பிசினஸ் நிறுவனங்களுக்கான Google Business Profileலின் கூடுதல் சேவை விதிமுறைகள்

கடைசியாக மாற்றியது: ஏப்ரல் 3, 2024

பிசினஸ் நிறுவனங்கள், Googleளில் பிசினஸ் சுயவிவரத்தை (“Business Profile”) உருவாக்கி நிர்வகிக்க Google Business Profile சேவைகள் அனுமதிக்கின்றன.

Google Business Profile சேவைகளையும் தொடர்புடைய சேவைகள், அம்சங்கள், செயல்பாடுகள் (“Business Profile சேவைகள்”) ஆகியவற்றையும் பயன்படுத்த, பிசினஸ் நிறுவனம் இவற்றை ஏற்க வேண்டும்: (1) Google சேவை விதிமுறைகள் மற்றும் (2) இந்த Google Business Profile கூடுதல் சேவை விதிமுறைகள் (“Google Business Profile கூடுதல் விதிமுறைகள்”). இந்த ஆவணங்கள் மொத்தமாக "விதிமுறைகள்" என்று அழைக்கப்படுகின்றன. பிசினஸ் சார்பாக விதிமுறைகளை ஏற்கும் தனிநபர், Business Profileலில் பட்டியலிடப்பட்டுள்ள பிசினஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்க வேண்டும்.

விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். Business Profile சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது எங்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், உங்கள் Business Profile தகவல்களுக்கான உரிமம் எப்படிப் பெறப்படுகிறது, அந்தத் தகவல்களை எப்படி நாங்கள் பயன்படுத்தக்கூடும், உங்களிடம் நாங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் ஆகியவற்றை இவை தெளிவுபடுத்துகின்றன. இந்த Google Business Profile கூடுதல் விதிமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள “நீங்கள்” என்ற வார்த்தை Business Profile சேவைகளைப் பயன்படுத்தும் பிசினஸ் நிறுவனத்தைக் குறிக்கும்.

Google Business Profileலின் இந்தக் கூடுதல் விதிமுறைகள், Google சேவை விதிமுறைகளுடன் முரண்பட்டால் Business Profileலின் இந்தக் கூடுதல் விதிமுறைகள் மட்டுமே Business Profile சேவைகளுக்குப் பொருந்தும்.

உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பவை

உங்கள் Business Profileலில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்திற்கு நீங்கள்தான் பொறுப்பு. அதாவது Business Profile சேவைகளைப் பயன்படுத்தும்போது Google சேவை விதிமுறைகளில் உள்ள அடிப்படை நடத்தை விதிகளைப் பின்பற்றுவதுடன் இவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும்:

  • பொருந்தும் அனைத்து உரிமங்களையும் அனுமதிகளையும் பெறுவது உட்பட உங்கள் நிறுவனத்தை நடத்தும்போதும் விளம்பரப்படுத்தும்போதும், பொருந்தும் சட்டங்களுடனும் தொழில்துறைக்கான சிறந்த நடைமுறைகளுடனும் இணங்குவது.
  • உங்கள் உள்ளடக்கம் சரியானதாகவும் சமீபத்தியதாகவும் முழுமையானதாகவும் இருப்பதை உறுதிசெய்வது.
  • தேவையான அனைத்துப் பொறுப்புதுறப்புகளையும் எச்சரிக்கைகளையும் அறிவிப்புகளையும் வழங்குவது (அல்லது அவற்றில் எதையேனும் வெளியிடுவதற்கு Googleளைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்றால் அவை உங்கள் நிறுவனத்திற்குப் போதுமானதாக இருப்பதை உறுதிசெய்வது).
  • Business Profile சேவைகளுக்கு (“கொள்கைகள்”) பொருந்தும் கொள்கைகளுக்கு இணங்குவது. Business Profile தொடர்பான கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
Business Profileலில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தையும் பிற உள்ளடக்கத்தையும் மதிப்பிடுதல்

உங்கள் Business Profileலுக்கு Google பொறுப்பாகாது. ஆனால் நீங்கள் அதை உரிமைகோரியதும், Business Profile சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் வழங்கும் உள்ளடக்கத்தை மதிப்பிட எங்களுக்கு உரிமையுண்டு என்றாலும் அதை நாங்கள் கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்றில்லை என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.

