கூடுதல் Google சேமிப்பகத்தை வாங்குதல்

உங்கள் Google கணக்குடன் கட்டணம் இல்லாமல் 15 ஜி.பை. கிளவுடு சேமிப்பகம் கிடைக்கிறது. சேமிப்பகம் இவற்றில் பகிர்ந்து பயன்படுத்தப்படும்:
  • Google Drive
  • Gmail
  • Google Photos

இவற்றின் மூலம் கூடுதல் சேமிப்பகத்தைப் பெறுங்கள்:

குறிப்பு: பணி/பள்ளிக் கணக்கை வைத்திருக்கிறீர்கள் எனில் உங்களுக்கெனத் தனிப்பட்ட முறையில் கூடுதல் சேமிப்பகத்தை வாங்க முடியாது. உங்களுக்குக் கூடுதல் சேமிப்பகம் தேவைப்பட்டால், கணக்கை வழங்கிய நபரைத் தொடர்புகொள்ளவும்.

சேமிப்பகச் சந்தாக்கள்

  • எப்போது வேண்டுமானாலும் உங்கள் சேமிப்பகத் திட்டத்தை மாதாந்திர அல்லது வருடாந்திரக் கட்டணத் திட்டமாக நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.
  • Google One சந்தா காலாவதியாகாது. நீங்கள் அமைப்புகளை மாற்றாத வரை அது தானாகவே புதுப்பிக்கப்படும்.
  • வேறு மாதாந்திர/வருடாந்திர பேமெண்ட்டிற்கு மாறும்போது இந்த மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வர 24 மணிநேரம் வரை ஆகலாம்.
  • பட்டியலிடப்பட்ட கட்டணத்துடன் உள்ளூர் வரிகளோ பிற கட்டணங்களோ விதிக்கப்படலாம். Googleளிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளூர்த் தரப்பினரால் இந்தக் கட்டணங்கள் மாற்றப்படலாம். பட்டியலிடப்பட்ட கட்டணத்திற்கு மேல் Google கூடுதல் கட்டணம் விதிப்பதில்லை. நீங்கள் ஐரோப்பியப் பொருளாதார பகுதியிலோ மொராக்கோவிலோ வசிக்கிறீர்கள் என்றால் Google Play பர்ச்சேஸ்களுக்கு வரி (VAT) வசூலிக்கப்படும். இங்கே வாங்கியவற்றுக்கு VAT இன்வாய்ஸ் அல்லது ரசீதைக் கேட்கலாம்.
  • சில நாடுகளில் மட்டுமே Google சேமிப்பகத்தை வாங்க முடியும். சேமிப்பகத்தை வாங்கக்கூடிய நாடுகளைக் கண்டறிக.
உங்கள் Google தயாரிப்புகளுக்குக் கூடுதல் சேமிப்பகத்தைப் பெறலாம்.

Drive திட்டத்திற்கு ஏற்கெனவே பணம் செலுத்தியிருந்தால் எவ்வித கட்டணமும் இல்லாமல் Google Oneனிற்குத் தானாக மேம்படுத்தப்படும். உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் சேமிப்பகம் Google One மெம்பர்ஷிப்புடன் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மேலும் அறிக.

Drive திட்டம் இல்லையெனில் கூடுதல் சேமிப்பகம், நிபுணர்களிடமிருந்து உதவி, உறுப்பினர்களுக்கான கூடுதல் பலன்கள் ஆகியவற்றைப் பெற Google One உறுப்பினராகலாம்.

