இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தி Google Sheetsஸில் BigQuery தரவைப் பகுப்பாய்வு செய்தல் & புதுப்பித்தல்

Google Sheetsஸில் செயல்பாடுகள், விளக்கப்படங்கள், எக்ஸ்ட்ராக்ட்டுகள், பைவட் டேபிள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம், BigQuery தரவைப் புதுப்பிக்கலாம். 

கவனத்திற்கு: Google Sheetsஸில் BigQuery தரவை அணுக, BigQueryயைப் பயன்படுத்துவதற்கான அணுகல் இருக்க வேண்டும். BigQueryயை எப்படிப் பயன்படுத்தத் தொடங்குவது என அறிக.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே விளக்கப்படம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதற்கான இடத்தைத் தேர்வு செய்யவும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வலதுபுறத்தில் உங்களது மற்ற அமைப்புகளைத் தேர்வு செய்யவும்.
  6. கீழே வலதுபுறத்தில் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Sheetsஸிலுள்ள விளக்கப்படங்கள் பற்றி மேலும் அறிக.

உதவிக்குறிப்பு: சமீபத்திய BigQuery தரவின் அடிப்படையில் விளக்கப்படத்தைப் புதுப்பிக்க, விளக்கப்படத்தின் கீழே புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

பைவட் டேபிளைச் சேர்த்தல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே பைவட் டேபிள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதற்கான இடத்தைத் தேர்வு செய்யவும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வலதுபுறத்தில் உங்கள் அமைப்புகளைத் தேர்வு செய்யவும்.
  6. கீழே வலதுபுறத்தில் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • பைவட் அட்டவணைகள் தற்போது 50,000 முடிவுகள் வரை ஆதரிக்கும்.
  • பைவட் அட்டவணையில் காட்டப்படும் தரவின் அளவைக் கட்டுப்படுத்த, நீங்கள் பெற விரும்பும் வரிசைகள் அல்லது நெடுவரிசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும். எந்த வரிசைகள்/நெடுவரிசைகள் ரிட்டர்ன் செய்யப்படுகின்றன என்பதைக் குறிப்பிட “இதன்படி வரிசைப்படுத்து” மற்றும் “ஆர்டர்” என்பதைப் புதுப்பிக்கவும். 
  • SUM அல்லது பிரத்தியேகச் சூத்திரம் உள்ள கணக்கிடப்பட்ட புலங்களைச் சேர்க்க, பக்கவாட்டுப் பேனலில் “மதிப்புகள்” என்பதற்கு அடுத்துள்ள சேர் அதன் பிறகு கணக்கிடப்பட்ட புலம் என்பதைக் கிளிக் செய்யவும். கணக்கிடப்பட்ட புலங்களைப் பைவட் டேபிள்களில் எப்படிச் சேர்ப்பது என அறிக.
  • சமீபத்திய BigQuery தரவைப் புதுப்பிக்க, பைவட் அட்டவணையின் கீழே உள்ள புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வரம்பிற்குள் இடைவெளிகளில் உள்ள மதிப்புகளைப் பார்க்க, செவ்வக வரைபடக் குழுவாக்கலைப் பயன்படுத்தவும். அதிகபட்சத்தை விட அதிகமாகவும் குறைந்தபட்சத்தை விடக் குறைவாகவும் உள்ள மதிப்புகள் ஒன்றாகக் குழுவாக்கப்படும்.
செயல்பாட்டைப் பயன்படுத்துதல்

BigQuery தரவுடன் சில செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே செயல்பாடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பட்டியலில் இருந்து செயல்பாட்டைத் தேர்வு செய்யவும்.
  4. செயல்பாட்டிற்கான இடத்தைத் தேர்வு செய்யவும்.
  5. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. மேற்கோள் நெடுவரிசையைத் தேர்வு செய்து தேவையான மற்ற அளவுருக்களைச் சேர்க்கவும்.
  7. Enter விசையை அழுத்தவும்.
  8. சூத்திரம் உள்ள கலத்தின் மீது மவுஸை வைத்து மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.


