Google Sheetsஸில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுதல்

Google Sheets பற்றிய சமீபத்திய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

நவம்பர் 2023

Duet AIயில் மேம்பட்ட ஸ்மார்ட் ஃபில்

Google Workspace Enterpriseஸுக்கான Duet AI செருகு நிரலை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே Google Sheetsஸில் மேம்பட்ட ஸ்மார்ட் ஃபில் அம்சம் கிடைக்கிறது. Duet AIயில் கிடைக்கும் மேம்பட்ட ஸ்மார்ட் ஃபில் அம்சம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

லிங்க் செய்யப்பட்ட வார்த்தைகளை Tab பட்டனைப் பயன்படுத்தி ஸ்மார்ட் சிப்களாக மாற்றுதல்

Google Sheetsஸில் உள்ள 'Tab அழுத்தி மாற்றுதல்' அம்சத்தின் அடிப்படையில் இப்போது, லிங்க் செய்யப்பட்ட வார்த்தைகள் Sheetsஸில் உள்ள ஸ்மார்ட் சிப் வார்த்தைகளுடன் பொருந்தும்போது, சேர்க்கப்பட்ட ஃபைல், நபர்கள், கேலெண்டர் நிகழ்வு, YouTube அல்லது இடத்திற்கான இணைப்பை ஸ்மார்ட் சிப்பாக மாற்றும்படி உங்களிடம் கேட்கப்படும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 

Google Sheetsஸில் ஸ்மார்ட் சிப்களைச் சேர்ப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Android மற்றும் iOSஸில் காலப்பதிவைப் பார்க்கும் வசதி

இப்போது Android மற்றும் iOSஸில் உங்கள் காலப்பதிவுகளைப் பார்க்கலாம்.

காலப்பதிவைப் பார்க்கும் வசதி குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

அக்டோபர் 2023

ஈமோஜி ரியாக்ஷன்களைக் கருத்துகளில் சேர்த்தல்

Google Sheets கருத்துகளில் இப்போது ஈமோஜி ரியாக்ஷன்களைப் பயன்படுத்தலாம். இது, விரிதாள் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துகளை விரைவாகவும் படைப்பாற்றலோடும் வெளிப்படுத்த உதவி கூட்டுப்பணியை மேம்படுத்தும். 

கருத்துகள், பணிகள், ஈமோஜி ரியாக்ஷன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்கள் மூலம் 'வடிகட்டலுக்கு மட்டுமான' புலங்கள் மற்றும் அளவுருக்களைப் பயன்படுத்தி வடிகட்டுதல்

Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்களில் வடிகட்ட, 'வடிகட்டலுக்கு மட்டுமான' புலங்கள் மற்றும் அளவுருக்கள் ஆகிய இரண்டு கூடுதல் புல வகைகளைச் சேர்ப்பதற்கான வசதியை வழங்கியுள்ளோம். Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தி Looker எக்ஸ்ப்ளோரர்களிலும் டாஷ்போர்டுகளிலும் மேம்பட்ட வடிப்பான்களை மீண்டும் உருவாக்க முடியும் என்பதால், உங்கள் தரவைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கான இன்னும் பல வழிகளை இந்த விருப்பங்கள் உங்களுக்கு வழங்கும். 

Lookerரில் உள்ள 'வடிகட்டலுக்கு மட்டுமான' புலங்கள் மற்றும் அளவுருக்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

செப்டம்பர் 2023

மேம்படுத்தப்பட்ட 'மதிப்புகளை ஒட்டுதல்' அனுபவம்

இதற்கு முன்பு சிறப்பு ஒட்டு > மதிப்புகள் மட்டும் என்பதைப் பயன்படுத்தி Google Sheetsஸில் எண்களை நகலெடுத்து ஒட்டும்போது, அந்தக் கலங்களில் இருக்கும் எண் மதிப்புகள் மட்டுமே ஒட்டப்படும். இந்த அம்சத்தை மேம்படுத்தும் வகையில், எண்களுக்கான ஒட்டப்படும் மதிப்புகள் இயல்பாகவே எண்களின் மதிப்புகளையும் எண் வடிவமைப்பையும் உள்ளடக்கியிருக்கும். அதாவது Sheetsஸில் பணிபுரியும்போது அனைத்து எண்களின் வடிவமைப்பும் தக்கவைக்கப்படும்.

iOS சாதனங்களில் Google Sheets ஆப்ஸில் இணைப்புகளைச் சேர்த்தல்

ஒரு கலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு > மேல் இடதுபுற மூலையில் உள்ள “+” ஐகானைக் கிளிக் செய்து > சேர் > இணைப்பு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இப்போது iOS பதிப்பு Google Sheetsஸில் உள்ள ஒரு கலத்தில் இணைப்பைச் சேர்க்கலாம். கலத்தில் இணைப்பு இருந்தால் அந்த இணைப்பைத் திருத்துவதற்கான அல்லது அகற்றுவதற்கான விருப்பங்கள் காட்டப்படும். 

இணைப்புகள் மற்றும் புக்மார்க்குகளைப் பயன்படுத்துவது எப்படி என்று மேலும் தெரிந்துகொள்ளுங்கள். 

BigQueryக்கான இணைக்கப்பட்ட தாள்களில் வரிசைகளுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Google Sheetsஸின் பரிச்சயமான அம்சங்களுடன் BigQuery தரவுத்தளத்தின் செயல்திறனையும் அளவிடுதலையும் இணைக்கப்பட்ட தாள்கள் வழங்குகின்றன. பைவட் அட்டவணைகள் மற்றும் தரவுப் பிரித்தெடுத்தல்களுக்கு BigQuery வழங்கும் முடிவுகளுக்கான வரிசைகளின் அதிகபட்ச எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்: 

  • பைவட் அட்டவணைகள் 50,000 வரிசைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது (இதற்கு முன்பு 30,000) 
  • தரவுப் பிரித்தெடுத்தல் 50,000 வரிசைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது (இதற்கு முன்பு 25,000) 
இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தி Google Sheetsஸில் BigQuery தரவைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் ரெஃப்ரெஷ் செய்தல், Google Sheets வரம்புகள், Google Sheetsஸில் BigQuery தரவைப் பயன்படுத்தத் தொடங்குதல் ஆகியவை குறித்து மேலும் தெரிந்துகொள்ள உதவி மையத்தைப் பாருங்கள்.

ஆகஸ்ட் 2023

Google Docsஸில் Duet AI மூலம் ஒழுங்கமைத்தல்

“ஒழுங்கமைக்க எனக்கு உதவு” என்ற ப்ராம்ப்ட் மூலம் Google Sheetsஸில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அட்டவணைகளை உருவாக்கலாம். Google Sheetsஸில் Duet AI அம்சங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்களுக்கான 'வடிப்பான் கோவை' அம்சம்

Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்களில் உள்ள பைவட் அட்டவணைகளில் வடிகட்ட “கடந்த 30 நாட்கள்”, “கடந்த காலாண்டு”, “50 அல்லாதது” போன்ற பொதுவான வடிப்பான் கோவைகளை இப்போது பயன்படுத்தலாம். 

