அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கைகள்

AdSense திட்டக் கொள்கைகள்

அனைத்து வெளியீட்டாளர்களும் Google வெளியீட்டாளர் கொள்கைகளுக்கும் பின்வரும் கொள்கைகளுக்கும் இணங்க வேண்டுமென்பதால் கவனமாகப் படிக்கவும். Googleளின் அனுமதியின்றி இந்தக் கொள்கைகளுக்கு இணங்காமல் இருந்தால் உங்கள் வலைதளத்திற்கான விளம்பரச் சேவையை நிறுத்தவோ AdSense கணக்கை எந்த நேரத்திலும் முடக்கவோ எங்களுக்கு முழு உரிமை உண்டு. கணக்கு முடக்கப்படும் பட்சத்தில் AdSense திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கும் தகுதியை இழப்பீர்கள்.

எங்களின் கொள்கைகளை எந்த நேரத்திலும் மாற்றியமைப்போம் என்பதால் அறிவிப்புகள் உள்ளனவா என்பதை அவ்வப்போது இங்கே சரிபார்த்துக் கொள்ளவும். எங்களின் ஆன்லைன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இங்கே வெளியிடப்படும் கொள்கைகளை இன்றைய தேதி வரை தெரிந்து வைத்திருப்பதும் அவற்றுக்கு இணங்குவதும் உங்களின் பொறுப்பாகும். Googleளின் அங்கீகாரம் இருந்தால் மட்டுமே, இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட பக்கங்களில் AdSense குறியீட்டை வெளியீட்டாளர்கள் சேர்க்கலாம். எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத மற்ற உள்ளடக்கத்தைவிட இவை குறைவான விளம்பரங்களையே பெறக்கூடும்.

அனைத்தையும் விரிவாக்கு அனைத்தையும் சுருக்கு

செல்லாத கிளிக்குகளும் இம்ப்ரெஷன்களும்

வெளியீட்டாளர்கள் தங்களின் சொந்த விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடாது. நேரடியாகச் செய்யக்கூடிய முறைகள் உட்பட எந்தவிதமான செயற்கை முறைகளையும் பயன்படுத்தி இம்ப்ரெஷன்கள் மற்றும்/அல்லது கிளிக்குகளை அதிகப்படுத்தக்கூடாது.

மேலும் அறிக

பயனர்கள் உண்மையான ஆர்வத்துடன் மட்டுமே Google விளம்பரங்களில் கிளிக்குகளைச் செய்திருக்க வேண்டும். உங்கள் Google விளம்பரங்களில் கிளிக்குகளையோ இம்ப்ரெஷன்களையோ செயற்கையாக உருவாக்கும் முறைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள முறைகள் (ஆனால் இவை மட்டும் அல்ல): கிளிக்குகளையோ இம்ப்ரெஷன்களையோ கைமுறையாக மீண்டும் மீண்டும் செய்தல், தானியங்குக் கிளிக் அல்லது இம்ப்ரெஷன்கள் உருவாக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல், ரோபோக்களையோ ஏமாற்றும் மென்பொருள்களையோ பயன்படுத்துதல். கவனத்திற்கு: எந்தக் காரணத்திற்காகவும் உங்கள் சொந்த விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடாது.

கிளிக்குகளையோ பார்வைகளையோ ஊக்குவித்தல் (ரிவார்டு வழங்கப்படாத இருப்பு)

வெளியீட்டாளர்கள் தங்களது ரிவார்டு இருப்பிலுள்ள விளம்பரங்களைத் தவிர மற்ற விளம்பரங்களைக் கிளிக் செய்யும்படியோ பார்க்கும்படியோ பிறரிடம் கேட்கக்கூடாது அல்லது அதிகமான கிளிக்குகளையோ பார்வைகளையோ பெறுவதற்காக ஏமாற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு: விளம்பரங்களைப் பார்க்கவோ தேடல்களைச் செய்யவோ பயனர்களுக்குப் பணம் வழங்குதல், இதைப் போன்ற நடவடிக்கையால் வருவாய் ஈட்ட முடியுமென மூன்றாம் தரப்பினருக்கு உறுதியளித்தல், தனிப்பட்ட விளம்பரங்களுக்கு அருகில் படங்களைக் காட்சிப்படுத்துதல் போன்றவை.

