பதிப்புரிமை என்றால் என்ன?

பல நாடுகளில், ஒருவர் தனது சொந்தப் படைப்பை உருவாக்கி ஒரு பொதுப்படையான ஊடகத்தில் அதைப் பதிவு செய்யும்போது, தானாகவே அவர் அந்தப் படைப்பின் பதிப்புரிமையாளர் ஆகிறார். பதிப்புரிமையாளராகத் தமது படைப்புகளைப் பயன்படுத்த அவருக்குப் பிரத்தியேக உரிமை உண்டு. பெரும்பாலான சமயங்களில், தம்முடைய படைப்பைப் பிறர் பயன்படுத்தலாமா என்பதைப் பதிப்புரிமையாளர் மட்டுமே சொல்ல முடியும். 

எந்த வகையான படைப்புகள் பதிப்புரிமைக்கு உட்படுகின்றன?
  • டிவி ஷோக்கள், திரைப்படங்கள், ஆன்லைன் வீடியோக்கள் போன்ற ஆடியோவிஷுவல் படைப்புகள்
  • சவுண்டு ரெக்கார்டிங்குகள் மற்றும் இசைத் தொகுப்புகள்
  • விரிவுரைகள், கட்டுரைகள், புத்தகங்கள், இசைக் குறிப்புகள் போன்ற எழுத்துப் படைப்புகள்
  • ஓவியங்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் போன்ற காட்சிப் படைப்புகள்
  • வீடியோ கேம்கள் மற்றும் கம்ப்யூட்டர் மென்பொருள்
  • நாடகங்கள், இசை நிகழ்வுகள் போன்ற நாடகப் படைப்புகள்

எண்ணங்கள், உண்மைத் தகவல்கள், செயல்முறைகள் போன்றவை பதிப்புரிமைக்கு உட்படாது. பதிப்புரிமைச் சட்டத்தின்படி, பதிப்புரிமைப் பாதுகாப்பிற்குத் தகுதிபெறுவதற்கு ஒரு படைப்பு கிரியேட்டிவாகவும் பொதுப்படையான ஊடகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பெயர்களும் தலைப்புகளும் தனியே பதிப்புரிமைக்கு உட்பட்டவை அல்ல.

பதிப்புரிமை பெற்ற படைப்பை விதிமீறல் இல்லாமல் நான் பயன்படுத்த முடியுமா?

நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகள் உள்ள சூழல்களிலோ பிறரின் படைப்பைப் பயன்படுத்த அனுமதி பெறுவதன் மூலமோ, பதிப்புரிமை பெற்ற படைப்பை விதிமீறல் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

உங்கள் வீடியோவில் வேறொருவரின் இசையைப் பயன்படுத்த நினைத்தால், இசையைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு இருக்கும் வழிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்:

Options for using music in your videos

 

அத்துடன் சில கிரியேட்டர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தங்கள் படைப்புகளை மறுபயன்பாட்டிற்குக் கிடைக்குமாறு வழங்குகிறார்கள். இது கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் என அழைக்கப்படுகிறது.

பதிப்புரிமையாளர் தகுதியை YouTube தீர்மானிக்க முடியுமா?

இல்லை. பதிப்புரிமை சார்ந்த புகார்களை YouTube மத்தியஸ்தம் செய்து தீர்த்துவைக்க முடியாது. முழுமையான மற்றும் நியாயமான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைப் பெறும்போது சட்டத் தேவைக்கேற்ப உள்ளடக்கத்தை அகற்றுவோம். நியாயமான எதிர் அறிவிப்பைப் பெறும்போது உள்ளடக்கத்தை அகற்றுமாறு கோரிக்கை வைத்தவருக்கு அந்த அறிவிப்பை அனுப்புவோம். இதன் பிறகு, இச்சிக்கலை நீதிமன்றத்தில் தீர்ப்பதென்பது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.

பதிப்புரிமையும் வர்த்தக முத்திரையும் ஒன்றா?

இல்லை. பதிப்புரிமை என்பது அறிவுசார் உடைமையின் ஒரு வடிவமாகும். இது வர்த்தக முத்திரை போன்றதல்ல. வர்த்தக முத்திரை சில காரணங்களுக்காக பிராண்டின் பெயர்கள், கோட்பாடுகள், லோகோக்கள், பிற ஆதார அடையாளங்காட்டிகள் போன்றவற்றை மற்றவர்களால் பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாக்கிறது. கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கும் காப்புரிமைச் சட்டத்தில் இருந்தும் பதிப்புரிமை வேறுபடுகிறது.