இணைக்கப்பட்ட தாள்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

இட சிப்களை மொத்தமாக மாற்றுதல்

இப்போது, செருகு மெனு அல்லது கல மெனுவில் இருந்து இணைப்புகளை இட சிப்களாக மொத்தமாக மாற்றலாம். இந்தப் புதுப்பிப்பு நேரத்தைச் சேமிக்க உதவும். குறிப்பாக, நிகழ்வுக்கான திட்ட அட்டவணைகள், விற்பனையாளர் பட்டியல்கள், பயணத் திட்டங்கள் போன்றவற்றை உருவாக்கும்போது தரவை மொத்தமாக வடிவமைக்கப் பெரிதும் உதவும். 

Google Sheetsஸில் ஸ்மார்ட் சிப்களைச் சேர்ப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

கீழ்த்தோன்றல் சிப்களுக்கான புதிய முன் நிரப்புதல் அம்சம்

கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுத்து ஒரு கீழ்த்தோன்றல் சிப்பைச் சேர்க்கும்போது, நீங்கள் நேரடியாக டைப் செய்த கலத் தரவு கீழ்த்தோன்றல் மதிப்புகளில் முன் நிரப்பப்படும். அதன் பிறகு, நீங்கள் ஏற்பதற்கு முன்பு கீழ்த்தோன்றல் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி விருப்பங்களைச் சுலபமாக மாற்றலாம் கீழ்த்தோன்றல்களுக்கான ஸ்டைல்களைச் சேர்க்கலாம். 

ஏற்கெனவே உள்ள தரவைப் பயன்படுத்தி கீழ்த்தோன்றும் பட்டியலை உருவாக்குவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள். 

மொபைல் சாதனங்களில் நபர் சிப்கள்

 

சகப்பணியாளர்கள் மற்றும் தொடர்புகளின் இருப்பிடம், பணிப் பொறுப்பு, தொடர்புத் தகவல் போன்றவை உள்ளிட்ட பல தகவல்களை விரைவாகப் பார்க்க நபர் சிப்கள் உதவும். இப்போது iOS மற்றும் Android சாதனங்களில் இந்த ஸ்மார்ட் சிப்கள் கிடைக்கின்றன. 

Google Sheetsஸில் ஸ்மார்ட் சிப்களைச் சேர்ப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

பாதுகாக்கவேண்டிய Excel ஃபைல்களைக் கிளையண்ட் தரப்பில் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட Google Sheetsஸாக இறக்கி மாற்றுதல்

கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் மூலம், பாதுகாக்கவேண்டிய Excel ஃபைல்களை இப்போது Google Sheetsஸாகப் பதிவிறக்கி மாற்றலாம். என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட Sheets ஃபைலை நீங்கள் மாற்றினாலும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட Excel ஃபைல் மாற்றப்படாது.

ஜூலை 2023

இணைக்கப்பட்ட தாள்களுக்குள் நீண்ட நேரம் இயங்கும் வினவல்களை நீட்டித்தல்

BigQuery, Looker ஆகியவற்றின் 'வினவல் நேர முடிவு' 5ல் இருந்து 10 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. Sheetsஸில் இன்னும் பெரிய தரவுத் தொகுப்புகளை ஸ்கேன் செய்யும் வினவல்களில் இருந்து கிடைக்கும் தரவை இணைக்கப்பட்ட தாள்களின் பயனர்கள் பகுப்பாய்வு செய்யலாம். 

Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்கள் மூலம் பைவட் அட்டவணையின் அளவீடுகள் மற்றும் மதிப்பின் அடிப்படையில் வடிகட்டலாம்

இதற்கு முன்பு, இணைக்கப்பட்ட தாள்களின் பயனர்கள் பைவட் அட்டவணைகளில் பரிமாணங்களின் அடிப்படையிலேயே வடிகட்ட முடியும், அளவீடுகளைப் பயன்படுத்தி வடிகட்ட முடியாது. இப்போது, Looker பயனர்கள் பைவட் அட்டவணையில் அளவீடுகளைப் பயன்படுத்தி வடிகட்ட முடியும். இதன் மூலம், இணைக்கப்பட்ட தாள்களில் இன்னும் துல்லியமான பகுப்பாய்வுகளைச் செய்யலாம். மேலும், இணைக்கப்பட்ட தாள்களில் பைவட் அட்டவணையில் மதிப்பின் அடிப்படையிலும் Looker பயனர்கள் வடிகட்ட முடியும். 

Lookerரில் அளவீட்டு மதிப்புகள் மற்றும் பைவட் அட்டவணையை உருவாக்குதல் & பயன்படுத்துதல் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Sheetsஸில் ஈமோஜிகளைச் சேர்த்தல்

இப்போது பின்வரும் வழிகளில் Google விரிதாளில் ஈமோஜிகளைச் சேர்க்கலாம்:

  • “@” > “ஈமோஜி” என்று டைப் செய்து > வேண்டிய ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கலாம்
  • “செருகு” > “ஈமோஜி” > என்பதற்குச் சென்று வேண்டிய ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கலாம்

மேலும் அறிக

Tab பட்டனைப் பயன்படுத்தி மின்னஞ்சல் முகவரிகளையும் இணைப்புகளையும் ஸ்மார்ட் சிப்களாக மாற்றுதல்

இணைப்பைச் செருகி Tab பட்டனை அழுத்துவதன் மூலம் இப்போது நீங்கள் Google Sheetsஸில் இணைப்பை ஸ்மார்ட் சிப்பாக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், Google Drive ஃபைல்களுக்கான இணைப்புகள், Google Maps இடங்கள், YouTube வீடியோக்கள் ஆகியவற்றை நகலெடுத்து Sheets ஃபைலில் ஒட்டும்போது இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். 

Google Sheetsஸில் ஸ்மார்ட் சிப்களைச் சேர்ப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

பட விருப்பங்கள் பக்கப்பட்டியில் மாற்று வார்த்தைகள் விருப்பத்தைச் சேர்த்தல்

படத்தை வலது கிளிக் செய்து “கலத்தில் மாற்று வார்த்தைகளைச் சேர்” என்பதைத் தேர்ந்தெடுத்தபின் திறக்கும் பக்கப்பட்டியில் வார்த்தைகளை டைப் செய்வதன் மூலம் இப்போது Sheetsஸில் உள்ள படங்களில் மாற்று வார்த்தைகளைச் சேர்க்கலாம்.

ஜூன் 2023

Android சாதனங்களில் Google Sheets ஆப்ஸுக்கான கூடுதல் புதுப்பிப்புகள்

இப்போது நீங்கள் கீபோர்டில் உள்ள அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி Google Sheets ஆப்ஸில் பயன்படுத்தும் சூத்திரத்தில் வரம்புகளைச் சேர்க்கலாம். சூத்திரம் தொடர்புடைய மேலும் பல கீபோர்டு ஷார்ட்கட்களையும் சேர்த்து வருகிறோம். 

