பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெறுதல்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் தவறுதலாக நீங்கள் சமர்ப்பித்திருந்தால் அதைத் திரும்பப் பெறலாம். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெற்றால்:

  • பிற உள்ளடக்கம் எதுவும் எதிர்ப்புக்குக் காரணமாக இல்லாதபட்சத்தில், பதிவேற்றியவரின் சேனலிலிருந்து பதிப்புரிமை எதிர்ப்பு நீக்கப்படும்.
  • வீடியோவைப் பதிவேற்றியவர் அதை நீக்காதபட்சத்தில், வீடியோ மீண்டும் YouTubeல் காட்டப்படும்.

அகற்றப்பட்டது உங்களுடைய உள்ளடக்கமாக இருந்தால் அகற்றுதலைத் திரும்பப் பெறும்படி நீங்கள் கேட்கலாம்.

நீங்கள் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்திருந்தால்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெற 2 வழிகள் உள்ளன:

  • YouTube Studioவில் திரும்பப் பெறுதல்
  • மின்னஞ்சல் மூலம் திரும்பப் பெறுதல்
YouTube Studioவில் திரும்பப் பெறுதல்

உங்கள் அகற்றுதல் கோரிக்கை ஏற்கெனவே தீர்க்கப்பட்டிருந்து, அதன் விளைவாக உள்ளடக்கம் அகற்றப்பட்டிருந்தால் நீங்கள் அதை YouTube Studioவில் திரும்பப் பெறலாம்:

  1. கம்ப்யூட்டர் மூலம் YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பதிப்புரிமை என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. அகற்றுதல் கோரிக்கைகள் பிரிவில், நீங்கள் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்த வீடியோவைக் கண்டறியவும்.
  4. வீடியோவைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் காட்ட, "விரிவாக்கு" என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வீடியோ ஏற்கெனவே அகற்றப்பட்டிருந்தால், அகற்றுதலைத் திரும்பப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும். திட்டமிடப்பட்ட அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக வீடியோ அகற்றப்படவுள்ளது எனில், திரும்பப்பெறும் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. பாப்-அப் சாளரத்திலுள்ள திரும்பப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
YouTube கூட்டாளர்களுக்கான குறிப்பு: உங்களிடம் CVP கணக்கு அல்லது YouTube Studio உள்ளடக்க நிர்வாகிக்கான அணுகல் இருந்தால் இந்தப் பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்தி அகற்றுதல் கோரிக்கைகளைத் திரும்பப் பெறலாம் அல்லது அவற்றை ரத்து செய்யலாம். அசல் அகற்றுதல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அதே Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ளதை உறுதிசெய்யவும். உரிமைகோரல் திரும்பப் பெறப்பட்ட பிறகு, பொருந்தும் வீடியோக்களை உரிமைகோர முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
மின்னஞ்சல் மூலம் திரும்பப் பெறுதல்

நீங்கள் அகற்றுதல் கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் திரும்பப் பெற, அந்த மின்னஞ்சல் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:

  1. மின்னஞ்சலை அசல் உரிமைகோருபவரோ அவரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ (வழக்கறிஞர் போன்று) உரிமைகோருபவரின் சார்பாக அனுப்ப வேண்டும்.
  2. அசல் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கப் பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரி அல்லது கார்ப்பரேட் டொமைனில் இருந்து மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.
  3. பின்வரும் தகவல்கள் மின்னஞ்சலில் இருக்க வேண்டும்:
    • உங்கள் அகற்றுதல் கோரிக்கையிலுள்ள உள்ளடக்கத்திற்கென வடிவமைக்கப்பட்ட இணைப்புகள்: வீடியோக்களுக்கான சரியான URL வடிவம் www.youtube.com/watch?v=xxxxxxxxxxx என்பதாகும். வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கு இங்கே பட்டியலிடப்பட்டுள்ள, உள்ளடக்க வகைகளுக்கேற்ற URL வடிவத்தைப் பயன்படுத்தவும்.
    • திரும்பப் பெறுதல் கூற்று: உதாரணமாக, "பதிப்புரிமை மீறல் தொடர்பான எனது உரிமைகோரலை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன்." அகற்றுதல் கோரிக்கைக்கான திரும்பப் பெறுதலை மட்டுமே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “எனது பதிப்புரிமை எதிர்ப்பைத் திரும்பப் பெறுகிறேன்” என்பதைப் போன்ற, பதிப்புரிமை எதிர்ப்புக்கு மட்டுமான திரும்பப் பெறுதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
    • மின்னணுக் கையொப்பம்: மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியில், உரிமைகோருபவரோ அவரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ தங்களின் சட்டப்பூர்வமான முழுப் பெயரைக் கையொப்பமாக உள்ளிட வேண்டும். சட்டப்பூர்வமான முழுப் பெயர் நிறுவனத்தின் பெயராக இருக்கக்கூடாது.
  4. copyright@youtube.com எனும் முகவரிக்கு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.
கவனத்திற்கு: YouTube சேனலின் சுயவிவரப் படங்களை Google ஹோஸ்ட் செய்கிறது. சுயவிவரப் படத்திற்கான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெற, உங்கள் அசல் அகற்றுதல் கோரிக்கை தொடர்பாக Googleளில் இருந்து பெற்ற உறுதிப்படுத்தல் மின்னஞ்சலுக்குப் பதிலளியுங்கள். மேலே பட்டியலிடப்பட்டுள்ள 1-3 தேவைகளை உங்கள் மின்னஞ்சல் பூர்த்திசெய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
 
நினைவில் கொள்ளுங்கள்: மேலே உள்ள பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் மின்னஞ்சல் மூலமோ YouTube Studioவிலோ சமர்ப்பிக்கப்படும் திரும்பப் பெறுதலை மட்டுமே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் உள்ளடக்கம் அகற்றப்பட்டிருந்தால்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை காரணமாக நீங்கள் பதிவேற்றிய உள்ளடக்கம் அகற்றப்பட்டது எனில், உரிமைகோருபவரை நேரடியாகத் தொடர்புகொண்டு கோரிக்கையைத் திரும்பப் பெறுமாறு நீங்கள் கேட்கலாம். தங்களை எப்படித் தொடர்புகொள்ளலாம் என்பதைச் சில கிரியேட்டர்கள் அவர்களின் சேனலில் குறிப்பிட்டிருப்பார்கள்.

சட்டப்படி, பதிப்புரிமை சார்ந்து எழும் வழக்குகளுக்கு YouTube மத்தியஸ்தம் பண்ண முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

 

திரும்பப் பெறுதலுக்குப் பிறகு என்ன நடக்கும்?

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் திரும்பப் பெற்றதும், அகற்றுதல் கோரிக்கை திரும்பப் பெறப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவீர்கள். அத்துடன், தொடர்புடைய பதிப்புரிமை எதிர்ப்பு மற்றும் அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நிலை குறித்து பதிவேற்றியவருக்குத் தெரிவிக்கப்படும்.

கூடுதல் தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9487941828073073066
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false