏற்கப்படாமல் இருந்து தற்போது மாற்றப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் அவை ஏற்கப்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால் ஏப்ரல் 1, 2024 அன்றோ அதற்குப் பிறகோ மதிப்பாய்வு அல்லது மறுபரிசீலனை செய்யும்படி கேட்கலாம்.

மதிப்பாய்வு அல்லது மறுபரிசீலனைக்குக் கோருதல் தொடர்பான கூடுதல் தகவல்களைக் கீழே பார்க்கலாம்:

(நவம்பர் 2023ல் இடுகையிடப்பட்டது)

வீடியோ வெளியீட்டாளருக்கான கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் (நவம்பர் 2023)

நவம்பர் 7, 2023 அன்று ஸ்ட்ரீமில் காட்டப்படாத விளம்பரங்களை நிலையாகப் பொருந்தியிருக்கும் செயலாக்கத்தில் காட்சிப்படுத்தும் வகையில் வீடியோ வெளியீட்டாளருக்கான கொள்கையை Google மாற்றும் (அதாவது ஸ்ட்ரீமில் காட்டப்படாத விளம்பரங்கள் திரையில் நிலையான இடத்தில் இருக்கும்).

[அக்டோபர் 2023ல் இடுகையிடப்பட்டது]

ரிவார்டு வழங்கப்பட்ட விளம்பர இருப்புக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் (அக்டோபர் 2023)

ரிவார்டு வழங்கப்பட்ட விளம்பர இருப்புக் கொள்கையில் அக்டோபர் 31, 2023 அன்று Google மாற்றம் செய்யவிருக்கிறது. இது ரிவார்டுகளை வழங்கும் விளம்பர யூனிட்களின் கொள்கைகளாகச் செயல்படும். மாற்றம் செய்யப்பட்ட கொள்கைகளின் கீழ், தகுதிபெறும் மறைமுகமானவற்றை அல்லது பணம் அல்லாதவற்றை ரிவார்டுகளாக வழங்க அனுமதிக்கிறோம்:

  1. வெளியீட்டாளரின் பிளாட்ஃபார்ம், இணையதளம், ஆப்ஸ் ஆகியவற்றில் உள்ள பொருளுக்கோ சேவைக்கோ மட்டுமே ரிவார்டை ரிடீம் செய்யவும் பயன்படுத்தவும் முடியும்;
  2. ரிவார்டு மாற்றக்கூடியதாக இருக்கக்கூடாது; மற்றும்
  3. நேரடியாக வாங்கும் பொருட்களுக்கான தள்ளுபடி/வவுச்சர் அந்தப் பொருளின் மொத்த மதிப்பில் 25%க்கு மேல் இருக்கக்கூடாது.

நேரடியாகப் பணம் செலுத்தி வாங்கக்கூடியவை எந்தச் சூழலிலும் ரிவார்டுகளாக அனுமதிக்கப்படாது.

மாற்றப்பட்ட கொள்கைகளின் நோக்கங்களுக்காக:

  • "நேரடியாகப் பணம் செலுத்தி வாங்கக்கூடியவை" என்பது ஏதேனும் சட்டப்பூர்வ டெண்டர் வகை அல்லது பொருட்களையோ சேவைகளையோ நேரடியாக வாங்குவதற்குப் பயன்படும் பிற வகை பேமெண்ட் முறைகள் ஆகும்.

    உதாரணங்கள்: பணம், கிரிப்டோகரன்சி, கிஃப்ட் கார்டு

  • "மறைமுகமானவை அல்லது பணம் அல்லாதவை" என்பது பண மதிப்புடைய அனைத்தையும் குறிக்கும். ஆனால் நிஜ உலகில் இவை நேரடிப் பேமெண்ட் முறை மூலம் வாங்க முடியாதவை அல்லது பண மதிப்பு இல்லாதவை ஆகும்.

    உதாரணங்கள்: தள்ளுபடிகள், லாயல்டி ரிவார்டுகள்/புள்ளிகள், தயாரிப்புக்கான இலவச ஷிப்பிங், தயாரிப்பு/சேவைக்கான கட்டணமற்ற உபயோகம், கேம் கேரக்டருக்கு வழங்கப்படும் கூடுதல் உயிர், கேம் கேரக்டரின் ஸ்கின்

  • "மாற்ற முடியாதவை" என்பது ரிவார்டை எந்தப் பயனர் பெறுகிறாரோ அவரால் மட்டுமே அதை ரிடீம் செய்து பயன்படுத்த முடியும். மேலும் இதை நேரடியாகப் பணம் செலுத்தி வாங்கக்கூடிய பொருட்களுக்கோ வேறு ஒருவருக்கு மாற்றப்படும் பொருட்களுக்கோ பயன்படுத்த முடியாது.

    உதாரணங்கள்: தள்ளுபடிக் குறியீடு, லாயல்டி புள்ளிகள் அல்லது குறிப்பிட்ட பயனர் அவரின் உள்நுழைந்த கணக்கின் மூலம் மட்டுமே ரிடீம் செய்து பயன்படுத்தக்கூடிய கேமில் வாங்கக்கூடியவை. இதை நேரடியாகப் பணமாக மாற்றவோ வேறொருவருக்கு மாற்றக்கூடிய பொருளை வாங்கவோ பயன்படுத்த முடியாது

மேலே குறிப்பிட்டவையுடன் சேர்த்து, சிறந்த தெளிவுத்தன்மை மற்றும் வாசிப்புத்திறனுக்காகக் கொள்கைகளின் உள்ளடக்கத்திலும் மாற்றங்களையும் நாங்கள் செய்வோம். இந்த உள்ளடக்க மாற்றங்கள் கொள்கைகளின் வரம்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

மாற்றப்பட்ட கொள்கைகளைப் படித்துப் பார்த்து, அவை ரிவார்டுகள் வழங்கும் உங்கள் விளம்பர யூனிட்களைப் பாதிக்கின்றனவா என்பதைத் தீர்மானிக்கவும். ரிவார்டுகளை வழங்கும் உங்கள் விளம்பர யூனிட்கள் இதற்கு முன் ஏற்கப்படாமல் இருந்து தற்போது மாற்றப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் அவை ஏற்கப்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால் அக்டோபர் 31, 2023 அன்றோ அதற்குப் பிறகோ மதிப்பாய்வு அல்லது மறுபரிசீலனை செய்யும்படி கேட்கலாம்.