Android ஃபோல்டபிள் மற்றும் டேப்லெட் சாதனங்களில் Sheetsஸை "முதன்முதலாகத் திறக்கும் அனுபவத்தை" மறுசீரமைத்தல்

இப்போது Android சாதனங்களில் Sheets ஆப்ஸை முதன்முதலாகத் திறக்கும்போது உருவாக்கத்தை-மையமாகக் கொண்ட சிறந்த அனுபவம் கிடைக்கும். உதாரணமாக:

  • Sheets ஆப்ஸில், தட்டுவதற்கான விருப்பங்கள் அதிகமாக இருக்கும், ஒருமுறை தட்டினால் சூத்திரப் பட்டி, பக்கத்திற்கான பட்டி, சூழல்சார் வடிவமைப்புக் கருவிப்பட்டி ஆகியவை காட்டப்படும்

Google Workspace ஃபைல்களுக்கான அணுகல் கோரிக்கைகளுக்குச் சிறப்பான முறையில் பதிலளித்தல்

நிலுவையில் உள்ள அணுகல் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதை ஃபைல் அனுமதியளிப்பவர்களுக்குச் சுலபமாக்க Google Workspace முழுவதும் புதிய 'ஃபைல் அணுகல்' முறையை அறிமுகப்படுத்துகிறோம். 

  • இப்போது பயனர்களால் கோரிக்கைகளை ஃபைலில் இருந்தே சரிபார்த்து பதிலளிக்க முடியும். அணுகல் கோரிக்கை நிலுவையில் இருந்தால், “பகிர்” பட்டனில் அறிவிப்புப் புள்ளியும் பகிர்தல் உரையாடலுக்கு மேல் புதிய பேனரும் அனுமதியளிப்பவர்களுக்குக் காட்டப்படும். 
  • ஃபைல்களுக்குப் பயனர்கள் அணுகல் கேட்கும்போது அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் அணுகல் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதை அனுமதியளிப்பவர்கள் தொடரலாம். அனுமதியளிப்பவர் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போது “அறிவிப்பை அனுப்பு” செக்பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அணுகல் கோரிக்கை அனுப்பிய பயனருக்கு கோரிக்கையின் நிலை குறித்து மின்னஞ்சல் அனுப்பப்படும். 

ஃபைலைத் திறந்து ‘பகிர்’ பட்டனைக் கிளிக் செய்யவும் > அணுகல் கோரிக்கைகளைப் பார்க்க, புதிய பேனரில் உள்ள ‘மதிப்பாய்வு செய்’ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும் > கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும். 

Google Driveவில் இருந்து ஃபைல்களைப் பகிர்வது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

Google Sheets மற்றும் Google Slides ஃபைல்களில் கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷனைச் சேர்த்தல்/அகற்றுதல்

இப்போது Google Sheetsஸில் ஏற்கெனவே உள்ள விரிதாள்களில் கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷனை நீங்கள் சுலபமாகச் சேர்க்கலாம்/அகற்றலாம். உங்கள் ஆவணங்கள் மற்றும் திட்டப்பணிகள் மேம்பட்டு முன்னேறும்போது என்க்ரிப்ஷனைக் கட்டுப்படுத்தும் வசதியை இந்தப் புதுப்பிப்பு உங்களுக்கு வழங்குகிறது. இந்த அம்சம் ஏற்கெனவே Google Docsஸில் உள்ளது. | Google Workspace Enterprise Plus, Education Standard மற்றும் Education Plus வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. 

மே 2023

காலப்பதிவுக் காட்சியில் உள்ள புதிய வசதிகள்

காலப்பதிவுக் காட்சியில் திட்டப்பணித் தகவல்களை நீங்கள் எளிதாக அணுகலாம். மேலும் மார்க்கெட்டிங் விளம்பரங்கள், திட்டப்பணியின் சாதனைகள், திட்ட அட்டவணைகள், குழுக்களுக்கு இடையேயான கூட்டுப்பணிகள் மற்றும் பலவற்றை நிர்வகிக்கலாம். 

காலப்பதிவுக் காட்சி அம்சத்தை விரிவுபடுத்த பின்வரும் வசதிகளைச் சேர்க்கிறோம்:

  • கார்டு வார்த்தைகள் துண்டிக்கப்படுதல், செயல்தவிர்த்தல்/மீண்டும் செய்தல் விருப்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு விருப்பத்தேர்வுகள்
  • கார்டின் சுருக்கப்பட்ட காட்சியின் மூலம் ஒவ்வொரு கார்டு குழுவிற்கும் ஒற்றை வரிசையில் கார்டுகளை ஒன்றிணைக்கலாம்
  • அச்சிடுதல் மற்றும் பதிவிறக்குதல் உதவி

மேலும் அறிக

ஸ்மார்ட் சிப்களில் இருந்து தரவைப் பிரித்தெடுத்தல்

ஸ்மார்ட் சிப் தரவைப் பிரித்தெடுத்தல் அம்சத்தின் மூலம் நபர், ஃபைல் மற்றும் நிகழ்வு சிப்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுடன் உங்கள் Sheetsஸை இன்னும் சிறப்பாக்கலாம். குறிப்பாக, இந்த அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட் சிப்களுடன் தொடர்புடைய தரவுத்தகவல்களை அதற்கான கலத்தில் இருந்து உங்களால் பெற முடியும். அதே நேரத்தில் குறிப்பிட்ட சிப் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த ஆவணத்துடனான அதன் இணைப்பு அப்படியே இருக்கும். 

உதாரணமாக, குறிப்பிட்ட சில ஆவணங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் விவரங்களை (உருவாக்கப்பட்ட நேரம், கடைசியாகத் திருத்தியவர் போன்றவை) நீங்கள் கண்காணிக்க வேண்டியிருந்தால் தொடர்புடைய ஃபைல் சிப்களில் இருந்து அந்தப் புலங்களைப் பிரித்தெடுப்பதன் மூலம் கண்காணிக்க முடியும்.

மேலும் அறிக

கீபோர்டு ஷார்ட்கட்கள் தொடர்பான மேம்பாடுகள்

உங்கள் பணிச் செயல்திறனை அதிகரிப்பதற்கும் செயல்களை விரைவாகச் செய்வதற்கும் உதவ Google Sheetsஸில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்களைச் சேர்க்கிறோம். உதாரணம்: தடிமன் வடிவமைப்பைப் பயன்படுத்துதல்/அகற்றுதல், அடுத்த தாளுக்குச் செல்லுதல், 'கண்டுபிடித்து இடமாற்று' பெட்டியைக் காட்டுதல்.

மேலும் அறிக

Android சாதனங்களில் Google Docs, Sheets மற்றும் Slides ஆப்ஸுக்கான கூடுதல் புதுப்பிப்புகள்

பெரிய திரை Android சாதனங்களில் Google Workspace அனுபவத்தை மேம்படுத்தும் எங்களின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பின்வரும் புதுப்பிப்புகளைச் சேர்க்கிறோம்:

  • Google Docs மற்றும் Slides ஆப்ஸில் மவுஸில் வலது கிளிக் செய்து செங்குத்துச் சூழல் மெனுவை உங்களால் அணுக முடியும்.
  • கீபோர்டில் உள்ள அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி Google Sheets ஆப்ஸில் பயன்படுத்தும் சூத்திரத்தில் வரம்புகளைச் சேர்ப்பதற்கான விருப்பம். சூத்திரம் தொடர்புடைய மேலும் பல கீபோர்டு ஷார்ட்கட்களையும் சேர்த்து வருகிறோம்.  

