டிவியில் உள்ள YouTube ஆப்ஸைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

பல ஸ்மார்ட் டிவிகளிலும் ஸ்ட்ரீமிங் சாதனங்களிலும் கேம் கன்சோல்களிலும் YouTube ஆப்ஸைப் பயன்படுத்தலாம். ஆப்ஸில் உள்நுழைந்து, நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களைப் பார்க்கலாம், உள்ளடக்கத்தைத் தேடலாம், மொபைல் சாதனத்தை ரிமோட்டாகப் பயன்படுத்தலாம். உங்கள் சாதனங்களை இணைப்பதன் மூலமும் ஸ்மார்ட் டிவியில் YouTube பார்க்கலாம். 

YouTube ஆப்ஸ் உங்கள் நாட்டில் கிடைக்கிறதா என்று பாருங்கள்.

கிடைக்கும் நாடுகள்

அர்ஜென்டினா

லக்சம்பர்க்

ஆஸ்திரேலியா

மலேசியா

ஆஸ்திரியா

மால்டா

அஜர்பைஜான்

மெக்சிகோ

பஹ்ரைன்

மாண்டினீக்ரோ

வங்காளதேசம்

மொராக்கோ

பெலாரஸ்

நேபாளம்

பெல்ஜியம்

நெதர்லாந்து

பொலிவியா

நியூசிலாந்து

போஸ்னியா மற்றும் ஹெர்ஸெகோவினா

நிகரகுவா

பிரேசில்

நைஜீரியா

பல்கேரியா

வடக்கு மாஸிடோனியா

கனடா

நார்வே

சிலி

ஓமன்

கொலம்பியா

பாகிஸ்தான்

கோஸ்டா ரிகா

பனாமா

குரோஷியா

பபுவா நியூ கினியா

சைப்ரஸ்

பராகுவே

செக்கியா

பெரு

டென்மார்க்

பிலிப்பைன்ஸ்

டொமினிகன் குடியரசு

போலந்து

ஈக்வெடார்

போர்ச்சுகல்

எகிப்து

போர்ட்டோ ரிக்கோ

எல் சல்வடோர்

கத்தார்

எஸ்டோனியா

ரோமானியா

ஃபின்லாந்து

ரஷ்யா

ஃபிரான்ஸ்

சவுதி அரேபியா

ஜார்ஜியா

செனகல்

ஜெர்மனி

செர்பியா

கானா

சிங்கப்பூர்

கிரீஸ்

ஸ்லோவாக்கியா

கவுதமாலா

ஸ்லோவேனியா

ஹோண்டுராஸ்

தென் ஆப்பிரிக்கா

ஹாங்காங்

தென்கொரியா

ஹங்கேரி

ஸ்பெயின்

ஐஸ்லாந்து

இலங்கை

இந்தியா

ஸ்வீடன்

இந்தோனேசியா

சுவிட்சர்லாந்து

ஈராக்

தைவான்

அயர்லாந்து

டான்ஸானியா

இஸ்ரேல்

தாய்லாந்து

இத்தாலி

துனிசியா

ஜமைக்கா

துர்க்கியே

ஜப்பான்

உகாண்டா

ஜோர்டான்

உக்ரைன்

கஜகஸ்தான்

யுனைடெட் கிங்டம்

கென்யா

அமெரிக்கா

குவைத்

உருகுவே

லாத்வியா

வெனிசுலா

லெபனான்

வியட்நாம்

லிபியா

ஏமன்

லீக்டன்ஸ்டைன்

ஜிம்பாப்வே

லிதுவேனியா

 

உங்கள் டிவியில் YouTubeல் உள்நுழைவதற்கான வழிமுறை

டிவியில் ஆப்ஸைப் பயன்படுத்தத் தொடங்குதல்

YouTube ஆப்ஸில் உள்நுழைதல் அல்லது அதிலிருந்து வெளியேறுதல்

உங்கள் ஸ்மார்ட் டிவி, ஸ்ட்ரீமிங் சாதனம் அல்லது கேம் கன்சோலில் YouTube ஆப்ஸில் உள்நுழையலாம். அத்துடன், நீங்கள் ஆப்ஸிலிருந்து வெளியேறவும் கணக்கை அகற்றவும் முடியும்.

கணக்குகளுக்கிடையே மாறுதல்

உங்கள் டிவியில் உள்ள YouTube ஆப்ஸில் பல கணக்குகளில் உள்நுழையலாம், அத்துடன் இந்தக் கணக்குகளுக்கிடையே எளிதாக மாறலாம்.

கவனத்திற்கு: உங்கள் பிள்ளையின் சுயவிவரத்தையோ YouTube Kids விருந்தினர் சுயவிவரத்தையோ தேர்ந்தெடுத்தால் நீங்கள் YouTube Kidsஸுக்குச் செல்வீர்கள். இந்த அனுபவம் குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொந்தக் கணக்குகளைச் சேர்க்கலாம், விருந்தினர்கள் கெஸ்ட் கணக்கின் மூலம் உள்நுழையலாம். கணக்கில் உள்நுழைந்திருக்காதபோது உங்கள் டிவியில் YouTube பயன்படுத்த கெஸ்ட் கணக்குகள் உதவும். மேலும் நீங்கள் உள்நுழைந்திருக்காதபோது பார்த்த எந்த உள்ளடக்கமும் உள்நுழைந்துள்ள கணக்கின் பரிந்துரைகளைப் பாதிக்காது.

