மோசடி அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டுக்கு எதிராகப் பாதுகாத்தல்

Protecting against fraud | Google Pay

Google Payயில் நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பதையும் பேமெண்ட் மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பதையும் எங்கள் உயரிய கடமையாகக் கருதுகிறோம்.

Googleளின் சிறப்பான செயற்கை நுண்ணறிவையும் மோசடித் தடுப்புத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களைக் கண்டறிகிறோம். உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தொழிற்துறையில் உள்ள பிற நிறுவனங்களுடன் இணைந்தும் பணி செய்து வருகிறோம்.

இருப்பினும், சில சமயங்களில் வேண்டுமென்றே சில நடவடிக்கைகளைச் செய்யும்படி மோசடியாளர்கள் உங்களைக் கேட்டுக்கொள்ளலாம், அதைச் செய்வது அவர்களிடம் பணத்தை இழப்பதற்கு வழிவகுக்கும். எனவேதான் அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் தெரிந்துகொள்வது அவசியம்.

Google Payயில் அங்கீகாரம் அளித்தல் எப்படிச் செயல்படுகிறது?

Google Pay இரண்டு அடுக்குப் பாதுகாப்புடன் வருகிறது.

முதல் படி [விருப்பத்திற்குரியது] பேமெண்ட் ஆப்ஸை அன்லாக் செய்கிறது, இரண்டாவது படி (UPI பின்) பேமெண்ட் செயலாக்கத்தை நிறைவுசெய்ய அனுமதிக்கிறது. ATM பின்னை ரகசியமாக வைத்திருப்பதுபோல UPI பின்னையும் ரகசியமாக வைத்திருக்கும்படி Google Pay பரிந்துரைக்கிறது.

சந்தேகத்திற்குரிய நடவடிக்கை ஏதேனும் இருந்தால் உடனடியாக உங்கள் பேங்க்கைத் தொடர்புகொண்டு புகாரளிக்க வேண்டும்.

சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் என்ன செய்வது?

காரணம் இல்லாமல் வரும் அழைப்புகளைக் கையாளும் விதம் குறித்த சில உதாரணங்கள் இதோ.

அறியாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது மிகவும் விழிப்போடு இருக்கவும். பேங்க்/சில்லறை விற்பனையாளர்/காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகக் கூறினாலும் அவர்களின் அடையாளம் தெரியாவிட்டால், எச்சரிக்கையாக இருக்கவும். உரையாடலின்போது அரசாங்க ஐடி, ஆவணங்கள், தனிப்பட்ட நிதித் தரவு (பின் போன்றவை), பேங்க் அக்கவுண்ட் எண், UPI ஐடி போன்றவை கேட்கப்பட்டால் அவற்றைப் பகிர வேண்டாம்.

அவர்கள் உங்களுக்கு எந்தளவுக்கு நம்பிக்கை அளித்தாலும் எவருடனும் இந்த விவரங்களைப் பகிர வேண்டிய தேவை இல்லை.

சந்தேகத்திற்குரிய அழைப்பையோ மெசேஜையோ பெற்றால் எப்போதும் செய்யக் கூடாதவை:

  • உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான பேமெண்ட் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். குறிப்பாக, அழைப்பிலோ ஆன்லைனிலோ இருக்கும்போது மறுமுனையில் இருப்பவர் பேமெண்ட்டுக்காகக் காத்திருப்பதாகக் கூறும்போது ஏற்கவே வேண்டாம்.
  • SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம்
  • அழைப்பில் இருக்கும்போது ஒரு ஆப்ஸையோ ஃபைலையோ பதிவிறக்க வேண்டாம்
  • அவர்கள் அனுப்பும் ஒரு மென்பொருளையோ வலை இணைப்பையோ பயன்படுத்தி உங்கள் மொபைல் திரையைப் பகிர வேண்டாம்.
  • தொலைபேசியில் உங்கள் UPI பின், UPI ஐடி அல்லது எந்த பேங்க் விவரங்களையும் வெளியிட வேண்டாம்.
  • உண்மையானதாகத் தோன்றினாலும் ஆன்லைன் படிவம் எதையும் நிரப்ப வேண்டாம். உங்கள் பேங்க் அல்லது ஆப்ஸைப் போலவே தோற்றமளிக்கக்கூடிய லோகோக்களுடனும் வடிவமைப்புகளுடனும் போலி இணையப் பக்கங்களை மோசடியாளர்கள் அடிக்கடி உருவாக்குகிறார்கள்.

எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டியவை எவை?