ஏப்ரல் 2023

கூடுதல் ஸ்மார்ட் சிப் செயல்பாடுகள்

YouTube உள்ளடக்கத்தை எளிதாக நிர்வகிப்பதற்கு உதவ YouTube சிப்களை Sheetsஸில் சேர்க்கிறோம். இந்த அம்சத்தின் மூலம் வீடியோ தலைப்பு, விளக்கம், வீடியோ மாதிரிக்காட்சி போன்ற YouTube தரவை உங்கள் விரிதாள் கலத்தில் நேரடியாக நீங்கள் சேர்க்கலாம். இதைச் செய்ய YouTube இணைப்பைக் கலத்தில் நகலெடுத்து ஒட்டவும். அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று "URLலை மாற்று" ஹோவர் கார்டில் உள்ள "சிப்" விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

@ மெனுவைப் பயன்படுத்தி ஒரே கலத்தில் பல ஸ்மார்ட் சிப்களையும் வார்த்தைகளையும் இப்போது நீங்கள் சேர்க்கலாம். இதன் மூலம் Sheetsஸில் சூழல் சார்ந்த இன்னும் பல தகவல்களை நீங்கள் விரைவாகப் பார்க்கவும் அணுகவும் முடியும்.

மேலும் அறிக

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம்: மேம்படுத்தப்பட்ட மெனு உதவிக் கருவி 

Google Docs, Sheets, Slides ஆகியவற்றின் மேற்புறத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட மெனு உதவிக் கருவி பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் அம்சங்களையும் பயனர்கள் எளிதாகக் கண்டறிய உதவும். தொடர்புடைய அம்சங்கள் அல்லது செயல்பாடுகளை நீங்களே விரைவாகத் தேடிக் கண்டறிய உதவும் வகையில் 'மெனு உதவிக் கருவியின்' திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, “இந்த ஆவணத்தைக் கடைசியாக யார் பார்த்தது?” என்று தேடினால் செயல்பாட்டு டாஷ்போர்டு உங்களுக்குக் காட்டப்படும். 

மார்ச் 2023

வடிப்பான்கள் தொடர்பான மேம்பாடுகள்

விரிதாளில் உள்ள தரவுத் தொகுப்பை வடிப்பான்கள் மற்றும் வடிப்பான் காட்சிகள் மூலம் பகுப்பாய்வு செய்யலாம். பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த அம்சத்தை மேம்படுத்த, இரண்டு புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். 

  • இப்போது கீழே வலது ஓரத்தில் வரிசைகளின் எண்ணிக்கை காட்டப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்தத் தரவும் காட்டப்படுகிறதா அல்லது அதில் ஒரு பகுதி மட்டும் காட்டப்படுகிறதா என்பதை நீங்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். 
  • வலது கிளிக் மெனுவில் இருந்தே நேரடியாக வடிப்பான்களைப் பயன்படுத்தும் புதிய விருப்பத்தின் மூலம் இப்போது வடிப்பான்கள் எளிதாக அணுகக்கூடியதாகவும் கண்டறியக்கூடியதாகவும் இருக்கும். வலது கிளிக் செய்து அந்த மெனுவில் இருந்தே உங்கள் தரவில் வடிப்பான்களை நேரடியாகப் பயன்படுத்தலாம், அகற்றலாம் அல்லது அந்தக் கல மதிப்பின்படி வடிகட்டலாம். மேலும் அறிக

பிப்ரவரி 2023

புதிய ஸ்மார்ட் கேன்வாஸ் அம்சங்கள்: இட சிப்கள், தேதிக்கான கூடுதல் வசதிகள், நிதிச் சிப்கள்

இட சிப்கள்: உங்கள் Sheets ஃபைலில் Google Maps இட சிப் சேர்க்கப்பட்டிருக்கும்போது Google Mapsஸில் அந்த இடத்தை நேரடியாகத் திறந்து அதன் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம் அல்லது அங்கே செல்வதற்கான வழிகளைக் கண்டறியலாம்.

தேதிக்கான கூடுதல் வசதிகள்: @இன்றைய தேதி, @நேற்றைய தேதி, @நாளைய தேதி, @தேதி போன்ற ஷார்ட்கட்களுடன் @ எண்ட்ரி பாயிண்ட்டைப் பயன்படுத்தி இப்போது தேதிகளை எளிதாக உங்கள் தாளில் சேர்க்கலாம். தேதியைக் கிளிக் செய்தால் தேதி தேர்வுக் கருவி காட்டப்படும். இதைப் பயன்படுத்தி உங்கள் தேவைக்கேற்ப தேதிகளை மாற்றிக்கொள்ளலாம்.  

 நிதிச் சிப்கள்: பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட Google Finance தகவல்களை உங்கள் தாளில் சேர்க்கலாம். சிப்பின் மேலே கர்சரைக் கொண்டு சென்று தகவலின் வகைக்கு ஏற்ப அதன் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம்.

மேலும் அறிக

செயல்பாடுகள், இருப்பிட அமைப்புகள் மற்றும் CSVகளை இறக்குவது தொடர்பான புதுப்பிப்புகள்

  • ஓர் எண்ணின் அடுக்கின் மதிப்பைக் கணக்கிட்டு வழங்கும் POWER செயல்பாடு இப்போது எதிர்மறை எண்ணின் ஒற்றைப் படிமூலத்தைப் பெற முயன்றால், மெய்யெண் மதிப்பாக இருக்கின்ற படிமூலத்தை வழங்கும். மேலும் அறிக
  • செயல்பாடுகள், தேதிகள், நாணயம் போன்ற வடிவமைப்பு விவரங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்ய உங்கள் விரிதாளின் மொழியை இப்போது Sheets பயன்படுத்தும். உதாரணத்திற்கு, பொதுவாகவே ஃபிரெஞ்சு மொழியில் காற்புள்ளிகள் தசமப் பிரிப்பான்களாகப் பயன்படுத்தப்படும். உங்கள் விரிதாளின் மொழியை Sheets பயன்படுத்துவதால் இப்போது இது தானாகவே கண்டறியப்படும். மேலும் அறிக
  • இதற்கு முன்னர், காற்புள்ளிகளை (,) தசமப் பிரிப்பான்களாகவும் அரைப்புள்ளிகளை (;) வார்த்தைப் பிரிப்பான்களாகவும் பயன்படுத்தி இருந்தால், இறக்கச் செயல்முறையின்போது நெடுவரிசைகளில் வார்த்தைகளைச் சரியாகப் பிரிக்க இந்தப் பிரத்தியேகப் பிரிப்பானைத் தேர்வுசெய்து ";" என்பதை டைப் செய்ய வேண்டியிருந்தது. இப்போது நெடுவரிசைகளில் வார்த்தைகளைப் பிரிக்க அரைப்புள்ளிகளை (;) Sheets தானாகக் கண்டறியும். இதன் மூலம் பயனர்கள் பலருக்கும் இறக்குதல் செயல்முறை சிக்கலின்றி நடைபெறும்.

ஜனவரி 2023

Lookerக்கான இணைக்கப்பட்ட தாள்கள்

இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தி Lookerரில் உள்ள மாதிரித் தரவை நேரடியாக ஆராயலாம். இது Google Sheetsஸின் பரிச்சயமான இடைமுகத்திலிருந்து BigQuery, Cloud SQL, Snowflake, Redshift உட்பட Lookerரில் பொதுவில் கிடைக்கும் 50க்கும் அதிகமான தரவு மூலங்களுக்கும் இணைக்கும் வசதியை வழங்குகிறது. 

