தயாரிப்பு அனுமதிகளைப் புரிந்துகொள்ளுதல்

வாடிக்கையாளர்களாக மாறக்கூடியவர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க, உங்கள் Business Profileலில் தயாரிப்புத் தகவலைச் சேர்ப்பது தொடர்பான சில கொள்கைகளையும் தரவின் தரம் குறித்த சில தேவைகளையும் சேர்த்துள்ளோம். பதிவேற்றப்பட்ட உங்களின் தயாரிப்புத் தரவானது தயாரிப்புத் தரவு விவரக்குறிப்புகள் அல்லது ஷாப்பிங் கொள்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றால் எச்சரிக்கைகள், அனுமதி மறுப்புகள், வரம்பிடப்பட்ட தெரிவுநிலை, இடைநிறுத்தம் போன்றவற்றுக்கு உங்கள் தயாரிப்புகள் உட்படுத்தப்படும். இந்தச் சிக்கல்கள் இருந்தால் Google முழுவதும் உங்கள் தயாரிப்புகள் காட்டப்படாமல் தடுக்கப்படலாம்.

நிராகரிப்பிற்குப் பின் அனுமதிபெற தயாரிப்பு விவரங்களை மாற்றுதல்

தயாரிப்புப் பட்டியலில் “நிராகரிக்கப்பட்டது” என்ற நிலையைக் கண்டறிந்தால் அதற்கான காரணத்தை அறிய அந்தத் தயாரிப்பின் மீது கிளிக் செய்யவும். நிராகரிக்கப்பட்டதற்கான காரணமும் தொடர்புடைய கொள்கைகளின் விவரங்கள் அடங்கிய பக்கத்தின் இணைப்பும் காட்டப்படும்.

தயாரிப்பு விவரங்களில் உரிய மாற்றங்களைச் செய்து அவற்றைச் சேமித்த பிறகு, 24 மணிநேரத்திற்குள் தயாரிப்பு தானாகவே மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும். சிக்கல் சரிசெய்யப்பட்ட பிறகு “நிராகரிக்கப்பட்டது” என்ற நிலை காட்டப்படாது.

ப்ராடக்ட் எடிட்டர் குறித்து மேலும் அறிக.

மதிப்பாய்வு செய்யக் கோருதல்

சில நேரங்களில், நீங்கள் சிக்கலைச் சரிசெய்துவிட்டீர்கள் அல்லது அந்தச் சிக்கலை நீங்கள் ஏற்கவில்லை என்றபோதும் உங்கள் தயாரிப்புகளில் ஒன்று ஏற்கப்படவில்லை என்றால் நீங்கள் மதிப்பாய்விற்குக் கோரலாம். மதிப்பாய்வு நிறைவடைந்தால் உங்கள் சிக்கல் மறைந்துவிடும். இன்னமும் உங்கள் தயாரிப்பு ஏற்கப்படாமல் இருந்து அதற்குப் பிறகு எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை என்றால் உதவிக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்.

கொள்கைகளை மீறும் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தால் “மதிப்பாய்விற்குக் கோருக” என்ற விருப்பம் தற்காலிகமாக முடக்கப்படக்கூடும்.

மதிப்பாய்விற்குக் கோரிக்கை விடுக்க:

  1. உங்கள் Business Profileலுக்குச் செல்லவும். உங்கள் சுயவிவரத்தை எப்படிக் கண்டறிவது என அறிக.
  2. சுயவிவரத்தைத் திருத்து அதன் பின்னர் தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உதவிக்குறிப்பு: டெஸ்க்டாப்பில் இருந்து Google Search மூலம், தயாரிப்புகளைத் திருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. “அங்கீகரிக்கப்படவில்லை” எனக் குறிக்கப்பட்ட தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. "சிக்கல்கள் என்பதற்குச் செல்" என்ற பேனரைத் தேர்ந்தெடுக்கவும்
  5. மதிப்பாய்விற்குக் கோருக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கணக்கு இடைநீக்கப்பட்டதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளுதல் 

உங்கள் Business Profile இடைநீக்கப்பட்டால் உங்கள் தயாரிப்புகள் அனைத்தும் "நிராகரிக்கப்பட்டது" என்ற நிலைக்கு மாற்றப்படும். உங்கள் Business Profile மீட்டெடுக்கப்பட்டதும் தயாரிப்புகள் தானாகவே மீண்டும் செயலாக்கப்பட்டு 5 நாட்களுக்குள் காட்டப்படும். இடைநீக்கப்பட்ட Business Profileலை மீட்டெடுப்பது எப்படி என அறிக.

அரிதான சமயங்களில், Business Profile இடைநீக்கம் செய்யப்படாத போதும் “கணக்கு இடைநீக்கப்பட்டது” என்ற காரணம் குறிப்பிடப்பட்டு அனைத்துத் தயாரிப்புகளின் நிலையும் "நிராகரிக்கப்பட்டது" என்று மாற்றப்படக்கூடும். இதுபோன்ற சமயங்களில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1047765912145388076
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false