YouTube Shorts வருமானம் ஈட்டுதல் கொள்கைகள்

பிப்ரவரி 1, 2023 முதல் YouTube Shortsஸின் வருவாய்ப் பகிர்வு தொடங்கியது. YouTube கூட்டாளர் திட்ட விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பற்றி மேலும் அறிக.

வருமானம் ஈட்டும் கூட்டாளர்கள் Shorts ஊட்டங்களில் வீடியோக்களுக்கு இடையில் பார்க்கப்படும் விளம்பரங்களில் இருந்து பணம் ஈட்ட முடியும். இந்தப் புதிய வருவாய்ப் பகிர்வு மாடல் YouTube Shorts நிதிக்கு மாற்றாக விளங்குகிறது.

YouTube Shorts வருமானம் ஈட்டுதலுக்கான கொள்கைகள்

நீங்கள் YouTubeல் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் உங்கள் சேனல் YouTube சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம். ஒரே மாதிரியான வீடியோக்கள் மற்றும் பிறரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கைகளும் இதில் அடங்கும். YouTubeன் சமூக வழிகாட்டுதல்கள், சேவை விதிமுறைகள், பதிப்புரிமை, Google AdSense திட்டக் கொள்கைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வை இயக்குதல்

Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வைத் தொடங்க, Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை வருமானம் ஈட்டும் கூட்டாளர்கள் ஏற்க வேண்டும். Shorts ஊட்டங்களில் விளம்பரங்கள் மூலமும் YouTube Premium மூலமும் நீங்கள் வருமானம் ஈட்ட இந்த விதிமுறைகள் அனுமதிக்கும். மாடியூலை நீங்கள் ஏற்கும் தேதியில் இருந்து உங்கள் சேனலிலுள்ள தகுதிபெறும் Shorts பார்வைகளுக்கு Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வு தொடங்கும். Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்கும் முன் கிடைத்த Shorts பார்வைகள் Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வுக்குத் தகுதிபெறாது.

விளம்பரங்களுக்குப் பொருத்தமான உள்ளடக்கம்

விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டும் அனைத்து உள்ளடக்கமும் எங்களின் விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். Shortsஸில் எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் உள்ளடக்கத்தின் பார்வைகள் மட்டுமே வருவாய்ப் பகிர்வுக்குத் தகுதிபெறும்.

தகுதியில்லாத Shorts பார்வைகள்

பேமெண்ட்டுகளைக் கணக்கிடும்போது தகுதிபெறாத Shorts பார்வைகளை YouTube கணக்கில் எடுத்துக்கொள்ளாது. தகுதியில்லாத Shorts பார்வைகளுக்கான உதாரணங்கள்: 

  • பிறருடைய திரைப்படங்கள் அல்லது டிவி ஷோக்களில் இருந்து எடுக்கப்பட்ட எடிட் செய்யப்படாத கிளிப்புகள், YouTube அல்லது பிற பிளாட்ஃபார்மில் இருந்து எடுத்து மீண்டும் பதிவேற்றப்படும் மற்ற கிரியேட்டர்களின் வீடியோக்கள் அல்லது அசல் படைப்பு எதுவும் சேர்க்கப்படாத தொகுப்புகள் போன்ற அசல் படைப்பு அல்லாத Shorts
  • தானியங்குக் கிளிக் அல்லது ஸ்க்ரோல் ரோபோக்கள் போன்றவை மூலம் பெறப்படும் செயற்கையான அல்லது போலியான Shorts பார்வைகள்
  • எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்கள் உடன் இணங்காத Shortsஸிலிருந்து கிடைக்கும் பார்வைகள்

Shorts வருவாய்ப் பகிர்வுக்குத் தகுதிபெறும் விளம்பர வடிவங்கள்

புதிது: Shorts விளம்பர வருவாய், YPP திட்டத்தில் சேர்வதற்கான புதிய வழிகள் மற்றும் Shorts Super Thanks!