சிங்கிள் சோர்ஸ் ஆஃப் ட்ரூத்தில் இருந்து பைவட் அட்டவணைகள், விளக்கப்படங்கள், சூத்திரங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பிற தரவு மூலங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தரவைப் பகுப்பாய்வு செய்யலாம். அத்துடன் இந்த நிகழ்நேர இணைப்பின் காரணமாக அணுகல் பாதுகாப்பானதாக இருப்பதோடு உங்கள் தரவும் சமீபத்தியதாக இருக்கும்.

'Lookerருக்கான இணைக்கப்பட்ட தாள்கள்' அம்சத்தைப் பயன்படுத்தத் தொடங்குதல்

மேம்பட்ட பகுப்பாய்விற்காகச் சேர்க்கப்பட்டுள்ள திறன்வாய்ந்த புதிய செயல்பாடுகள்

புதிய கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்தவிருக்கும் 11 கூடுதல் செயல்பாடுகள் அதிகச் செயல்திறன்மிக்க பின்வரும் செயல்பாடுகளையும் மேலும் பலவற்றையும் உங்களுக்கு வழங்கும்:

  • EPOCHTODATE: வினாடிகள், மில்லிவினாடிகள் அல்லது மைக்ரோவினாடிகளில் இருக்கும் Unix காலத் தொடக்க நேரமுத்திரையை UTC தேதிநேர வடிவத்திற்கு மாற்றும்.
  • MARGINOFERROR: வழங்கப்பட்ட மதிப்புகளிலும் நம்பகத்தன்மை நிலையிலும் ரேண்டம் மாதிரிப் பிழை எவ்வளவு உள்ளது எனக் கணக்கிடும்.
  • TOROW: அணிவரிசை அல்லது கலங்களின் வரம்பை ஒரே வரிசையாக மாற்றும்.
  • TOCOL: அணிவரிசை அல்லது கலங்களின் வரம்பை ஒரே நெடுவரிசையாக மாற்றும்.
  • CHOOSEROWS: ஏற்கெனவே உள்ள வரம்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் இருந்து புதிய அணிவரிசையை உருவாக்கும்.
  • CHOOSECOLS: ஏற்கெனவே உள்ள வரம்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நெடுவரிசைகளில் இருந்து புதிய அணிவரிசையை உருவாக்கும்.
  • WRAPROWS: கொடுக்கப்பட்டுள்ள கலங்களின் வரிசையையோ நெடுவரிசையையோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்புகளின் அடிப்படையில் வரிசைகளாக மடித்து ஒரு புதிய அணிவரிசையை உருவாக்கும்.
  • WRAPCOLS: கொடுக்கப்பட்டுள்ள கலங்களின் வரிசையையோ நெடுவரிசையையோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்புகளின் அடிப்படையில் நெடுவரிசைகளாக மடித்து ஒரு புதிய அணிவரிசையை உருவாக்கும்.
  • VSTACK: பெரிய அணிவரிசையை வழங்க வரம்புகளைச் செங்குத்தாகவும் வரிசையாகவும் சேர்க்கும்.
  • HSTACK: பெரிய அணிவரிசையை வழங்க வரம்புகளைக் கிடைமட்டமாகவும் வரிசையாகவும் சேர்க்கும்.
  • LET: மதிப்புக்_கோவை முடிவுகளுக்கு ஒரு பெயரை ஒதுக்கி சூத்திரக்_கோவை முடிவுகளை வழங்கும். LET செயல்பாட்டு வரம்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள பெயர்களைச் சூத்திரக்_கோவை பயன்படுத்தும். பின்வரும் மதிப்புக்_கோவைகளோ சூத்திரக்_கோவையோ அவற்றைப் பலமுறை பயன்படுத்தினாலும் LET செயல்பாட்டில் மதிப்புக்_கோவைகள் ஒருமுறை மட்டுமே மதிப்பிடப்படும்.

BigQueryக்கான கூடுதல் Sheets செயல்பாடுகளும் JSON ஆதரவும்

Google Sheetsஸில் உள்ள கோடிக்கணக்கான BigQuery தரவு வரிசைகளை அணுகுதல், பகுப்பாய்வு செய்தல், காட்சிப்படுத்துதல், பகிர்தல் ஆகியவற்றுக்கான திறனை விரிவுபடுத்துதல்:

டிசம்பர் 2022

Android கீபோர்டு ஷார்ட்கட் மேம்படுத்தல்கள்

Google Sheetsஸை இணையத்தில் பயன்படுத்துவது போல இப்போது Androidல் பயன்படுத்தும் வகையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு ஷார்ட்கட் விருப்பங்கள் கிடைக்கின்றன.

புதிதாக ஆதரிக்கப்படும் கீபோர்டு ஷார்ட்கட்கள்:

  • உட்பொதிக்கப்பட்ட ஆப்ஜெக்ட்டை நகலெடுத்தல் (Ctrl+C), உட்பொதிக்கப்பட்ட ஆப்ஜெக்ட்டை வெட்டுதல் (Ctrl+X), உட்பொதிக்கப்பட்ட ஆப்ஜெக்ட்டை நீக்குதல் (Delete, Backspace), புதிய வரியைச் சேர்த்தல் (Ctrl+Enter), வடிப்பான் மெனுவைத் திறத்தல் (Ctrl+Alt+R), வரிசை/நெடுவரிசையை மறைத்தல் (Ctrl+Alt+9/0), வரிசை/நெடுவரிசையைக் காட்டுதல் (Ctrl+Shift+9/0), வரிசையின் தொடக்கத்திற்கு/முடிவிற்குச் செல்லுதல் (Home/End), தாளின் தொடக்கத்திற்கு/முடிவிற்குச் செல்லுதல் (Ctrl+Home/End)

ஷார்ட்கட் செயல்பாடுகள் சரிசெய்யப்பட்டன:

  • அனைத்தும்/வரிசை/நெடுவரிசை (இப்போது சுழற்சி முறையைப் பயன்படுத்துகிறது) என்பதைத் தேர்ந்தெடுத்தல், லிங்க்கைத் திறத்தல் (இப்போது பல லிங்க்குகளைத் திறக்கலாம்).

மாற்று ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டுள்ளன:

  • வெளிப்புற பார்டரைப் பயன்படுத்துதல், அடுத்த/முந்தைய தாளுக்குச் செல்லுதல், சூழல் மெனுவைத் திறத்தல்

ஷார்ட்கட்களின் முழுப் பட்டியலையும் பார்த்து அவற்றைக் குறித்து இங்கே மேலும் அறிக

புதுப்பிக்கப்பட்ட தரவுச் சரிபார்ப்புப் பக்கப்பட்டி மற்றும் கீழ்த்தோன்றல் சிப்கள்

உங்கள் தாளில் குறிப்பிட்டுள்ள நிலைகளையோ பல்வேறு திட்டப்பணிகளின் சாதனைகளையோ எளிதாகக் குறிப்பிட கீழ்த்தோன்றல் சிப்களைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம் ஏற்கெனவே Google Docsஸில் உள்ளது.

