YouTubeல் வருமானம் ஈட்டுவது எப்படி?

ரசிகர் நிதியளிப்பு மற்றும் Shopping அம்சங்களுக்கான முன்கூட்டிய அணுகல் பல கிரியேட்டர்களுக்குக் கிடைக்கும் வகையில் நாங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தை (YPP - YouTube Partner Program) விரிவுபடுத்துகிறோம். இந்த நாடுகள்/பிராந்தியங்களில் உள்ள தகுதிபெறும் கிரியேட்டர்களுக்கு விரிவாக்கப்பட்ட YouTube கூட்டாளர் திட்டம் கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, கென்யா, கேமன் தீவுகள், லிதுவேனியா, லக்சம்பர்க், லாத்வியா, மாஸிடோனியா, வடக்கு மரியானா தீவுகள், மால்டா, மலேசியா, நைஜீரியா, நெதர்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஃபிரெஞ்சு பாலினீசியா, பபுவா நியூ கினியா, ஃபிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், கத்தார், ரோமானியா, செர்பியா, ஸ்வீடன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, செனகல், டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகள், தாய்லாந்து, துர்க்கியே, உகாண்டா, விர்ஜின் தீவுகள், வியட்நாம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள தகுதிபெறும் கிரியேட்டர்களுக்கு இந்த விரிவாக்கத் திட்டத்தின் பலன்கள் அடுத்த மாதத்தில் கிடைக்கும். YPPயில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

நீங்கள் மேலேயுள்ள நாடுகள்/பிராந்தியங்களைச் சேர்ந்தவர் இல்லையெனில் உங்களுக்கான YouTube கூட்டாளர் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. YPP குறித்த மேலோட்டப் பார்வையையும் அதில் சேர்வதற்கான தகுதிநிலையையும் விண்ணப்பம் தொடர்பாக உங்களுக்குப் பொருந்தும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம்.

விரிவாக்கப்பட்ட YouTube கூட்டாளர் திட்டத்திற்குத் தகுதிபெற்றுள்ளீர்களா எனப் பாருங்கள். இன்னும் நீங்கள் தகுதிபெறவில்லையெனில் YouTube Studioவின் வருமானம் ஈட்டுதல் பிரிவில் உள்ள அறிவிப்பைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுங்கள். விரிவாக்கப்பட்ட YPP திட்டம் உங்களுக்குக் கிடைத்து, தகுதிநிலைக்கான வரம்புகளை நீங்கள் பூர்த்திசெய்த பிறகு, அதுகுறித்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புவோம். 

உக்ரைனில் தற்போது நடைபெறும் போரின் காரணமாக, ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு Google மற்றும் YouTube விளம்பரங்களைக் காட்டுவதை நாங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவோம். மேலும் அறிக.

YouTube கூட்டாளர் திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்து, அது ஏற்கப்பட்டதும் நீங்கள் YouTubeல் வருமானம் ஈட்டலாம். YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான எங்கள் கொள்கைகளைப் பின்பற்றும் சேனல்களால் மட்டுமே வருமானம் ஈட்ட முடியலாம்.

YouTubeல் பணம் சம்பாதிப்பது குறித்த அறிமுகம்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

சில குறிப்புகள்

  • YouTubeல் நீங்கள் எத்தகைய வீடியோவை உருவாக்கலாம் என நாங்கள் தெரிவிக்க மாட்டோம். எனினும் எங்கள் பார்வையாளர்கள், கிரியேட்டர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்குச் சரியானதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ளீர்கள் எனில் YouTube மூலம் வருமானம் ஈட்டலாம். YouTube கூட்டாளர் திட்டத்தில் இருக்கும்போது உங்களை உயர்ந்த நிலையில் வைத்திருப்போம்.
  • சிறந்த கிரியேட்டர்களுக்கே பலன்களை வழங்குகிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, YouTube கூட்டாளர் திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பாக உங்கள் சேனலை மதிப்பாய்வு செய்வோம். எங்கள் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் சேனல்கள் பூர்த்திசெய்வதை உறுதிசெய்துகொள்ளவும் நாங்கள் தொடர்ந்து அவற்றை மதிப்பாய்வு செய்வோம்.
  • YouTubeல் இருந்து பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். கூடுதல் தகவல்களைக் கீழே அறிந்துகொள்ளுங்கள்

YouTube கூட்டாளர் திட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள்

பின்வரும் அம்சங்கள் மூலம் நீங்கள் YouTubeல் வருமானம் ஈட்டலாம்:

  • விளம்பர வருவாய்: வீடியோ முகப்புப் பக்க விளம்பரங்கள், Shorts ஊட்ட விளம்பரங்கள் ஆகியவற்றிலிருந்து வருமானம் பெறலாம்.
  • ஷாப்பிங்: உங்கள் ஸ்டோரிலுள்ள தயாரிப்புகளையோ YouTube Shopping இணை வர்த்தகத் திட்டம் மூலம் நீங்கள் குறியிடும் பிற பிராண்டின் தயாரிப்புகளையோ உங்கள் ரசிகர்கள் தேடி வாங்கலாம்.
  • YouTube Premium வருவாய்: YouTube Premium சந்தாதாரர் உங்கள் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது அவரது சந்தாக் கட்டணத்தில் ஒரு பகுதியை நீங்கள் பெறலாம்.
  • சேனல் மெம்பர்ஷிப்கள்: சிறப்புச் சலுகைகளுக்கான அணுகலை வழங்க உங்கள் உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ச்சியான மாதாந்திரக் கட்டணத்தைப் பெறலாம்.
  • Super Chat & Super Stickers: உங்கள் ரசிகர்களின் மெசேஜ்களையோ அனிமேஷன் செய்யப்பட்ட படங்களையோ நேரலை அரட்டை ஸ்ட்ரீம்களில் ஹைலைட் செய்து காட்டி அதிலிருந்து வருமானம் ஈட்டலாம்.
  • Super Thanks: ரசிகர்கள் வேடிக்கையான அனிமேஷனைப் பார்ப்பதற்கும் உங்கள் வீடியோ அல்லது Shorts வீடியோவின் கருத்துகள் பிரிவில் தங்கள் மெசேஜ்களை ஹைலைட் செய்து காட்டுவதற்கும் நீங்கள் கட்டணம் பெறலாம்.

சந்தாதாரர் மற்றும் பார்வைகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் ஒவ்வொரு அம்சத்திற்கும் கூடுதலாகச் சில தகுதிபெறுவதற்கான தேவைகள் உள்ளன. உங்கள் சேனலோ வீடியோவோ இந்தத் தேவைகளுக்குத் தகுதிபெறவில்லை என எங்கள் மதிப்பாய்வாளர்கள் நம்பினால், குறிப்பிட்ட அம்சங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகக்கூடும். இந்தக் கூடுதல் தேவை வரம்புகள் இரண்டு முக்கியக் காரணங்களுக்காக உள்ளன. மிக முக்கியமான காரணம் என்னவெனில், இந்த அம்சம் கிடைக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அதற்குரிய சட்டத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், நாங்கள் சிறந்த கிரியேட்டர்களுக்கே பலன்களை வழங்க விரும்புகிறோம் என்பதால் உங்கள் சேனலில் போதுமான சூழல் உள்ளதா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும். பொதுவாக, இந்தச் சூழல் என்றால் மதிப்பாய்வு செய்வதற்குப் போதுமான உள்ளடக்கம் உங்கள் சேனலில் இருக்க வேண்டும் என்று அர்த்தமாகும்.

உங்கள் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளுடன் இணங்குகிறதா என்பதை உறுதிசெய்ய, சேனல்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

வருமானம் ஈட்டுதல் அம்சங்களை இயக்குவதற்குத் தகுதிபெறுவதற்கான குறைந்தபட்சத் தேவைகள்

ஒவ்வொரு அம்சமும் அதற்கெனத் தனித் தேவைகளைக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். உள்ளூர் சட்டத் தேவைகள் காரணமாகச் சில அம்சங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகக்கூடும்.

YouTube கூட்டாளர் திட்டத்திற்கான உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதும் இந்த வருமானம் ஈட்டுதல் அம்சங்களுக்கான அணுகலை நீங்கள் பெறக்கூடும்:

 

  சேனலுக்கான வரம்புகள் குறைந்தபட்சத் தேவைகள்

 

 

 

சேனல் மெம்பர்ஷிப்கள்

 

 

 

 

 

 

 

 

 

  • ​​​​​​500 சந்தாதாரர்கள்
  • கடந்த 90 நாட்களில் 3 பொதுப் பதிவேற்றங்கள்
  • இவற்றில் ஏதேனுமொன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
    • கடந்த 365 நாட்களில் நீள வடிவ வீடியோக்களில் 3,000 மணிநேரம் பொதுப் பார்வைக் காலம்
    • கடந்த 90 நாட்களில் 30 லட்சம் பொது Shorts பார்வைகள்
  • குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும்
  • சேனல் மெம்பர்ஷிப்கள் கிடைக்கும் நாட்டில் நீங்கள் வசிக்க வேண்டும்
  • வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் அல்லது முன்னதாகக் கிடைத்த வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கையை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்
  • சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனச் சேனல் அமைக்கப்பட்டிருக்கக்கூடாது. அத்துடன் சேனலில் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோக்களோ தகுதிபெறாத வீடியோக்களோ கணிசமான அளவில் இருக்கக்கூடாது
  • SRAV (சவுண்டு ரெக்கார்டிங் ஆடியோ விஷுவல்) ஒப்பந்தத்தின் கீழ், உங்கள் சேனல் ஓர் இசைச் சேனலாக இருக்கக்கூடாது
  • அனைத்துத் தேவைகளையும் இங்கே பார்க்கலாம்