Shorts ஊட்டங்களில் வீடியோக்களுக்கு இடையே பார்க்கப்படும் விளம்பரங்களுக்கு வருவாய் பகிரப்படுகிறது. Shorts பார்வைகளுக்கு Shorts ஊட்டங்களில் இருந்து மட்டுமே விளம்பர வருவாய்ப் பகிர்வு கிடைக்கும். வீடியோ முகப்புப் பக்கத்தில் உள்ள நீள வடிவ வீடியோக்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

Shortsஸிற்கான விளம்பர வருவாய்ப் பகிர்வு செயல்படும் விதம்

புதிது: Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வு

Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்றுக்கொண்ட வருமானம் ஈட்டும் கூட்டாளர்கள் மட்டுமே Shortsஸில் இருந்து விளம்பர வருவாயைப் பெற முடியும்.

Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வு எப்படிச் செயல்படுகிறது என்பதைக் காட்ட 4 நிலைகள் உள்ளன:

  1. Shorts ஊட்ட விளம்பர வருவாயைத் தொகுத்தல். ஒவ்வொரு மாதமும் Shorts ஊட்டங்களில் வீடியோக்கள் இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தொகுக்கப்பட்டு Shorts கிரியேட்டர்களுக்கு அளிக்கவும் இசை உரிமத்திற்குக் கட்டணம் செலுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. 
     
  2. கிரியேட்டர் நிதியைக் கணக்கிடுதல். வருமானம் ஈட்டும் கிரியேட்டர்கள் பதிவேற்றிய Shorts அனைத்திலும் இருந்து கிடைத்த பார்வைகள், அவற்றில் பயன்படுத்தப்பட்ட இசை ஆகியவற்றின் அடிப்படையில் Shorts ஊட்ட விளம்பர வருவாய் கிரியேட்டர் நிதியில் சேர்க்கப்படும். 
    • இசை எதுவுமில்லாமல் Shorts வீடியோவை வருமானம் ஈட்டும் கிரியேட்டர் பதிவேற்றினால் அதன் பார்வைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்தமும் கிரியேட்டர் நிதியில் சேர்க்கப்படும்.
    • இசையுடன் கூடிய Shorts வீடியோவை வருமானம் ஈட்டும் கிரியேட்டர் பதிவேற்றினால் அதன் பார்வைகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கிரியேட்டர் நிதிக்கும் இசைக் கூட்டாளர்களுக்கும், பயன்படுத்தப்பட்ட டிராக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் YouTube பிரித்து வழங்கும்.
உதாரணமாக, வருமானம் ஈட்டும் கிரியேட்டர் 1 டிராக்குடன் கூடிய Shorts வீடியோவைப் பதிவேற்றினால் அதன் பார்வைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் கிரியேட்டர் நிதிக்குப் பாதியும் இசை உரிமத்தின் கட்டணத்தை ஈடுகட்ட பாதியும் ஒதுக்கப்படும். வருமானம் ஈட்டும் கிரியேட்டர் 2 டிராக்குகளுடன் கூடிய Shorts வீடியோவைப் பதிவேற்றினால் அதன் பார்வைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் கிரியேட்டர் நிதிக்கு மூன்றில் ஒரு பங்கும் இசை உரிமத்தின் கட்டணத்தை ஈடுகட்ட மீதியும் ஒதுக்கப்படும். 
  1. கிரியேட்டர் நிதியை ஒதுக்குதல். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களின் Shorts மூலம் அவர்களுக்குக் கிடைத்த மொத்தப் பார்வைகளின் அடிப்படையில் கிரியேட்டர் நிதியில் உள்ள மொத்தத் தொகையில் இருந்து வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்கு வருவாய் பிரித்து வழங்கப்படுகிறது. உதாரணமாக, வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களால் பதிவேற்றப்பட்ட தகுதியுடைய Shorts வீடியோக்களின் பார்வைகளில் 5 சதவீதத்தை ஒரு கிரியேட்டர் பெற்றால், கிரியேட்டர் நிதியில் உள்ள வருவாயில் 5% அவருக்கு ஒதுக்கப்படும்.
     
  2. வருவாய்ப் பகிர்வைப் பங்கிடுதல். இசையைப் பயன்படுத்தி இருந்தாலும் இல்லை என்றாலும் கிரியேட்டர்களுக்கென ஒதுக்கப்பட்ட வருவாயில் இருந்து 45%, வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்குக் கிடைக்கும்.

