Google Sheetsஸில் உள்ள விளக்கப்படங்கள் & வரைபடங்களின் வகைகள்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

விரிதாளில் விளக்கப்படத்தை எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றி அறிந்துகொள்ளுதல்.

கோட்டு விளக்கப்படம்  கோடு

குறிப்பிட்ட காலத்திற்கான போக்குகளையோ தரவையோ பார்ப்பதற்கு கோட்டு விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். கோட்டு விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

சேர்க்கை விளக்கப்படம்  காம்போ

ஒவ்வொரு தரவுத் தொடரையும் நெடுவரிசை, கோடு, அல்லது பகுதிக் கோடு போன்ற வெவ்வேறு மார்க்கர் வகையாகக் காட்ட காம்போ விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். காம்போ விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

பரப்பு விளக்கப்படம்  பரப்பு

தரவு வகைகளுக்கு இடையேயான மதிப்பிலுள்ள மாற்றங்கள் போன்று கிராஃபிக் முறையில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தரவுத் தொடரைக் கண்காணிக்க பரப்பு விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். பரப்பு விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய விளக்கப்படங்கள்: அடுக்கப்பட்ட பரப்பு விளக்கப்படம், 100% அடுக்கப்பட்ட பரப்பு விளக்கப்படம், படிமுறையான பரப்பு விளக்கப்படம், அடுக்கப்பட்ட படிமுறையான பரப்பு விளக்கப்படம், 100% அடுக்கப்பட்ட படிமுறையான பரப்பு விளக்கப்படம்

நெடுவரிசை விளக்கப்படம்  நெடுவரிசை

தரவின் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வகைகளையோ அதன் குழுக்களையோ காட்ட நெடுவரிசை விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். குறிப்பாக வகையில் துணைவகைகள் இருந்தால் இதைப் பயன்படுத்தவும். நெடுவரிசை விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய விளக்கப்படங்கள்: அடுக்கப்பட்ட நெடுவரிசை விளக்கப்படம், 100% அடுக்கப்பட்ட நெடுவரிசை விளக்கப்படம்

பார் விளக்கப்படம்  பார்

ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வகைகளுக்கான தரவுப் புள்ளிகளுக்கு இடையேயான வேறுபாட்டைக் காட்ட பார் விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். பார் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய விளக்கப்படங்கள்: அடுக்கப்பட்ட பார் விளக்கப்படம், 100% அடுக்கப்பட்ட பார் விளக்கப்படம்

பை சார்ட்  பை

தரவை "பை துண்டுகளாகக்" காட்டவோ மொத்தத் தரவின் விகிதாச்சாரத்தைக் காட்டவோ பை சார்ட்டைப் பயன்படுத்தவும். இது பை வரைபடம் எனவும் அழைக்கப்படுகிறது. பை சார்ட்கள் குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய விளக்கப்படங்கள்: டோனட் விளக்கப்படம்

சிதறல் விளக்கப்படம்  சிதறல்

கிடைமட்ட (X) மற்றும் செங்குத்து (Y) அச்சுகளுடன் சேர்த்து ஆய எண் மதிப்புகளைக் காட்டவும் இரண்டு மாறிகளுக்கு இடையேயான போக்குகள் மற்றும் பேட்டர்ன்களைப் பார்ப்பதற்கும் சிதறல் விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். சிதறல் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய விளக்கப்படங்கள்: குமிழ் விளக்கப்படம்

செவ்வக வரைபடம்  செவ்வக வரைபடம்

வெவ்வேறான பக்கெட்டுகள் முழுவதும் உள்ள தரவுத் தொகுப்பின் பரவலைக் காட்ட செவ்வக வரைபட விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். செவ்வக வரைபட விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

கேண்டில்ஸ்டிக் விளக்கப்படம்  கேண்டில்ஸ்டிக்

பங்கு மதிப்பில் உள்ள மாற்றங்கள் போன்று மொத்த மாறுபாட்டில் அமைந்துள்ள தொடக்க மற்றும் இறுதி மதிப்பைக் காட்ட கேண்டில்ஸ்டிக் விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். கேண்டில்ஸ்டிக் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

நிறுவனம் சார்ந்தது  அமைப்பு

நிறுவனம், குழு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உறவுமுறையைக் காட்ட அமைப்பு விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். அமைப்பு விளக்கப்படம் (organizational chart) 'org chart' எனவும் அழைக்கப்படுகிறது. அமைப்பு விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

ட்ரீ மேப் விளக்கப்படம்  Tree map

முதன்மை மற்றும் துணைநிலை என்ற படிநிலை அமைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆப்ஜெக்ட்டுகளைக் கொண்ட தரவுப் படிநிலையைக் காட்ட ட்ரீ மேப் விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். ட்ரீ மேப் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

 ஜியோ

நாடு, கண்டம் அல்லது பிராந்தியத்தின் வரைபடத்தைக் காட்ட ஜியோ விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு இருப்பிடத்திற்கான மதிப்பும் வண்ணங்களுடன் காட்டப்படும். ஜியோ விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

 வாட்டர்ஃபால்

தொடக்க மதிப்புடன் கடைசி மதிப்புகள் எவ்வாறு கூட்டப்படுகிறது அல்லது கழிக்கப்படுகிறது என்பதைக் காட்ட வாட்டர்ஃபால் விளக்கப்படங்களைப் பயன்படுத்தவும். வாட்டர்ஃபால் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

 ரேடார்

ஒவ்வொரு மாறிக்கும் ஒரு ஸ்போக்குடன் இரு பரிமாண வரைபடத்தில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாறிகளைக் காட்ட ரேடார் விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். ரேடார் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

 அளவுகள்

வரம்பிற்குள் உள்ள எண் மதிப்புகளையோ அளவீடுகளையோ காட்டுவதற்கு அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு மதிப்பும் அளவை வெளிப்படுத்துவதால் அளவீடுகளை ஒப்பிடவும் வேறுபடுத்தவும் முடியும். அளவு விளக்கப்படம் குறித்து மேலும் அறிக.

 விளக்கப்பட்டுள்ள காலப்பதிவு

குறிப்புகளைச் சேர்ப்பதற்கான விருப்பங்களைக் கொண்ட ஊடாடக்கூடிய காலத்தொடர் கோட்டு விளக்கப்படத்தைக் காட்ட விளக்கப்பட்ட காலப்பதிவைப் பயன்படுத்தவும். காலப்பதிவு விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

 டேபிள்

வரிசைப்படுத்தப்பட்டு பக்கமாக அமைக்கப்பட்ட விளக்கப்படமாக விரிதாள் டேபிளை மாற்றுவதற்கு டேபிள் விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். பெரும்பாலும் Google Sheetsஸில் டேஷ்போர்டை உருவாக்குவதற்கோ இணையதளத்தில் விளக்கப்படத்தை உட்பொதிப்பதற்கோ டேபிள் விளக்கப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. டேபிள் விளக்கப்படங்கள் குறித்து மேலும் அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10837588258446718201
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false