YouTube வர்த்தகத் தயாரிப்புகள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கொள்கைகள்

புதிய YPP கிரியேட்டர்களுக்கு வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கைக்கு (CPA - Commerce Product Addendum) பதிலாக வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் (CPM - Commerce Product Module) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CPAவில் கையொப்பமிட்ட YPP கிரியேட்டர்கள் புதிய CPMமில் கையொப்பமிட வேண்டியதில்லை.

ரசிகர் நிதியளிப்பு அம்சங்களைப் பெற விரும்பும் வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்கு வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் (CPM) கிடைக்கிறது. ரசிகர் நிதியளிப்பு அம்சம் மூலம் நீங்கள் கூடுதல் வருமானம் ஈட்டலாம், பார்வையாளர்களுடன் இணைந்து ஒரு சமூகத்தை உருவாக்கலாம். இது Super Thanks மூலம் ரசிகர்கள் உடனடியாகத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாக இருக்கலாம் அல்லது கிரியேட்டர்கள் சேனல் மெம்பர்ஷிப்கள் மூலம் உறுப்பினர்களுக்கு மட்டுமேயான உள்ளடக்கத்தைத் தங்கள் அபிமான ரசிகர்களுக்கு வழங்குவதாக இருக்கலாம்.

ரசிகர் நிதியளிப்பில் இந்த வருமானம் ஈட்டுதல் அம்சங்கள் அடங்கும்:

  • சேனல் மெம்பர்ஷிப்கள்: உங்கள் சேனலில் உறுப்பினர்களுக்கு மட்டுமேயான சலுகைகளை வழங்க உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ச்சியான மாதாந்திரப் பேமெண்ட்டுகளைப் பெறலாம்.
  • Super Chat & Super Stickers: உங்கள் ரசிகர்களின் மெசேஜ்களையோ அனிமேஷன் செய்யப்பட்ட படங்களையோ நேரலை அரட்டை ஸ்ட்ரீம்களில் ஹைலைட் செய்து காட்டி அதிலிருந்து வருமானம் ஈட்டலாம்.
  • Super Thanks: உங்கள் Shorts வீடியோக்கள் மற்றும் நீள வடிவ வீடியோக்களின் 'கருத்துகள்' பிரிவில் உங்கள் ரசிகர்கள் பணம் செலுத்தி வேடிக்கையான அனிமேஷனைப் பார்க்கலாம், அவர்களுடைய மெசேஜ்களை ஹைலைட் செய்து காட்டலாம்.

YouTube ரசிகர் நிதியளிப்பு அம்சங்களுக்குப் பொருந்தும் கொள்கைகள்

நீங்கள் ரசிகர் நிதியளிப்பு அம்சங்கள் மூலம் YouTubeல் வருமானம் ஈட்டுகிறீர்கள் எனில், உங்கள் சேனல் (மற்றும் உங்கள் MCN) இந்த அம்சங்களுக்குப் பொருந்தும் உங்கள் ஒப்பந்தத்திற்கு இணங்குவதோடு (வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் அல்லது வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கை) YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இதில் அடங்குபவை:

நீங்கள் YouTubeன் சேவை விதிமுறைகளின்படி பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்களுக்கும் தொடர்ந்து இணங்க வேண்டும். ரசிகர் நிதியளிப்பு அம்சங்களை இயக்கலாமா, வழங்கலாமா, அவற்றிலிருந்து பணம் அனுப்பலாமா, பெறலாமா என்பவையும் இதிலடங்கும். ரசிகர் நிதியளிப்பு அம்சங்கள் என்பவை கிரவுடு ஃபண்டிங் கருவிகளோ நன்கொடை கருவிகளோ அல்ல. உங்களுக்கும் உங்கள் செயல்பாடுகளுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில், இந்த அம்சங்கள் மூலம் நீங்கள் ஈட்டும் தொகை வெவ்வேறு விதங்களில் அணுகப்படலாம்.

முடிவுக்குக் கொண்டுவருதல்

ரசிகர் நிதியளிப்புத் தயாரிப்புகளுக்கான உங்கள் அணுகல் முடக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் அத்தகைய தயாரிப்புகளுடன் இணைந்து கிடைக்கும்படி செய்த எந்தவொரு குறிப்பிட்ட வர்த்தக உள்ளடக்கத்தையும் அகற்ற வேண்டுமெனில், நீங்கள் தான் அதை அகற்ற வேண்டும். முடக்கத்திற்குப் பிறகு, எந்தவொரு வர்த்தக உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கோ அகற்றுவதற்கோ YouTube பொறுப்பாகாது.