உதவிக்குறிப்பு: ஏதேனும் கலத்திற்கு உள்ளேயும் செயல்பாடுகளை உள்ளிடலாம். 

தரவை எக்ஸ்ட்ராக்ட்டில் இறக்குதல்

தரவை ஆஃப்லைனில் பகுப்பாய்வு செய்யலாம் அல்லது செயல்பாடுகளுக்குள் தனிப்பட்ட மதிப்புகளையும் வரம்புகளையும் குறிப்பிடலாம். BigQuery தரவில் 50,000 வரிசைகள் அல்லது 10 மெ.பை. வரை பெறலாம். இந்த வரம்பிற்கு மேல் பெற முயற்சித்தால் முதல் 50,000 வரிசைகள் மட்டுமே தோன்றும். 

  1. கம்ப்யூட்டரில், Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. மேலே எக்ஸ்ட்ராக்ட் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதை எங்கு வைப்பது எனத் தேர்வு செய்யவும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வலதுபுறத்தில் "எக்ஸ்ட்ராக்ட் எடிட்டர்" என்பதன் கீழ், நெடுவரிசைகள், வடிப்பான்கள் மற்றும் வரிசைப்படுத்தல் அமைப்புகளைச் சேர்க்கவும்.
  6. எக்ஸ்ட்ராக்ட்டின் கீழ் இடதுபுறத்தில் மாற்றங்களைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தரவுத் தொகுப்பில் உள்ள எல்லா வரிசைகளிலும் கணக்கீட்டைச் சேர்த்து, நெடுவரிசைப் புள்ளிவிவரங்களைப் பார்த்தல்

கணக்கீட்டு நெடுவரிசைகளைச் சேர்ப்பதன் மூலம் எல்லா வரிசைகளிலும் கணக்கீட்டைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே கணக்கிடப்பட்ட நெடுவரிசை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நெடுவரிசையின் பெயர்களையும் ஆதரவான Sheets செயல்பாடுகளையும் பயன்படுத்தி சூத்திரத்தை உள்ளிடவும். =விலை * எண்ணிக்கை போன்ற அடிப்படைக் கணக்குச் செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம் அல்லது =RIGHT(orderId, 4) மூலம் உரையைக் கையாளலாம் . 
  4. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நெடுவரிசைப் புள்ளிவிவரங்களைப் பார்க்க, நெடுவரிசையின் மேல் வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்து அதன் பிறகு நெடுவரிசைப் புள்ளிவிவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆதரவான செயல்பாடுகள்
தருக்கச் செயல்பாடுகள்
  • IF (பூஜ்ஜியத்தால் வகுப்பது போன்ற சாத்தியமான பிழைகளைக் கண்டறியப் பயன்படுத்தலாம்)
  • AND
  • OR
  • NOT

தேடல் செயல்பாடுகள்:

வடிப்பான் செயல்பாடுகள்

  • FILTER
வார்த்தைச் செயல்பாடுகள்
  • LEFT, RIGHT, MID
  • UPPER, LOWER
  • LEN
  • CONCAT (&)
அடிப்படைக் கணிதம்
  • +, -, *, /
  • எதிர்மறைக்குறி (-) மற்றும் சதவீதக்குறி (%)

கணிதச் செயல்பாடுகள்

  • ROUND
  • POW/POWER (^)
  • SQRT
  • ABS
  • LOG, LN, LOG10

தேதிகளும் நேரங்களும்

  • DATE, TIME
  • YEAR, MONTH, DAY
  • HOUR, MINUTE, SECOND
ஒப்பீடு
  • =, <>
  • >, >=, <, <=
ஒருங்கிணைப்புகள்
  • SUM
  • SUMIF
  • SUMIFS
  • COUNT
  • COUNTBLANK
  • COUNTIF
  • COUNTIFS
  • COUNTUNIQUE
  • COUNTUNIQUEIFS
  • MIN
  • MINIFS
  • MAX
  • MAXIFS
  • AVERAGE
  • AVERAGEIF
  • AVERAGEIFS
  • VAR
  • VARP
  • STDEV
  • STDEVP

