Google Chat அறிவிப்புகளை இயக்குதல்/முடக்குதல்

சமீபத்தில் அதிகமாகப் பயன்படுத்திய சாதனங்களில் அறிவிப்புகள் காட்டப்படும். Chatடில் செயலற்ற நிலையில் இருந்தால் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ள எல்லாச் சாதனங்களிலும் அறிவிப்புகள் காட்டப்படும்.

நீங்கள் மெசேஜை உருவாக்கும்போதும் அதற்குப் பதிலளிக்கும்போதும் பிறர் உங்களை @ மூலம் குறிப்பிடும்போதும் தானாகவே அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

தானியங்கு அறிவிப்புகளை முடக்கலாம் அல்லது இவற்றின்படி அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம்:

  • சாதனம்
  • உரையாடல்
  • ஸ்பேஸ்
  • மெசேஜ் தொடர்

நீங்கள் பயன்படுத்தும் Google Chat, Gmail போன்ற தயாரிப்புகளில் அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம். ஒரு மெசேஜ் வந்து 12 மணிநேரத்திற்கு மேலாகியும் அதை நீங்கள் படிக்காமல் இருந்தால் அதற்கான மின்னஞ்சல் நினைவூட்டல்களைப் பெறலாம்.

உதவிக்குறிப்பு: பல Google கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் ஒவ்வொரு கணக்கிற்கும் அறிவிப்பு அமைப்புகளை வெவ்வேறாக அமைக்கலாம்.

Google Chat அறிவிப்புகளை இயக்குதல்/முடக்குதல் 

அறிவிப்புகளை இயக்குதல்

Google Chatடில் அறிவிப்புகளை இயக்கவும்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.  
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Google Chat மெசேஜ்களுக்கான அறிவிப்புகளை இயக்க, "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதற்குக் கீழேயுள்ள "அரட்டை அறிவிப்புகளை அனுமதி" என்பதற்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
உதவிக்குறிப்பு: படிக்காத மெசேஜ்களுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகளை இயக்க/முடக்க, "மின்னஞ்சல் அறிவிப்புகள்" என்பதன் கீழே @குறிப்பிடல்கள் & நேரடி மெசேஜ்களுக்கு மட்டும் அல்லது முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அறிவிப்புகள் இயக்கப்பட்டிருப்பதைச் சரிபார்க்கவும்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.  
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதற்குக் கீழேயுள்ள ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. 'எடுத்துக்காட்டு' அறிவிப்பு காட்டப்படவில்லை எனில்:

Gmailலில் அறிவிப்புகளை இயக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அறிவிப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் உள்ள Chat & Meet பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. "அரட்டை அறிவிப்பு அமைப்புகள்" என்பதன் கீழே உள்ள அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Google Chat மெசேஜ்களுக்கான அறிவிப்புகளை இயக்க, "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதன் கீழே உள்ள "அரட்டை அறிவிப்புகளை அனுமதி" என்பதற்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.

அறிவிப்புகள் இயக்கப்பட்டிருப்பதைச் சரிபார்க்கவும்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் உள்ள Chat & Meet பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. "அரட்டை அறிவிப்பு அமைப்புகள்" என்பதற்கு அடுத்துள்ள அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதற்குக் கீழேயுள்ள ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. 'எடுத்துக்காட்டு' அறிவிப்பு காட்டப்படவில்லை எனில்:

அறிவிப்புகளை முடக்குதல்

Google Chatடில் அறிவிப்புகளை முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Google Chat மெசேஜ்களுக்கான அறிவிப்புகளை முடக்க, "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதற்குக் கீழேயுள்ள "அரட்டை அறிவிப்புகளை அனுமதி" என்பதற்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுநீக்கவும்.
உதவிக்குறிப்பு: அறிவிப்புகளைத் தற்காலிகமாக முடக்க, “தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று உங்கள் நிலையை அமைக்கவும்.

Gmailலில் Google Chat அறிவிப்புகளை முடக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் உள்ள Chat & Meet பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. "அரட்டை அறிவிப்பு அமைப்புகள்" என்பதற்கு அடுத்துள்ள அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Google Chat மெசேஜ்களுக்கான அறிவிப்புகளை முடக்க, "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள "அரட்டை அறிவிப்புகளை அனுமதி" என்பதற்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுநீக்கவும்.
உதவிக்குறிப்பு: அறிவிப்புகளைத் தற்காலிகமாக முடக்க, “தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று உங்கள் நிலையை அமைக்கவும்.

