YouTube சேனலின் அடிப்படைத் தகவல்களை நிர்வகித்தல்

சேனல் பெயர், விளக்கம், மொழிபெயர்ப்புகள், இணைப்புகள் போன்ற உங்கள் YouTube சேனலின் அடிப்படைத் தகவல்களை நீங்கள் நிர்வகிக்கலாம்.

பெயர்

உங்கள் YouTube சேனலின் பெயரை நீங்கள் மாற்றலாம். அது எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சேனல் பெயரை மாற்றிய பிறகு YouTube சேவைகளில் அது காட்டப்பட சில நாட்கள் ஆகலாம். உங்கள் YouTube சேனலின் பெயரையும் படத்தையும் மாற்றினால் YouTubeல் மட்டுமே அது காட்டப்படும். உங்கள் Google கணக்கின் பெயரையும் படத்தையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம் (உங்கள் YouTube சேனலின் பெயரில் எந்த மாற்றங்களும் செய்யாமல்).

கவனத்திற்கு: 14 நாட்களுக்குள் உங்கள் சேனல் பெயரை இருமுறை மாற்றலாம். சேனல் பெயரை மாற்றினால் உங்கள் சரிபார்ப்பு முத்திரை அகற்றப்படும். மேலும் அறிக.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பிரத்தியேகப்படுத்துதல் அதன் பிறகு அடிப்படைத் தகவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் சேனலின் புதிய பெயரை உள்ளிடவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

Choosing Your YouTube Channel Name

 

 

ஹேண்டில்

ஹேண்டில் என்பது YouTubeல் உங்களின் தனித்துவமான அடையாளத்தை நீங்கள் உருவாக்குவதையும் பராமரிப்பதையும் எளிதாக்குகின்ற தனித்துவமான அடையாளங்காட்டியாகும்.

குறிப்பு: உங்கள் ஹேண்டிலை 14 நாட்களுக்குள் இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம்.

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பிரத்தியேகப்படுத்துதல் அதன் பிறகு அடிப்படைத் தகவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஹேண்டில் என்பதன் கீழ் உங்கள் ஹேண்டிலைப் பார்க்கலாம் அல்லது மாற்றலாம்.
  4. உங்கள் ஹேண்டிலை மாற்றினால் அதை உறுதிப்படுத்த, வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

விளக்கம்

உங்கள் YouTube சேனலின் விளக்கத்தை நீங்கள் மாற்றலாம். அவை எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சேனல் தலைப்பில் உங்கள் விளக்கத்தைப் பார்க்கலாம்.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பிரத்தியேகப்படுத்துதல் அதன் பிறகு அடிப்படைத் தகவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் சேனலுக்கான புதிய விளக்கத்தை உள்ளிடவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
கிரியேட்டர்களுக்கான வீடியோ விளக்கம் தொடர்பான உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்.

உங்கள் சுட்டுப்பெயர்களைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

உங்கள் சேனலில் சுட்டுப்பெயர்களைச் சேர்ப்பதனால் அவை உங்கள் சேனல் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் சுட்டுப்பெயர்களை அனைவருக்கும் காட்ட வேண்டுமா அல்லது உங்கள் சந்தாதாரர்களுக்கு மட்டும் காட்ட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
தனிநபர் அடையாளத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் சுட்டுப்பெயர்கள் மிகவும் முக்கியமானவை. பாலின வெளிப்படுத்தல் தொடர்பாகச் சில அதிகார எல்லைகளில் சட்டங்கள் உள்ளன. YouTubeல் பொதுவில் வெளியிட ஒப்புதல் அளிக்கும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் உள்ளூர் சட்டங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் சேனல் பக்கத்தில் சுட்டுப் பெயர்கள் கிடைக்கவில்லை எனில், கூடுதல் நாடுகள்/பிராந்தியங்கள் மற்றும் மொழிகளில் இந்த அம்சத்தை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
குறிப்பு: பணியிடம் அல்லது கண்காணிக்கப்படும் கணக்குகளுக்குச் சுட்டுப்பெயர் அம்சம் கிடைக்காது.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல்  அதன் பிறகு அடிப்படைத் தகவல்கள் அதன் பிறகு சுட்டுப்பெயர்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் சுட்டுப்பெயர்களை உள்ளிடத் தொடங்கி, உங்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நான்கு சுட்டுப்பெயர்கள் வரை சேர்க்கலாம்.
    1. சுட்டுப்பெயர்களை அகற்ற, அவற்றுக்கு அருகிலுள்ள  என்பதைக் கிளிக் செய்து உங்கள் தேர்வுகளைத் திருத்தலாம்.
  4. உங்கள் சுட்டுப்பெயர்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    1. அனைவரும் பார்க்க முடியும், அல்லது
    2. எனது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்க முடியும்
  5. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனல் பெயர் மற்றும் விளக்கத்தின் மொழிபெயர்ப்பு