மதிப்பாய்வு அல்லது மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுப்பது குறித்து மேலும் அறிக.

(அக்டோபர் 2023ல் இடுகையிடப்பட்டது)

தரவுப் பரிமாற்றங்கள் தொடர்பான Googleளின் அணுகுமுறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் (செப்டம்பர் 2023)

ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா தரவுத் தனியுரிமைக் கட்டமைப்பின் (“EU-U.S. DPF - EU-U.S. Data Privacy Framework”) கீழ் Google சான்றளிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 1, 2023 முதல் EEA தனிப்பட்ட தரவை அமெரிக்காவிற்குப் பரிமாற்றுவதற்கான மாற்றுப் பரிமாற்றத் தீர்வாக EU-U.S. DPF ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

(செப்டம்பர் 2023ல் இடுகையிடப்பட்டது)

அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கம் தொடர்பான Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளில் மாற்றம் (ஆகஸ்ட் 2023)

ஆகஸ்ட் 30, 2023 அன்று அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கம் தொடர்பான Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளில் கேம்பிளே காட்சிகளுக்கு விலக்களித்து Google மாற்றம் செய்யும். கேம்பிளே காட்சிகளைப் பொறுத்தவரை சித்திரவதை, பாலியல் வன்முறை, வயது வராதோருக்கு எதிரான வன்முறை, பிரபலமான உண்மை நபர்களுக்கு எதிரான வன்முறை அல்லது திட்டமிட்டுச் செய்யப்படும் பாகுபாட்டையோ ஒடுக்குமுறையையோ காட்டும் வகையில் ஒரு தனிநபர்/குழுவினருக்கு எதிரான வன்முறையைச் சித்தரித்தால் மட்டுமே "கோரமான, கொடூரம் அல்லது அருவருப்பான உள்ளடக்கம்/படம்" என்றோ "வன்முறைச் செயல்களைச் சித்தரிக்கிறது" என்றோ உள்ளடக்கம் கருதப்படும்.

உங்களின் தளத்தையோ ஆப்ஸையோ இந்த மாற்றம் பாதிக்கிறதா என்பதை அறிய அதை மதிப்பாய்வு செய்யவும். அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கத்தின் அடிப்படையில், கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரச் சேவை உங்கள் தளத்திலோ ஆப்ஸிலோ வழங்கப்பட்டு வரும் பட்சத்தில் இந்த மாற்றத்தின் விளைவாக விளம்பரச் சேவை இனி கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று நீங்கள் கருதினால் ஆகஸ்ட் 30, 2023 அல்லது அதற்குப் பிறகு உங்கள் தளம் அல்லது ஆப்ஸுக்கு மதிப்பாய்வு/மறுபரிசீலனையைக் கோரலாம்.

மதிப்பாய்வு அல்லது மறுபரிசீலனைக்குக் கோருதல் தொடர்பான கூடுதல் தகவல்களைக் கீழே காணலாம்:

(ஜூலை 2023ல் இடுகையிடப்பட்டது)

தேடலுக்கான AdSense, பிரத்தியேகத் தேடல் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கான கொள்கைகள் தொடர்பான மாற்றங்கள் (மார்ச் 2023)

மார்ச் 2023ல் பின்வரும் கொள்கைகளில் Google மாற்றங்கள் செய்யவுள்ளது. அந்த மாற்றங்கள் இவற்றை மேலும் தெளிவுபடுத்தும்: (a) Google வழங்கும் சேவைகளுக்கும் பிற நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்குமான கொள்கைப் பயன்பாடு குறித்த ஒப்பீடு; (b) கொள்கைகளுக்கு இணங்காத சூழலில், Google வழங்கும் சேவைகளில் மேற்கொள்ளப்படும் சரிசெய்தல் நடவடிக்கை(கள்).

  1. தேடலுக்கான AdSense (AdSense for Search - AFS) கொள்கைகள்
  2. பிரத்தியேகத் தேடல் விளம்பரங்களுக்கான கொள்கைகள்
  3. Google பிரத்தியேகத் தேடல் விளம்பரங்களுக்கான கொள்கை: மாற்று தேடல் வினவல்கள்

இந்த மாற்றங்கள் எங்கள் கொள்கைகளின் வாசிப்புத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் தெளிவுபடுத்த நாங்கள் தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கொள்கைகளின் வரம்பிலோ அவற்றை அமல்படுத்தும் முறையிலோ எந்த மாற்றமும் இருக்காது. இந்த மாற்றங்கள் தொடர்பாக வெளியீட்டாளர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

(மார்ச் 2023ல் வெளியிடப்பட்டது)

Google வெளியீட்டாளர் கொள்கைகள் (ஜனவரி 2023)

ஜனவரி 2023ம் ஆண்டில், எங்கள் கொள்கைகளை எளிமைப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் நாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏற்கெனவே உள்ள மால்வேர் & தேவையற்ற மென்பொருள் கொள்கையை Google வெளியீட்டாளர் கொள்கைகள்: தேவைகள் மற்றும் பிற தரநிலைகளுடன் சேர்த்து Google வெளியீட்டாளர் கொள்கைகளில் Google மாற்றம் செய்யவிருக்கிறது.