பார்ப்பதற்கான வீடியோக்களைக் கண்டறிதல்

ஆப்ஸில் வீடியோக்களைக் கண்டறிய பல வழிகள் உள்ளன:
தேடலில் இருந்து
  • இடதுபுற வழிசெலுத்தலில் உள்ள தேடல் என்பதைப் பயன்படுத்தலாம்.

முகப்புப் பிரிவில் இருந்து

  • முகப்பு பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களின் கட்டம் மூலம் தேடலாம்.
  • இரண்டாம் நிலை வழிசெலுத்தல் பட்டியைத் திறக்க இடதுபுற வழிசெலுத்தலைத் தேர்ந்தெடுக்கவும். பரிந்துரைக்கப்படுபவை, பிரபலமடைபவை, இசை போன்ற வெவ்வேறு பிரிவுகளில் நீங்கள் உலாவலாம்.

சந்தாக்கள் பிரிவில் இருந்து

  • நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களிலிருந்து பரிந்துரைக்கப்படும் வீடியோக்களைப் பார்க்கலாம்.
  • நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களுக்குச் சென்று சேனலின் சமீபத்திய வீடியோக்களையோ பிளேலிஸ்ட்களையோ பார்க்கலாம்.

வீடியோ முகப்புப் பக்கத்தில் இருந்து

  • கீழே நகர்த்தி தேடல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பிளேலிஸ்ட்களில் வீடியோக்களைச் சேமித்தல்

நீங்கள் முன்பே பிற சாதனங்களில் உருவாக்கிய பிளேலிஸ்ட்களில் வீடியோக்களைச் சேர்க்கலாம். பிளேலிஸ்ட்களை உருவாக்குவது & நிர்வகிப்பது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.
பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேமிக்க:
  1. வீடியோவின் முகப்புப் பக்கத்தில், வீடியோவைச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. நீங்கள் வீடியோவைச் சேமிக்க விரும்பும் பிளேலிஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

லைப்ரரியை அணுகுதல்

லைப்ரரி பிரிவில் , இதுவரை பார்த்தவை, எனது வீடியோக்கள், பிறகு பார்க்க, திரைப்படங்கள், ஷோக்கள், பிளேலிஸ்ட்கள் ஆகிய பிரிவுகளைக் கண்டறியலாம்.

உங்கள் அமைப்புகளை மாற்றுதல்

உங்கள் கணக்கு அமைப்புகளை அணுக, இடதுபுற வழிசெலுத்தலில் உள்ள அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். , தானியங்கி அம்சம், கட்டுப்பாட்டுப் பயன்முறை ஆகியவற்றை மாற்றலாம், உங்கள் மொபைல் சாதனத்துடன் டிவியை இணைக்கலாம்.

மற்றொரு சாதனத்தை உங்கள் ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்துதல்

உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரை ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்துங்கள். உங்கள் டிவியில் உள்ள YouTube ஆப்ஸுடன் சாதனத்தைப் பயன்படுத்த அதை இணைப்பது எப்படி என்பதை அறிக.

உங்கள் டிவி வரிசையை நிர்வகித்தல்

அலைபரப்புவதன் மூலம் மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரை உங்கள் டிவியுடன் இணைக்கும்போது டிவி வரிசையிலிருந்து வீடியோக்களைச் சேர்க்கலாம் பார்க்கலாம் அகற்றலாம்.

உங்கள் டிவி வரிசையில் வீடியோக்களைச் சேர்த்தல்

  1. நீங்கள் சேர்க்க விரும்பும் வீடியோவிற்கு அடுத்துள்ள 'மேலும்' '' என்பதைத் தட்டவும்.
  2. வரிசையில் சேர் என்பதைத் தட்டவும்.

உங்கள் டிவி வரிசையைப் பார்த்தல்

உங்கள் மொபைலில் YouTube பக்கத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள ஒரு சிறிய சாளரத்தில் டிவி வரிசை இருக்கும். அதைத் திறந்து உங்கள் வரிசையைப் பார்க்க, அந்தச் சிறிய சாளரத்தை மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

உங்கள் டிவி வரிசையிலிருந்து வீடியோக்களை அகற்றுதல்

  1. உங்கள் டிவி வரிசையைத் திறக்கவும்.
  2. நீங்கள் அகற்ற விரும்பும் வீடியோவிற்கு அடுத்துள்ள 'மேலும்' '' என்பதைத் தட்டவும்.
வரிசையிலிருந்து அகற்று என்பதைத் தட்டவும்.

பிழையறிந்து திருத்துதல் & கருத்தை அனுப்புதல்

பிழையறிந்து திருத்துதல்

உங்கள் டிவியில் YouTube பார்ப்பதில் சிக்கல் இருந்தால் பிழையறிந்து திருத்துதலுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

YouTubeக்குக் கருத்தை அனுப்புதல்

எப்போதும் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தவே பார்க்கிறோம், உங்கள் கருத்துக்கு நன்றி. புதிய தயாரிப்பின் அனுபவம் பற்றிய கருத்தைச் சமர்ப்பிப்பதற்கு உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரில் https://www.youtube.com/tv_feedback எனும் பக்கத்திற்குச் செல்லவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14848385613186424131
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false