Google Chatடில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஆப்ஸ் என்பவை சிறப்புக் கணக்குகள் ஆகும். இவற்றுக்கு மெசேஜ் செய்வதன் மூலம் Chatடின் பின்வரும் சேவைகளைப் பெறலாம்:
  • தகவல்களைத் தேடுதல்.
  • மீட்டிங்கைத் திட்டமிடுதல்.
  • பணிகளைச் செய்தல்.

Google Chatடில் ஆப்ஸ் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

Chatடில் ஓர் ஆப்ஸைத் தொடர்புகொள்ளும்போது ஆப்ஸால் இவற்றை அறிந்துகொள்ள முடியும்:

உரையாடலில் உள்ள பிறரின் அடிப்படைத் தகவல்களை ஆப்ஸால் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் நேரடியாக ஆப்ஸைத் தொடர்புகொள்ளும் வரை அவர்களது மின்னஞ்சல் முகவரிகளையோ தோற்றப் படங்களையோ பார்க்க முடியாது.

Meet, Google Drive போன்ற சில ஆப்ஸை Google உருவாக்கிப் பராமரித்து வருகிறது.

மூன்றாம் தரப்பு மென்பொருள் விற்பனையாளர்கள் பிற ஆப்ஸை உருவாக்கிப் பராமரித்து வருகின்றனர். நீங்கள் மூன்றாம் தரப்பு ஆப்ஸைப் பயன்படுத்தினால் வழங்குநரின் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் படித்துப் பார்த்து, மூன்றாம் தரப்பினர் உங்கள் தரவைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியம்: பணி அல்லது பள்ளிக் கணக்குகளில், நிர்வாகி உங்கள் சார்பாக ஆப்ஸை நிறுவலாம். அதன் பிறகு, அந்த ஆப்ஸ் உங்களுக்கு நேரடி மெசேஜ்களை அனுப்பலாம். அந்த ஆப்ஸை உங்களால் நிறுவல் நீக்க முடியாது. ஆனால் அந்த ஆப்ஸ் மூலமான உரையாடல்களுக்கான அறிவிப்புகளை முடக்கிக்கொள்ளலாம்.

உதவிக்குறிப்பு:

உரையாடல் அல்லது ஸ்பேஸில் ஆப்ஸைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில்​ Google Chatடிற்குச் செல்லவும். உங்கள் Gmail கணக்கிற்கும் நீங்கள் செல்லலாம். 
  2. ஓர் உரையாடலையோ ஸ்பேஸையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. மேற்புறத்தில், ஸ்பேஸ் பெயரையோ உரையாடல் பங்கேற்பாளர்களையோ கிளிக் செய்யவும். 
  4. ஆப்ஸ் & ஒருங்கிணைப்பு அதன் பிறகு ஆப்ஸைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஆப்ஸ் பெயரை டைப் செய்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆப்ஸைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உரையாடல் அல்லது ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும். உங்கள் Gmail கணக்கிற்கும் நீங்கள் செல்லலாம். 
  2. ஓர் உரையாடலையோ ஸ்பேஸையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. மேற்புறத்தில், ஸ்பேஸ் பெயரையோ உரையாடல் பங்கேற்பாளர்களையோ கிளிக் செய்யவும்.
  4. ஆப்ஸ் & ஒருங்கிணைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஆப்ஸை அகற்ற, மூன்று புள்ளி மெனுவை  கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

Chat ஆப்ஸைக் கண்டறிந்து நிறுவுதல்

முக்கியம்: பணி அல்லது பள்ளிக் கணக்கை நீங்கள் வைத்திருந்தால், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆப்ஸை உங்கள் நிறுவனம் கட்டுப்படுத்தும். 

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும். உங்கள் Gmail கணக்கிற்கும் நீங்கள் செல்லலாம். 
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • புதிய உரையாடல்  என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு ஆப்ஸைக் கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Chat பக்கப்பட்டியில், செருகு நிரல்களைப் பெறுவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  3. தேடியோ உலாவியோ ஆப்ஸைக் கண்டறியவும்.
  4. ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ஆப்ஸை நிறுவவும் அல்லது ஸ்பேஸில் சேர்க்கவும்.

உதவிக்குறிப்புகள்:

மெசேஜ்களில் ஸ்லாஷ் கட்டளைகளைப் பயன்படுத்துதல்

ஆப்ஸுடன் விரைவாகத் தொடர்புகொள்ள Google Chatடில் ஸ்லாஷ் கட்டளைகளைப் பயன்படுத்தவும். கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஃபார்வேர்டு ஸ்லாஷை (/) டைப் செய்தவுடன் கட்டளைகளின் பட்டியல் காட்டப்படும்.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்லாஷ் கட்டளைகளை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். ஆப்ஸின் பதில்கள் உரையாடலில் காட்டப்படும். 

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. உரையாடல் அல்லது ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பதிலளிக்கும் பகுதியில் ஃபார்வேர்டு ஸ்லாஷை (/) டைப் செய்யவும்.
    ஆப்ஸின் பட்டியல் காட்டப்படும். ஒவ்வொரு ஆப்ஸின் பெயருக்கும் கீழ் கட்டளைகளின் பட்டியல் காட்டப்படும். எழுத்துகளை டைப் செய்யும்போது பட்டியலில் அதனுடன் பொருந்தும் கட்டளைகள் மட்டும் காட்டப்படும்.
  4. ஒரு கட்டளையைத் தேர்ந்தெடுத்து, கூடுதல் தகவலை டைப் செய்யவும்.
  5. Enter பட்டனை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உரையாடல் அல்லது ஸ்பேஸில் ஏற்கெனவே ஆப்ஸ் இல்லை என்றால் நீங்கள் மெசேஜ் அனுப்பியவுடன் அது சேர்க்கப்படும்.

ஆப்ஸ் தொடர்பாக உதவி பெறுதல்

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. ஆப்ஸ் மூலம் உரையாடல் அல்லது ஸ்பேஸைத் திறக்கவும்.
  3. கிடைக்கக்கூடிய கட்டளைகளைப் பார்க்க:
    • ஆப்ஸுடனான 1:1 உரையாடலில் help என டைப் செய்யவும்.
    • ஸ்பேஸ் அல்லது குழு உரையாடலில், @appname help என்று டைப் செய்யவும். இங்கே appname என்பது ஆப்ஸின் பெயராகும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14662696710470775998
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false