கடந்த சில மாதங்களில் Google வெளியீட்டாளர் கொள்கைகளில் இந்த இரண்டு மாற்றங்களையும் Google செய்துள்ளது:

(டிசம்பர் 2022ல் இடுகையிடப்பட்டது)

Update to technical requirements for web content viewing frames for apps (May 2022)

In May 2022, the technical requirements for web content viewing frames for apps were updated (AdSense policy, Ad Manager policy). App developers who want to monetize by publishing AdSense and Ad Manager display ads can use any of the existing options or use the new WebView API for Ads option. Learn more in the developer documentation for Android and iOS.

(Posted May 2022)

உக்ரைன் தொடர்பான அறிவிப்பு (மார்ச் 2022)

உக்ரைனில் நடைபெறும் போரின் காரணமாக, அந்தப் போரைத் தவறாகப் பயன்படுத்துகின்ற, நிராகரிக்கின்ற அல்லது ஏற்கின்ற உள்ளடக்கம் மூலம் வருமானம் ஈட்டுவதை நாங்கள் இடைநிறுத்துவோம். 

(மார்ச் 23, 2022ல் இடுகையிடப்பட்டது)

ரஷ்யன் ஃபெடரேஷன் அரசின் நிதியுதவியில் இயங்கும் மீடியாவிற்கான வருமானம் ஈட்டுதலில் செய்யப்பட்டுள்ள மாற்றம் (பிப்ரவரி 2022)

உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக, ரஷ்யன் ஃபெடரேஷனின் நிதியுதவியில் இயங்கும் மீடியா Googleளில் வருமானம் ஈட்டுவதை இடைநிறுத்துகிறோம். 

இந்தச் சூழலை நாங்கள் தொடர்ந்து கவனமாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்வோம்.

இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வரும். 

(பிப்ரவரி 2022ல் இடுகையிடப்பட்டது)

அமெரிக்க வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் விதித்துள்ள தடைகள் பட்டியலில் மாற்றம் (பிப்ரவரி 2022)

அமெரிக்கக் கருவூலத் துறையின் வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (Office of Foreign Assets Control - OFAC) பட்டியலுடன் இணங்கும் வகையில் தன்யெத்சுக் மக்கள் குடியரசு (Donetsk People's Republic - DNR) மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (Luhansk People's Republic - LNR) எனக் கருதப்படும் பகுதிகள் Google வெளியீட்டாளர் கொள்கைகளின் தடைகளுக்கான இணக்கம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வரும். 

AdMob, AdSense, Ad Manager ஆகியவற்றுக்கான நாடு சார்ந்த கட்டுப்பாடுகள் தொடர்பான பக்கங்களும் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

(பிப்ரவரி 2022ல் இடுகையிடப்பட்டது)

'தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கம்: நம்பகமற்ற மற்றும் தீங்கிழைக்கும் தகவல்கள்' தொடர்பான கொள்கையில் செய்யப்படவுள்ள மாற்றம் (அக்டோபர் 2021)

நவம்பர் 2021ல், காலநிலை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான, அறிவியல்ரீதியான கருத்துகளில் இருந்து முரண்படும் தகவல்களைக் கொண்ட உள்ளடக்கத்தைத் தடைசெய்யும் ஒரு புதிய கொள்கை 'தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கம்: நம்பகமற்ற மற்றும் தீங்கிழைக்கும் தகவல்கள்' தொடர்பான Google வெளியீட்டாளர் கொள்கையில் சேர்க்கப்படும். நவம்பர் 8, 2021க்குப் பிறகு இந்தக் கொள்கை மாற்றத்தை அமல்படுத்துவோம்.

(அக்டோபர் 2021ல் இடுகையிடப்பட்டது)

எங்கள் செயல்பாட்டுக் கொள்கைகளை எளிதாக்குதலும் தரநிலைப்படுத்துதலும் (செப்டம்பர் 2021)

வெளியீட்டாளர்களுக்கான எங்கள் கொள்கைகளை எளிமைப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் நாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பகுதியாகவும், September 2021ல் செயல்பாட்டுக் கொள்கைகளில் நாங்கள் செய்த மாற்றங்களை இணைக்கவும், ஒரு புதிய வெளியீட்டாளர் கொள்கைகள் உதவி மையத்தை வெளியிடுகிறோம். இந்தப் புதிய உதவி மையம் எங்கள் கொள்கைகளை அணுகுவதற்கேற்ற எளிய வழியை வெளியீட்டாளர்களுக்கு வழங்கும். மேலும் நீங்கள் எந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும் அவை உங்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் புரிந்துகொள்வதை எளிதாக்கும்.

Google வெளியீட்டாளர் கொள்கைகளையும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளையும் நீங்கள் தொடர்ந்து AdMob, AdSense, Ad Manager ஆகியவற்றின் உதவி மையங்களில் பார்க்கலாம். காலப்போக்கில் வெளியீட்டாளர் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் புதிய வெளியீட்டாளர் கொள்கைகள் உதவி மையத்திற்கு நகர்த்தி ஒருங்கிணைப்போம்.