மேலும் அறிக

பயனர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்க AdSense திட்டத்தில் பங்குகொள்ளும் வெளியீட்டாளர்கள் பின்வரும் செயல்களைச் செய்யக்கூடாது:

  • விளம்பரங்களைப் பார்க்கவோ தேடல்களைச் செய்யவோ பயனர்களுக்குப் பணம் வழங்குதல் அல்லது இதைப் போன்ற நடவடிக்கையால் வருவாய் ஈட்ட முடியுமென மூன்றாம் தரப்பினருக்கு உறுதியளித்தல்.
  • "விளம்பரங்களைக் கிளிக் செய்யுங்கள்", "எங்களுக்கு ஆதரவளியுங்கள்", "இந்த இணைப்புகளைப் பார்வையிடுங்கள்" அல்லது இதைப் போன்ற வார்த்தைகள் கொண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தி Google விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்குப் பயனர்களை ஊக்குவித்தல்.
  • அம்புக்குறிகள் அல்லது பிற கிராஃபிக் யுக்திகள் மூலம் பயனரின் கவனத்தை விளம்பரத்தை நோக்கி ஈர்த்தல்.
  • ஒவ்வொரு தனிப்பட்ட விளம்பரங்களுக்கு அருகிலும் சம்பந்தமில்லாத படங்களை இணைத்தல்.
  • மிதக்கும் பெட்டி ஸ்கிரிப்ட்டில் விளம்பரங்களைக் காண்பித்தல்.
  • அந்த இணையப் பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தறிய முடியாதவாறு விளம்பரங்களை வடிவமைத்தல்.
  • விளம்பரங்களில் இருந்து தனிப்படுத்திக் காட்ட முடியாதபடி வலைதளத்தின் உள்ளடக்கத்தை வடிவமைத்தல்.
  • Google விளம்பர யூனிட்டுகளுக்கு மேல் சம்பந்தமில்லாத லேபிள்களை வைத்தல். உதாரணமாக, "விளம்பரதாரர் இணைப்புகள்" அல்லது "விளம்பரங்கள்" என விளம்பரங்களுக்கு லேபிளிடுவதற்குப் பதிலாக, "பிடித்த வலைதளங்கள்" அல்லது "இன்றைய சிறப்புச் சலுகைகள்" என லேபிளிடுதல்.

டிராஃபிக் மூலங்கள்

குறிப்பிட்ட சில மூலங்களில் இருந்து டிராஃபிக்கைப் பெறும் பக்கங்களில் Google விளம்பரங்களைக் காட்டக் கூடாது. உதாரணமாக, கிளிக் செய்வதற்குப் பணம் கொடுக்கும் திட்டங்கள், தேவையில்லாத மின்னஞ்சல்களை அனுப்புதல் அல்லது ஏதேனும் மென்பொருள் ஆப்ஸ் மூலம் விளம்பரங்களைக் காண்பித்தல் போன்றவற்றை வெளியீட்டாளர்கள் செய்யக்கூடாது. மேலும் ஆன்லைன் விளம்பரப்படுத்தல் முறையைப் பயன்படுத்தும் வெளியீட்டாளர்கள் தங்கள் பக்கங்கள் Googleளின் முகப்புப் பக்கத் தர வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் அறிக

இணையப் பயனர்கள் மற்றும் Google விளம்பரதாரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக Google விளம்பரங்களைக் காண்பிக்கும் வலைதளங்கள் பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது:

  • கிளிக்குகள் அல்லது இம்ப்ரெஷன்களை உருவாக்கும் மூன்றாம் தரப்புச் சேவைகளான கிளிக் செய்வதற்குப் பணம் கொடுத்தல், வலைதள வருகைக்குப் பணம் கொடுத்தல், தானியங்கு உலாவல் மற்றும் கிளிக்கைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற திட்டங்களைப் பயன்படுத்துதல்.
  • அனுமதி பெறாத மின்னஞ்சல்களை மொத்தமாக அனுப்புதல் அல்லது மூன்றாம் தரப்பு வலைதளங்களில் தேவையற்ற விளம்பரங்களைக் காட்டுதல்.
  • கருவிப்பட்டிகள் போன்ற மென்பொருள் பயன்பாடுகளின் மூலம் Google விளம்பரங்கள், தேடல் பெட்டிகள் அல்லது தேடல் முடிவுகளைக் காண்பித்தல்.
  • ஏதேனும் மென்பொருள் மூலமாக பாப்-அப்களைத் தூண்டுதல், தேவையற்ற வலைதளங்களுக்குப் பயனர்களைத் திசைதிருப்புதல் , உலாவி அமைப்புகளை மாற்றியமைத்தல் அல்லது வலைதள வழிசெலுத்தலில் குறுக்கீட்டை உண்டாக்குதல். உங்கள் AdSense குறியீடு இடம்பெற்றுள்ள பக்கங்களுக்கு டிராஃபிக்கைக் கொண்டுவர, எந்த விளம்பர நெட்வொர்க்கோ இணை நெட்வொர்க்கோ இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது உங்கள் பொறுப்பாகும்.
  • Googleளின் முகப்புப் பக்கத் தர வழிகாட்டுதல்களுக்கு வலைதளம் இணங்காத நிலையில் ஆன்லைன் விளம்பரப்படுத்தல் முறை மூலமாக டிராஃபிக்கைப் பெறுதல். உதாரணமாக, உங்களின் விளம்பரங்கள் விளம்பரப்படுத்துபவைகளைப் பயனர்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும்.