எப்போதும் நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய சில வழிகாட்டுதல்களை Google Pay வழங்கியுள்ளது.
  • பணம் அனுப்பவும் பேலன்ஸைச் சரிபார்க்கவும் மட்டுமே UPI பின் தேவை. பேமெண்ட்களைப் பெற பின் தேவையில்லை. உங்கள் பின்னை உள்ளிடும்படி யாராவது கேட்டால் பணத்தை அனுப்ப நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது, உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து பேமெண்ட் செய்யப்படுகிறது.
  • Google Pay கணக்கில் உள்நுழைவதற்காகப் பெறப்படும் OTPயை ஒருபோதும் பகிர வேண்டாம்.
  • முழுமையான கவனத்துடன் இல்லாத நேரங்களில் ஒருபோதும் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் — அது ஒரு ரீசார்ஜாகவோ பில் பேமெண்ட்டாகவோ வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • மொபைலில் ஒருவர் காத்திருக்கிறார் என்கிற நெருக்கடியில் ஒருபோதும் பேமெண்ட் செய்ய வேண்டாம்.
  • பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டிய தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்.
  • ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்யாமல் ஒருபோதும் அவருக்குப் பணம் அனுப்ப வேண்டாம்.
  • பணப் பரிமாற்றம் செய்யும்போது, திரையைப் பகிரும் ஆப்ஸை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் Google Pay பேமெண்ட்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க சில உதவிக்குறிப்புகள் இதோ:

உங்கள் UPI பின்னை ரகசியமாக வைத்திருக்கவும்: UPI பின் என்பது உங்கள் ஏடிஎம் பின்னைப் போன்றதுதான். அதை ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம்.
உங்கள் Google Pay ஆப்ஸில் உள்நுழைவதற்கான OTPயை ரகசியமாக வைத்திருக்கவும். அதை யாருடனும் பகிர வேண்டாம்.
நம்பகமான ஆப்ஸை மட்டுமே பதிவிறக்கவும்: திரையைப் பகிரும் ஆப்ஸ் போன்ற தீங்கிழைக்கக்கூடிய ஆப்ஸ், நீங்கள் திரையில் டைப் செய்யும் தனிப்பட்ட தகவல்களை அணுகலாம்.
இணைப்பின் மூலம் அனுப்பப்பட்ட இணையதளங்களிலோ படிவங்களிலோ உங்கள் UPI பின்னைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருக்கவும்.
பணத்தைப் பெற்றுக்கொள்ள உங்கள் UPI பின்னை உள்ளிடத் தேவையில்லை: UPI பின்னை உள்ளிட்டால் யாருக்கோ பணம் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். பணம் அக்கவுண்ட்டுக்கு வருகிறதா அல்லது அக்கவுண்ட்டில் இருந்து செல்கிறதா என்பதைக் கவனிக்கவும்.
வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள உங்கள் பேமெண்ட் ஆப்ஸை மட்டுமே பயன்படுத்தவும்: உங்கள் Google Pay ஆப்ஸின் உதவி/ஆதரவுப் பிரிவில் நம்பகமான உதவி விவரங்களைப் பெறலாம். இணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நம்பகமற்ற எண்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும்.

மோசடிப் பணப் பரிமாற்றத்தினால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?

உங்கள் பணப் பரிமாற்றங்களில் ஏற்படும் எந்தவொரு முறைகேட்டையும் உங்கள் பேங்க்கிடமும் அரசாங்கத்தின் சைபர் செல்லிடமும் உடனடியாகப் புகாரளியுங்கள். உங்கள் Google Pay பணப் பரிமாற்றத்தில் மோசடி ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகித்தால் பின்வருபவற்றைச் செய்யும்படி பரிந்துரைக்கிறோம்:

  • உங்கள் பேங்க்கிடம் பணப் பரிமாற்றம் குறித்துப் புகாரளிக்கவும்
  • உங்களின் உள்ளூர் அதிகார எல்லைக்கு உட்பட்ட சைபர் கிரைம் காவல் துறையைத் தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
மோசடியான பணப்பரிமாற்றங்கள் குறித்துக் கருத்து தெரிவித்தல்

மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (ML - Machine Learning) தொழில்நுட்பங்கள் மூலம் எங்கள் பயனர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்க நாங்கள் முயல்கிறோம். மோசடி செய்பவர்கள் குறித்த முன்கூட்டிய மற்றும் சமீபத்திய தகவல்களை வழங்குவதில் எங்கள் பயனர் சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நீங்கள் 3 வழிகளில் கருத்து தெரிவிக்கலாம்:

  1. இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி எங்களிடம் புகாரளித்தல்: நீங்கள் பகிரும் விவரங்கள், மோசடியான சுயவிவரங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க எங்கள் சிஸ்டங்களை மேம்படுத்த உதவும்.
  2. பயனரைப் புகாரளித்தல்: சந்தேகத்திற்குரிய பயனர் குறித்துப் புகாரளிக்கலாம்.
    1. Google Pay Google Pay ஆப்ஸுக்குச் செல்லவும்.
    2. பயனரின் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.
    3. மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் More பயனரைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்
  3. புஷ் அறிவிப்புகள்: பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதா இல்லையா என்பதை உறுதிசெய்ய, Google Pay அறிவிப்புகளை அனுப்பக்கூடும்.

GPay sample of safe recent payment

GPay sample of confirmation

அடுத்த படிகள்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11109175536910740243
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false