வெளியீட்டாளர் கொள்கைகள் உதவி மையத்தில் கொள்கைகள், கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக ஒரு சொற்களஞ்சியமும் இருக்கும். அதில் கொள்கை மொழியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள பொதுவான வார்த்தைகள் விளக்கப்பட்டிருக்கும். மேலும் கொள்கை மொழியைத் தெளிவுபடுத்த ஒவ்வொரு கொள்கைக்கும் கட்டுப்பாட்டுக்கும் கூடுதல் விளக்கம் கொண்ட சிறப்புப் பக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

(செப்டம்பர் 2021ல் இடுகையிடப்பட்டது)

வழக்கமான ஒப்பந்தக் கூறுகளில் (SCCs - Standard Contractual Clauses) மாற்றம் (அக்டோபர் 2021)

அக்டோபர் 2021ல், ஐரோப்பிய ஆணையத்தின் வழக்கமான ஒப்பந்தக் கூறுகளை (Standard Contractual Clauses - SCCs) Google செயல்படுத்த உள்ளது. அதனால் SCCs தொடர்பான Google வெளியீட்டாளர் கொள்கை மாற்றப்படும்.

(செப்டம்பர் 2021ல் இடுகையிடப்பட்டது)

எங்கள் செயல்பாட்டுக் கொள்கைகளை எளிதாக்குதலும் தரநிலைப்படுத்துதலும் (ஆகஸ்ட் 2021)

வெளியீட்டாளர்களுக்கான எங்கள் கொள்கைகளை எளிமைப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் நாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏற்கெனவே உள்ள எங்கள் செயல்பாட்டுக் கொள்கைகள் சிலவற்றின் (அதாவது விளம்பரங்கள் செயல்படுத்தப்படும் விதத்தை நிர்ணயிக்கும் கொள்கைகள்/கட்டுப்பாடுகள்) சீரமைக்கப்பட்ட பதிப்புகளைச் சேர்ப்பதற்காக Google வெளியீட்டாளர் கொள்கைகளும் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளும் செப்டம்பர் 2021ல் மாற்றியமைக்கப்படும். இந்தச் சீரமைக்கப்பட்ட பதிப்புகள் எங்கள் AdSense, AdMob, Ad Manager ஆகியவற்றிலுள்ள கொள்கைகளின் பதிப்புகளை ஒருங்கிணைக்கும். மேலும் விளம்பரங்களின் குறுக்கீடு, இருப்புப் பட்டியலின் மதிப்பு, தொழிற்துறைத் தரங்கள் (எங்கள் வெளியீட்டாளர்கள் இணங்க வேண்டுமென நாங்கள் கருதும் தற்போதைய தரங்களின் தொகுப்பு) ஆகியவையும் இவற்றிலடங்கும்.

செப்டம்பர் 2019ல் எங்கள் வெளியீட்டாளர் தயாரிப்புகள் அனைத்திலும் எங்கள் உள்ளடக்கக் கொள்கைகளில் மாற்றம் செய்து வெளியிட்டோம். இதன் மூலம் Google வெளியீட்டாளர் கொள்கைகளும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மாற்றமானது தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சிகளின் தொடர்ச்சியாகும்.

இந்த மாற்றத்தின் பகுதியாக இரண்டு புதிய கொள்கைகளையும் நாங்கள் வெளியிட இருக்கிறோம்: விளம்பரங்களுக்கான சிறந்த தரங்களின் ஒருங்கிணைப்புடன் இணங்குதல் மற்றும் நேர்மையற்ற அறிவிப்புகளுக்கான கொள்கை.

எங்கள் கொள்கைகளை அணுகுவதற்கேற்ற எளிய வழியை வெளியீட்டாளர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்புகிறோம். மேலும் நீங்கள் எந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும் அவை உங்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை எளிதில் புரிந்துக்கொள்ள எங்கள் கொள்கைகளுக்கான உதவி மையத்தின் மாற்றப்பட்ட பதிப்பையும் வெளியிடுகிறோம்.

கவனத்திற்கு: Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பின்பற்றும் பிற கொள்கைகளுடன் கூடுதலாக இந்தக் கொள்கைகளும் கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

(ஆகஸ்ட் 2021ல் இடுகையிடப்பட்டது)

விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாக Google வெளியீட்டாளர் கொள்கைகளில் வரவிருக்கும் மாற்றங்கள் (ஆகஸ்ட் 2021)

விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் கொடுமை அல்லது தேவையற்ற வன்முறையை விளம்பரப்படுத்தும் உள்ளடக்கத்தைத் தடைசெய்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்த, அருகிவரும் அல்லது அபாய நிலையிலிருக்கும் உயிரினங்களுக்கான Google வெளியீட்டாளர் கொள்கையில் ஆகஸ்ட் 2021ல் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான புதிய தலைப்பின் கீழ் அருகிவரும் அல்லது அபாய நிலையிலிருக்கும் உயிரினங்களையும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் கொள்கையையும் இந்த மாற்றம் ஒருங்கிணைக்கும்.

(ஜூலை 2021ல் இடுகையிடப்பட்டது)

தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கக் கொள்கையில் மாற்றம் (மே 2021)

கொள்கையிலுள்ள தலைப்புகளைச் சிறப்பாக ஒருங்கிணைப்பதற்காக, தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான Google வெளியீட்டாளர் கொள்கையில் மே 2021ல் மாற்றம் செய்யப்படும். அத்துடன், ஆபத்தான அல்லது இழிவான உள்ளடக்கம் எனும் தலைப்பின் கீழ் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட இரண்டு கொள்கைகள் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கம் எனும் தலைப்பிற்கு மாற்றப்படும். (1) தீங்கிழைக்கக்கூடிய சுகாதார உரிமைகோரல்களை ஊக்குவிப்பது, (2) நடப்புச் சூழ்நிலை, சுகாதாரம் தொடர்பான நெருக்கடியான காலகட்டங்கள், அதிகாரப்பூர்வ அறிவியல் ரீதியான கருத்துகளுடன் முரண்படுவது ஆகியவை தொடர்பான உள்ளடக்கத்தைத் தடைசெய்யும் இரண்டு கொள்கைகள் ஆபத்தான அல்லது இழிவான உள்ளடக்கம் எனும் பிரிவிலிருந்து தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கம் எனும் தலைப்பின் கீழுள்ள நம்பகமற்ற உரிமைகோரல்கள் (புதிது) எனும் பிரிவிற்கு மாற்றப்படும்.

