YouTubeல் ஏன் உள்நுழைய வேண்டும்?

உள்நுழைதல் மூலம் கிடைக்கும் பலன்களை நீங்கள் பெற, பயனர்களுக்கு உள்நுழைதலை நினைவூட்டும் வழிகளைப் பரிசோதித்து வருகிறோம். YouTubeஐ நீங்கள் பயன்படுத்தும்போது, உள்நுழைதல் அறிவிப்பை உங்களுக்குக் காட்டுவதும் இந்த அம்சத்தில் உள்ளது. இந்த அறிவிப்பு காட்டப்படும்போது நீங்கள் உள்நுழைய விரும்பவில்லையெனில் அதை மூடலாம்.

உங்கள் Google கணக்கின் மூலம் YouTubeல் உள்நுழைவது நீங்கள் விரும்பும் உள்ளடக்கத்தைக் கண்டறியவும் YouTube சமூகத்துடன் இணையவும் மேலும் பலவற்றிற்கும் உதவும். உள்நுழைதல் மூலம் நீங்கள் இவற்றைப் பெறலாம்:

குழு சேர்வதன் மூலம் உங்களுக்குப் பிடித்த சேனலிலிருந்து அதிக வீடியோக்களைப் பார்த்தல்

சேனல்களில் குழு சேர்ந்து அவற்றில் புதிய வீடியோக்கள் பதிவேற்றப்படும்போது அறிவிப்பைப் பெறும்படி தேர்வுசெய்யலாம். இயல்பாக, சேனலின் ஹைலைட்ஸ் மட்டுமே உங்களுக்குக் காட்டப்படும்.

பிளேலிஸ்ட்களை உருவாக்குதலும் பகிர்தலும்

பிளேலிஸ்ட்டை உருவாக்குவதன் மூலம் உங்களுக்குப் பிடித்த வீடியோக்களைக் கண்டறியலாம் பார்க்கலாம். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் அவற்றைப் பகிர்ந்து அவர்களையும் இதில் கூட்டுப்பணி செய்ய அழைக்கலாம்.

சமூகத்திற்குப் பங்களித்தல்

உங்களுக்குப் பிடித்த சேனல்களுடனும் கலைஞர்களுடனும் உரையாடலாம். வீடியோக்கள் மற்றும் இடுகைகளில் கருத்துகள் தெரிவிப்பதன் மூலம் அவர்களின் வீடியோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கலாம், கேள்விகள் கேட்கலாம் மற்றும் பிற ரசிகர்களுடன் இணையலாம்.


புகாரளித்தல், தடைசெய்தல் போன்ற சமூகக் கருவிகளைப் பயன்படுத்தி YouTubeஐ அனைவருக்கும் ஏற்றதாக மேம்படுத்த உதவலாம்.

YouTubeல் இருந்து மேலும் பலவற்றைப் பெறுவதற்கான கூடுதல் வழிகள்

YouTubeன் இந்த விருப்பத்திற்குட்பட்ட கட்டணச் சேவைகளிலிருந்து கூடுதல் பலன்களைப் பெறலாம்:

மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் பார்த்தல்

உங்கள் செயல்பாட்டை YouTube நினைவில் வைக்கவேண்டாமென்று விரும்பினால் மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, மறைநிலைப் பயன்முறையில் ஒரு வீடியோவைப் பார்த்தால் அது உங்கள் கணக்கின் பரிந்துரை வீடியோக்களை எந்த விதத்திலும் மாற்றாது.


மொபைலிலுள்ள கணக்கு மெனுவில் மறைநிலைப் பயன்முறையைப் பார்க்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வலை உலாவியில் தனிப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்தலாம். மறைநிலைப் பயன்முறை பற்றி மேலும் அறிக.

உங்கள் தனியுரிமையைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க YouTube கடமைப்பட்டுள்ளது. உள்நுழைந்திருக்கும்போது, உங்கள் கணக்கில் எந்தத் தரவு சேமிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க YouTubeல் உள்ள உங்கள் தரவை நீங்கள் அணுகலாம். தனியுரிமை அமைப்புகளின் விரிவான பலன்களையும் நீங்கள் பெறலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2075176419251513276
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false