Calendar செருகு நிரல்களைக் கண்டறிந்து நிறுவுதல்

Google Calendarரில் பயன்படுத்துவதற்கான பல்வேறு செருகு நிரல்களை Google Workspace Marketplaceஸில் பார்க்கலாம்.

செருகு நிரல்களை நிறுவுதல்

முக்கியம்: பணி அல்லது பள்ளிக் கணக்குகளைப் பயன்படுத்தும்போது "செருகு நிரல்களைப் பெறு" என்பது காட்டப்படவில்லை என்றாலோ செருகு நிரலை நிறுவ முடியவில்லை என்றாலோ உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்து அதன் பிறகு செருகு நிரல்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Marketplaceஸில் இருந்து செருகு நிரலை நிறுவவும். செருகு நிரல்களை நிறுவுவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: Calendarரில் Marketplaceஸை அணுக, வலதுபுறம் உள்ள பக்கவாட்டு பேனலில் செருகு நிரல்களைப் பெறுவதற்கான ஐகானை Plus கிளிக் செய்யவும். பக்கவாட்டு பேனல் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Calendar செருகு நிரல்களைக் கண்டறியுங்கள்

கான்ஃபிரன்ஸிங் செருகு நிரல்களை அமைத்தல்

முக்கியம்: செருகு நிரல் வேலை செய்யவில்லை என்றால் Marketplace மூலம் ஆப்ஸ் டெவெலப்பரைத் தொடர்புகொள்ளுங்கள்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் இடது மூலையில் உள்ள உருவாக்கு சேர் அதன் பிறகு நிகழ்வு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "Google Meet வீடியோ கான்ஃபிரன்ஸிங்கைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Dropdown கிளிக் செய்யவும்.
  4. பயன்படுத்த விரும்பும் செருகு நிரலைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் கணக்கைத் தேர்வுசெய்து, செருகு நிரலில் உள்நுழைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

செருகு நிரல்களை நிறுவல் நீக்குதல்

முக்கியம்: நீங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்குகளைப் பயன்படுத்தினால், உங்கள் நிர்வாகி மட்டுமே சில ஆப்ஸை நிறுவல் நீக்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்து அதன் பிறகு செருகு நிரல்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Marketplaceஸில் செருகு நிரலை நிறுவல் நீக்கவும். செருகு நிரல்களை நிறுவல் நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4585899186829302047
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false