விளம்பரச் செயல்பாடு

விளம்பரத்தின் செயல்திறனில் செயற்கையான மாற்றங்களையோ விளம்பரதாரர்களுக்குப் பாதிப்பையோ ஏற்படுத்தாதவாறு வெளியீட்டாளர்கள் AdSense விளம்பரக் குறியீட்டில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். மேலும் தகவலுக்கு AdSense விளம்பரக் குறியீட்டை மாற்றியமைத்தல் எனும் இணைப்பிற்குச் செல்லவும்.

விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல்

பல வகையான விளம்பரக் காட்சிப்படுத்துமிடங்களையும் விளம்பர வடிவங்களையும் வெளியீட்டாளர்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். எனினும் பாப்-அப்கள், மின்னஞ்சல்கள் அல்லது மென்பொருள் போன்ற பொருத்தமற்ற இடங்களில் AdSense குறியீட்டைச் சேர்க்கக்கூடாது. வெளியீட்டாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தயாரிப்பின் விளம்பரத்திற்கான கொள்கைகளுடன் இணங்கி இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல் தொடர்பான கொள்கைகள் பற்றிய கட்டுரையைப் படிக்கவும்.

விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல் தொடர்பான கொள்கைகளை முழுமையாகக் காணவும்.

Google விளம்பரங்கள், தேடல் பெட்டிகள் அல்லது தேடல் முடிவுகள் பின்வருமாறு இருக்கக்கூடாது:

  • கருவிப்பட்டிகள் உட்பட ஏதாவது மென்பொருள் ஆப்ஸில் ஒருங்கிணைத்திருப்பது (இது AdMobக்குப் பொருந்தாது).
  • Google விளம்பரங்கள், தேடல் பெட்டிகள் அல்லது தேடல் முடிவுகள் இருக்கும் பக்கத்தை பாப்-அப் அல்லது பாப்-அண்டர்களில் தோன்றச் செய்தல் உட்பட எந்த விதமான பக்கத்தையும் பாப்-அப்கள் அல்லது பாப்-அண்டர்களில் காண்பித்தல்.
  • மின்னஞ்சல் செய்திகளுடன் சேர்த்தோ மின்னஞ்சல் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்கங்களிலோ காட்சிப்படுத்துதல்.
  • நேரத்திற்கு ஏற்றபடி மாறும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பக்கங்களில் காட்சிப்படுத்துதல் (நேரலை அரட்டை, உடனடி மெசேஜிங் அல்லது தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் கருத்துகள் போன்றவை).
  • உள்ளடக்கம் இல்லாத ஒரு பக்கத்தில் காட்சிப்படுத்துதல். (தேடலுக்கான AdSense அல்லது தேடலுக்கான AdSense மொபைலுக்கு இது பொருந்தாது.)
  • விளம்பரங்களை மட்டுமே காட்டுவதற்காக வெளியிடப்பட்டுள்ள பக்கங்களில் காட்சிப்படுத்துதல்.
  • Googleளின் லோகோக்கள், வர்த்தக முத்திரைகள் அல்லது பிற பிராண்டு அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்த உள்ளடக்கம் அல்லது URLலை Googleளுடன் தொடர்புடையதாகப் பயனர்களை நினைக்க வைக்கும் பக்கங்களில் காட்சிப்படுத்துதல்.
  • ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் கொள்கைகளை மீறும் வகையில் பிற Google தயாரிப்புகள் அல்லது சேவைகளில் அவற்றுக்கு உள்ளேயோ அருகிலேயோ காட்சிப்படுத்துதல்.
  • ஃபிரேம் உள்ளடக்கத்திற்கான பக்கங்களில் காட்டப்படுகிறது. ஒரு ஃபிரேம் அல்லது சாளரத்தில் வேறொருவரின் வலைதளத்தை அந்த உரிமையாளரின் அனுமதியில்லாமல் ஒரு வலைதளமோ ஆப்ஸோ காட்சிப்படுத்துவது ஃபிரேமிங் உள்ளடக்கம் ஆகும். 