Google சேமிப்பகத்தை மேம்படுத்துதல்

முக்கியம்: சேமிப்பகத்தை மேம்படுத்தும் முன் உங்கள் பேமெண்ட் முறை சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

மேம்படுத்திய பிறகு உங்களின் தற்போதைய Drive சேமிப்பகத் திட்டம் Google One மெம்பர்ஷிப்பாக மாற்றப்படும். Google One உறுப்பினர்களுக்கு இன்னும் கூடுதலான சேமிப்பிடம் கிடைப்பதுடன் பிரத்தியேகப் பலன்களும், குடும்பத் திட்டத்தைப் பகிரும் வசதியும் கிடைக்கும். நீங்கள் Google One உறுப்பினராக இருந்து கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால் கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

Google One ஆப்ஸ் மூலம் சேமிப்பகத்தை வாங்குதல்

  1. On your iPhone or iPad, download the Google One app.
  2. Make sure you're signed into your Google account.
  3. In the Google One app, at the bottom, tap Upgrade.
  4. Select your new plan pricing and payment date.
  5. Confirm your payment.

Change your storage plan

Important: If you purchased your Google One membership outside of the Google One iPhone app, you may not find the option to upgrade.

Google Drive ஆப்ஸ் மூலம் சேமிப்பகத்தை வாங்குதல்

முக்கியம்: உங்கள் Google Drive ஆப்ஸ் சமீபத்தியதாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். புதுப்பித்த பிறகு உங்கள் பர்ச்சேஸ் காட்டப்பட சில நிமிடங்கள் ஆகலாம். உங்கள் Google Drive ஆப்ஸைப் புதுப்பிக்கவும்.

  1. iPhone/iPadல் Google Drive ஆப்ஸை Drive திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு மெனு அதன் பிறகு சேமிப்பகம் என்பதைத் தட்டவும்.
  3. கூடுதல் சேமிப்பகத்தைப் பெறுக என்பதைத் தட்டவும்.
  4. புதிய சேமிப்பக வரம்பைத் தேர்வுசெய்யவும்.
  5. உங்கள் பேமெண்ட்டை உறுதிப்படுத்தவும்.
  6. முடிந்தது என்பதைத் தட்டவும்.

மேலும் அறிக

சேமிப்பகத்தை வாங்குவது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

App Storeரைப் பயன்படுத்தி Google Drive சேமிப்பகத்தை வாங்கும்போது நீங்கள் பின்வரும் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கக்கூடும் :

  • உங்கள் பர்ச்சேஸ் காலாவதியாகிவிட்டது

  • ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகளுக்கு உங்களால் சேமிப்பகத்தை வாங்க முடியாமல் போவது

  • கூடுதல் சேமிப்பகத்தை எங்கே வாங்குவது என்று உங்களால் கண்டறிய முடியாமல் போவது

உங்கள் சிக்கலைச் சரிசெய்ய:

  1. உங்கள் Apple App Store Drive சந்தாவை ரத்துசெய்யவில்லை எனில், அதைச் செய்யுங்கள். Apple சந்தாக்களை எப்படி மாற்றுவது என அறிக.

  2. உங்கள் Apple பர்ச்சேஸுக்கான கிரெடிட்டுகளைப் பெற Google உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும். Google உதவி மையத்தை எப்படித் தொடர்புகொள்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்

  3. 3. Google Playயைப் பயன்படுத்தியோ உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தோ புதிய சந்தாவை உருவாக்கவும்.

Google One திட்டங்களின் கட்டணங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Google One உறுப்பினர்களுக்கு இன்னும் கூடுதலான சேமிப்பிடம், பிரத்தியேகப் பலன்கள், குடும்பத் திட்டத்தைப் பகிரும் வசதி மட்டுமின்றி மேலும் பல அம்சங்களும் கிடைக்கும். உங்கள் பிராந்தியத்தில் Google One திட்டங்களின் கட்டணங்கள் என்ன என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

வேறொரு நிறுவனம் வழங்கும் Google One திட்டங்களைப் பற்றி

முக்கியம்: உங்கள் Google One திட்டத்தை வேறொரு நிறுவனம் வழங்கியிருந்தால் அதை மேம்படுத்தவோ முந்தைய திட்டத்திற்கு மாற்றவோ ரத்துசெய்யவோ அந்த நிறுவனத்தை நேரடியாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

