உங்கள் Google கணக்கிற்கான அணுகலை மூன்றாம் தரப்பு ஆப்ஸுடன் பகிர்தல்

குறிப்பிட்ட அம்சங்களைப் பெற, உங்கள் Google கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகலை மூன்றாம் தரப்பு ஆப்ஸிற்கும் சேவைகளுக்கும் நீங்கள் வழங்கலாம். உதாரணமாக, வடிப்பான்களைப் பயன்படுத்த உங்கள் Google Photosஸுக்கான அணுகலை வழங்கும்படி பட எடிட்டர் ஆப்ஸ் உங்களிடம் கேட்கலாம்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸும் சேவைகளும் அணுகல் வழங்குமாறு கேட்கக்கூடிய சில Google தயாரிப்புகள்:

  • Gmail
  • Drive
  • Calendar
  • Photos
  • Contacts

முக்கியம்: Google அல்லாத நிறுவனங்கள் மற்றும் டெவெலப்பர்களின் ஆப்ஸ் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் எனப்படும். மூன்றாம் தரப்பு ஆப்ஸை நீங்கள் நம்பினால் மட்டுமே உங்கள் Google கணக்கிற்கான அணுகலை அதற்கு வழங்கவும்.

உங்கள் Google கணக்கிற்கான அணுகலை மூன்றாம் தரப்பு ஆப்ஸிற்கு வழங்குதல்

உங்கள் Google கணக்குத் தரவிற்கான குறிப்பிட்ட அணுகல்களைப் பகிர, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் Google கணக்கிற்கான அணுகலைப் பகிருமாறு ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவையோ உங்களிடம் கோரினால், எந்தெந்தத் தகவல்களும் அனுமதிகளும் அதற்குத் தேவை என்பதைக் கண்டறிய அந்தக் கோரிக்கையைக் கவனமாகச் சரிபார்க்கவும்.
  2. நீங்கள் அணுகலைப் பகிர முடிவுசெய்தால், உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  3. உங்கள் Google கணக்கின் குறிப்பிட்ட தரவை அணுக மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ அங்கீகரிக்கவும்.

உங்கள் Google கணக்கிற்கான வெவ்வேறு விதமான அணுகல்களை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் கேட்கலாம். இவற்றுக்கான அணுகலை அவை கேட்கலாம்:

  • உங்கள் அடிப்படைச் சுயவிவரத்தைப் பெறுதல்: உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சுயவிவரப் படம் ஆகியவை உங்கள் அடிப்படைச் சுயவிவரத்தில் அடங்கும். மூன்றாம் தரப்பு ஆப்ஸிலோ சேவையிலோ புதிய கணக்கை உருவாக்க, மூன்றாம் தரப்பு ஆப்ஸ் இந்தத் தகவல்களைக் கேட்கலாம். இந்த அம்சத்தைக் கொண்டுள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸிலும் சேவைகளிலும் Google மூலம் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் அடிப்படைச் சுயவிவரத்திற்கான அணுகலை அங்கீகரிக்கிறீர்கள். Google மூலம் உள்நுழைவது எப்படி என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் Google கணக்கில் உள்ள தரவுகளைப் பார்த்தல், நகலெடுத்தல்: உங்கள் தொடர்புகள், படங்கள், YouTube பிளேலிஸ்ட்டுகள் போன்ற தரவுகளைப் பார்க்கவும் நகலெடுக்கவும் மூன்றாம் தரப்பு ஆப்ஸும் சேவைகளும் அனுமதி கேட்கலாம்.
    • உங்கள் Google கணக்கிற்கான மூன்றாம் தரப்பு ஆப்ஸின் அணுகலை நீங்கள் ரத்துசெய்தால் உங்கள் தரவை அதனால் இனி அணுக முடியாது. மூன்றாம் தரப்பு ஆப்ஸிடம் ஏற்கெனவே உள்ள தரவை நீக்கும்படி நீங்கள் அதனிடம் கேட்க வேண்டியிருக்கலாம்.
  • உங்கள் Google கணக்கில் உள்ள தரவை நிர்வகித்தல்: உங்கள் Google கணக்கில் தரவைத் திருத்த, பதிவேற்ற, உருவாக்க அல்லது நீக்க மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவைகளோ அனுமதி கேட்கலாம்.
    • உதாரணமாக:
      • ஃபிலிம் எடிட்டர் ஆப்ஸ் உங்கள் வீடியோவை எடிட் செய்து உங்கள் YouTube சேனலில் அதைப் பதிவேற்றலாம்.
      • ஈவெண்ட் பிளானர் ஆப்ஸ் உங்கள் Google Calendarரில் நிகழ்வுகளை உருவாக்கலாம் நீக்கலாம்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் குறித்துப் புகாரளி

உங்கள் Google கணக்கிற்கான அணுகல் பற்றிய பொதுவான கேள்விகள்

எனது Google கணக்குத் தரவிற்கான அணுகல் எந்தெந்த மூன்றாம் தரப்பு ஆப்ஸிற்கு உள்ளது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?
உங்கள் Google கணக்கை அணுக எந்தெந்த ஆப்ஸ் மற்றும் சேவைகளை அங்கீகரித்துள்ளீர்கள் என்பதை உங்கள் இணைப்புகளை நிர்வகித்தல் பக்கத்தில் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையின் அணுகலைச் சரிபார்க்கவோ மாற்றவோ பட்டியலில் இருந்து அதன் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆப்ஸையும் சேவைகளையும் காட்டு

எனது Google கணக்கிற்கான மூன்றாம் தரப்பு அணுகலை நான் எப்படி அகற்றுவது?

உங்கள் Google கணக்கை ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸ் இனி அணுகக்கூடாது என நினைத்தால், உங்கள் மூன்றாம் தரப்பு இணைப்புகளிலிருந்து அதை நீங்கள் அகற்றலாம்.