உங்கள் வீடியோக்கள் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைய உதவும் வகையில் உங்கள் சேனலின் பெயருக்கும் விளக்கத்திற்கும் மொழிபெயர்ப்புகளை நீங்கள் சேர்க்கலாம்.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல் அதன் பிறகு அடிப்படைத் தகவல்கள் அதன் பிறகு மொழியைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அசல் மொழி என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு மொழிபெயர்ப்புக்கான மொழி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் சேனலின் பெயர் மற்றும் விளக்கத்திற்கான மொழிபெயர்ப்புகளை உள்ளிடவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனல் URL

சேனல் URL என்பது YouTube சேனல்கள் பயன்படுத்தும் வழக்கமான URL ஆகும். இந்த URL உங்கள் தனிப்பட்ட சேனல் ஐடியைப் பயன்படுத்தும். அது URLலின் இறுதியில் எண்களும் எழுத்துகளுமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சேனல் சுயவிவர இணைப்புகள்
உங்கள் சேனல் முகப்புப் பக்கத்தில் 14 இணைப்புகள் வரை காட்சிப்படுத்தலாம். அவை எங்கள் வெளி இணைப்புகளுக்கான கொள்கையைப் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். 'குழு சேர்' பட்டனுக்கு அருகிலுள்ள சுயவிவரப் பிரிவில் உங்கள் முதல் இணைப்பு பிரதானமாகக் காட்டப்படும். கூடுதல் இணைப்புகளைப் பார்ப்பதற்காகப் பார்வையாளர்கள் கிளிக் செய்யும்போது மற்ற இணைப்புகள் காட்டப்படும். உங்கள் பார்வையாளர்களுடன் இணைப்புகளைப் பகிர்வது  குறித்து மேலும் அறிக.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பிரத்தியேகப்படுத்துதல் அதன் பிறகு அடிப்படைத் தகவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இணைப்புகள் என்பதன் கீழுள்ள இணைப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து உங்கள் தளத்தின் தலைப்பையும் URLலையும் உள்ளிடவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
தொடர்புத் தகவல்
பிசினஸ் தொடர்பான கேள்விகளுக்காக உங்களை எப்படித் தொடர்புகொள்வது என்பதைப் பிறருக்குத் தெரியப்படுத்த உங்கள் சேனலில் தொடர்புத் தகவல்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பிரத்தியேகப்படுத்துதல் அதன் பிறகு அடிப்படைத் தகவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் சேனலின் அடிப்படைத் தகவல்களை நிர்வகிப்பது எப்படி என்று பாருங்கள்

உங்கள் சேனலின் பெயர், விளக்கம், மொழிபெயர்ப்புகள், இணைப்புகள் ஆகியவற்றை மாற்றுவது எப்படி என்பது குறித்து YouTube கிரியேட்டர்களுக்கான சேனல் வெளியிட்டுள்ள பின்வரும் வீடியோவைப் பாருங்கள்.

 

Customize Your Channel Branding & Layout: Add a Profile Picture, Banner, Trailer, Sections, & more!

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழுசேருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17057818486217931771
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false