கூடுதலாக, கீழ்த்தோன்றல் சிப்கள் மற்றும் செக்பாக்ஸ்கள் உள்ளிட்ட தரவுச் சரிபார்ப்பு விதிகள் அனைத்தையும் உருவாக்கும் நிர்வகிக்கும் பணிமுறையை மாற்றியமைத்துள்ளோம். குறிப்பிட்ட Sheets பக்கத்தில் நீங்கள் ஏற்கெனவே உருவாக்கிய அனைத்து விதிகளையும் பார்க்கலாம் திருத்தலாம். மேலும் புதிய பக்கப்பட்டிக் காட்சியில் இருந்து கூடுதல் விதிகளையும் உருவாக்கலாம். 

கீழ்த்தோன்றல் சிப்கள் குறித்து மேலும் அறிக

நவம்பர் 2022

காலப்பதிவுக் காட்சி

Google Sheetsஸில் திட்டப்பணிகளைக் கண்காணிக்கவும் அவை குறித்துத் தெரிந்துகொள்ளவும் காலப்பதிவுக் காட்சி உதவுகிறது. Sheetsஸில் சேமிக்கப்பட்டுள்ள திட்டப்பணி குறித்த தகவல்களை (பணியின் தொடக்க மற்றும் முடிவுத் தேதி, விளக்கம், உரிமையாளர் போன்றவை) இந்தப் புதிய காட்சி வடிவ லேயர் காட்டும்.

இவற்றைப் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை நிர்வகிக்க இது உங்களுக்கு உதவும்:

  • திட்டப்பணியின் பணிகள்
  • மார்க்கெட்டிங் விளம்பரங்கள்
  • திட்ட அட்டவணைகள்
  • குழுக்களுக்கு இடையிலான கூட்டுப்பணிகள்
  • ஏதேனும் எதிர்காலத் திட்டம்

சில Workspace பதிப்புகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கிறது. உங்கள் கணக்கின் தகுதிநிலையை இங்கே பாருங்கள்.

காலப்பதிவுக் காட்சியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மேலும் அறிக:

அக்டோபர் 2022

ஸ்மார்ட் சிப்கள் மூலம் கூடுதல் தகவல்களை எளிதாகச் சேருங்கள்

Google Sheetsஸில் ஸ்மார்ட் சிப்களைப் பயன்படுத்தி இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்:

  • Gmail அல்லது Google Workspace மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துபவர்கள்
  • பிற Google Docs, Sheets அல்லது Slides ஃபைல்கள்
  • Google Calendar நிகழ்வுகள்

உதவிக்குறிப்பு: உங்கள் விரிதாளில் ஸ்மார்ட் சிப் மீது கர்சரை வைத்தோ கிளிக் செய்தோ கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்மார்ட் சிப்களைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

ஆகஸ்ட் 2022

பிரத்தியேகச் செயல்பாடுகள், LAMBDA செயல்பாடுகள், LAMBDA உதவிச் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்

பிரத்தியேகச் செயல்பாடுகள், LAMBDA செயல்பாடுகள், LAMBDA உதவிச் செயல்பாடுகள் ஆகியவற்றின் உதவியுடன் Sheetsஸில் சூத்திரங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம், எளிதாகப் படிக்கலாம், மீண்டும் பயன்படுத்தலாம். சிக்கலாகவும் புரிந்துகொள்ளக் கடினமாகவும் முன்பு இருந்த சூத்திரங்களை இப்போது எளிதில் புரியக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேகச் செயல்பாடுகளாக எளிமைப்படுத்தலாம்.

எங்களுடைய Workspace வலைப்பதிவு இடுகையில் மேலும் அறிக.

இவை குறித்து மேலும் அறிக:

XLOOKUP மற்றும் XMATCH பற்றி அறிந்துகொள்ளுதல்

MATCH மற்றும் LOOKUP செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது XLOOKUP, XMATCH ஆகிய செயல்பாடுகள் இன்னும் மேம்பட்ட பொருத்தத்தையும் தேடல் வசதியையும் வழங்குகின்றன.

இவை குறித்து மேலும் அறிக:

பைவட் அட்டவணை எடிட்டரை எளிதாகத் திறக்க 'திருத்து' பட்டனைப் பயன்படுத்துதல்

பைவட் அட்டவணை எடிட்டரைத் திறக்க, பைவட் அட்டவணையின் கீழேயுள்ள பாப்-அப்பில் ‘திருத்து’ பட்டனைக் கிளிக் செய்யவும். இதன் பிறகு பைவட் அட்டவணையை நேரடியாகக் கிளிக் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றமானது தற்செயலான கிளிக்குகளைத் தடுக்க உதவும்.

பைவட் டேபிள்களை எப்படித் திருத்துவது என்பது குறித்து மேலும் அறிக:

ஜூலை 2022

இணைக்கப்பட்ட தாள்களில் பிரதிநிதித்துவ அணுகலைப் பயன்படுத்துதல்

பிரதிநிதித்துவ அணுகல் மூலம்:

  • இணைக்கப்பட்ட தாளை உருவாக்குபவர், அடிப்படைத் 'தரவு மூலம்' தொடர்பாக எழுப்பப்படும் எதிர்கால வினவல்கள் அவரது கணக்கின் அனுமதிச் சான்றுகளைப் பயன்படுத்துமாறு தேர்வுசெய்யலாம். பிற Sheets பயனர்கள் வினவல்களை எழுப்பினாலும்கூட இந்த விருப்பத்தேர்வு சாத்தியமாகும்.
  • அடிப்படைத் தரவு மூலத்திற்கான அணுகல் இல்லையென்றாலும் கூட்டுப்பணி செய்பவர்களால் தரவைப் பகுப்பாய்வு செய்ய முடியும். தரவு மூலத்திற்கான அணுகல் இல்லாதவர்கள் இணைக்கப்பட்ட தாளில் இருந்து பெறப்பட்ட தரவைப் பகுப்பாய்வு செய்யவும் ரெஃப்ரெஷ் செய்யவும் இந்த வசதி உதவும்.
  • பிரதிநிதித்துவ அணுகல் மூலம் வினவல்களை இயக்கும்போது வழக்கமான BigQuery கட்டணங்கள் விதிக்கப்படும்.

பிரதிநிதித்துவ அணுகலைப் பற்றி மேலும் அறிக.

மே 2022

இணைக்கப்பட்ட தாள்கள் VPC-SC பற்றி அறிந்துகொள்ளுதல்

Google Cloud தகவல்களுக்கான அணுகலை வரையறுக்க VPC சேவைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம். VPC சேவைக் கட்டுப்பாடுகள் Sheetsஸை ஆதரிக்காது. எனினும் தேவையான அனுமதிகள் உங்களுக்கு இருப்பதுடன் VPC சேவைக் கட்டுப்பாடுகளுக்கான அணுகல் வரம்புகளை நீங்கள் பூர்த்திசெய்தால் இணைக்கப்பட்ட தாள்கள் மூலம் எழுப்பப்படும் வினவல்களை அனுமதிக்க VPC சேவைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

Google Sheetsஸில் BigQuery தரவைப் பற்றி மேலும் அறிக.

