அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google தேடலில் விளையாட்டு கேம்களுக்கு கருத்தை வழங்குதல்

கால்பந்து போன்ற விளையாட்டு கேம்களை Googleளில் தேடும்போது சில கேம்களுக்கு உங்களால் கருத்தை வழங்கவோ பிறர் வழங்கிய கருத்தைப் படிக்கவோ முடியும்.

எல்லா மொழிகளிலும் பிராந்தியங்களிலும் Google தேடலில் உள்ள அனைத்து விளையாட்டு கேம்களுக்கும் கருத்திடும் அம்சம் இப்போதைக்கு இல்லை.

கவனத்திற்கு: கருத்தை இடுகையிடுவதற்கு அல்லது ரேட்டிங் செய்வதற்கு முன் தேடலில் பயனர்களால் இடுகையிடப்படும் உள்ளடக்கத்திற்கான Googleளின் கொள்கைகளைப் பார்க்கவும். கொள்கைகளைப் பின்பற்றாத கருத்துகள் காட்டப்படாமல் போகலாம்.

கருத்தை வழங்குதல்

உங்கள் கருத்துகள் பொதுவானவை. இதனால் நீங்கள் எழுதுவதை எவராலும் பார்க்க முடியும். என்னைப் பற்றி பக்கத்தில் உள்ள பெயர் உங்களின் கருத்துகளில் காட்டப்படும். கருத்தைப் பெயரில்லாமல் சேர்க்க முடியாது.

  1. Google.comமிற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. விளையாட்டு கேமைத் தேடவும். உதாரணமாக மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தைத் தேடிப் பார்க்கவும்.
  3. மேலோட்டப் பார்வைக்கான பெட்டியில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  4. கருத்துகள் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  5. பொதுக் கருத்தைச் சேர் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  6. உங்கள் கருத்தை உள்ளிடவும்.

கருத்தை நீக்குதல்

  1. Google.comமிற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. நீங்கள் கருத்து வழங்கிய கேமைத் தேடவும்.
  3. மேலோட்டப் பார்வைக்கான பெட்டியில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  4. கருத்துகள் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  5. உங்கள் கருத்தில் மேலும் மேலும் அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் பங்களிப்புகள் பக்கத்திலும் கருத்துகளை நீக்கலாம். பங்களிப்புகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அறிக.

பிறரின் கருத்துகளைப் படித்தல்

  1. Google.comமிற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. விளையாட்டு கேமைத் தேடவும். உதாரணமாக மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தைத் தேடிப் பார்க்கவும்.
  3. மேலோட்டப் பார்வைக்கான பெட்டியில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  4. கருத்துகள் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

கருத்தை விரும்புதல், விருப்பமில்லை எனத் தெரிவித்தல் அல்லது புகாரளித்தல்

  • கருத்தை விரும்ப, விரும்புகிறேன் என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  • கருத்தை விரும்பவில்லை எனத் தெரிவிக்க, விரும்பவில்லை என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  • விருப்பத்தையோ விருப்பமில்லை என்பதையோ மாற்ற அதை மீண்டும் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
  • கருத்தைப் பற்றி Googleளிடம் புகாரளிக்க மேலும் மேலும் அதன் பிறகு புகாரளி என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12173695084340540248
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false