வாசிப்பதையும் புரிந்துகொள்வதையும் மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன, எங்கள் கொள்கைகளின்படி தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதையோ தடைசெய்யப்பட்டுள்ளதையோ இந்த மாற்றங்கள் பாதிக்காது.

(ஏப்ரல் 2021ல் இடுகையிடப்பட்டது)

அமெரிக்க வெளிநாட்டு உரிமைக் கட்டுப்பாட்டுத் துறை விதித்துள்ள தடைகள் பட்டியலில் மாற்றம் (பிப்ரவரி 2021)

அமெரிக்க வெளிநாட்டு உரிமைக் கட்டுப்பாட்டுத் துறை விதித்துள்ள தடைகள் பட்டியலில் இருந்து சூடான் நாடு அகற்றப்பட்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில் AdSense பயன்பாட்டில் இருக்கும் நாட்டிலுள்ள கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் பக்கத்தில் பிப்ரவரி 2021ல் மாற்றம் செய்யப்படும். பிப்ரவரி 24, 2021 முதல் இந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த மாற்றத்தின் காரணமாக, சூடான் நாட்டில் உள்ள வெளியீட்டாளர்களும் Google AdSenseஸைப் பயன்படுத்தலாம். 

(பிப்ரவரி 2021ல் இடுகையிடப்பட்டது)

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் தொடர்பாக Google வெளியீட்டாளர் கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் (பிப்ரவரி 2021)

பிப்ரவரி 2021ல் Google வெளியீட்டாளர் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. பணம் பெற்றுக்கொண்டு செய்யும் பாலியல்ரீதியான செயலை விளம்பரப்படுத்துவதாகப் பயனர்கள் கருதும்படியான உள்ளடக்கம் "காம்பன்சேட்டட் பாலியல் செயல்கள்" என்று தனியாக வகைப்படுத்தப்படும். கூடுதலாக, காம்பன்சேட்டட் டேட்டிங் அல்லது பாலியல் ரீதியான ஏற்பாடுகள் செய்வதைத் தவிர்ப்பதற்காகப் பட்டியலிட்டுள்ள உதாரணங்களை (விபச்சாரம், பாலியல் மற்றும் இதர தேவைகளுக்குத் தற்காலிகத் துணைவர்களை வழங்கும் எஸ்கார்ட் சேவைகள், நெருக்கமான மசாஜ், கட்டிப்பிடித்துக் கொள்ள ஆட்களைக் காட்டும் வலைதளங்கள் ஆகியவை குறித்த உள்ளடக்கம்) புதுப்பித்துள்ளோம். ஏனெனில் இவற்றில் ஈடுபடும் நபர்களில் ஒருவர் மற்றொருவருக்குப் பணம், கிஃப்ட்டுகள், நிதி சார்ந்த ஆதரவு, வழிகாட்டுதல் அல்லது ”சுகர்” டேட்டிங் போன்ற பிற மதிப்புமிக்க பலன்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(டிசம்பர் 2020ல் இடுகையிடப்பட்டது)

Google வெளியீட்டாளர் கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றம் (செப்டம்பர், 2020)

எங்கள் ஆதரவு மொழிகளில் ஒன்றை முதன்மையாகவோ உள்ளடக்கம் இல்லாமலோ இருக்கும் இணையப் பக்கங்கள், தளங்கள் அல்லது ஆப்ஸ் மூலம் லாபம் பெறுதலைத் தடைசெய்யும் வகையில் Google வெளியீட்டாளர் கொள்கைகள் செப்டம்பர் 2020ல் புதுப்பிக்கப்படும். செப்டம்பர் 15, 2020 முதல் ஆதரிக்கப்படாத மொழிகளிலோ உள்ளடக்கம் இல்லாமலோ AdSense, Ad Manager அல்லது AdMob மூலம் புதிய தளங்களில் லாபம் பெறுதலை அனுமதிக்கமாட்டோம்.

(ஆகஸ்ட் 2020ல் இடுகையிடப்பட்டது)

நிலையான ஒப்பந்தக் கூறுகளுக்கு (SCCs - Standard Contractual Clauses) புதுப்பித்தல் (ஆகஸ்ட் 2020)

ஆகஸ்ட் 12, 2020 முதல் யுனைடெட் கிங்டம், சுவிட்சர்லாந்து அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியிலிருந்து (European Economic Area - EEA) ஆன்லைன் விளம்பரப்படுத்தலுக்கும் அளவீட்டுக்கும் தொடர்புடைய தனிப்பட்ட தரவை வெளியே பரிமாறுவதற்கு, ஐரோப்பிய ஆணையத்தின் நிலையான ஒப்பந்தக் கூறுகளை (Standard Contractual Clauses - SCCs) Google பின்பற்றும். ப்ராசஸர் சேவைகளுக்கு,மூன்றாம் நாடுகளில் நிறுவப்பட்டுள்ள ப்ராசஸர்களுடன் தனிப்பட்ட தரவைப் பரிமாறுவதற்கான SCCகளைச் சேர்க்கும் வகையில் Google Ads தரவுச் செயலாக்க விதிமுறைகளில் Google மாற்றங்களைச் செய்கிறது. கண்ட்ரோலர் சேவைகளுக்கு, மூன்றாம் நாடுகளில் நிறுவப்பட்டுள்ள கண்ட்ரோலர்களுடன் தனிப்பட்ட தரவைப் பரிமாறுவதற்கான SCCகளைச் சேர்க்கும் வகையில் Google Ads கண்ட்ரோலர்-கண்ட்ரோலர் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளில் Google மாற்றங்களைச் செய்கிறது. தொடர்புடைய தனிப்பட்ட தரவுப் பரிமாற்றம் நிகழும்போது Googleளுடனான கூட்டாளரின் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள SCCகள் பயன்படுத்தப்படும்.

