Content ID உரிமைகோரல்கள் குறித்து அறிந்துகொள்ளுதல்

பதிவேற்றப்படும் வீடியோ YouTubeன் Content ID சிஸ்டத்தில் உள்ள மற்றொரு வீடியோவுடன் (அல்லது வீடியோவின் ஒரு பகுதியுடன்) பொருந்தும்போது Content ID உரிமைகோரல் தானாகவே உருவாக்கப்படும். பதிப்புரிமையாளரின் Content ID அமைப்புகளைப் பொறுத்து Content ID உரிமைகோரல்கள் மூலம்:
  • ஒரு வீடியோவைப் பார்க்க முடியாதபடி தடைசெய்யலாம்
  • வீடியோவில் விளம்பரங்களை இயக்கி அவற்றின் மூலம் வருமானம் ஈட்டலாம். சில சமயங்களில் அந்த வருமானத்தை வீடியோவைப் பதிவேற்றியவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
  • வீடியோவின் பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கலாம்

இந்தச் செயல்கள் அனைத்தும் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக, Content ID உரிமைகோரலைப் பெற்ற வீடியோ ஒரு நாட்டில்/பிராந்தியத்தில் வருமானம் ஈட்டலாம், அதே வீடியோ வேறொரு நாட்டில்/பிராந்தியத்தில் தடைசெய்யப்படலாம் அல்லது கண்காணிக்கப்படலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை:
  • ஒரு உரிமை கோரப்பட்ட வீடியோ கண்காணிக்கப்பட்டாலோ அதன் மூலம் வருமானம் ஈட்டப்பட்டாலோ செயலிலுள்ள Content ID உரிமைகோரலுடன் அது YouTubeல் பார்க்கக்கூடியதாக இருக்கும். பொதுவாக, பதிப்புரிமையாளர்கள் வீடியோக்களைக் கண்காணிக்கவோ அவற்றின் மூலம் வருமானம் ஈட்டவோ விரும்புவார்களே தவிர அவற்றைத் தடைசெய்யமாட்டார்கள்.
  • Content ID உரிமைகோரல்கள் என்பவை பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள், பதிப்புரிமை எதிர்ப்புகள் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டவையாகும்.
  • பொதுவாக, Content ID உரிமைகோரல்கள் வீடியோக்களைப் பாதிக்குமே தவிர உங்கள் சேனலிலோ கணக்கிலோ பாதிப்பை ஏற்படுத்தாது.

உங்கள் வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றுள்ளதா என்று பார்க்கவும் அதற்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளவும் இந்த வீடியோவைக் காண்க:

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

உங்கள் வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றுள்ளதா எனப் பார்த்தல்

உங்கள் வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றால் அதுகுறித்து YouTube உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும். உங்கள் வீடியோவுக்கு Content ID உரிமைகோரல் உள்ளதா என்பதை YouTube Studioவைப் பயன்படுத்தியும் பார்க்கலாம்.

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வடிப்பான் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உரிமைகோரல் உள்ளதா என அறிய விரும்பும் வீடியோவைக் கண்டறியவும்.
  5. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில் உள்ள பதிப்புரிமை என்பதற்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
    • பதிப்புரிமை: வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றுள்ளது.
    • பதிப்புரிமை – நீக்கம்: பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை ("நீக்கம்" என்றும் அழைக்கப்படுகிறது) வீடியோ பெற்றுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு, கர்சரை மேலே கொண்டு செல்லும்போது தோன்றும் விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்து வீடியோ பதிப்புரிமை விவரங்கள் பக்கத்தைத் திறக்கவும்.

உங்கள் வீடியோவை உரிமைகோரியது யார் எனப் பார்த்தல்

  1. Content ID உரிமைகோரல் உள்ள வீடியோவைக் கண்டறிய மேலேயுள்ள படிகளைப் பின்பற்றவும்.
  2. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில், கர்சரை மேலே கொண்டுசெல்லும்போது தோன்றும் விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பதிப்புரிமையாளர் பற்றிய தகவல்களைப் பார்க்க, வீடியோ மீதான தாக்கம் எனும் நெடுவரிசையின் கீழுள்ள வரிசைக்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.

உங்களால் பதிப்புரிமையாளரை அடையாளம் காண முடியவில்லை எனில் அவரின் உரிமைகோரல் செல்லாது என்று அர்த்தமாகிவிடாது. மேலும், "இசை வெளியிடுவதற்கான உரிமைகளுக்காக ராயல்டி வசூலிக்கும் குழுமம் அல்லது குழுமங்கள்" உங்கள் வீடியோவை உரிமைகோரியிருந்தால் ராயல்டி வசூலிக்கும் குழுமங்கள் குறித்து நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:
  • உங்கள் வீடியோவின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு பதிப்புரிமையாளர்களிடம் இருந்து உரிமைகோரல்கள் வரக்கூடும்.
  • உள்ளடக்கத்திற்கு வெவ்வேறு நாடுகள்/ பிராந்தியங்களில் வெவ்வேறு பதிப்புரிமையாளர்கள் இருந்தால் ஒரே வீடியோவிற்கு அல்லது வீடியோவின் ஒரு பகுதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமைகோரல்கள் வரக்கூடும்.