Google Chat அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்குதல் 

தலைப்பு அல்லது குழு உரையாடலின்படி குழுவாக்கிய ஸ்பேஸுக்கான அறிவிப்புகளைப் பிரத்தியேகப்படுத்துதல்
  1. Google Chat அல்லது Gmail தளத்திற்குச் செல்லவும்.
  2. உரையாடலின் உறுப்பினர்கள் அல்லது ஸ்பேஸின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உரையாடலின் உறுப்பினர்கள் அல்லது ஸ்பேஸின் பெயருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி Down arrow icon அல்லது கூடுதல் விருப்பங்கள் மேலும் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • எப்போதும் அறிவிப்பை அனுப்பு: புதிய மெசேஜ்கள் அனைத்திற்கும் புஷ் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். அறிவிப்புப் புள்ளியும் காட்டப்படும்.
    • சிலவற்றுக்கு மட்டும் அறிவிப்பை அனுப்பு: உங்களை @ மூலம் குறிப்பிடுவது, நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடரில் ஒரு புதிய மெசேஜ் வருவது, உரையாடலில் யாராவது “@அனைவருக்கும்” என்று குறிப்பிடுவது ஆகியவற்றின்போது புஷ் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். அறிவிப்புப் புள்ளியும் காட்டப்படும்.
      • தலைப்பின்படி குழுவாக்கிய ஸ்பேஸ்களுக்கு: எவரேனும் ஒரு புதிய தலைப்பைத் தொடங்கும்போது அறிவிப்பைப் பெற “புதிய தலைப்புகளுக்கு அறிவிப்பை அனுப்பு” என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
    • அறிவிப்புகளை முடக்கு: புஷ் அறிவிப்புகள் எதுவும் அனுப்பப்படாது, ஆனால் @குறிப்பிடல்களுக்கும் @அனைவருக்கும் என்று குறிப்பிடப்பட்ட மெசேஜ்களுக்கும் அறிவிப்புப் புள்ளி தொடர்ந்து காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: அறிவிப்புகளை முடக்கினாலும் @குறிப்பிடல்களுக்கும் நேரடி மெசேஜ்களுக்கும் சிவப்பு அறிவிப்புப் புள்ளியைத் தொடர்ந்து பெறுவீர்கள். 

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸிற்கு அறிவிப்புகளைப் பிரத்தியேகப்படுத்துதல்

மெசேஜ் தொடரைத் தொடங்கிய பிறகு புதிய மெசேஜ்கள் பற்றிய அறிவிப்பை எப்படி, எப்போது பெறுவது என்பதை நீங்கள் மாற்றலாம். ஸ்பேஸில் அறிவிப்புகளை எப்படிப் பிரத்தியேகமாக்குவது என அறிக.

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸின் அறிவிப்பு அமைப்புகளைப் பார்க்க அல்லது மாற்ற:

  1. ஸ்பேஸின் பெயருக்கு அருகிலுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ் தோன்றுதல் அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  2. அறிவிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அறிவிப்புகளுக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • அனைத்தும்: புதிய மெசேஜ்கள் மற்றும் நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்களில் வரும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகள். 
      • உதவிக்குறிப்பு: இது இயல்பு அமைப்பாகும்.
    • பின்தொடர்பவை: பதில்கள், நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்கள் மற்றும் @குறிப்பிடல்கள் பற்றிய அறிவிப்புகள். 
    • எதுவும் வேண்டாம்: அறிவிப்புகள் காட்டப்படாது, உங்களை யாரேனும் @குறிப்பிட்டால் ஒரு புள்ளி தோன்றும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸில் உள்ள மெசேஜ் தொடரைப் பின்பற்றும்போது அந்த மெசேஜ் தொடரில் ஏதேனும் செயல்பாடு மேற்கொள்ளப்படும்போது சிவப்புப் புள்ளி மூலம் உங்களுக்கு அதுகுறித்துத் தெரிவிக்கப்படும். ஸ்பேஸில் உள்ள ஒவ்வொரு மெசேஜ் தொடருக்கு அடுத்தும் படிக்கப்படாத மெசேஜ்களின் எண்ணிக்கை காட்டப்படும்.

