அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

பேமெண்ட்டைப் பெறுவதற்கான படிகள்

YouTube Studio மொபைல் ஆப்ஸின் 'வருமானம் ஈட்டுதல்' பிரிவில் பேமெண்ட் விவரங்களைக் காட்டும் புதிய பீட்டா அம்சத்தை அறிமுகப்படுத்துகிறோம். தகுதிபெறும் கிரியேட்டர்கள் தங்கள் நிகர வருமானம் பேமெண்ட்டாக எப்படி வழங்கப்படுகிறது என்பதை இந்த பீட்டா அம்சத்தின் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இந்த பீட்டா அம்சம் மூலம், இவற்றைப் பார்க்கலாம்:
  • அடுத்த பேமெண்ட்டை நோக்கிய உங்களின் செயல்நிலை
  • பேமெண்ட் செலுத்திய தேதிகள், செலுத்திய தொகை, பேமெண்ட் பிரிவுகள் உட்பட கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் பேமெண்ட் விவரங்கள்
எங்கள் மன்ற இடுகையில் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

AdSense பேமெண்ட் எப்போது வரும் எனக் காத்திருக்கிறீர்களா? பணம் இந்த மாதம் செலுத்தப்படுமா அல்லது அடுத்த மாதம் செலுத்தப்படுமா எனத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறீர்களா? எங்கள் பேமெண்ட் செயல்முறையை இந்த வழிகாட்டி விளக்குகிறது.

AdSense வருமானம் எனக்கு எப்போது செலுத்தப்படும்?

உங்கள் முதல் பேமெண்ட்டை எப்போது பெறுவீர்கள்?

உங்கள் முதல் AdSense பேமெண்ட்டைப் பெறுவதற்கான கணக்கை அமைக்க கீழேயுள்ள படிகளை நிறைவுசெய்யவும்.

பேமெண்ட்டைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் காட்டும் வரைபடம்.

1. உங்கள் வரி விவரங்களை வழங்குதல்

உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து வரி தொடர்பான விவரங்களை நாங்கள் சேகரிக்க வேண்டியிருக்கலாம். மேலும் தகவல்களுக்கு, வரி விவரங்களை Googleளிடம் எவ்வாறு சமர்ப்பிப்பது என்பதைப் பார்க்கவும்.

கவனத்திற்கு: YouTubeல் வருமானம் ஈட்டும் அனைத்துக் கிரியேட்டர்களும் (எந்த நாட்டினராக இருந்தாலும்) வரி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2. தனிப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்துதல்

அடையாளத்தைச் சரிபார்த்து, தனிநபர் அடையாள எண்ணை (PIN) உங்களுக்கு அனுப்ப இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவோம் என்பதால் பணம் பெறுபவரின் பெயரும் முகவரியும் சரியாக இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏதேனும் தகவல்களைச் சரிசெய்ய வேண்டியிருந்தால், பணம் பெறுபவரின் பெயரையோ முகவரியையோ மாற்ற இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தல்

உங்கள் வலைதளத்தில் AdSense மூலம் தொடர்ந்து விளம்பரங்களைக் காட்டவும் பேமெண்ட்டுகள் பெறவும் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் கணக்கு விவரங்களின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தவும் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும் இதைச் செய்ய வேண்டும்.

உங்கள் முகவரியைச் சரிபார்த்தல்

உங்கள் நிகர வருமானம் சரிபார்ப்பு வரம்பை அடையும்போது உங்கள் AdSense கணக்கில் உள்ள பேமெண்ட் முகவரிக்கு ஒரு பின்னை (PIN) அஞ்சல் மூலம் அனுப்புவோம். ஏதேனும் பேமெண்ட்டுகளை நாங்கள் வழங்குவதற்கு முன்பு உங்கள் AdSense கணக்கில் இந்தப் பின்னை நீங்கள் உள்ளிட வேண்டும். உங்கள் பின் வழக்கமான தபால் மூலம் அனுப்பப்படும், அது உங்களை வந்தடைய 2-3 வாரங்கள் வரை ஆகலாம். பின்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு முகவரி (பின்) சரிபார்ப்பு பற்றிய அறிமுகத்தைப் பாருங்கள்.

கவனத்திற்கு: உங்களிடம் AdSense மற்றும் YouTubeக்குத் தனித்தனி பேமெண்ட் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குகளில் ஏதேனும் ஒன்று பேமெண்ட் சரிபார்ப்பு வரம்பை அடையும்போது உங்கள் தகவல்களைச் சரிபார்க்கவும். ஒருமுறை மட்டுமே தகவல்களைச் சரிபார்க்க வேண்டியிருக்கும்.

3. பேமெண்ட் வகையைத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் நிகர வருமானம் பேமெண்ட் முறை தேர்வு வரம்பை அடையும்போது பேமெண்ட் வகையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்களின் பேமெண்ட் முகவரியைப் பொறுத்து, மின்னணுவழி நிதிப் பரிமாற்றம் (Electronic Funds Transfer - EFT), பேங்க் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல பேமெண்ட் வகைகள் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். உங்கள் பேமெண்ட் வகையை அமைப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

கவனத்திற்கு: உங்களிடம் AdSense மற்றும் YouTubeக்குத் தனித்தனி பேமெண்ட் கணக்குகள் இருந்தால் பேமெண்ட் வரம்பை அவை அடையும்போது ஒவ்வொரு பேமெண்ட் கணக்கிற்கும் பேமெண்ட் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. பேமெண்ட் வரம்பை அடைதல்

உங்கள் தற்போதைய பேலன்ஸ் மாத இறுதிக்குள் பேமெண்ட் வரம்பை அடைந்துவிட்டால் 21 நாள் பேமெண்ட் செயலாக்கக் காலம் தொடங்கும். செயலாக்கக் காலம் முடிந்தவுடன் நாங்கள் பேமெண்ட்டைச் செலுத்துவோம். பேமெண்ட்டுக்கான கால அளவுகள் பற்றி மேலும் அறிக.

கவனத்திற்கு: உங்களிடம் AdSense மற்றும் YouTubeக்குத் தனித்தனி பேமெண்ட் கணக்குகள் இருந்தால் ஒவ்வொரு பேமெண்ட் கணக்கும் பேமெண்ட் வரம்பை அடைந்தால்தான் உங்களுக்கான பேமெண்ட் வழங்கப்படும்.
உதாரணம்

உதாரணமாக, உங்கள் கணக்கிற்கான பேமெண்ட் வரம்பு $100 என வைத்துக்கொள்வோம். உங்கள் தற்போதைய பேலன்ஸ் ஜனவரி மாதத்தின்போது $100ஐ அடைந்திருந்து, மேலேயுள்ள படிகள் அனைத்தையும் நீங்கள் நிறைவுசெய்திருந்தால் பிப்ரவரி மாத இறுதியில் உங்களுக்கான பேமெண்ட்டைச் செலுத்துவோம்.

உங்கள் தற்போதைய பேலன்ஸ் இன்னும் பேமெண்ட் வரம்பை அடையவில்லை எனில் உங்கள் நிகர வருமானம் அடுத்த மாதத்திற்குக் கொண்டு செல்லப்படுவதுடன் வரம்பை அடையும் வரை உங்கள் பேலன்ஸில் பணம் சேர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

உதவிக்குறிப்பு: AdSense பேமெண்ட்டுகள் குறித்து மேலும் கேள்விகள் இருந்தால் பேமெண்ட்டுகள் தொடர்பான பொதுவான கேள்விகளைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
427189183503781562
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false