வலைதளத்தின் செயல்பாடு

பயனர்கள் எளிதாக வழிசெலுத்தும் வகையில் Google விளம்பரங்களைக் காண்பிக்கும் வலைதளங்கள் இருக்க வேண்டும். அவை பயனரின் விருப்பத்தேர்வுகளை மாற்றவோ தேவையற்ற வலைதளங்களுக்குப் பயனர்களைத் திருப்பிவிடவோ பதிவிறக்கங்களைத் தொடங்கவோ வலைதளத்தின் வழிசெலுத்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மால்வேர், பாப்-அப்கள் அல்லது பாப்-அண்டர்களைக் கொண்டிருக்கவோ கூடாது.

ஏமாற்றும் வலைதள வழிசெலுத்தல்

கிளிக்குகளையோ பார்வைகளையோ பெறுவதற்காக மெனு, வழிசெலுத்தல் அல்லது பதிவிறக்க இணைப்புகள் எனத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் ஏமாற்றுச் செயல்முறைகளை வெளியீட்டாளர்கள் பயன்படுத்தக்கூடாது. விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல் தொடர்பான கொள்கைகளுடன் ஒவ்வொரு வெளியீட்டாளரின் விளம்பரச் செயலாக்கமும் இணங்குவதை உறுதிசெய்வது அவர்களது பொறுப்பே என்பதை நினைவில் கொள்ளவும்.

இதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு:

  • ஸ்ட்ரீமிங் உள்ளடக்கமோ பதிவிறக்கங்களோ உள்ளதாகத் தவறான தகவல் வழங்குவது
  • இல்லாத உள்ளடக்கத்திற்கு இணைப்பு வழங்குவது
  • தொடர்பில்லாத/தவறாக வழிநடத்தக்கூடிய இணையப் பக்கங்களுக்குப் பயனர்களைத் திசைதிருப்புவது
  • பயனர்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள பிற வகையான வழிசெலுத்தல்கள்
  • வழிசெலுத்தலுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ள பக்கங்கள்.

ஆப்ஸுக்கான இணைய உள்ளடக்கத்தைப் பார்க்கும் ஃபிரேம்கள் தொடர்பான தொழில்நுட்பத் தேவைகள்

இணைய உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்தும் ஃபிரேம் மூலம் AdSense மற்றும் Ad Managerரின் காட்சி விளம்பரங்களை வெளியிட்டு வருமானம் ஈட்ட விரும்பும் ஆப்ஸ் டெவெலப்பர்கள் பின்வரும் ஒருங்கிணைப்பு முறைகளில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்:

  1. விளம்பரங்களுக்கான WebView API
    Google Mobile Ads SDK மூலம் WebView நேர்வுகளைப் பதிவுசெய்ய (Android: WebView, iOS: WKWebView) விளம்பரங்களுக்கான WebView APIயை ஒருங்கிணைக்கும்படி ஆப்ஸ் டெவெலப்பர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

    developer documentationAndroid மற்றும் iOS பிளாட்ஃபார்ம்களுக்கான டெவெலப்பர் ஆவணங்களில் மேலும் அறிந்துகொள்ளலாம்.

    Google Mobile Ads SDK பயன்பாட்டில் இருக்கும் பட்சத்திலும் தொடர்புடைய மற்ற அனைத்துத் திட்டக் கொள்கைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் வெளியீட்டாளர் இணங்கும் பட்சத்திலும், WebViewக்கு அடுத்து இருக்கும் ஆப்ஸில் AdMob மற்றும் Ad Managerரின் ஆப்ஸ் சார்ந்த விளம்பரங்கள் காட்டப்படலாம்.

    நினைவூட்டல்: WebViewவில் உள்ள உள்ளடக்கம் அது உலாவியில் இருக்கும்போது உள்ள அதே உள்ளடக்கக் கொள்கைத் தேவைக்கு உட்பட்டதாகும்.
  2. ஆதரிக்கப்படும் மற்ற காட்சிப்படுத்தும் ஃபிரேம்கள்:

உணர்வுப்பூர்வ நிகழ்வுகள்

"உணர்வுப்பூர்வ நிகழ்வு" என்பது உயர்தரமான தொடர்புடைய தகவல்களையும் நடைமுறை உண்மையையும் வழங்கக்கூடிய, அத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருமானம் ஈட்டுதல் அம்சங்களில் உணர்வற்ற/முறைகேடான உள்ளடக்கத்தைக் குறைக்கக்கூடிய Googleளின் திறனுக்குக் கணிசமான அபாயத்தை ஏற்படுத்தும் எதிர்பாராத நிகழ்வு அல்லது மாற்றமாகும். உணர்வுப்பூர்வ நிகழ்வின்போது, இந்த அபாயங்களைச் சரிசெய்ய நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்.

தயாரிப்பு சார்ந்த கொள்கைகள்

கடைசியாகப் புதுப்பித்தது: பிப்ரவரி 9, 2024

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4224391367076447160
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false