Content ID உரிமைகோரல்களை நிர்வகித்தல்

சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு Content ID உரிமைகோரலுக்குப் பதிலளிக்க உங்களுக்குச் சிலபல வழிகள் உள்ளன:

அப்படியே விட்டுவிடுதல்
ஓர் உரிமைகோரல் சரியானது என்று நீங்கள் கருதினால், எதுவும் செய்யாமல் வீடியோவில் உள்ள உரிமைகோரலை அப்படியே விட்டுவிடலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளலாம்.
உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுதல்

ஓர் உரிமைகோரல் சரியானது என்று நீங்கள் கருதினால், புதிய வீடியோவைப் பதிவேற்றாமலேயே உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் அகற்றலாம். பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு விருப்பத்தேர்வைப் பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்து, உரிமைகோரலை உங்கள் வீடியோவில் இருந்து தானாக அகற்றும்படி செய்யலாம்:

  • வீடியோவின் பகுதியை டிரிம் செய்தல்: உரிமைகோரப்பட்ட பகுதியை உங்கள் வீடியோவில் இருந்து டிரிம் செய்யலாம்.
  • பாடலை மாற்றுதல்: உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை யாராவது உரிமைகோரினால், அதை YouTubeன் ஆடியோ லைப்ரரியில் உள்ள வேறொரு ஆடியோவைக் கொண்டு மாற்றலாம்.
  • பாடலை ஒலியடக்குதல்: உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை யாராவது உரிமைகோரினால் அதை நீங்கள் ஒலியடக்கலாம். பாடலை மட்டும் ஒலியடக்க வேண்டுமா அல்லது வீடியோவில் உள்ள எல்லா ஆடியோவையும் ஒலியடக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
வருவாயைப் பகிர்தல்
நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்து, உங்கள் வீடியோவில் உள்ள இசையை உரிமைகோரியிருந்தால் இசை வெளியீட்டாளருடன் உங்கள் வருவாயைப் பகிர்ந்துகொள்ளலாம்.
உரிமைகோரலை மறுத்தல்

ஓர் உரிமைகோரல் தவறானது என்று நீங்கள் கருதும்பட்சத்தில், உரிமை கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருப்பதாக நம்பினால் அந்த உரிமைகோரலை மறுக்கலாம்.

உரிமைகோரலை மறுப்பது என நீங்கள் முடிவெடுத்திருக்கும்போது உங்கள் வீடியோ வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தால், மறுப்புகளின்போது வருமானம் ஈட்டுதல் எப்படிச் செயல்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பதிப்புரிமை மறுப்புகளில் YouTube மத்தியஸ்தம் செய்யாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சரியான காரணமின்றி ஓர் உரிமைகோரலை நீங்கள் மறுத்தால், பதிப்புரிமையாளர் உங்கள் வீடியோவை அகற்றும்படி கேட்கலாம். உங்கள் வீடியோவிற்கான சரியான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நாங்கள் பெற்றால் உங்கள் கணக்கு பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும்.

பொதுவான கேள்விகள்

எனது வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றால் எனக்குச் சிக்கல் ஏற்படுமா?

பெரும்பாலும் இல்லை. பதிப்புரிமை பெற்ற தங்களது உள்ளடக்கத்தை மற்றவர்கள் பயன்படுத்தலாமா என்பதைப் பதிப்புரிமையாளர்களே தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் உரிமை கோரப்பட்ட வீடியோக்களில் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதித்து, அதற்கு ஈடாக அவற்றில் விளம்பரங்களைக் காட்டச் செய்கின்றனர். வீடியோ தொடங்குவதற்கு முன்போ வீடியோ பிளேயாகும்போதோ (8 நிமிடங்களுக்கு மேல் வீடியோ இருந்தால்) விளம்பரங்கள் காட்டப்படலாம்.

தங்கள் உள்ளடக்கம் பயன்படுத்தப்படுவதைப் பதிப்புரிமையாளர்கள் விரும்பவில்லையெனில் இவற்றைச் செய்யலாம்:

  • வீடியோவைத் தடைசெய்தல்: பதிப்புரிமையாளர்கள் வீடியோவைத் தடைசெய்யக்கூடும். அதாவது YouTubeல் அதைப் பார்க்க முடியாது. உலகம் முழுவதுமோ சில நாடுகள்/பிராந்தியங்களில் மட்டுமோ வீடியோ தடைசெய்யப்படலாம்.

  • குறிப்பிட்ட சில பிளாட்ஃபார்ம்களுக்கு அனுமதித்தல்: தங்கள் உள்ளடக்கம் எந்த ஆப்ஸில்/இணையதளங்களில் காட்டப்படவேண்டும் என்பதைப் பதிப்புரிமையாளர்கள் கட்டுப்படுத்தக்கூடும். கட்டுப்படுத்துவது YouTubeல் வீடியோவின் கிடைக்கும் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

Content ID உரிமைகோரல் தவறாக இருந்தால் நான் என்ன செய்வது?
ஓர் உரிமைகோரல் தவறானது என்று நீங்கள் கருதும்பட்சத்தில், உரிமை கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருப்பதாக நம்பினால் அந்த உரிமைகோரலை மறுக்கலாம்.
கவனத்திற்கு: சரியான காரணமின்றி ஓர் உரிமைகோரலை நீங்கள் மறுத்தால், பதிப்புரிமையாளர் உங்கள் வீடியோவை அகற்றும்படி கோரலாம். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை சரியானது எனில், உங்கள் சேனலுக்கு ஒரு பதிப்புரிமை எதிர்ப்பு வழங்கப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14504309803032479367
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false