வர்த்தக முத்திரையையோ பிற சட்டங்களையோ மீறும் வீடியோக்களை அகற்றுவதற்கெனத் தனியே ஒரு செயல்முறையை YouTube வழங்குகிறது.

பதிப்புரிமைக்கும் தனியுரிமைக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன?

வீடியோ, படம், ஆடியோ ரெக்கார்டிங் போன்றவற்றில் தோன்றுவதால் மட்டுமே அதன் பதிப்புரிமைக்கு நீங்கள் உரிமையாளராக மாட்டீர்கள். எடுத்துக்காட்டாக, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையிலான உரையாடலை அவர் படம்பிடித்தால், அவர் ரெக்கார்டு செய்த வீடியோவின் பதிப்புரிமைக்கு அவரே உரிமையாளர் ஆவார். வீடியோவில் நீங்கள் இருவரும் பேசிய வார்த்தைகளை முன்கூட்டியே தயார் செய்யவில்லையெனில் அவை தனியாகப் பதிப்புரிமைக்கு உட்படாது.

உங்கள் நண்பரோ வேறொருவரோ நீங்கள் தோன்றக்கூடிய ஒரு வீடியோவையோ படத்தையோ காட்சிப் பதிவையோ உங்கள் அனுமதியில்லாமல் பதிவேற்றியிருந்து, அது உங்கள் தனியுரிமையையோ பாதுகாப்பையோ மீறுவதாக உணர்ந்தால் தனியுரிமைப் புகாரைப் பதிவுசெய்யலாம்.

பதிப்புரிமை குறித்து வழக்கத்திலுள்ள தவறான புரிதல்கள்

பதிப்புரிமை பற்றியும் அது YouTubeல் செயல்படும் விதம் பற்றியும் வழக்கத்திலுள்ள சில தவறான புரிதல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள், Content ID உரிமைகோரல்கள் போன்றவற்றில் இருந்து உங்கள் உள்ளடக்கம் பாதுகாக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

தவறான புரிதல் 1: பதிப்புரிமையாளருக்குக் கிரெடிட் கொடுத்துவிட்டால் அவர்களுடைய படைப்பைப் பயன்படுத்தலாம்

பதிப்புரிமையாளருக்குக் கிரெடிட் கொடுப்பது அவருடைய பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளைத் தானாகவே உங்களுக்குத் தந்துவிடாது. உங்கள் வீடியோவை YouTubeல் பதிவேற்றுவதற்கு முன்பு, அதில் உள்ள பதிப்புரிமை பெற்ற எல்லாக் கூறுகளுக்கான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெறும் வகையில் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என நீங்கள் கருதினால், வேறொருவரின் பதிப்புரிமை பெற்ற படைப்பில் உங்களின் சொந்த உள்ளடக்கத்தைச் சேர்த்தாலும் கூட உங்கள் வீடியோ பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெறாமல் போகக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பதிவேற்றுவதற்கு முன்பு உங்கள் உள்ளடக்கத்தைக் கவனமாக மதிப்பீடு செய்யுங்கள். தேவைப்பட்டால் சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்.

தவறான புரிதல் 2: “லாப நோக்கமற்ற முறையில்” பயன்படுத்துவதாகக் கூறிவிட்டால் எந்த உள்ளடக்கத்தையும் பயன்படுத்தலாம்

பதிப்புரிமை பெற்ற படைப்பின் மூலம் வருவாய் ஈட்ட முயலவில்லை என்றாலும், உங்கள் வீடியோவிற்கான பதிப்புரிமைக் கோரல்களை அது தடுக்காது. உதாரணமாக, நீங்கள் பதிவேற்றும் வீடியோவில் “பொழுதுபோக்குக் காரணங்களுக்காக மட்டும்” அல்லது ”லாப நோக்கமற்றது” என அறிவிப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது.

நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகளைப் பொறுத்தவரை, உங்களின் உபயோகம் பதிப்புரிமை விதிவிலக்கிற்கு அது தகுதிபெறுகிறதா என்பதை மதிப்பிடுவதில் நீதிமன்றங்கள் கவனமாகச் செயல்படும். உதாரணத்திற்கு, “லாப நோக்கமற்ற” உபயோகங்கள் என்பது நியாயமான பயன்பாட்டின் பகுப்பாய்வில் சாதகமானதாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் அது தானாகவே பதிப்புரிமை விதிவிலக்காக ஆகாது.

தவறான புரிதல் 3: மற்ற கிரியேட்டர்கள் இதைச் செய்கிறார்கள், எனவே நீங்களும் செய்யலாம்

நீங்கள் பதிவேற்றியது போன்ற வீடியோக்கள் தளத்தில் தோன்றினாலும் கூட, உங்களுக்கும் அந்த வீடியோவைப் பதிவேற்றுவதற்கான உரிமைகள் உண்டு என அதற்கு அர்த்தமில்லை.

சில நேரங்களில் தனது படைப்புகளில் சில (அனைத்தையும் அல்ல), எங்கள் தளத்தில் தோன்றுவதற்குப் பதிப்புரிமையாளர் அனுமதி வழங்கியிருப்பார். மற்ற நேரங்களில், ஒரே மாதிரியான வீடியோக்கள் வெவ்வேறு பதிப்புரிமையாளர்களுக்குச் சொந்தமாக இருக்கும். அத்துடன் ஒருவர் அனுமதி வழங்கும்போது மற்றொருவர் அனுமதி வழங்காமலும் போகக்கூடும்.

தவறான புரிதல் 4: iTunes, CD, DVD போன்றவற்றில் நீங்கள் வாங்கிய உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம்

உள்ளடக்கத்தை நீங்கள் வாங்கியதால் மட்டுமே அதை YouTubeல் பதிவேற்றலாம் என்றும் அதற்கான உரிமைகள் உங்களுக்கு உண்டு என்றும் அர்த்தம் ஆகாது. பதிப்புரிமையாளருக்குக் கிரெடிட் வழங்கி விட்டு, நீங்கள் வாங்கிய உள்ளடக்கம் அடங்கிய வீடியோக்களைப் பதிவேற்றினாலும் அவை பதிப்புரிமைச் சட்டத்தை மீறக்கூடும்.

தவறான புரிதல் 5: டிவி, திரையரங்கம், ரேடியோ போன்றவற்றில் இருந்து நீங்கள் ரெக்கார்டு செய்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம்

நீங்களே எதையேனும் ரெக்கார்டு செய்துள்ளீர்கள் என்பதால் அதை YouTubeல் பதிவேற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உண்டு என ஒருபோதும் அர்த்தமாகாது. நீங்கள் ரெக்கார்டு செய்த வீடியோவில் வேறொருவரின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கம் இருந்தால் (பின்னணியில் பதிப்புரிமை பெறப்பட்ட இசை ஒலித்துக்கொண்டிருப்பது போன்றவை), அப்போதும் நீங்கள் உரிய பதிப்புரிமையாளர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

தவறான புரிதல் 6: “பதிப்புரிமை மீறல் நோக்கமில்லை” எனக் கூறுவது

“அனைத்து உரிமைகளும் ஆசிரியருக்கே,” “பதிப்புரிமை மீறல் நோக்கமில்லை”, “நான் உரிமையாளர் அல்ல” போன்ற சொற்றொடர்களையும் பொறுப்புதுறப்புகளையும் குறிப்பிடுவது, அந்த வீடியோவைப் பதிவேற்றிய பதிப்புரிமையாளரின் அனுமதி உங்களிடம் உள்ளது என்றோ அந்த உள்ளடக்கத்தின் உங்கள் உபயோகம் பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெறுகிறது என்றோ (நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்றவை) தானாகவே அர்த்தமாகாது.

தவறான புரிதல் 7: பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைச் சில வினாடிகள் மட்டுமே பயன்படுத்தினால் சிக்கல் எதுவும் எழாது

பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பதிப்புரிமையாளர்களின் அனுமதியின்றி ஒரு சில வினாடிகளுக்குப் பயன்படுத்தினாலும் கூட உங்கள் வீடியோவுக்குப் பதிப்புரிமை கோரல் அனுப்பப்படலாம். நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெறும் வகையில் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என நீங்கள் நம்பினால், நீதிமன்றங்கள் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15743646674625284694
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false