உங்கள் Business Profileலில் உள்ள தகவல்கள் முழுமையானதாகவும் தொடர்புடையதாகவும் சமீபத்தியதாகவும் இருப்பதை உறுதிசெய்துகொள்வதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு செய்வதால், Googleளில் காட்டப்படும் பிசினஸ் விவரங்கள் உங்களுக்கும் பயனர்களுக்கும் முடிந்தளவு பயனுள்ளதாகவே இருக்கும். அதாவது நாங்கள் அவ்வப்போது உங்கள் உள்ளடக்கத்தைக் காட்டாமல் இருக்கலாம் (உதாரணமாக, உங்கள் உள்ளடக்கம் துல்லியமாக இல்லை என நம்பகமான தரப்புகள் குறிப்பிட்டால் அதைக் காட்டமாட்டோம்). உங்கள் உள்ளடக்கத்தின் திருத்தப்பட்ட பதிப்பையோ உங்கள் உள்ளடக்கத்திற்குப் பதிலாக வேறொரு மூலத்தில் இருந்து பெறப்பட்ட உள்ளடக்கத்தையோ காட்டுவதற்கும் நாங்கள் தீர்மானிக்கலாம். Google எப்படி தகவல்களைப் பெறுகிறது என்பது குறித்தும் எப்படி அவற்றை Business Profileகளில் காட்டுகிறது என்பது குறித்தும் மேலும் அறிக.

உங்கள் உள்ளடக்கத்திற்கான உங்களது அணுகல்

இங்கே விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டு, Business Profile சேவைகளில் உள்ள உங்கள் உள்ளடக்கத்திற்கான அணுகலை நீங்கள் பராமரிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்குத் தரவின் நகலை நீங்கள் பதிவிறக்கலாம் (பொருந்தக்கூடிய Google Business Profile தரவு உட்பட).

உங்கள் Google கணக்கை மாற்றுவது, நிர்வகிப்பது, ஏற்றுவது, நீக்குவது ஆகியவை குறித்து இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள எங்கள் தனியுரிமைக் கொள்கை பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கணக்கிற்கான Googleளின் அணுகல்

கணக்கை அணுக எங்களுக்கு அனுமதி வழங்கினால் உங்கள் Business Profileலை நிர்வகிக்க உதவுவோம்.

தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள்
பொருந்தக்கூடிய அளவு வரை, https://privacy.google.com/businesses/gdprcontrollerterms/ தளத்தில் உள்ள Google கண்ட்ரோலர்-கண்ட்ரோலர் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள் (“தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள்”) பயன்படுத்தப்படும். தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டவை தவிர மற்ற தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளை Google மாற்றாது.
உரிமம்

நீங்கள் வழங்கியுள்ள Business Profile குறித்த அடிப்படைத் தகவல்கள், அறிவுசார் சொத்துரிமை மூலம் பாதுகாக்கப்பட்டால் அவை இந்த உரிமத்தில் அடங்கும்.

நிறுவனத்தின் பெயர், இருப்பிடம், ஃபோன் எண், வகை, வேலைநேரம், இணையதளம் போன்ற Business Profile குறித்த அடிப்படைத் தகவல்களை மீண்டும் உருவாக்குவதற்கும், தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வதற்கும், திருத்துவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும், வெளியிடுவதற்கும், பொதுவில் செயல்படுத்துவதற்கும், பொதுவில் காட்டுவதற்கும், விநியோகிப்பதற்கும், அதிலிருந்து வருவிக்கப்பெற்ற உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும், நிரந்தரமான (அதாவது அறிவுசார் சொத்துரிமை மூலம் அந்தத் தகவல்கள் பாதுகாக்கப்படும் வரை), திரும்பப்பெற முடியாத, உலகளாவிய, உரிமத்தொகை இல்லாத மற்றும் பிரத்தியேகமற்ற உரிமத்தை Googleளுக்கு வழங்குகிறீர்கள். இந்த உரிமத்தைப் பொருட்படுத்தாமல், உங்கள் Business Profile எண்ணுக்குத் தானியங்கு அழைப்புகளைச் செய்யவும் மெசேஜ்களை அனுப்பவும் Google Assistantடுக்கு வழங்கிய ஒப்புதலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். Google Assistantடிடம் இருந்து வரும் அழைப்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

இத்துடன், பொருந்தும் Google சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்தத் தகவல்களைத் திருத்துவதற்கான உரிமை உட்பட அதை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்குமான உரிமையைப் பிற Google சேவைகளின் பயனர்களுக்கும் வழங்குகிறீர்கள்.

உங்கள் Business Profileலுக்கு நீங்கள் வழங்கும் பிசினஸ் படங்கள் போன்ற மற்ற எல்லா உள்ளடக்கத்திற்கான உரிமங்களும் Google சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டு Googleளுக்கு வழங்கப்படும்.