கிரியேட்டர் நிதியில் சேர்க்கப்படாத வருவாய்:

  • Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்காத கிரியேட்டர்கள் அல்லது Shorts மூலம் வருமானம் ஈட்ட இன்னும் தகுதிபெறாத கிரியேட்டர்கள் பதிவேற்றிய Shortsஸில் கிடைத்த பார்வைகள் மூலம் பெறப்படும் வருவாய். இந்த வருவாய் இசை உரிமத்தின் கட்டணத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் மற்றும்/அல்லது YouTube அதை வைத்துக்கொள்ளும். 
  • இசைக் கூட்டாளர்கள் பதிவேற்றிய Shortsஸில் கிடைத்த பார்வைகள் மூலம் பெறப்படும் வருவாய்.
  • தகுதிபெறாதவை எனத் தீர்மானிக்கப்பட்ட Shorts பார்வைகள் மூலம் பெறப்படும் வருவாய்.
  • Shorts ஊட்டங்களைத் திறந்தவுடன் Shorts வீடியோவைப் பார்ப்பதற்கு முன்பு காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் (எ.கா. YouTube Shorts தலையங்க விளம்பரம்).
  • Shorts பிளேயருக்குள் வழிசெலுத்தும் பக்கங்களில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய்.

உதாரணம் மூலம் புரிந்துகொள்ளுங்கள்

இது எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அனுமானத்தின் அடிப்படையிலான ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.

அனுமானத்தின் அடிப்படையிலான உதாரணம்

வருமானம் ஈட்டும் கிரியேட்டரான நீங்கள் 1 மியூசிக் டிராக்குடன் கூடிய Shorts வீடியோவைப் பதிவேற்றுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த மாதம் A என்ற நாட்டில் உங்கள் Shorts எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதைப் பார்க்கலாம்.

  • A என்ற நாட்டில் 10 கோடி Shorts பார்வைகள் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே வருமானம் ஈட்டும் கிரியேட்டர்கள் பதிவேற்றிய Shortsஸுக்குக் கிடைத்தவை.
  • Shorts ஊட்டங்களில் Shorts வீடியோக்களுக்கு இடையே காட்டப்பட்ட விளம்பரங்கள் மூலம் $1,00,000 கிடைத்துள்ளது.
  • இந்த Shorts வீடியோக்களில் 20% வீடியோக்கள் 1 மியூசிக் டிராக்கைப் பயன்படுத்தியுள்ளன. எனவே கிரியேட்டர் நிதிக்கு $90,000 ஒதுக்கப்படும் மற்றும் இசை உரிமத்தின் கட்டணத்தை ஈடுகட்ட $10,000 பயன்படுத்தப்படும்.
  • உங்கள் Shorts வீடியோக்கள் 10 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளதால் கிரியேட்டர் நிதியில் இருந்து உங்களுக்கு 1% அல்லது $900 ஒதுக்கப்படும். நீங்கள் மியூசிக் டிராக்கைப் பயன்படுத்தியதால் கிரியேட்டர் நிதியில் இருந்து உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் எந்த மாற்றமும் ஏற்படாது.
  • அதன்பிறகு, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 45% வருவாய்ப் பகிர்வு கணக்கிடப்பட்டு A என்ற நாட்டில் உங்கள் Shorts பார்வைகளுக்காக $405 பெறுவீர்கள்.

மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை Shortsஸில் பயன்படுத்துதல்

சில சூழ்நிலைகளில் ஒரு Shorts வீடியோவில் மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் அல்லது ரீமிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ பயன்படுத்தப்படும்போது அந்த Shorts வீடியோவுக்குக் கிடைத்த பார்வைகள் பதிவேற்றியவருக்கும் மூன்றாம் தரப்பு உரிமைதாரர்களுக்கும் (Shorts வீடியோவில் பயன்படுத்திய உள்ளடக்கத்தின் உரிமையாளர்) பிரித்து வழங்கப்படும். கிரியேட்டர் நிதியையும் வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்கான வருவாய்ப் பகிர்வையும் கணக்கிடுவதற்காக இப்படி வழங்கப்படுகிறது. இது எப்படி நிகழ்கிறது என்பதை இந்தக் கொள்கைகள் விவரிக்கின்றன. இந்தக் கொள்கைகளை நாங்கள் மாற்றக்கூடும். அப்படிச் செய்தால் உங்களுக்குத் தெரிவிப்போம்.

  • மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் கிரியேட்டர் நிதியில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்படும்? கிரியேட்டர் நிதிக்கான தொகை கணக்கிடப்படும்போது, YouTubeன் இசைத்துறைக் கூட்டாளர்கள் கிடைக்கச்செய்துள்ள அல்லது ட்ரீம் டிராக் உருவாக்கிய இசை உள்ளடக்கம் மட்டும் Shorts வீடியோவுக்குப் பங்களிப்பு வழங்கியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது Shorts வீடியோவில் இசை பயன்படுத்தப்படும்போது மட்டுமே பார்வைகளின் எண்ணிக்கையையும் அதன் மூலம் கிரியேட்டர் நிதிக்கு ஒதுக்கப்படும் வருவாயையும் அது குறைக்கும். தற்போது வேறு எந்த வகையான மூன்றாம் தரப்பு உள்ளடக்கமும் Shorts வீடியோவுக்குப் பங்களிப்பு வழங்கியதாக எடுத்துக்கொள்ளப்படாது (அந்த உள்ளடக்கத்தில் Content ID வருமானம் ஈட்டுதல் கொள்கை அமைக்கப்பட்டிருந்தாலும்கூட). மற்ற வகை உள்ளடக்கத்திற்கான எங்கள் வருமானம் ஈட்டுதல் மாடலை இப்போதுதான் உருவாக்கத் தொடங்கி இருக்கிறோம். 
    • Shorts வீடியோவில் இசை உள்ளடக்கம் பயன்படுத்தப்படும்போது கிரியேட்டர் நிதியைக் கணக்கிட, பார்வைகளும் அதனால் கிடைக்கும் வருவாயும் எப்படிப் பிரித்து வழங்கப்படுகிறது என்பதை மேற்கண்ட உதாரணங்கள் விளக்குகின்றன.
  • மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் கிரியேட்டர் நிதியில் இருந்து தொகையை ஒதுக்குவதில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்படும்? வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்கு 'கிரியேட்டர் நிதியில்' இருந்து அவர்களுக்குரிய பங்கை வழங்கும்போது, ஒவ்வொரு கிரியேட்டருக்கும் அவர்களது Shorts வீடியோக்களுக்குக் கிடைத்த மொத்தப் பார்வைகளின் எண்ணிக்கையில் 100% ஒதுக்கப்படும். அவர்கள் தங்கள் Shorts வீடியோவில் ஏதேனும் இசையை (ட்ரீம் டிராக் உருவாக்கிய இசை உட்பட) பயன்படுத்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும் இது பொருந்தும். எனவே, Shorts வீடியோவில் இசையைப் பயன்படுத்துவது கிரியேட்டர் நிதியில் இருந்து கிரியேட்டருக்குத் தொகையை ஒதுக்குவதிலோ அவர்களின் வருவாய்ப் பகிர்வு விகிதத்திலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

Shortsஸுக்கான YouTube Premium சந்தா வருவாய்ப் பகிர்வு

YouTube Premium என்பது வீடியோக்களைப் பார்வையாளர்கள் விளம்பரமின்றிப் பார்க்கவும், பின்னணியில் பிளே செய்யவும், பதிவிறக்கவும், YouTube Music ஆப்ஸின் பிரீமியம் அணுகலைப் பெறவும் உதவும் கட்டணச் சந்தா சேவையாகும். இவை Shorts பார்வைகளுக்கும் பொருந்தும். 

Shortsஸின் வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள YouTube Premium நிகர வருவாயில் இருந்து YouTube 45% வழங்கும். YouTube Premium மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி இசை உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஈடுசெய்ய ஒதுக்கப்படும். ஒவ்வொரு கிரியேட்டருக்குமான பேமெண்ட்டுகள் அந்தந்த நாட்டிலுள்ள சந்தாதாரர்கள் மூலம் அவர்களின் Shorts வீடியோக்களுக்குக் கிடைக்கும் பார்வைகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும்.

உங்கள் Shorts ஊட்ட விளம்பர வருவாயை எங்கு பார்ப்பது?

