சேனல்களில் சரிபார்ப்பு முத்திரைகள்

YouTube சேனல் பெயருக்கு அடுத்து அல்லது சரிபார்ப்புத் தேர்வுக்குறி காட்டப்பட்டால் YouTube அந்தச் சேனலைச் சரிபார்த்துவிட்டது என்று அர்த்தம்.

சேனல் சரிபார்ப்பிற்கு விண்ணப்பித்தல்

நீங்கள் 100,000 சந்தாதாரர்களைப் பெற்றதும் சேனல் சரிபார்ப்புக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். உங்கள் சேனல் இன்னும் தகுதிபெறவில்லை என்பது போலத் தெரிகிறது.

தகுதிபெறும் சேனலுக்கான மின்னஞ்சல் முகவரி மூலம் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். மேலே வலதுபுறத்திலுள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்து அந்தக் கணக்கைத் தேர்வுசெய்யவும்.

To see if your channel is eligible to request verification, click Sign in at the top-right. 

வேறொரு கிரியேட்டரையோ பிராண்டையோ ஆள்மாறாட்டம் செய்ய முயலும் சேனல்களை நாங்கள் சரிபார்த்ததாகக் குறிக்க மாட்டோம். ஒரு சேனல் வேறொருவரின் சேனலைப் போல வெளிப்படையாகவே ஆள்மாறாட்டம் செய்வதைக் கண்டறிந்தால் நாங்கள் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்.

சரிபார்க்கப்பட்ட சேனல்கள் பற்றி

ஒரு சேனல் சரிபார்க்கப்பட்டதெனில் அது ஒரு கிரியேட்டர், கலைஞர், நிறுவனம் அல்லது பிரமுகரின் அதிகாரப்பூர்வச் சேனலாகிவிடும். YouTubeல் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட பிற சேனல்களுக்கிடையில் அதிகாரப்பூர்வச் சேனல்களை வேறுபடுத்திக் கண்டறிய சரிபார்க்கப்பட்ட சேனல்கள் உதவுகின்றன.

நினைவில்கொள்ள வேண்டியவை:

  • சரிபார்க்கப்பட்ட சேனல்களுக்கு YouTubeல் கூடுதல் அம்சங்கள் எதுவும் கிடைக்காது. மேலும் அதை YouTubeலிருந்து கிடைக்கும் விருதாகவோ மைல்ஸ்டோன்களாகவோ பரிந்துரையாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. விருதுகள் குறித்த தகவல்களுக்கு, YouTubeன் கிரியேட்டர்களுக்கான விருதுகள் திட்டத்தைப் பற்றி மேலும் அறிக.
  • உங்கள் சேனல் சரிபார்க்கப்பட்டதெனில் உங்கள் சேனலின் பெயரை மாற்றும் வரை அது சரிபார்க்கப்பட்டதாகவே இருக்கும். சேனலின் பெயரை நீங்கள் மாற்றிவிட்டால் பெயர் மாற்றப்பட்ட சேனல் சரிபார்க்கப்பட்டிருக்காது. அதைச் சரிபார்க்கும்படி கோர மீண்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
  • உங்கள் சேனலின் ஹேண்டிலை மாற்றுவதால் உங்கள் சரிபார்ப்பு முத்திரை அகற்றப்படாது.
  • எங்கள் சமூக வழிகாட்டுதல்களையோ YouTubeன் சேவை விதிமுறைகளையோ மீறும் சேனல்களின் சரிபார்ப்பைத் திரும்பப் பெறவும் சேனலை முடக்கவும் YouTubeக்கு முழு அதிகாரம் உள்ளது.
  • சரிபார்ப்புச் செயல்முறை காலப்போக்கில் மாற்றமடைந்திருக்கிறது. எனவே பல வகையான சரிபார்க்கப்பட்ட சேனல்களை YouTubeல் நீங்கள் பார்க்கக்கூடும்.

சேனல் சரிபார்ப்பிற்கான தகுதிநிலை

சரிபார்ப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற, உங்கள் சேனலில் கண்டிப்பாக 1,00,000 நபர்கள் குழு சேர்ந்திருக்க வேண்டும்.

நீங்கள் விண்ணப்பித்த பிறகு உங்கள் சேனலை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். பின்வரும் வரையறைகளைக் கொண்ட சேனல்கள் சரிபார்க்கப்படும்:

  • தனித்துவம் வாய்ந்தது: உங்கள் சேனல் உண்மையான கிரியேட்டரையோ பிராண்டையோ நிறுவனத்தையோ தனது அடையாளமாக முன்வைக்க வேண்டும். உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க உதவ, உங்கள் சேனல் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன போன்ற பல்வேறு காரணிகளைப் பார்ப்போம். மேலும் பல தகவல்களையும் ஆவணங்களையும் உங்களிடம் நாங்கள் கேட்கக்கூடும்.
  • முழுமையானது: உங்கள் சேனல் அனைவரும் பார்க்கும்படி இருப்பதுடன் சேனல் பேனர், விளக்கம், சுயவிவரப் படம் ஆகியவையும் அதற்கென இருக்க வேண்டும். சேனலில் உள்ளடக்கம் இருப்பதுடன் அது YouTubeல் செயலில் இருக்க வேண்டும்.

சில சமயங்களில், 1,00,000க்கும் சற்று குறைவான சந்தாதாரர்களைக் கொண்ட ஆனால் YouTubeக்கு வெளியே நன்கு பிரபலமடைந்துள்ள சேனல்களையும் YouTube தானாகவே முன்வந்து சரிபார்க்கக்கூடும்.

சரிபார்க்கப்படாமலேயே மற்ற சேனல்களிலிருந்து உங்கள் சேனலை வேறுபடுத்துதல்

உங்கள் சேனல் சரிபார்க்கப்படவில்லை எனில், ஒரே மாதிரி உள்ள சேனல்களிலிருந்து உங்கள் சேனலை வேறுபடுத்திக் காட்டுவதற்கான வேறு சில வழிகள் இதோ:

உங்களையோ உங்கள் சேனலையோ வேறு யாரேனும் ஆள்மாறாட்டம் செய்தால் எங்களிடம் புகாரளிக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1628119799995454693
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false