ஏப்ரல் 2022

சூத்திரத்திற்கான பரிந்துரைகள் மூலம் சூத்திரம் தொடர்பான பிழைகளைச் சரிசெய்தல்

Sheetsஸில் ஒரு கலத்தில் சூத்திரத்தைச் சேர்க்கும்போதே ஒரு பெட்டியில் மாற்றுச் சூத்திரம் பரிந்துரைக்கப்படலாம். அதை நீங்கள் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

சூத்திரங்களைத் திருத்துவதைப் பற்றி மேலும் அறிக.

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் Google Meetடைப் பயன்படுத்துதல்

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் இருந்துகொண்டே நீங்கள்:

  • Google Meet வீடியோ மீட்டிங்கில் சேரலாம்
  • Google Meet வீடியோ மீட்டிங்கில் நேரடியாக ஸ்கிரீனைப் பகிரலாம்

Google Docs எடிட்டரில் Google Meetடை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி மேலும் அறிக.

மார்ச் 2022

இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள Google Sheets கல வரம்பைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

Google Sheetsஸின் கல வரம்பை 5 மில்லியனில் இருந்து இப்போது 10 மில்லியனாக அதிகரித்துள்ளோம். புதிதாக உருவாக்கும் ஃபைல்கள், ஏற்கெனவே உள்ள ஃபைல்கள், பதிவிறக்கிய ஃபைல்கள் ஆகிய அனைத்திற்கும் இந்த வரம்பு பொருந்தும். 

Google Drive ஃபைல் வரம்புகள் குறித்து மேலும் அறிக.

நவம்பர் 2021

பங்கு வகிப்போர் குறித்த கூடுதல் தகவல்களை அறிய நபர்கள் சிப்களைப் பயன்படுத்துதல்

நபர்கள் சிப்களை நேரடியாக Google விரிதாளில் சேர்க்கலாம். அவற்றின் மூலம் சகப் பணியாளர்கள், தொடர்புகள் ஆகியோரின் இருப்பிடம், பணித் தலைப்பு, தொடர்புத் தகவல் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை உடனே அறிந்துகொள்ளலாம்.

நபர்கள் சிப்பைப் பயன்படுத்தி இவற்றையும் செய்யலாம்:

  • மீட்டிங்கை முன்பதிவு செய்தல்.
  • உரையாடலைத் தொடங்குதல்.
  • மின்னஞ்சல் அனுப்புதல்.
  • மற்றும் பல. 

இந்த அம்சம் ஏற்கெனவே Google Docsஸில் உள்ளது.

நபர்கள் சிப்பைச் சேர்க்க, இவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • எந்தக் கலத்திலாவது “@” என டைப் செய்யவும்.
  • மேற்பகுதியில் உள்ள செருகு என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு நபர்கள் சிப் என்பதைக் கிளிக் செய்யவும்.
நபர்கள் சிப்கள் குறித்து மேலும் அறிக.
iOSஸுக்கான புதிய கீபோர்டு ஷார்ட்கட்கள் குறித்து அறிந்துகொள்ளுதல்
iOS Sheetsஸில் பல்வேறு புதிய கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம். Sheetsஸுக்கான iOS ஷார்ட்கட்கள் குறித்து மேலும் அறிக.

அக்டோபர் 2021

Google Sheetsஸில் உள்ள மேம்பட்ட மெனுக்கள் குறித்து அறிந்துகொள்ளுதல்

Google Sheetsஸில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்சங்களை எளிதில் கண்டறிவதற்கு உதவும் வகையில் பின்வரும் மாற்றங்களை மெனுக்களில் செய்துள்ளோம்:

  • உங்கள் ஸ்கிரீனுக்கு ஏற்ற வகையில் காட்டுவதற்காக மெனு பட்டியையும் வலது கிளிக் மெனுக்களையும் சுருக்கியுள்ளோம். இதனால் ஸ்கிரீனில் மெனுக்கள் முழுமையாகக் காட்டப்படும்.
  • அம்சங்களைச் சேர்த்திருப்பதுடன் அவற்றை எளிதாக அணுகக்கூடிய இடங்களுக்கும் நகர்த்தியுள்ளோம். உதாரணமாக, இப்போது வலது கிளிக் மெனுவில் இருந்தே வரிசை/நெடுவரிசையை நிலையாக்கலாம்.
  • உடனடியாக அடையாளம் காணும் வகையில், மெனுவில் உள்ள சிலவற்றின் விளக்கங்களைச் சுருக்கியுள்ளோம். 
  • அம்சங்களை மிக எளிதாகக் கண்டறியும் வகையில் ஐகான்களைச் சேர்த்துள்ளோம். 
  • பின்வருபவை உள்ளிட்ட அனைத்து மெனுக்களிலும் மாற்றங்களைச் செய்துள்ளோம்:
    • ஃபைல்
    • திருத்து
    • காட்டு
    • செருகு
    • வடிவம்
    • தேதி
    • கருவிகள்
    • நீட்டிப்புகள்
    • உதவி
    • அணுகல்தன்மை

ஆகஸ்ட் 2021

உட்பொதிக்கப்பட்ட Office ஃபைல்களை Google Sheetsஸில் பார்த்தல்

இவற்றில் இருந்து Office ஃபைல்களில் பணிபுரிந்தால் உட்பொதிக்கப்பட்ட Microsoft Office ஃபைல்களை உங்கள் ஆவணங்களில் பார்க்கலாம்:

  • Docs
  • Sheets
  • Slides

இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள்:  

  • ஃபைல்களின் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம்.
  • உட்பொதிக்கப்பட்ட ஃபைலை நேரடியாக Driveவிற்கு நகலெடுக்கலாம் பதிவிறக்கலாம். 
ஸ்மார்ட் சூத்திரம் மற்றும் செயல்பாட்டிற்கான பரிந்துரைகள் குறித்து அறிந்துகொள்ளுதல்

Google Sheetsஸில் தரவைக் கொண்டு பணியாற்றும்போது சூத்திரங்கள், செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாக இன்லைன் பரிந்துரைகள், வரிசைமுறைப் பரிந்துரைகள் மற்றும் சூழலுக்கு ஏற்ற பரிந்துரைகள் காட்டப்படலாம். 

சூத்திரத்திற்கான பரிந்துரைகள் மூலம் நீங்கள்: 

  • புதிய சூத்திரங்களைச் சரியாக எழுதலாம். 
  • தரவை விரைவாகவும் எளிதாகவும் பகுப்பாய்வு செய்யலாம். 

Sheetsஸில் ஒரு சூத்திரத்தைச் சேர்ப்பதற்காக நீங்கள் டைப் செய்யும்போதே பரிந்துரைகள் தானாகக் காட்டப்படும். கூடுதல் பரிந்துரைகளைக் கீழ் தோன்றும் மெனுவில் பார்க்கலாம்.

Sheetsஸில் தீம் வண்ணங்களைப் பிரத்தியேகமாக்குவது குறித்து அறிந்துகொள்ளுதல்

Sheets, Slides ஆகியவற்றில் தீம் வண்ணங்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம்.