கிடைக்கும்போதோ நீங்கள் Shorts மூலம் வருமானம் ஈட்டத் தொடங்கும் நாளில் இருந்தோ பிற செயல் அளவீடுகளுடன் சேர்த்து, கணிக்கப்பட்ட தினசரி Shorts ஊட்ட விளம்பர வருவாயை YouTube பகுப்பாய்வுகள் காட்டும். உங்கள் YouTube வருவாயை அறிந்துகொள்வது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

பேமெண்ட் வரம்புகளுக்கென ஏற்கெனவே உள்ள டைம்லைன்களும் பிற YouTubeக்கான AdSense விவரங்களும் பொருந்தும் – YouTubeக்கான AdSense குறித்து மேலும் அறிக.

Studio உள்ளடக்க நிர்வாகி

Studio உள்ளடக்க நிர்வாகிப் பயனர்களில் இசைக் கூட்டாளர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் மார்ச் 2023 மத்தியில் பதிவிறக்கக்கூடிய அறிக்கைகள் கிடைக்கும். தொடர்புடைய கூட்டாளர்களால் பதிவேற்றப்பட்ட வருமானம் ஈட்டும் Shortsஸின் தேதி, நாடு/பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வருவாய் விவரங்கள் இந்த அறிக்கைகளில் இருக்கும்.

Shorts வரவேற்பு குறித்து மேலும் அறிந்துகொள்ள வேண்டுமா? எங்கள் YouTube பகுப்பாய்வுகளுக்கான கிரியேட்டர் உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்!

YouTube Shorts வருமானம் ஈட்டுதல் பற்றி மேலும் அறிக 

Shorts விளம்பர வருவாய் ஏன் தொகுக்கப்படுகிறது?

நீள வடிவ வீடியோக்களில் இருந்து வேறுபட்ட ஒரு விளம்பர வடிவத்தை Shorts பயன்படுத்துவதால் வருவாய்ப் பகிர்வில் தனித்துவமான முறையைக் கையாள வேண்டியிருக்கிறது. வருவாயைத் தொகுத்து, பார்வைகளின் பங்கு அடிப்படையில் அதைப் பிரித்து வழங்குவதன் மூலம், தங்கள் வீடியோவுக்கு அடுத்து விளம்பரத்தைக் காட்டுபவர்களுக்கு மட்டுமல்லாமல் Shorts அனுபவத்தை வழங்கி வருமானம் ஈட்டும் அனைத்துக் கிரியேட்டர்களுக்கும் வருவாய் அளிப்பதே எங்கள் நோக்கமாகும். கூடுதல் பலனாக இசை உரிமம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், இசையைப் பயன்படுத்துவதால் குறைவாக வருமானம் ஈட்டுவது பற்றிக் கவலைப்படாமல் கிரியேட்டர்கள் தங்கள் படைப்புத்தன்மையின் இலக்கை அடைய இது உதவுகிறது.

Shorts வருவாயில் 45% உண்மையாகவே கிரியேட்டர்களுக்குக் கிடைக்குமா?

ஒவ்வொரு மாதமும் Shorts ஊட்டங்களில் வீடியோக்கள் இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தொகுக்கப்பட்டு Shorts கிரியேட்டர்களுக்கு அளிக்கவும் இசை உரிமத்திற்குக் கட்டணம் செலுத்தவும் பயன்படுத்தப்படும். கிரியேட்டர்கள் Shortsஸில் இசையைப் பயன்படுத்தினாலும் இல்லையென்றாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையிலிருந்து (இது கிரியேட்டர் நிதி என்றும் அழைக்கப்படுகிறது) 45% வருவாய் அவர்களுக்கு வழங்கப்படும்.

"இசை" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

Shortsஸில் “இசை” என்பது YouTubeன் இசைத்துறைக் கூட்டாளர்கள் வழங்குகின்ற அல்லது உரிமைகோருகின்ற உள்ளடக்கம் ஆகும். அசல் இசை ஆடியோ/டிராக்குகள், இசை வீடியோக்கள் அல்லது கலைஞரின் பேட்டிகள் போன்ற மற்ற இசை உள்ளடக்கம் இதில் அடங்கும். ட்ரீம் டிராக் உருவாக்கிய இசை உள்ளடக்கமும் இதிலடங்கும்.