வேறொரு நிறுவனத்தின் மூலம் பெற்ற Google One திட்டத்தை நிர்வகித்தல்

Google One தளத்திலும் ஆப்ஸிலும் Google One திட்டத்திற்கு மாறுதல்

வேறொரு நிறுவனத்திடமிருந்து வாங்கிய தற்போதைய திட்டத்திற்குப் பதிலாக, Google One தளத்திலும் ஆப்ஸிலும் மட்டுமே வாங்கக்கூடிய திட்டம் வேண்டுமெனில்:

  1. உங்களின் தற்போதைய Google One திட்டத்தை எந்த நிறுவனத்திடம் வாங்கினீர்களோ அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.
  2. Google One தளத்திலும் ஆப்ஸிலும் கிடைக்கக்கூடிய Google One திட்டத்தில் சந்தாதாரராக வேண்டும்.

திட்டத்தை ரத்துசெய்யும்போது சேமிப்பகம் நிரம்பியிருந்தால் அதன் காரணமாக Google சேவைகளில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க உடனே புதிய திட்டத்தில் நீங்கள் சந்தாதாரராக வேண்டும். சேமிப்பக வரம்பை மீறினால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பேமெண்ட் சிக்கல்களைச் சரிசெய்தல்

பேமெண்ட் சிக்கல்களைச் சரிசெய்ய, திட்டத்தை உங்களுக்கு வழங்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். மேலும் உங்கள் பேமெண்ட் முறை காலாவதியாகாமல் இருப்பதையும் விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும். நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கான இணைப்பை Google One அமைப்புகளில் பார்க்கலாம்.

கவனத்திற்கு: Google One தளத்திலோ ஆப்ஸிலோ பேமெண்ட் முறையை மாற்ற முடியாது.

பேமெண்ட் சிக்கல்கள்

உங்கள் பேமெண்ட் முறை காலாவதியாகி இருந்தாலோ விவரங்கள் தவறாக அல்லது பழையதாக இருந்தாலோ இவ்வாறு நடக்கலாம். பேமெண்ட் சிக்கல்களைச் சரிசெய்ய, Google One திட்டத்தை உங்களுக்கு வழங்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.

பலன்களுக்கான அணுகல்

பேமெண்ட் சிக்கல் இருந்தாலும் Google One பலன்களைக் குறுகிய காலத்திற்கு உங்களால் அணுக முடியும். சிக்கலை உடனே சரிசெய்யவில்லை எனில் உங்கள் Google One திட்டம் முடிவடைவதுடன் சேமிப்பக வரம்பும் 15 ஜி.பை. ஆகக் குறைந்துவிடும். இந்த அளவை மீறினால் Gmail, Google Photos, Drive மற்றும் பிற Google சேவைகளைப் பயன்படுத்துவதில் இடையூறுகள் ஏற்படும். சேமிப்பக வரம்பை மீறினால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதன் மூலம் இன்னும் சிறப்பாகக் கூட்டுப்பணியாற்றுங்கள், இணைந்திருங்கள்: Google Workspace Essentials

பணித் திட்டங்களுக்காக மேலும் சிறப்பான கூட்டுப்பணியையும் கூடுதல் சேமிப்பகத்தையும் உங்கள் நிறுவனம் விரும்பினால் நீங்கள் Google Workspace Essentials கணக்கிற்குப் பதிவுசெய்யலாம். பதிவுசெய்ய, உங்கள் வணிக மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.

Google Workspace Essentials கணக்கின் சிறப்பம்சங்கள்:

  • பாதுகாப்பான, நம்பகமான வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதி
  • குழுக்கள் தங்களது உள்ளடக்கம் அனைத்தையும் சேமிக்கும் வகையிலான பகிர்ந்த இயக்ககச் சேமிப்பகம்
  • கூட்டுப்பணியாற்ற Docs, Sheets, Slides போன்ற ஆப்ஸ் 
  • பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கத்தன்மையுடைய கருவிகள்
  • டொமைன் சரிபார்ப்போ தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோ தேவையில்லை

G Suite Essentialsஸின் ஆப்ஸ், கருவிகள், விலை ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிக.