தீம் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க:

  1. வண்ணத்தைத் தேர்வுசெய்வதற்கான கீழ் தோன்றும் மெனுவிற்குச் சென்று, ‘திருத்து’ பட்டனைக் கிளிக் செய்யவும். தீமிற்கான வண்ணத் தட்டு காட்டப்படும். 
  2. தீம் வண்ணத்திற்கான பக்கப்பட்டியில் உள்ள கீழ் தோன்றும் மெனுவில் இருந்து வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய தீம் வண்ணங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைத் திருத்தவும். 
கவனத்திற்கு: வண்ணத்தை மாற்றுவது தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தீமிற்கு மட்டுமே பொருந்தும். வண்ணத்தை மாற்றுவதால் புதிய தீம் உருவாக்கப்படாது.
Microsoft Office ஃபைல்களை Driveவில் விரைவாகத் திறத்தல்

பகிர்ந்த இணைப்புகளை உருவாக்கும்போது, Microsoft Office ஃபைல்களை Google Driveவில் இருந்தே நேரடியாக இவற்றில் திறக்கலாம்:

  • Docs
  • Sheets
  • Slides 

இதற்கு முன்னர், Office ஃபைல்களைத் திறக்கும்போது அவற்றின் மாதிரிக்காட்சி மட்டுமே காட்டப்பட்டது. ஆனால், இப்போது அவற்றைத் திறந்து மாற்றங்களைச் செய்யலாம். பிறருடன் இணைந்து கூட்டுப்பணி செய்வதற்கான வசதியும் விரைவில் செயல்படுத்தப்படும். Driveவில் Office ஃபைல்களில் பணியாற்றுவது குறித்து மேலும் அறிக

Google Slides, Sheets, Drawings ஆகியவற்றில் கருத்தைச் சேர்க்க ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தைப் பயன்படுத்துதல்

இவற்றில் கருத்துகளை விரைவாகவும் துல்லியமாகவும் வழங்க ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் உதவும்:

  • Slides
  • Sheets
  • Drawings 

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

ஜூலை 2021

Google Sheetsஸில் உள்ள பல பிரிவுகளில் அடிப்படையானச் செயல்களைச் செய்தல்

Google Sheetsஸில் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்களில் அடிப்படையானச் செயல்களைச் செய்யும்போது விரைவாகவும் அதிக நம்பிக்கையுடனும் பணி செய்யலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த பிறகு அவற்றை இணைக்கலாம், நீக்கலாம், பிரதியெடுக்கலாம், நகலெடுக்கலாம், வண்ணமிடலாம், மறைக்கலாம்.

Google Sheetsஸில் திருத்துவது குறித்து மேலும் அறிக.

Google Workspace Business Starter, Frontline ஆகியவற்றின் பயனர்கள் Drive ஃபைல்களிலும் ஃபோல்டர்களிலும் அவர்களுடன் இணைந்து பணி செய்வதற்கு Google கணக்குகள் இல்லாதவர்களையும் அழைக்கலாம்
பின்வருபவற்றில் உள்ளடக்கத்தைப் பார்க்கவும் கருத்தைச் சேர்க்கவும் திருத்தவும் பார்வையாளர்களுக்கு ஒரு பின் (PIN) குறியீட்டை அனுப்பலாம்:
  • Drive
  • Docs
  • Sheets
  • Slides
  • Sites 
பார்வையாளர்களுடன் ஆவணங்களைப் பகிர்வது குறித்து மேலும் அறிக.

ஜூன் 2021

Google Sheetsஸில் அடுத்தடுத்த கருத்துகளுக்குச் செல்வதற்கானப் புதிய வழிகளைக் கண்டறிதல்

Google Sheetsஸில் நீங்கள்:

  • பக்கப்பட்டியில் உள்ள கருத்துகளையும் தொடர் உரையாடல்களையும் மதிப்பாய்வு செய்யலாம்.
  • மிகவும் தொடர்புடைய கருத்துகளைக் கண்டறிய வடிப்பான்களைப் பயன்படுத்தலாம்.
  • கருத்து மேல் அடுக்கில் உள்ள தொடர் கருத்துகளை ஒரே பக்கத்தில் பார்க்கலாம்.

Google Sheetsஸில் கருத்துகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

மே 2021

Google Meetடின் மீட்டிங்கில் Google Sheets ஸ்கிரீனை நேரடியாகப் பகிர்தல்
நீங்கள் கலந்துகொள்ளும் Google Meet மீட்டிங்கில் Google Sheetsஸில் இருந்தே விரிதாளின் ஸ்கிரீனைப் பகிரலாம். Google Meetடில் ஆவணம், தாள், ஸ்லைடு ஆகியவற்றின் ஸ்கிரீனை நேரடியாகப் பகிர்வது எப்படி என அறிக.
Google Sheetsஸில் வரி மற்றும் நிரப்பலுக்கான விருப்பங்களைப் பிரத்தியேகப்படுத்துவது எப்படி என அறிக

வரிசை முறையில் உள்ள தரவு, தொடர்ச்சியாக உள்ள தரவு ஆகியவற்றுக்கான வரி மற்றும் நிரப்பலைப் பிரத்தியேகமாக்குவதற்கான கூடுதல் விருப்பங்களைப் பயன்படுத்தலாம். இவற்றை மாற்றலாம்: 

  • வண்ணம் 
  • அடர்த்தி 
  • வரிக் கோட்டின் ஸ்டைல்கள் 
  • வரியின் தடிமன் 

நெடுவரிசையில் தொடர்ச்சியாக உள்ள தரவிற்குப் பார்டர்களைச் சேர்த்து அழகாக்கலாம். விளக்கப்படம் அல்லது வரைபடத்தைச் சேர்ப்பது மற்றும் திருத்துவது குறித்து மேலும் அறிக.

ஏப்ரல் 2021

இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தி BigQuery தரவைப் பகுப்பாய்வு செய்வதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிதல்
இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தும்போது BigQuery தரவில் பணியாற்றுவது, அவற்றைக் காட்சிப்படுத்துவது, ஒழுங்கமைப்பது தொடர்பான கூடுதல் வழிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம். புதிய அம்சங்களிலும் மேம்பாடுகளிலும் அடங்குபவை: 
  • நெடுவரிசைப் புள்ளிவிவரங்கள் 
  • மதிப்பின்படி வடிகட்டுதல் 
  • பைவட் டேபிள்களுக்கான கணக்கிடப்பட்ட புலங்கள் 
  • பைவட் டேபிள்களைக் குழுவாக்குதல் 
  • ஸ்லைசர்கள் 
இணைக்கப்பட்ட தாள்கள் அம்சத்தைப் பயன்படுத்தி BigQuery தரவில் பணியாற்றுவது குறித்து மேலும் அறிக

ஜனவரி 2021

Google Sheetsஸில் கலங்களுக்கு இடையே இன்னும் விரைவாகச் செல்லும் வகையில் வரம்பிற்குப் பெயரிடுவதற்கான பெட்டியைப் பயன்படுத்துதல்

Google Sheetsஸில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலங்களுக்கும் வரம்புகளுக்கும் செல்ல, வரம்பிற்குப் பெயரிடுவதற்கான பெட்டியைப் பயன்படுத்தவும். 

கலங்களின் வரம்பிற்குப் பெயரிடுவது குறித்து மேலும் அறிக

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3242953118388905437
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false