Android சாதனத்தில் தரவைக் காப்புப் பிரதி எடுத்தல் அல்லது மீட்டெடுத்தல்

மொபைலில் இருந்து உங்கள் Google கணக்கிற்கு உள்ளடக்கம், தரவு, அமைப்புகள் ஆகியவற்றை நீங்கள் காப்புப் பிரதி எடுக்கலாம். காப்புப் பிரதி எடுக்கப்பட்ட தகவல்களை அசல் மொபைலிலோ வேறு Android மொபைல்களிலோ மீட்டெடுக்கலாம். பணிக் கணக்கு அல்லது பணிக்கு மட்டும் என்பதன் மூலம் தனிப்பட்ட சாதனத்தை அமைத்தாலோ நிறுவனத்திற்குச் சொந்தமான சாதனத்தை அமைத்தாலோ காப்புப் பிரதியைப் பயன்படுத்த முடியாது.

மொபைல் மற்றும் Android பதிப்பைப் பொறுத்து தரவை மீட்டெடுத்தல் மாறுபடும். உயர் Android பதிப்பிலிருந்து அதற்கும் குறைவான Android பதிப்பைக் கொண்டுள்ள மொபைலில் காப்புப் பிரதியை மீட்டெடுக்க முடியாது.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 9 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் தரவு எங்கே சேமிக்கப்படுகிறது?

காப்புப் பிரதிகள் Google சேவையகங்களில் பதிவேற்றப்பட்டு உங்கள் Google கணக்கின் கடவுச்சொல் மூலம் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன. சில தரவுகளை என்க்ரிப்ஷன் செய்வதற்கு உங்கள் மொபைலின் திரைப் பூட்டுக்கான பின் (PIN), பேட்டர்ன், கடவுச்சொல் போன்றவையும் பயன்படுத்தப்படும். எனவே தகவல்கள் பாதுகாப்பாகக் காப்புப் பிரதி எடுக்கப்படும்.

இந்தச் சூழல்களில் உங்கள் காப்புப் பிரதித் தரவு (Google Photosஸிற்குக் காப்புப் பிரதி எடுத்தவை தவிர) அழிக்கப்படும்:

  • 57 நாட்களாக உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால்
  • Android காப்புப்பிரதிச் சேவையை நீங்கள் முடக்கியிருந்தால்

உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுத்தல்

  1. படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுத்தல். படங்களையும் வீடியோக்களையும் Google Photos லைப்ரரியில் தானாகப் பதிவேற்றுவது எப்படி என்பதை அறிக.
  2. ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் காப்புப் பிரதி எடுத்தல். ஃபைல்களை Google Driveவில் காப்புப் பிரதி எடுப்பது எப்படி என அறிக.

தானியங்கு முறையில் உங்கள் மொபைல் தரவைக் காப்புப் பிரதி எடுத்தல்

முக்கியம்: காப்புப் பிரதி எடுக்கப்பட்ட தரவின் பாதுகாப்பை உறுதிசெய்ய, ஸ்வைப் அல்லது என்பதற்குப் பதிலாக, பின் (PIN), பேட்டர்ன் அல்லது கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.

உங்கள் ஃபைல்களைத் தானாகக் காப்புப் பிரதி எடுக்கும்படி சாதனத்தை அமைக்கலாம்.

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு காப்புப் பிரதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    உதவிக்குறிப்பு: இது முதல்முறை எனில், Google One காப்புப்பிரதி என்பதை இயக்கி, திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
  3. இப்போதே காப்புப் பிரதி எடு என்பதைத் தட்டவும்.

Google One காப்புப் பிரதி நிறைவடைய 24 மணிநேரம் வரை ஆகலாம். உங்கள் தரவு சேமிக்கப்பட்டதும், நீங்கள் தேர்ந்தெடுத்த தரவு வகைகளுக்குக் கீழே “இயக்கப்பட்டுள்ளது” என்று காட்டப்படும்.