 

 

 

Shopping (உங்கள் சொந்தத் தயாரிப்புகள்)

 

 

Super Chat & Super Stickers

  • குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும்
  • Super Chat மற்றும் Super Stickers கிடைக்கும் நாடு/பிராந்தியத்தில் நீங்கள் வசிக்க வேண்டும்
  • வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் அல்லது முன்னதாகக் கிடைத்த வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கையை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்
  • அனைத்துத் தேவைகளையும் இங்கே பார்க்கலாம்

 

 

Super Thanks

  • குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும்
  • Super Thanks கிடைக்கும் நாடு/பிராந்தியத்தில் வசிக்க வேண்டும்
  • வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் அல்லது முன்னதாகக் கிடைத்த வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கையை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்
  • SRAV (சவுண்டு ரெக்கார்டிங் ஆடியோ விஷுவல்) ஒப்பந்தத்தின் கீழ், உங்கள் சேனல் ஓர் இசைச் சேனலாக இருக்கக்கூடாது
  • அனைத்துத் தேவைகளையும் இங்கே பார்க்கலாம்

 

 

விளம்பர வருவாய்

  • 1,000 சந்தாதாரர்கள்
  • இவற்றில் ஏதேனுமொன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
    • கடந்த 365 நாட்களில் நீள வடிவ வீடியோக்களில் 4,000 மணிநேரம் பொதுப் பார்வைக் காலம்
    • கடந்த 90 நாட்களில் 1 கோடி பொது Shorts பார்வைகள்
  • நீங்கள் குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட சட்டப்பூர்வப் பாதுகாவலரைக் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பாதுகாவலர் YouTubeக்கான AdSense மூலம் உங்கள் பேமெண்ட்டுகளை நிர்வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • YPP கிடைக்கும் நாடு/பிராந்தியத்தில் நீங்கள் வசிக்க வேண்டும்
  • தொடர்புடைய ஒப்பந்த மாடியூல்களை ஏற்க வேண்டும்
  • விளம்பரதாரருக்கேற்ற எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் பூர்த்திசெய்யும் வீடியோக்களை உருவாக்க வேண்டும்
YouTube Premium வருவாய்
  • தொடர்புடைய ஒப்பந்த மாடியூல்களை ஏற்க வேண்டும்
  • YouTube Premium சந்தாதாரர் பார்க்கும் வகையில் வீடியோக்கள் இருக்க வேண்டும்

 

 

Shopping (பிற பிராண்டுகளின் தயாரிப்புகள்)

  • 20,000 சந்தாதாரர்கள்
  • இவற்றில் ஏதேனுமொன்றைப் பெற்றிருக்க வேண்டும்:
    • கடந்த 365 நாட்களில் நீள வடிவ வீடியோக்களில் 4,000 மணிநேரம் பொதுப் பார்வைக் காலம்
    • கடந்த 90 நாட்களில் 1 கோடி பொது Shorts பார்வைகள்
  • சந்தாதாரருக்கான வரம்பைப் பூர்த்திசெய்ய வேண்டும்
  • நீங்கள் தென் கொரியாவிலோ அமெரிக்காவிலோ வசிப்பவராக இருக்க வேண்டும்
  • இசைச் சேனலாகவோ கலைஞரின் அதிகாரப்பூர்வச் சேனலாகவோ உங்கள் சேனல் இருக்கக்கூடாது அல்லது இசைக் கூட்டாளர்களுடன் இணைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. இசைக் கூட்டாளர்களில் இசை லேபிள்கள், விநியோகஸ்தர்கள், வெளியீட்டாளர்கள் அல்லது VEVO அடங்கலாம்.
  • சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனச் சேனல் அமைக்கப்பட்டிருக்கக்கூடாது. அத்துடன் சேனலில் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோக்கள் கணிசமான அளவில் இருக்கக்கூடாது
  • அனைத்துத் தேவைகளையும் இங்கே பார்க்கலாம்
YouTubeல் எப்படி வருமானம் ஈட்டுவது என்பது குறித்த கிரியேட்டர்களுக்கான உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்.

YouTube வருமானம் மற்றும் வரிப் பொறுப்பு

YouTubeல் வருமானம் ஈட்டுவதோ Shorts போனஸ்களைப் பெறுவதோ, பிளாட்ஃபார்மில் நீங்கள் பதிவேற்றும் நல்ல, சுவாரஸ்யமான வீடியோவிற்கான பலன்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். YouTubeல் வருமானம் ஈட்டும் வீடியோக்களிலிருந்து பெறும் எந்த வருமானத்திற்கும் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். விரிவாகத் தெரிந்துகொள்ள உங்கள் உள்ளூர் வரி நிபுணர்களைத் தொடர்புகொள்ளவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12946029142171998183
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false