YouTube கிரியேட்டராக உதவி பெறுதல்

கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்

உங்கள் சேனல் தகுதிபெற்றிருந்தால் (உதாரணமாக, நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்தால்), உதவிக்கு YouTube கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளலாம். 

எங்கள் உதவி மையம், சமூக மன்றம், @TeamYouTube ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்

YouTube உதவி மையம்

பிழையறிந்து திருத்துவதற்கான சிறந்த இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ஏதாவதொரு YouTube பக்கத்தின் கீழேயுள்ள உதவி என்ற பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இங்கே வரலாம். support.google.com/youtube எனும் இணைப்பிற்கும் செல்லலாம்.

உங்களுக்கான இந்தப் பிரிவுகளைப் பார்க்கத் தவறாதீர்கள்:

  • கிரியேட்டர்களுக்கு: வீடியோக்களை உருவாக்குவதற்கும் சேனலை நிர்வகிப்பதற்குமான உதவியைப் பெறுங்கள்.
  • கூட்டாளர்களுக்கு: உங்கள் வீடியோக்களின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்குமான உதவியைப் பெறுங்கள்.

YouTube உதவி வீடியோ சேனல்கள்

மிகச் சமீபத்திய செய்திகளையும் உதவிக்குறிப்புகளையும் வழங்கும் வீடியோக்களுக்கு எங்கள் YouTube Viewers சேனலைப் பாருங்கள்.

YouTubeல் உங்கள் சேனலை வளர்க்கவும் பிசினஸை மேம்படுத்தவும் உதவும் சிறந்த நடைமுறைகளுக்கான வீடியோக்களுக்கு எங்கள் YouTube கிரியேட்டர்களுக்கான சேனலைப் பாருங்கள்.

 YouTube உதவி மன்றம்

TeamYouTube வழங்கும் YouTube உதவி மன்றத்தில் பதில்களைப் பெறலாம். TeamYouTubeன் சமீபத்திய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்வதற்கான பிரத்தியேக இடுகைகளைப் பார்க்கலாம். TeamYouTube என்பது நிகழ்நேர அறிவிப்புகளையும் உதவியையும் பகிர்வதற்காக அனைத்து YouTube குழுக்களுடனும் நெருக்கமாகப் பணிபுரியும் சமூக நிர்வாகிகளின் குழுவாகும். அவை நிறுவனத்திற்குள் உங்கள் கருத்தை மதிப்பாய்வும் செய்யும்.

 @TeamYouTube Twitter ஹேண்டில்

YouTubeல் இருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் நிகழ்நேர அறிவிப்புகளுக்கும் பிழையறிந்து திருத்தும் உதவிக்குறிப்புகளுக்கும் Twitterரில் @TeamYouTube எனும் ஹேண்டிலில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ், ஜாப்பனீஸ், பஹாசா ஆகிய மொழிகளில் எங்கள் குழு அறிவிப்புகளைப் பகிரும், அம்மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.

TeamYouTube குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் திறன்களை மேம்படுத்துதல்

 YouTube கிரியேட்டர் உதவிக்குறிப்புகள்

YouTube கிரியேட்டர் உதவிக்குறிப்புகள் என்பது புதிய கிரியேட்டர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் உள்ள இடமாகும். வீடியோ, லைவ் ஸ்ட்ரீம், Shorts வீடியோக்கள் போன்றவற்றிற்கான உதவிக்குறிப்புகளையும் சிறந்த நடைமுறைகளையும் உத்திகளையும் இங்கே கண்டறியலாம்.

கிரியேட்டர்களின் YouTube

கிரியேட்டர்களின் YouTube என்பது நீங்கள் சிறந்த வீடியோக்களை உருவாக்க உதவும் திட்டங்கள், கருவிகள், வரவிருக்கும் நிகழ்வுகள் போன்ற அனைத்தையும் பற்றித் தெரிந்துகொள்வதற்கான சிறந்த இடமாகும். கிரியேட்டர்களின் YouTube பலன்கள் திட்டத்தின் மூலம் உங்கள் சேனலை வளர்ப்பதற்கான உதவியையும் நீங்கள் பெறலாம்.

பதிப்புரிமை & கொள்கை குறித்து அறிந்துகொள்ளுங்கள்

பதிப்புரிமையையும் YouTubeன் கொள்கைகளையும் குறித்து நன்கு புரிந்துகொள்ள இந்தக் கருவிகளைப் பயன்படுத்துங்கள். கீழுள்ள தகவல்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பதிப்புரிமை தொடர்பான கேள்விகள்

  • பதிப்புரிமை மற்றும் உரிமைகள் மேலாண்மை: உரிமைகளைக் கோர வேண்டியிருந்தால் அதுதொடர்பான தகவல்களையும் பிழையறிந்து திருத்துவதற்கான படிகளையும் அதன்பிறகு பின்பற்ற வேண்டிய படிகளையும் பெறுங்கள்.
  • சட்டக் கொள்கைகள்: இந்தச் சட்டச் சிக்கல்கள் என்ன என்பது குறித்தும் புகாரைப் பதிவுசெய்வது எப்படி என்பது குறித்தும் தகவல்களைப் பெறுங்கள்.

கொள்கை தொடர்பான கேள்விகள்

எங்கள் Google அல்லது YouTube அலுவலகங்கள் எதிலும் நேரடி உதவியை நாங்கள் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10367138660656851144
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false