காப்புப் பிரதிக் கணக்குகளைச் சேர்த்தல்/மாற்றுதல்

காப்புப் பிரதிக் கணக்கைச் சேர்த்தல்

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சிஸ்டம் அதன் பிறகு காப்புப் பிரதி எடு என்பதைத் தட்டவும். இந்தப் படிகள் உங்கள் மொபைல் அமைப்புகளுடன் பொருந்தவில்லை எனில் காப்புப் பிரதி எடுப்பதற்கான அமைப்புகள் ஆப்ஸைத் தேடுங்கள் அல்லது சாதன உற்பத்தியாளரிடமிருந்து உதவி பெறுங்கள்

  3. காப்புப் பிரதிக் கணக்கு அதன் பிறகு கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. தேவைப்பட்டால் உங்கள் மொபைலின் பின்(PIN), பேட்டர்ன் அல்லது கடவுச்சொலை உள்ளிடவும்.
  5. நீங்கள் சேர்க்க விரும்பும் கணக்கில் உள்நுழையவும்.

காப்புப் பிரதிக் கணக்குகளுக்கு இடையே மாறுதல்

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சிஸ்டம் அதன் பிறகு காப்புப் பிரதி எடு என்பதைத் தட்டவும். இந்தப் படிகள் உங்கள் மொபைல் அமைப்புகளுடன் பொருந்தவில்லை எனில் காப்புப் பிரதி எடுக்க அமைப்புகள் ஆப்ஸைத் தேடுங்கள் அல்லது சாதன உற்பத்தியாளரிடமிருந்து உதவி பெறுங்கள்.
  3. காப்புப் பிரதிக் கணக்கு என்பதைத் தட்டவும்.
  4. காப்புப் பிரதிகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தட்டவும்.
எவையெல்லாம் காப்புப் பிரதி எடுக்கப்படும்?
முக்கியமானது: அனைத்து ஆப்ஸாலும் அனைத்து அமைப்புகளையும் தரவையும் காப்புப் பிரதி எடுக்கவோ மீட்டெடுக்கவோ முடியாது. ஆப்ஸைக் குறித்துக் கண்டறிய, அதன் டெவெலப்பரைத் தொடர்புகொள்வது எப்படி என்பதை அறிக.

உங்கள் ஃபோனில் உள்ள தரவை Google One காப்புப்பிரதி தானாகவே சேமிக்கும். இதில் அடங்குபவை:

  • ஆப்ஸ் தரவு
  • அழைப்புப் பதிவு
  • தொடர்புகள்
  • அமைப்புகள்
  • SMS மெசேஜ்கள்
  • படங்களும் வீடியோக்களும்
  • MMS மெசேஜ்கள்

உதவிக்குறிப்பு: Google Photos லைப்ரரியில் உங்கள் படங்களையும் வீடியோக்களையும் தானாகக் காப்புப் பிரதி எடுக்கலாம். உங்கள் படங்களைக் காப்புப் பிரதி எடுப்பது எப்படி என அறிக.

தரவு & அமைப்புகளை நீங்களாகவே காப்புப் பிரதி எடுத்தல்

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு காப்புப் பிரதி என்பதைத் தட்டவும்.
    உங்கள் மொபைலின் அமைப்புகளுக்கு இந்தப் படிகள் பொருந்தவில்லை எனில் உங்கள் அமைப்புகள் ஆப்ஸில் காப்புப் பிரதி என உள்ளிட்டுத் தேடவும் அல்லது உங்கள் சாதன உற்பத்தியாளரிடமிருந்து உதவி பெறவும்.
  3. இப்போதே காப்புப் பிரதி எடு என்பதைத் தட்டவும்.

காப்புப் பிரதி எடுத்த பிறகு தரவை அழித்தல்

காப்புப் பிரதி எடுத்த பிறகு சாதனத்தில் உள்ள அனைத்தையும் அழிப்பதன் மூலம் அதை மீட்டமைக்கலாம். உங்கள் சாதனத்தை ஆரம்பநிலை அமைப்புகளுக்கு மீட்டமைப்பது எப்படி என்பதை அறிக.

உங்கள் தரவைப் புதிய மொபைலுக்கு மாற்றுதல்

அமைக்கப்பட்ட மொபைலில் Google கணக்கைச் சேர்க்கும்போது அந்த Google கணக்கில் ஏற்கெனவே காப்புப் பிரதி எடுக்கப்பட்டவை இந்த மொபைலில் இருக்கும்.