(ஆகஸ்ட் 2020ல் இடுகையிடப்பட்டது)

தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான Google வெளியீட்டாளர் கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றம் (செப்டம்பர் 2020)

அரசியல், சமூகப் பிரச்சனைகள், அல்லது பொது அக்கறை சார்ந்த விஷயங்களுடன் தொடர்புடைய உங்கள் உள்ளடக்கத்தில் பிற தளங்கள்/கணக்குகளுடன் ஒருங்கிணைந்து உங்கள் அடையாளத்தையோ உங்களைப் பற்றிய பிற விவரங்களை மறைப்பது/தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுக்கும் விதமாக செப்டம்பர் 2020ல்  தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான Google வெளியீட்டாளர் கொள்கைகள் புதுப்பிக்கப்படும். நாங்கள் இந்தக் கொள்கையை செப்டம்பர் 1, 2020 அன்று அமெரிக்காவிலும் அக்டோபர் 1, 2020 அன்று பிற நாடுகள் அனைத்திலும் செயல்படுத்தத் தொடங்குவோம். 

இந்தக் கொள்கை தொடர்பான மீறல்களுக்குத் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதுடன் அவற்றை மோசமானவையாகக் கருதுகிறோம். இந்தக் கொள்கை தொடர்பான மீறல்களைக் கண்டறிந்தால் முன்கூட்டிய அறிவிப்பு ஏதுமின்றி உங்கள் கணக்குகளை இடைநிறுத்துவோம்.

(ஜூலை 2020ல் இடுகையிடப்பட்டது)
 

ஆபத்தான அல்லது இழிவான உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றம் (ஆகஸ்ட் 2020)

நடப்புச் சூழ்நிலை, சுகாதாரம் தொடர்பான நெருக்கடியான காலகட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான, அறிவியல்ரீதியான கருத்துகள் ஆகியவற்றுக்கு முரணாக இருக்கும் உள்ளடக்கத்தைத் தடைசெய்யும்பொருட்டு ஆபத்தான அல்லது இழிவான உள்ளடக்கம் தொடர்பான Google வெளியீட்டாளர் கொள்கைகளில் ஆகஸ்ட் 2020ல் மாற்றம் செய்யப்படும்.

(ஜூலை 2020ல் இடுகையிடப்பட்டது)

நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்பான Google வெளியீட்டாளர் கொள்கையில் செய்யப்படவுள்ள மாற்றம் (ஆகஸ்ட் 2020)

ஸ்பைவேரையும் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை விளம்பரம் செய்வது அல்லது அதன் மூலம் லாபம் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தெளிவுபடுத்துவதற்காக நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்பான Google வெளியீட்டாளர் கொள்கைகளில் ஆகஸ்ட் 2020ல் மாற்றம் செய்யப்படும். மாற்றப்பட்ட கொள்கையானது ஒரு பயனர் மற்றொரு பயனரை அல்லது அவரின் செயல்பாடுகளை அவரது அங்கீகாரமின்றிக் கண்காணிக்கவோ மேற்பார்வையிடவோ வழிவகுக்கும் தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடைசெய்யும், அல்லது அதற்கு உதவும் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவதையோ அதன் மூலம் லாபம் பெறுவதையோ தடைசெய்யும். இந்தக் கொள்கை உலகளாவிய அளவில் பொருந்தும்.

தடைசெய்யப்படவுள்ள தயாரிப்புகள், சேவைகளுக்கான உதாரணங்கள் (இந்தப் பட்டியலில் அனைத்தும் உள்ளடங்கவில்லை):

உரைகள், ஃபோன் அழைப்புகள், உலாவல் வரலாறு ஆகியவற்றைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்பைவேர்/மால்வேர், அனுமதியின்றி ஒருவரை உளவு பார்க்கவோ கண்காணிக்கவோ குறிப்பாக விளம்பரப்படுத்தப்படும் GPS டிராக்கர்கள்; உளவு பார்ப்பதற்காக விளம்பரப்படுத்தப்படும் கண்காணிப்பு உபகரணங்கள் (கேமராக்கள், ஆடியோ ரெக்கார்டர்கள், டேஷ் கேமராகள், ரகசியக் கேமராக்கள்) ஆகியன போன்ற நெருக்கமானவர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்பைவேர் & தொழில்நுட்பம்.

இதில் இவை அடங்காது: (அ) தனியார் புலனாய்வுச் சேவைகள் அல்லது (ஆ) வயதில் மிகவும் குறைவான சிறுவர்களைக் கண்காணிக்கவோ மேற்பார்வையிடவோ பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட தயாரிப்புகள்/சேவைகள்.

(ஜூலை 2020ல் இடுகையிடப்பட்டது)

Google வெளியீட்டாளர் கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றம் (ஆகஸ்ட் 2020)

சிறார் பாலியல் கொடுமை மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் தொடர்பான எங்கள் வெளியீட்டாளர் தயாரிப்புகளில் தற்போதுள்ள கொள்கைகளை முறைப்படுத்த ஆகஸ்ட் 2020ல் Google வெளியீட்டாளர் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

கூடுதலாக எங்கள் கொள்கை மொழியிலும் சில எடிட்டோரியல் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. "விருப்பம் சார்ந்த விளம்பரம்" பற்றிய அனைத்துக் குறிப்பிடல்களும் "பிரத்தியேகப்படுத்தப்பட்ட விளம்பரமாக" மாற்றப்படும். மேலும், சிறுவர்களுக்கான ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணங்குவதற்கான தனியுரிமைத் தொடர்பான கொள்கையும் புதுப்பிக்கப்படும்.