பலன்கள்

நாங்கள் அவ்வப்போது ஊக்கத்தொகைத் திட்டங்களை வழங்கக்கூடும். கூடுதல் தகவல்களுக்கு இந்தப் பகுதியை மீண்டும் வந்து பாருங்கள்.

ரசிகர் நிதியளிப்பு அம்சங்களுக்கான குறைந்தபட்சத் தேவைகள்

ஒவ்வொரு ரசிகர் நிதியளிப்பு அம்சத்திற்கும் தனித்தனியே தேவைகள் இருந்தாலும் நீங்கள் ரசிகர் நிதியளிப்பு அம்சங்களுக்குத் தகுதிபெற இந்தக் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:

ரசிகர் நிதியளிப்பு அம்சங்களை இயக்குதல்

ரசிகர் நிதியளிப்பு அம்சங்களை இயக்க நீங்கள் செய்ய வேண்டியவை:

  1. YouTube கூட்டாளர் திட்டத்திற்கு விண்ணப்பித்து ஏற்கப்பட வேண்டும்.
  2. எங்கள் விதிமுறைகளையும் கொள்கைகளையும் நீங்கள் (மற்றும் உங்கள் MCN) ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு இணங்க வேண்டும் (தொடர்புடைய வர்த்தகத் தயாரிப்பு மாடியூல் அல்லது முன்னதாகக் கிடைத்த வர்த்தகத் தயாரிப்புப் பிற்சேர்க்கை உட்பட).
  3. நீங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்ய, ஒவ்வொரு ரசிகர் நிதியளிப்பு அம்சத்திற்குமான தகுதிநிலை நிபந்தனைகளை அறிந்துகொள்ளுங்கள்:
    1. சேனல் மெம்பர்ஷிப்களுக்கான தகுதிநிலை நிபந்தனைகள்
    2. Super Chat, Super Stickers ஆகிய அம்சங்களுக்கான தகுதிநிலை நிபந்தனைகள்
    3. Super Thanks அம்சத்திற்கான தகுதிநிலை நிபந்தனைகள்
  4. YouTube Studioவிலோ YouTube Studio மொபைல் ஆப்ஸிலோ ஒவ்வொரு ரசிகர் நிதியளிப்பு அம்சத்தையும் இயக்கவும்.

சேனல் மெம்பர்ஷிப்கள்

சேனல் மெம்பர்ஷிப்கள் மூலம் பார்வையாளர்கள் மாதாந்திரப் பேமெண்ட்டுகளைச் செலுத்தி உங்கள் சேனலில் இணைந்து உறுப்பினர்களுக்கு மட்டுமான சலுகைகளுக்குரிய (பேட்ஜ்கள், ஈமோஜி மற்றும் பிற பலன்கள்) அணுகலைப் பெறலாம். சேனல் மெம்பர்ஷிப்களை நிர்வகிப்பது மற்றும் இயக்குவது எப்படி என அறிக.

Super Chat மற்றும் Super Stickers

Super Chat, Super Stickers ஆகியவை லைவ் ஸ்ட்ரீம்கள் மற்றும் பிரீமியர்களின்போது ரசிகர்கள் கிரியேட்டர்களுடன் இணைவதற்கான வழிகளாகும். நேரலை அரட்டையில் தங்கள் மெசேஜை ஹைலைட் செய்ய Super Chatsஸையோ நேரலை அரட்டையில் தோன்றக்கூடிய அனிமேஷன் படத்தைப் பெற Super Stickersஸையோ ரசிகர்கள் வாங்கலாம். Super Chat, Super Stickers ஆகிய அம்சங்களை இயக்குவது மற்றும் நிர்வகிப்பது எப்படி என அறிக.

Super Thanks

Super Thanks அம்சம் மூலம், தங்கள் வீடியோக்களுக்குக் கூடுதலாக நன்றி தெரிவிக்க விரும்பும் பார்வையாளர்கள் மூலம் கிரியேட்டர்கள் வருமானம் ஈட்டலாம். ஒருமுறை தோன்றும் அனிமேஷனை ரசிகர்கள் வாங்கலாம். அத்துடன் வீடியோவின் 'கருத்து' பிரிவில் தனித்துவமான, வண்ணமயமான மற்றும் பிரத்தியேகமாக்கக்கூடிய கருத்தையும் அவர்கள் இடுகையிடலாம். Super Thanks அம்சத்தை இயக்குவது மற்றும் நிர்வகிப்பது எப்படி என அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3527129612343977155
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false