 

நேரடி மெசேஜுக்கான அறிவிப்புகளை இயக்குதல்/முடக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Google Chatடைத் திறக்கவும் .
  2. நேரடி மெசேஜுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை  மேலும் அதன் பிறகு அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அறிவிப்புகளை முடக்கு அல்லது அறிவிப்புகளை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விருப்பத்திற்குரியது: தடிமனான எழுத்துகளில் காட்டப்படுவதையும் உரையாடல் பட்டியலின் மேற்பகுதிக்கு உரையாடல் நகர்த்தப்படுவதையும் தடுக்க, "உரையாடலை முடக்கு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

Google Chatடில் அறிவிப்பு ஒலிகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "அறிவிப்பு ஒலிகள்" என்பதற்குக் கீழே, அறிவிப்புகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒலியைத் தேர்ந்தெடுக்கவும்.

Gmailலில் Google Chat அறிவிப்புகளுக்கான ஒலிகளைப் பிரத்தியேகமாக்கல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் உள்ள Chat & Meet பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. "அரட்டை அறிவிப்பு அமைப்புகள்" என்பதற்கு அடுத்துள்ள அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "அறிவிப்பு ஒலிகள்" என்பதற்குக் கீழே, அறிவிப்புகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒலியைத் தேர்ந்தெடுக்கவும்.
Gmailலில் செயலில் இல்லாதபோது பெறும் அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
கம்ப்யூட்டரில் Gmail அல்லது Google Chatடில் நீங்கள் செயலில் இல்லாமல் இருந்தால் Google Chat அறிவிப்புகள் கம்ப்யூட்டருக்குப் பதிலாக உங்கள் மொபைல் சாதனத்திற்கு அனுப்பப்படும். இயல்பாக, நீங்கள் கம்ப்யூட்டரில் Gmail அல்லது Google Chatடில் 30 வினாடிகளுக்கு மேல் செயலில் இல்லாமல் இருந்தால் இணைய உலாவியில் நீங்கள் செயலில் இருந்தாலும் கம்ப்யூட்டரில் செயலில் இல்லை என்றே கருதப்படும்.
Chrome உலாவியைப் பயன்படுத்தினால் Chromeமில் நீங்கள் செயலில் இல்லாதபோது உரையாடல் அறிவிப்புகளை உங்கள் மொபைல் சாதனத்தில் மட்டும் பெறும்படி இந்த அமைப்பை மாற்றலாம்.
"இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தும்போது மொபைல் அறிவிப்புகளை இடைநிறுத்துங்கள்" என்ற பேனர் தோன்றும். செயலில் இல்லாதபோது பெறும் அறிவிப்புகளை அனுமதிக்க, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பேனர் தோன்றாவிட்டால் உங்கள் Chrome அமைப்புகளுக்குச் சென்று செயலில் இல்லாத நிலையைக் கண்டறிவதை அனுமதிக்கவும்:

  1. chrome://settings/content/idleDetection தளத்திற்குச் செல்லவும்.
  2. "உங்கள் சாதனத்தை நீங்கள் எப்போது தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிய தளங்கள் அனுமதி கேட்கலாம்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  3. "பிரத்தியேகமாக்கப்பட்ட போக்குகள்" என்பதன் கீழ், உங்கள் சாதனத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அதை அறிய நீங்கள் அனுமதிக்கும் தளங்களின் பட்டியலில் mail.google.com தளத்தையோ chat.google.com தளத்தையோ சேர்க்கவும்.
    • நீங்கள் அனுமதிக்க விரும்பும் தளங்களைச் சேர்க்க, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

அறிவிப்புகள் எங்கே காட்டப்படும்? 

Google Chat மொபைல் ஆப்ஸ் திறந்திருக்கும்போது ஆப்ஸில் அறிவிப்புகள் காட்டப்படும். இவற்றில் அறிவிப்புகள் காட்டப்படாது:

  • இணையத்தில் chat.google.com தளத்தில்
  • Chat டெஸ்க்டாப் ஆப்ஸில்
  • Gmailலில் உள்ள Chatடில்

Chat ஆப்ஸ் திறந்திருக்கும்போது "Chat அறிவிப்புகளை இங்கே பெறுகிறீர்கள்" என்ற மெசேஜ் காட்டப்படும். தனித்தியங்கும் Chat ஆப்ஸைப் பற்றி மேலும் அறிக.

முக்கியம்: iPhone அல்லது iPadஐப் பயனர் பயன்படுத்தினால், நீங்கள் உரையாடல் மெசேஜ்களை அனுப்பும்போது அந்த அறிவிப்புகளில் உங்கள் சுயவிவரப் படம் காட்டப்படலாம். உங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவது எப்படி என்று மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்


Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13145631556237869765
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false