Workspace Individual திட்டத்துடன் Google Oneனைப் பயன்படுத்துதல்

உங்கள் Workspace Individual திட்டம் 1 டெ.பை. சேமிப்பகத்துடன் கிடைக்கிறது. Google One மூலம் கூடுதல் சேமிப்பகத்தை வாங்கலாம். Workspace Individual பற்றி அறிக.

நீங்கள் Google One திட்ட உறுப்பினராக இருந்தால்:
  • உங்கள் Workspace Individual சேமிப்பகத்துடன் கூடுதலாக Google One திட்டத்தின் சேமிப்பகமும் கிடைக்கும்.
  • உங்கள் Google One சந்தாவிலோ குடும்பத் திட்டம் மற்றும் மெம்பர்ஷிப் பகிர்விலோ எந்த மாற்றமும் இருக்காது.
  • நீங்கள் ரத்து செய்யாத வரை திட்டத்தின் உறுப்பினராக அப்படியே தொடர்வீர்கள். 

மேம்படுத்திய பிறகும் சேமிப்பிடம் அதிகரிக்காமல் இருத்தல்

புதிய சேமிப்பகத் திட்டத்தை வாங்கிய பிறகு அது பயன்பாட்டிற்குக் கிடைக்க 24 மணிநேரம் வரை ஆகலாம்.

உங்கள் சேமிப்பகம் 24 மணிநேரத்திற்குப் பிறகும் தவறாக இருந்தால் பணம் செலுத்தப்பட்டு விட்டதா என்பதைப் பார்க்க உங்கள் Google கணக்கில் உள்நுழையவும். 

பணம் செலுத்தப்பட்டு, நீங்கள் சேமிப்பகத்தை மேம்படுத்தி 24 மணிநேரம் ஆகியிருந்தும் உங்கள் சேமிப்பகம் தவறாக உள்ளதெனில் பிழையறிந்து திருத்துவதற்கான இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கவும்.

உங்கள் பேமெண்ட் கார்டில் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தும் உங்கள் Google கணக்கில் பேமெண்ட் காட்டப்படவில்லை எனில் பல Google கணக்குகளில் உள்நுழைந்துள்ளீர்களா என்று பார்க்கவும். அப்படியெனில் வேறு கணக்கில் Google One வாங்கப்பட்டிருக்கலாம். அந்தக் கணக்கில் வாங்கியதை ரத்துசெய்துவிட்டு நீங்கள் விரும்பும் கணக்கில் Google Oneனை மீண்டும் வாங்கலாம். Google Oneனில் வாங்கியவற்றை எப்படி ரத்துசெய்வது என அறிக.

குறைந்த சேமிப்பகம் உள்ள திட்டத்திற்கு மாறுதல்

இப்போது உள்ள சேமிப்பிடம் அனைத்தையும் பயன்படுத்துவதில்லை என்றாலோ Google சேமிப்பகத்திற்குக் குறைவாகப் பணம் செலுத்த விரும்பினாலோ உங்கள் சேமிப்பகத் திட்டத்தைக் குறைந்த சேமிப்பகத் திட்டத்திற்கு மாற்றலாம் அல்லது அதை ரத்துசெய்யலாம்.

Pixel Pass மூலம் Google One மெம்பர்ஷிப்பை மாற்றுதல்
Pixel Pass சந்தாதாரர்கள் Google One மெம்பர்ஷிப் திட்டங்களை one.google.com தளத்திற்குச் சென்று மாற்றலாம். 200 ஜி.பை. அளவிற்கும் குறைவான Google சேமிப்பகம் வேண்டுமென்றால் Pixel Pass சந்தாவை ரத்துசெய்து Google One மெம்பர்ஷிப்பை மட்டும் பெறப் பதிவு செய்யவும். Pixel Pass திட்டத்தை எப்படி ரத்துசெய்வது என்பதை அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18432992867814057451
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false