(ஜூலை 2020ல் இடுகையிடப்பட்டது)

தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான Google வெளியீட்டாளர் கொள்கையில் செய்யப்படவுள்ள மாற்றம் (மார்ச் 2020)

மார்ச் 2020ல் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான Google வெளியீட்டாளர் கொள்கையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. வெளிப்படையாகத் தவறான தகவல்களைக் கூறி தேர்தல் அல்லது ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதையோ அதில் நம்பிக்கை வைப்பதையோ கணிசமாகக் குறைப்பதற்கு வழிவகுக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.

கூடுதலாக அரசியல், சமூகப் பிரச்சனைகள் அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் விஷயங்கள் தொடர்பான தகவல்களைப் பொய்யாகப் புனையப்பட்ட ஊடகச் செய்திகள் மூலம் பரப்பி, பயனர்களை ஏமாற்றும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை என்பதையும் இந்த மாற்றம் தெளிவாக்கும்.

(இடுகையிடப்பட்டது: பிப்ரவரி 2020)

Google வெளியீட்டாளர் கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றம் (ஏப்ரல் 2020)

தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவல், தரவுச் சேகரிப்பு, வெளியிடுதல், பயனர் ஒப்புதல் ஆகியவை தொடர்பான எங்கள் வெளியீட்டாளர் தயாரிப்புகள் முழுவதற்குமான தற்போதுள்ள கொள்கைகளைத் தரநிலைப்படுத்துவதற்காக ஏப்ரல் 2020ல் Google வெளியீட்டாளர் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக விளம்பர நோக்கங்களுக்காக சாதன இருப்பிடத்தைப் பகிர்வதற்குப் பயனர்கள் அனுமதியளிக்கும் முன்பு, அது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வெளிப்படையான அறிவிப்பு வடிவங்கள் தேவை என்பதைக் குறிப்பிட கொள்கையில் மாற்றம் செய்யவுள்ளோம்.

(இடுகையிடப்பட்டது: பிப்ரவரி 2020)

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளில் செய்யவுள்ள மாற்றம்: ஆன்லைன் சூதாட்டம் (ஜனவரி 2020)

"ஆன்லைன் சூதாட்டம்" என எவற்றையெல்லாம் கருதலாம் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக சூதாட்டம் குறித்த Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளை ஜனவரி 2020ல் புதுப்பிக்கவுள்ளோம்.

(டிசம்பர் 2019ல் இடுகையிடப்பட்டது)

விளம்பரம் காட்சிப்படுத்துமிடம் தொடர்பான கொள்கைகளில் வரவிருக்கும் மாற்றம்: உள்நுழைவுக்குப் பின்னால் இருக்கும் பக்கங்களில் வைக்கப்படும் விளம்பரங்கள் (நவம்பர் 2019)

டிசம்பர் 2019ல் உள்நுழைவுக்குப் பின்னால் இருக்கும் பக்கங்களில் வைக்கப்படும் விளம்பரங்களுக்கான Google AdSense திட்டக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும். எங்களால் மதிப்பிட முடியாத உள்ளடக்கத்தின் மூலம் லாபம் பெற விளம்பரக் கோரிக்கைகளை நாங்கள் கையாளும் விதம் குறித்துத் தெளிவுபடுத்தவே இதைச் செய்யவுள்ளோம்.

(நவம்பர் 2019ல் இடுகையிடப்பட்டது)

Google வெளியீட்டாளர் கொள்கைகளில் செய்யப்படவுள்ள மாற்றம்: ஆபத்தான அல்லது இழிவான உள்ளடக்கம் (நவம்பர் 2019)

டிசம்பர் 2019ல் ஆபத்தான அல்லது இழிவான உள்ளடக்கம் தொடர்பான Google வெளியீட்டாளர் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்.

தேசம் கடந்து போதைப் பொருட்களைக் கடத்தும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதாகவோ அவற்றை ஆதரிப்பதாகவோ உள்ள உள்ளடக்கம் இதில் அடங்கும்.

(நவம்பர் 2019ல் இடுகையிடப்பட்டது)

எங்கள் உள்ளடக்கக் கொள்கைகளை எளிதாக்குதலும் தரநிலைப்படுத்துதலும் (செப்டம்பர் 2019)

செப்டம்பர் 2019ல் எங்கள் வெளியீட்டாளர் தயாரிப்புகள் அனைத்திலும் (AdSense, AdMob, Ad Manager ஆகியவை) சில உள்ளடக்கக் கொள்கைகள் தொடர்பான மாற்றங்களைச் செய்ய இருக்கிறோம்.

கவனத்திற்கு: இதன் பிறகு AdSenseஸிற்கான கொள்கைகளிலும் கட்டுப்பாடுகளிலும் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் Google அறிவிக்கும். கொள்கைகளில் செய்யப்படும் மாற்றங்களைப் பற்றி வெளியீட்டாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு அவற்றுக்கு எப்பொழுதும் இணங்கி இருக்க வேண்டும்.

இந்த மாற்றங்களை ஏன் செய்கிறோம்?