பிற தயாரிப்புகளும் சேவைகளும்
உங்கள் கணக்கில் உள்ள பிற தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்குமான அணுகல் உங்களுக்கு வழங்கப்படலாம். இந்தத் தயாரிப்புகளும் சேவைகளும் அவற்றுக்குரிய தனிப்பட்ட விதிமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் (இவை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்வோம்) உட்பட்டவையாக இருக்கலாம்.
விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றங்கள்

இந்த விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை Google எப்போது வேண்டுமானாலும் எந்தவித அறிவிப்புமின்றிச் செய்யலாம். இந்த விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டால் அதுகுறித்த முன்கூட்டிய அறிவிப்பை Google வழங்கும். விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றங்கள் கடந்த காலத்திற்குப் பொருந்தாது. மேலும், இந்தப் பக்கத்தில் இடுகையிடப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகே அவை அமலுக்கு வரும். இருப்பினும், சட்டப்பூர்வக் காரணங்களுக்காக அல்லது நடந்துகொண்டிருக்கும் தவறான பயன்பாட்டைத் தடுப்பது போன்ற அவசரச் சூழ்நிலைகளில் செய்யப்படும் மாற்றங்கள் அறிவித்த உடனே அமலுக்கு வரும்.

முடக்குதல்

பின்வரும் சூழல்களில் Business Profile சேவைகளை நீங்கள் அணுகுவதை அல்லது பயன்படுத்துவதை முழுமையாகவோ பகுதியளவோ கட்டுப்படுத்த, இடைநிறுத்த அல்லது முடக்க Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது:

  1. இந்த விதிமுறைகள், ஏதேனும் கொள்கை அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களை நீங்கள் மீறுதல்.
  2. சட்டப்பூர்வத் தேவைக்கோ நீதிமன்ற உத்தரவுக்கோ இணங்குவதற்காக Google அப்படிச் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுதல்.
  3. உங்கள் செயல் Google அல்லது மூன்றாம் தரப்புக்குப் பொறுப்பேற்கும் நிலையையோ தீங்கையோ உருவாக்குதல்.

Business Profile சேவைகளுக்கான உங்கள் அணுகல் தவறுதலாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, இடைநீக்கப்பட்டுள்ளதாக அல்லது முடக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால், கொள்கைகளில் உள்ள மறுபரிசீலனைச் செயல்முறையைப் பார்க்கலாம். சுயவிவர உள்ளடக்கத்தையும் நிர்வாகிகளையும் அகற்றுவதன் மூலமும் பொருந்தினால், பிசினஸ் நிரந்தரமாக மூடப்பட்டது என்று குறிப்பிட்டும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். Business Profileலில் இருந்து சுயவிவர உள்ளடக்கத்தையும் நிர்வாகிகளையும் அகற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேள்விகள் அல்லது புகார்கள்
Google Business Profile தொடர்பாக ஏதேனும் கேள்விகளோ புகார்களோ இருந்தால், எங்கள் உதவி மையத்திற்குச் செல்லலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ளலாம். Google Business Profileலுக்கான உங்கள் அணுகல் தவறுதலாக இடைநீக்கப்பட்டுள்ளதாக அல்லது முடக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால் மறுபரிசீலனை செய்யும்படி கேட்கலாம்.
வழக்குகளைத் தீர்த்தல்
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலோ யுனைடெட் கிங்டத்திலோ உள்ள பிசினஸ் பயனர் எனில் இந்த விதிமுறைகளின்படி மத்தியஸ்தத்தின் உதவியுடன் வழக்கைத் தீர்க்கவும் விண்ணப்பிக்கலாம். நாங்கள் இணைந்து செயல்பட விரும்பும் மத்தியஸ்தர்கள் குறித்த கூடுதல் விவரங்களையும் மத்தியஸ்தத்திற்கு எப்படிக் கோருவது என்பது குறித்த வழிமுறைகளையும் இங்கே தெரிந்துகொள்ளலாம். மத்தியஸ்தம் என்பது தன்னார்வச் செயலாகும். நீங்களோ Googleளோ மத்தியஸ்தம் செய்து வழக்குகளைத் தீர்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமென்றால் மட்டும் மத்தியஸ்தம் செய்து வழக்குகளைத் தீர்க்கலாம்.
சிக்கல்களைக் குறித்து அரசாங்க அமைப்புகளிடம் புகாரளித்தல்
சட்டத்திற்கு இணங்காமல் இருப்பது தொடர்பான சிக்கல்களைக் குறித்து, தொடர்புடைய அரசாங்க அமைப்பிடம் புகாரளிப்பதை இந்த விதிமுறைகளின் எந்தப் பகுதியும் தடுக்காது. இந்தப் பிரிவும் விதிமுறைகளில் உள்ள வேறு ஏதேனும் பகுதியும் முரண்படும் பட்சத்தில், இந்தப் பிரிவு மட்டுமே பொருந்தும்.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2855030441154833405
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false