பிற

  • ISBLANK (தருமதிப்பு வெற்று/வெற்றல்ல என்பதைத் தெரிவிக்கும்)

தரவைப் புதுப்பித்தல்

BigQuery தரவானது இணைக்கப்பட்ட தாள்களுடன் தானாக ஒத்திசைக்காது. தரவை ஒத்திசைக்க, ஒரு தரவு மூலத்திற்குள் உள்ளவை அல்லது எல்லா தரவு மூலங்களுக்குள்ளும் உள்ளவை என குறிப்பிட்ட ஒன்றைப் புதுப்பிக்கலாம். தரவு மூலத்தில் இணைக்கப்பட்ட பிறகு, அந்தத் தரவையும் அதனுடன் தொடர்புடைய விளக்கப்படங்கள், செயல்பாடுகள், எக்ஸ்ட்ராக்ட்டுகள் மற்றும் பைவட் டேபிள்களையும் புதுப்பிக்கலாம். 
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழே "புதுப்பி" என்பதற்கு அருகில், மேலும் மேலும் அதன் பிறகு புதுப்பிப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் "புதுப்பிப்பு விருப்பங்கள்" என்பதற்குக் கீழ் நீங்கள் புதுப்பிக்க விரும்புபவற்றைக் கிளிக் செய்யவும். எல்லா தரவையும் புதுப்பிக்க, கீழ் வலதுபுறத்தில் உள்ள எல்லாவற்றையும் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
புதுப்பிப்பைத் திட்டமிடுதல்

கவனத்திற்கு: இணைக்கப்பட்ட தாள்களின் திட்டமிடப்பட்ட புதுப்பிப்புகள் மூலம் IP முகவரி, சாதனத் தகவல் போன்ற இறுதிப் பயனர் சூழல்கள் எதுவும் பகிரப்படாது. அணுகலைக் கட்டுப்படுத்த இறுதிப் பயனர் சூழலைப் பயன்படுத்தும் மெய்நிகர் தனியார் கிளவுட் சேவைக் கட்டுப்பாட்டு (Virtual Private Cloud Service Controls - VPC-SC) வரம்புகள் திட்டமிடப்பட்ட புதுப்பித்தல்களைத் தோல்வியடையச் செய்யும்.

திட்டமிட்ட புதுப்பிப்பானது ஒரு குறிப்பிட்ட முன்னமைவு நேரத்தில் எல்லா ஆப்ஜெக்ட்டுகளையும் தரவு மூலங்களையும் புதுப்பிக்கும்.
கவனத்திற்கு:

  • திட்டமிட்ட புதுப்பிப்பானது திட்ட அட்டவணையை அமைக்கிற பயனர் போல் இயங்கும். வேறு பயனர் ஏற்கெனவே உள்ள தரவு மூலத்தைச் சேர்த்தால்/புதுப்பித்தால் திட்ட அட்டவணை தானாகவே இடைநின்றுவிடும். இடைநிறுத்தத்தை நீக்க, திட்ட அட்டவணையின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது புதுப்பித்தலைப் பயன்படுத்தவும்.
  • மாதிரிக்காட்சி அல்லது தோல்வி நிலையில் உள்ள ஆப்ஜெக்ட்டுகள், திட்டமிட்ட புதுப்பிப்பு மூலம் புதுப்பிக்கப்படாது. 
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழே "புதுப்பி" என்பதற்கு அருகில், மேலும் மேலும் அதன் பிறகு புதுப்பிப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள பக்கப்பட்டிக்குக் கீழ் “திட்டமிட்ட புதுப்பிப்பு” என்பதற்குக் கீழே இப்போது அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. புதுப்பிப்பதற்கான கால இடைவெளியைத் தேர்வு செய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
திட்டமிட்ட புதுப்பிப்பைப் பயன்படுத்துதல்

திட்டமிட்ட புதுப்பிப்பை அசல் உரிமையாளருக்குப் பதிலாக நீங்களே இயக்க, புதுப்பிப்பைப் பயன்படுத்தலாம் . 