ரீசெட் செய்த மொபைலில், காப்புப் பிரதி எடுக்கப்பட்ட கணக்கை மீட்டெடுக்க திரையில் தோன்றும் படிகளைப் பின்பற்றுங்கள். கூடுதல் உதவிக்கு உங்கள் சாதன உற்பத்தியாளரிடமிருந்து உதவி பெறுங்கள்.

உங்கள் படங்களும் வீடியோக்களும் ஏற்கெனவே Google Photosஸில் இருக்கும். ஆனால், உங்கள் புதிய மொபைலை முதன்முறையாக அமைக்கும்போதோ ஆரம்பநிலைக்கு மீட்டமைத்த பிறகோ, நீங்கள் காப்புப் பிரதி எடுத்த மீதமுள்ள தரவை மீட்டெடுக்கலாம். அமைவின்போது, உங்கள் தரவை மீட்டெடுக்க, திரையில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.

தரவை மீட்டெடுக்க 24 மணிநேரம் வரை ஆகலாம்.

முக்கியம்: உயர் Android பதிப்பில் இருந்து அதற்கும் குறைவான Android பதிப்பைக் கொண்ட சாதனத்தில் காப்புப் பிரதியை மீட்டெடுக்க முடியாது. உங்கள் Android பதிப்பை எப்படித் தெரிந்துகொள்வது மற்றும் புதுப்பிப்பது என்று அறிந்துகொள்ளுங்கள்.

எந்தெந்தப் படங்கள், தரவு, அமைப்புகளைக் காப்புப் பிரதி எடுத்துள்ளீர்கள் எனப் பாருங்கள்

உங்கள் காப்புப் பிரதியில் என்னென்ன தரவும் ஆப்ஸும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு காப்புப் பிரதி எடு என்பதைத் தட்டவும்.
  3. “காப்புப் பிரதி பற்றிய விவரங்கள்” என்பதற்குக் கீழே, உங்கள் சாதனத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள தரவைப் பார்க்கவும்.
காப்புப் பிரதி எடுத்த தொடர்புகளை மீட்டெடுத்தல்

உங்கள் Google கணக்கில் தொடர்புகளைச் சேமித்திருந்தால் அவை தானாகவே ஒத்திசைக்கப்படும். மொபைல் அல்லது சிம் கார்டில் வேறு தொடர்புகள் இருந்தால் தொடர்புகளை நீங்களாகவே மீட்டெடுப்பது எப்படி என்பதை அறிக.

காப்புப் பிரதி உங்கள் தரவை எவ்வாறு கையாளுகிறது?

முக்கியமானது: காப்புப் பிரதி சேகரிக்கும் தரவானது அதைப் பரிமாற்றும்போதே என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

காப்புப் பிரதி உங்களின் தரவை Googleளின் காப்புப் பிரதி சேவையகங்களுக்கு அனுப்புகிறது, சாதனங்களுக்கிடையே தரவை மாற்றவும் உதவுகிறது. உங்கள் சாதனத்தில் சேவைகளைச் செயல்படுத்த காப்புப் பிரதி குறிப்பிட்ட தகவல்களைச் சேகரிக்கிறது. Google Play சேவைகளை இந்தச் செயல்பாடுகளில் சில பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காப்புப் பிரதி இவற்றைச் சேகரிக்கிறது:

  • உங்கள் தனிப்பட்ட காப்புப் பிரதியின் ஒரு பகுதியாக மெசேஜ்கள், தொடர்புகள், ஆப்ஸ் அமைப்புகள், விருப்பத்தேர்வுகள் ஆகியவைச் சேகரிக்கப்படுகின்றன.
  • காப்புப் பிரதிகள் உங்களுடனும் உங்கள் கணக்குடனும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ள தனிப்பட்ட அடையாளங்காட்டிகள் சேகரிக்கப்படுகின்றன.
  • பகுப்பாய்வுகள் மற்றும் பிழையறிந்து திருத்துதல் நோக்கங்களுக்காகச் சிதைவின் பதிவுகளும் பிழை கண்டறிதலும் சேகரிக்கப்படுகின்றன.

காப்புப் பிரதியை முடக்குதல்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3223080757082246348
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false