எங்கள் கொள்கைகளை எளிமைப்படுத்தி, ஒழுங்குபடுத்த வேண்டுமென்பதே வெளியீட்டாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளில் பிரதானமாக உள்ளது. உங்களில் பலர் எங்கள் வெளியீட்டாளர் தயாரிப்புகளில் பலவற்றைப் பயன்படுத்தி வருகிறீர்கள். இவற்றில் எதைப் பயன்படுத்தினாலும் அவற்றின் கொள்கைகளை எளிதாகப் புரிந்துகொண்டு இணங்கவும், அவை உங்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து அறியவும் எளிய வழியை உருவாக்க விரும்புகிறோம்.

இவற்றை எதிர்பார்க்கலாம்:

  • Google வெளியீட்டாளர் கொள்கைகள் குறிப்பிடும் எந்தவிதமான வெளியீட்டாளர் தயாரிப்புகளின் மூலமாகவும் லாபம் பெற முடியாத உள்ளடக்க வகைகள். இவற்றில்: சட்டவிரோதமானவை, சிறுவர்கள் மீதான தவறான பாலியல் நடத்தை, அவர்களுடன் பாலியல் உறவுகொள்வது, வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம், குடும்பத்தினருக்கான உள்ளடக்கத்தில் வயதுவந்தோருக்கானவை, அறிவுசார் உடைமையைத் தவறாகப் பயன்படுத்துதல், அழிவின் விளிம்பிலுள்ள அல்லது ஆபத்திலுள்ள உயிரினங்கள் குறித்த உள்ளடக்கம், ஆபத்தான அல்லது கேவலமான உள்ளடக்கம், நேர்மையற்ற நடத்தைக்கு வழிவகுப்பவை, தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவை, தீங்கிழைக்கும் அல்லது தேவையில்லாத மென்பொருள் மற்றும் மெயில் ஆர்டர் பிரைடுகள்.
  • Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் குறிப்பிடும் கட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்களிலிருந்து விளம்பரங்களைப் பெறும் உள்ளடக்க வகைகள். இவற்றில்: பாலியல் உள்ளடக்கம், அதிர்ச்சியூட்டுபவை, வெடிபொருட்கள், துப்பாக்கிகள், துப்பாக்கிப் பாகங்களும் தொடர்புடைய தயாரிப்புகளும், பிற ஆயுதங்கள், புகையிலை, பொழுதுபோக்கிற்கான மருந்துகள், மது விற்பனையும் தவறான பயன்பாடும், ஆன்லைன் சூதாட்டம், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளும் ஊட்டச்சத்துப் பொருட்களும். Google விளம்பரங்கள் (முன்னர் AdWords) இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் எதிலும் இனி விளம்பரங்களைக் காட்டாது. இந்த உள்ளடக்கம் பிற விளம்பரத் தயாரிப்புகளின் மூலமாகவோ வெளியீட்டாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையிலான நேரடி ஒப்பந்தங்கள் மூலமாகவோ மட்டுமே விளம்பரங்களைப் பெறும்.
  • நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு (தயாரிப்புகள்) எதுவாயினும், சீரமைக்கப்பட்ட எங்கள் வெளியீட்டாளர் தயாரிப்புகளின் மூலம் அவை எளிமையானதாகவும், நிலைத்தன்மை உடையதாகவும், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கும்.

ஒரு AdSense வெளியீட்டாளராக இந்தச் செயல் உங்களுக்கு எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும்?

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் கீழ் வரும் உள்ளடக்கத்திற்கான லாபம் பெறுதல் இனி கொள்கை மீறல் என்று ஆகாது. அதற்கு பதிலாக ஒவ்வொரு விளம்பரத் தயாரிப்பு மற்றும்/அல்லது விளம்பரதாரர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அதில் காட்டப்படும் விளம்பரங்களைப் பொருத்தமான விதத்தில் கட்டுப்படுத்துவோம். சில நேரங்களில் விளம்பர ஆதாரங்கள் உங்கள் விளம்பர இருப்பை ஏலம் எடுக்காமல் போகலாம் என்பதோடு இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் காட்டப்படாமலும் போகலாம் என்பதைக் குறிக்கிறது. எனவே Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட உள்ளடக்கத்தை லாபம் பெறுதலுக்குத் தேர்வுசெய்யும்போது, பிற கட்டுப்படுத்தப்படாத உள்ளடக்கத்திற்குப் பெறும் விளம்பரங்களை விட அதில் குறைவான விளம்பரங்களையே பெறுவீர்கள்.

Google வெளியீட்டாளர் கொள்கைகளின் கீழ் வரும் உள்ளடக்கம் லாபம் பெறுதலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதில் நீங்கள் எந்தவிதமான விளம்பரங்களையும் வைக்கக் கூடாது. கொள்கையை மீறும் உள்ளடக்கத்தின் மூலம் லாபம் பெற முயன்றால் உங்கள் கணக்கு (கணக்குகள்) இடைநிறுத்தப்படலாம் அல்லது முழுமையாக நீக்கப்படலாம்.

கவனத்திற்கு: Google வெளியீட்டாளர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பின்பற்றும் பிற கொள்கைகளுடன் கூடுதலாக இந்தக் கொள்கைகளும் கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

நீங்கள் செய்யவேண்டியவை

இப்போது எதுவும் தேவையில்லை. கொள்கைகளிலும் கட்டுப்பாடுகளிலும் செய்யப்படும் மாற்றங்கள் செப்டம்பர் 2019ல் நடைமுறைக்கு வரும்போது உதவி மையத்திலும் கொள்கை மையத்திலும் இவற்றுக்கான முழு விவரங்களும் வெளியிடப்படும். அப்போது மாற்றப்பட்ட கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் படித்துப் பார்த்து உங்கள் உள்ளடக்கம் அவற்றுடன் இணங்குகிறது என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

(ஆகஸ்ட் 2019ல் இடுகையிடப்பட்டது)

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1964981287726252143
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false