அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

Google Analytics 4 உடைமையை AdSenseஸுடன் இணைத்தல்

AdSenseஸிலிருந்து தரவை உங்கள் Google Analytics உடைமையில் பெறுவதற்கு முதலில் AdSenseஸுடன் Analytics உடைமையை இணைக்கவும். Analytics கணக்கு ஏற்கெனவே இல்லையெனில் Google Analytics வலைதளத்திற்குச் சென்று பதிவு செய்யவும். Analytics உடைமை இணைக்கப்பட்டதும் Analyticsஸில் உங்கள் AdSense தரவைப் பார்க்க முடியும்.

தொடங்கும் முன்பு செய்ய வேண்டியவை:

உங்கள் AdSense கணக்கிற்கான நிர்வாகி அணுகலையும் Google Analytics உடைமையில் மாற்றும் அனுமதியையும் உடைய Google கணக்கு AdSense உள்நுழைவைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளவும்.

கவனத்திற்கு: புதிய கணக்கை இணைக்க முயற்சிக்கும்போது உங்கள் Google Analytics கணக்கோ Google AdSense கணக்கோ இப்போது மூடப்பட்டிருந்தால் மற்றொரு கணக்குடன் இணைப்பதற்கு முன்பு மூடப்பட்டிருக்கும் கணக்கை மீண்டும் திறந்து இணைப்பை அகற்ற வேண்டும்.

வழிமுறைகள்

உங்கள் AdSense கணக்கில் Analytics உடைமையை இணைக்க:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. கணக்கு அதன் பிறகுஅணுகல் மற்றும் அங்கீகாரம் அதன் பிறகு Google Analytics ஒருங்கிணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

    "உங்கள் Google Analytics இணைப்புகளை நிர்வகித்தல்" பக்கம் திறக்கும். இங்கே இவற்றைச் செய்ய முடியும்:

    • Analytics இணைப்புகளைப் பார்க்கலாம்.
    • புதிய இணைப்புகளை உருவாக்கலாம்.
    • ஏற்கெனவே உள்ள இணைப்புகளை நீக்கலாம்.
  3. +புதிய இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பட்டியலிலிருந்து நீங்கள் இணைக்க விரும்பும் உடைமையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. இணைப்பை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

    இப்போது AdSenseஸுடன் உங்கள் உடைமை இணைக்கப்பட்டது. உங்கள் Google Analytics கணக்கில் தரவு காட்டப்படுவதற்கு 24 மணிநேரம் வரை ஆகலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் Analytics உடைமையை இணைத்த பிறகு உங்கள் வலைதளத்தில் Google Analytics குறியீட்டைச் சேர்த்துள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10829387357543564893
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false