Shorts நிதி மூலம் இப்போதும் என்னால் வருவாய் ஈட்ட முடியுமா?
இல்லை. பிப்ரவரி 1, 2023 அன்று Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வு அறிமுகமான பிறகு Shorts நிதி மூலம் கிரியேட்டர்கள் பணம் ஈட்ட முடியாது. Shorts நிதியைப் பெறும் பெரும்பாலானவர்கள் இந்தப் புதிய வருவாய்ப் பகிர்வு மாடல் மூலம் அதிக வருமானம் ஈட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இது Shorts நிதிக்கு மாற்றாக விளங்கும். ஜனவரி மாதச் செயல்பாடுகளுக்கான கடைசி Shorts நிதி அழைப்புகள் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாத மத்தியில் அனுப்பப்படும். அதற்குரிய பேமெண்ட்டுகள் மார்ச் மாதம் அனுப்பப்படும் ( பேமெண்ட் வரம்புகளுக்கும் தேவைகளுக்கும் உட்பட்டது).

Shorts ஊட்டங்களில் எனது Shorts இருந்தாலும் எனக்கு வருவாய் கிடைக்கவில்லை. YPPயில் இல்லாமலேயே அந்த விளம்பரங்களில் இருந்து எனக்குப் பணம் கிடைக்குமா?

இல்லை. Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்றுக்கொண்ட வருமானம் ஈட்டும் கூட்டாளர்கள் மட்டுமே Shortsஸின் விளம்பரம் மற்றும் YouTube Premium வருவாயைப் பெற முடியும். மீதமுள்ள வருவாய் இசை உரிமத்தின் கட்டணத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் அல்லது YouTube அதை வைத்துக்கொள்ளும்.
எனது Shorts வீடியோக்கள் மூலம் விளம்பர வருவாய் கிடைக்கிறதா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? Shorts மூலம் விளம்பர வருவாய் ஈட்டுவதை எப்படி நிறுத்துவது?

Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை நீங்கள் ஏற்றுக்கொண்ட தேதியிலிருந்து உங்கள் சேனலில் உள்ள அனைத்து Shorts பார்வைகளும் Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிப்ரவரி 1, 2023க்குப் பிறகு பதிவேற்றப்பட்ட Shortsஸின் பார்வைகளும் தானாகவே Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். Shortsஸைப் பதிவேற்றும்போது நீள வடிவ வீடியோக்களுக்குச் செய்வது போன்று வருமானம் ஈட்டுதலை நீங்கள் இயக்க வேண்டியதில்லை. Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலை ஏற்கும் முன் கிடைத்த Shorts பார்வைகள் Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வுக்குத் தகுதிபெறாது.

Shorts வீடியோவைப் பதிவேற்றிய பிறகு அதன் வருமானம் ஈட்டுதல் நிலையை YouTube Studioவின் உள்ளடக்கப் பிரிவில் பார்க்கலாம். Shorts விளம்பர வருவாய்ப் பகிர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பார்வைகள் கொண்ட Shorts பச்சை அல்லது மஞ்சள் நிற வருமானம் ஈட்டுதல் ஐகானைக் காட்டும். பல்வேறு ஐகான்கள் குறித்து மேலும் அறிய எங்கள் வருமானம் ஈட்டுதல் ஐகான் வழிகாட்டியைப் பாருங்கள்.

நீங்கள் Shorts மூலம் வருமானம் ஈட்டத் தொடங்கும் நாளில் இருந்து பிற செயல் அளவீடுகளோடு கணிக்கப்பட்ட தினசரி Shorts ஊட்ட விளம்பர வருவாயையும் YouTube பகுப்பாய்வுகள் காட்டும். உங்கள் YouTube வருவாயை அறிந்துகொள்வது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

உங்கள் சேனலில் விளம்பரங்கள் மூலம் Shorts பார்வைகளைக் கொண்டு வருமானம் ஈட்ட விரும்பவில்லையெனில் கிரியேட்டர்களுக்கான உதவி மையத்தைத் தொடர்புகொண்டு Shortsஸிற்கான வருமானம் ஈட்டுதல் மாடியூலில் இருந்து விலகிக்கொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5150533396606345267
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false