நேரடி உரிமைகோரல் என்றால் என்ன?

வீடியோ பதிப்புரிமை விவரங்கள் பக்கத்திற்கான 2 மாற்றங்களைத் தற்போது வெளியிடுகிறோம்:

  1. பக்கத்தின் வடிவமைப்பு: இந்தப் பக்கத்தின் தளவமைப்பை மாற்றியுள்ளோம். உரிமைகோருபவரின் பெயர், உரிமைகோரல் கொள்கை தொடர்பான விவரங்கள் ஆகியவை குறித்து அறிய விரும்பினால் "வீடியோவிற்கு ஏற்படும் பாதிப்பு" என்ற வரிசையின் மேல் கர்சரைக் கொண்டு செல்லவும்.
  2. 'பதிப்புரிமை' பிரிவு: வீடியோவின் 'விவரங்கள்' பக்கத்தில் 'பதிப்புரிமை' என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளோம். எனவே எந்தவொரு வீடியோவின் விவரங்கள் பக்கத்தில் இருந்தும் பதிப்புரிமை குறித்த தகவல்களை நீங்கள் எளிதாக அணுகலாம்.

உரிமைகோரல்களுக்குப் பதிலளிப்பதற்கென இருக்கக்கூடிய தகவல்களும் விருப்பத்தேர்வுகளும் மாறவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பதிப்புரிமையாளரின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை YouTubeல் கண்டறிய நேரடி உரிமைகோரல் கருவியை அவர் பயன்படுத்தும்போது நேரடி உரிமைகோரலை வீடியோ பெறலாம்.

நேரடி உரிமைகோரல்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

  • தானியங்கு Content ID உரிமைகோரல்களும் நேரடி உரிமைகோரல்களும் வேறுபட்டவையாகும். பதிவேற்றப்பட்ட வீடியோ YouTubeன் Content ID சிஸ்டத்தில் உள்ள மற்றொரு வீடியோவுடன் (அல்லது வீடியோவின் ஒரு பகுதியுடன்) பொருந்தும்போது Content ID உரிமைகோரல்கள் தானாகவே உருவாக்கப்படுகின்றன.
  • Content ID குறித்த மேம்பட்ட அறிவும் நேரடி உரிமைகோரல் கருவிக்கான தேவையும் உள்ள பதிப்புரிமையாளர்களால் நேரடி உரிமைகோரல் கருவி பயன்படுத்தப்படுகிறது. Content ID மூலம் கண்டறியப்படாத வீடியோக்களை நேரடியாக உரிமைகோருவதற்கான வழியைப் பதிப்புரிமையாளர்களுக்கு இந்தக் கருவி வழங்குகிறது.
  • நேரடி உரிமைகோரல்களில் துல்லியமான நேரமுத்திரைகள் இருக்க வேண்டும். எனவே எந்த உள்ளடக்கம் உரிமைகோரப்படுகிறது என்பதைக் கிரியேட்டர்கள் சரியாக அடையாளம் காண முடியும். பதிப்புரிமையாளர்கள் நேரடி உரிமைகோரல் கருவியை வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாது.
பதிப்புரிமையாளர்கள் தவறான நேரமுத்திரைகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தால் நேரடி உரிமைகோரல் கருவிக்கான அணுகல் ரத்துசெய்யப்படலாம் அல்லது பொருந்தும்பட்சத்தில் YouTube உடன் அவர்கள் வைத்துள்ள பார்ட்னர்ஷிப் நிறுத்தப்படலாம். உங்கள் வீடியோவில் உரிமைகோரப்பட்ட நேரமுத்திரைகள் துல்லியமற்றவை என நினைத்தால் எங்கள் கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

எனது வீடியோவிற்கு நேரடி உரிமைகோரல் இருந்தால் நான் என்ன செய்வது?

Tools to Resolve Manual Content ID Claims - Copyright on YouTube

உங்கள் வீடியோவிற்கு நேரடி உரிமைகோரல் இருந்தால் அதன் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு உங்களுக்குச் சில விருப்பங்கள் உள்ளன:

அப்படியே விட்டுவிடுதல்
ஓர் உரிமைகோரல் சரியானது என்று நீங்கள் கருதினால், எதுவும் செய்யாமல் வீடியோவில் உள்ள உரிமைகோரலை அப்படியே விட்டுவிடலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளலாம்.
உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுதல்

ஓர் உரிமைகோரல் சரியானது என்று நீங்கள் கருதினால், புதிய வீடியோவைப் பதிவேற்றாமலேயே உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் அகற்றலாம். பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு விருப்பத்தேர்வைப் பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்து, உரிமைகோரலை உங்கள் வீடியோவில் இருந்து தானாக அகற்றும்படி செய்யலாம்:

  • வீடியோவின் பகுதியை டிரிம் செய்தல்: உரிமைகோரப்பட்ட பகுதியை உங்கள் வீடியோவில் இருந்து டிரிம் செய்யலாம்.
  • பாடலை மாற்றுதல்: உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை யாராவது உரிமைகோரினால், அதை YouTubeன் ஆடியோ லைப்ரரியில் உள்ள வேறொரு ஆடியோவைக் கொண்டு மாற்றலாம்.
  • பாடலை ஒலியடக்குதல்: உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை யாராவது உரிமைகோரினால் அதை நீங்கள் ஒலியடக்கலாம். பாடலை மட்டும் ஒலியடக்க வேண்டுமா அல்லது வீடியோவில் உள்ள எல்லா ஆடியோவையும் ஒலியடக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
வருவாயைப் பகிர்தல்
நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்து, உங்கள் வீடியோவில் உள்ள இசையை உரிமைகோரியிருந்தால் இசை வெளியீட்டாளருடன் உங்கள் வருவாயைப் பகிர்ந்துகொள்ளலாம்.
உரிமைகோரலை மறுத்தல்

ஓர் உரிமைகோரல் தவறானது என்று நீங்கள் கருதும்பட்சத்தில், உரிமை கோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருப்பதாக நம்பினால் அந்த உரிமைகோரலை மறுக்கலாம்.

உரிமைகோரலை மறுப்பது என நீங்கள் முடிவெடுத்திருக்கும்போது உங்கள் வீடியோ வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தால், மறுப்புகளின்போது வருமானம் ஈட்டுதல் எப்படிச் செயல்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பதிப்புரிமை மறுப்புகளில் YouTube மத்தியஸ்தம் செய்யாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சரியான காரணமின்றி ஓர் உரிமைகோரலை நீங்கள் மறுத்தால், பதிப்புரிமையாளர் உங்கள் வீடியோவை அகற்றும்படி கேட்கலாம். உங்கள் வீடியோவிற்கான சரியான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நாங்கள் பெற்றால் உங்கள் கணக்கு பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2048462886455662010
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false