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. மூன்றாம் தரப்பு அணுகல் உள்ள ஆப்ஸையும் சேவைகளையும் பார்க்கவும்.
  3. இணைப்பை அகற்ற விரும்பும் மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
  4. விவரங்களைக் காட்டு அதன் பிறகு அணுகலை அகற்று அதன் பிறகு உறுதிப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வகைகள் இருந்தால், “உங்கள் Google கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகல் {ஆப்ஸ் பெயர்}க்கு உள்ளது” என்பதன் கீழ் உங்கள் மூன்றாம் தரப்பு அணுகலுக்கான இணைப்பு காட்டப்படும்.

அணுகலைச் சரிபாருங்கள்

எனது Google தரவை எந்த அளவுக்கு மூன்றாம் தரப்பினால் அணுக முடியும்?

நீங்கள் அணுக அங்கீகரித்துள்ள தரவு மற்றும் சேவைகளை மட்டுமே மூன்றாம் தரப்பு ஆப்ஸால் அணுக முடியும். மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனோ சேவையுடனோ உங்களின் எந்தவொரு தரவையும் Google பகிரும் முன், மூன்றாம் தரப்பு அணுக விரும்பும் தரவு மற்றும் சேவைகளின் பட்டியல் உங்களுக்குக் காட்டப்படும்.

உதாரணமாக, உங்கள் Google Calendar தரவை மட்டுமே அணுக ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸை நீங்கள் அங்கீகரித்தால், அதனால் அந்தத் தரவை மட்டுமே அணுக முடியும். Google Photos, Contacts போன்ற உங்களின் பிற Google தரவுகளை அணுக முடியாது.

எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்கிற்கான அணுகலை நீங்கள் அகற்றலாம்.

மூன்றாம் தரப்பினால் எனது Google கணக்குத் தரவில் மாற்றம் செய்ய முடியுமா?

உங்கள் Google கணக்கை வெவ்வேறு நிலைகளில் அணுகுவதற்கான அனுமதியை மூன்றாம் தரப்பு ஆப்ஸிற்கு நீங்கள் வழங்கலாம். உதாரணமாக, அடிப்படைக் கணக்கு விவரங்களை அணுகுதல், உங்கள் கணக்குத் தரவைப் பார்த்தல், அதில் மாற்றம் செய்தல் போன்றவை. உங்கள் Google கணக்குத் தரவை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் நிர்வகிப்பதற்கான அணுகலை நீங்கள் அங்கீகரித்தால், அது உங்கள் Google கணக்கில் தரவைத் திருத்தலாம் உருவாக்கலாம் நீக்கலாம். உங்கள் கணக்கிற்கான அணுகலை நீங்கள் அங்கீகரிக்கும்போது, மூன்றாம் தரப்பு ஆப்ஸ் கேட்கும் அணுகல் வகையை மூன்றாம் தரப்புகளுக்கு இருக்கக்கூடிய அணுகல்கள் என்பதன் கீழ் நீங்கள் பார்க்கலாம்.

அணுகலுக்காக மூன்றாம் தரப்புடன் எனது Google கடவுச்சொல்லைப் பகிர வேண்டுமா?

உங்கள் Google கணக்கிற்கான கடவுச்சொல்லை மூன்றாம் தரப்பு ஆப்ஸிலோ சேவையிலோ பகிர வேண்டாம். உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனோ சேவையுடனோ பகிர்ந்தால், உங்கள் கணக்கிற்கான முழு அணுகலையும் அவை பெறும். இது உங்கள் கணக்கின் பாதுகாப்பை வெகுவாகப் பாதிக்கக்கூடும்.

அதற்குப் பதிலாக, நம்பகமான மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனும் சேவைகளுடனும் உங்கள் Google கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகலைப் பகிரலாம். இது கூடுதல் பாதுகாப்பானது.

எனது Google கணக்கிலிருந்து வெளியேறிவிட்டால் என்ன ஆகும்?

மூன்றாம் தரப்பு ஆப்ஸிற்கோ சேவைக்கோ அணுகலை அங்கீகரிக்க உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.

என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால் என்ன செய்வது?

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால், நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கும்படியோ தொடர்வதற்கு வேறொரு Google கணக்கில் உள்நுழையும்படியோ கேட்கப்படுவீர்கள்.

எனது Google கணக்கை நான் நீக்கினால் என்ன ஆகும்?

உங்கள் Google கணக்கை நீங்கள் நீக்கினால் அதனுடன் தொடர்புடைய அனைத்து மூன்றாம் தரப்பு இணைப்புகளும் நீக்கப்படும். மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவையோ நீங்கள் இதற்கு முன் அவற்றுடன் பகிர்ந்த தகவல்களைத் தொடர்ந்து வைத்திருக்கக்கூடும். மூன்றாம் தரப்பு ஆப்ஸிடம் ஏற்கெனவே உள்ள தரவை நீக்கும்படி நீங்கள் அதனிடம் கேட்க வேண்டியிருக்கலாம்.

எனது மூன்றாம் தரப்புக் கணக்கை நான் நீக்கினால் என்ன ஆகும்?

மூன்றாம் தரப்புக் கணக்கை நீங்கள் நீக்கினால் உங்கள் Google கணக்கிற்கு ஒரு பாதிப்பும் இல்லை.

  • மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனோ சேவையுடனோ உங்கள் தரவைப் பகிர்வதை நிறுத்த, இணைப்புகளை நிர்வகித்தல் பக்கத்தில் இருந்து அவற்றை அகற்றவும். இதற்கு முன் நீங்கள் அவற்றுக்கு வழங்கிய அனைத்து அணுகலையும் இது ரத்து செய்யும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8861373901420612393
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false