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழே "புதுப்பி" என்பதற்கு அருகில், மேலும் மேலும் அதன் பிறகு புதுப்பிப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள பக்கப்பட்டிக்குக் கீழ் “திட்டமிட்ட புதுப்பிப்பு” என்பதற்குக் கீழே திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. புதுப்பிப்பதற்கான கால இடைவெளியைத் தேர்வு செய்யவும். 
  5. திட்டமிட்ட புதுப்பிப்பு உரிமையை உங்களுக்கு மாற்ற, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
     

வினவல் விவரங்களைப் பார்த்தல் மற்றும் வினவலை ரத்துசெய்தல்

விரிதாளைத் திருத்தக்கூடியவர்களும் தேவையான BigQuery அனுமதிகளைக் கொண்டுள்ள பயனர்களும் செயலில் உள்ள வினவலை ரத்துசெய்ய முடியும். 

எந்த ஒரு தரவுத்தள ஆப்ஜெக்ட்டின் வினவல் விவரங்களைப் பார்க்க:

  1. கம்ப்யூட்டரில், Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. BigQueryயில் வினவல் விவரங்களைப் பார்க்க, கீழே பாப்-அப் ஆகும் ரெஃப்ரெஷ் பட்டனில், தகவல் The info icon. ஐகானைக் கிளிக் செய்யவும்.
    1. கவனத்திற்கு: வினவலை இயக்காமலே தரவைப் பெறமுடியும் என்றால் The info icon. ஐகான் காட்டப்படாது. வினவலை இயக்காமல் அட்டவணைத் தரவைக் கண்டறிவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த ஒரு தரவுத்தள ஆப்ஜெக்ட்டிற்குமான வினவலை ரத்துசெய்ய:

  1. கம்ப்யூட்டரில், Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. வினவல் இயக்கத்திலோ நிலுவையிலோ இருந்தால்: “வினவல் இயக்கத்திலுள்ளது” அல்லது “வினவல் நிலுவையிலுள்ளது” என்பதற்கு அடுத்து கீழே பாப்-அப் ஆகும் ரெஃப்ரெஷ் பட்டனில், கணக்கிடப்பட்ட இயக்க நேரத்திற்கு அடுத்துள்ள ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

புதுப்பிப்பதற்கான விருப்பத்தேர்வுகளுக்கான பக்கப்பட்டியில் இருந்தும் வினவலை நீங்கள் ரத்துசெய்யலாம்:

  1. கம்ப்யூட்டரில், Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழே, புதுப்பிப்பதற்கான ஐகான் புதுப்பி மீது கர்சரைக் கொண்டு சென்று, "புதுப்பி" என்பதற்கு அடுத்துள்ள மூன்று புள்ளி ஐகான் மேலும் அதன் பிறகு புதுப்பிப்பதற்கான விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தனித்தனியாகப் புதுப்பிப்பதை ரத்துசெய்ய, ஒவ்வொன்றுக்கும் அடுத்துள்ள ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: 
  • BigQuery தரவுத் தொகுப்புக்குத் தேவையான BigQuery அனுமதி உங்களிடம் இல்லை என்றால், வினவலை ரத்துசெய்வதை முழுமையாக முடிக்க முடியாது.
  • Sheetsஸில் நேரம் முடிந்ததால் தோல்வியடைந்த வினவல், தரவுத்தளத்தில் இயக்கத்திலேயே இருக்கலாம்.

அடுத்து: Sheetsஸில் BigQuery தரவு தொடர்பான வினவலை எழுதுதல் & திருத்துதல்

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12179235200792124210
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false