அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

பேமெண்ட்டுகள் தொடர்பான பொதுவான கேள்விகள்

AdSense பேமெண்ட்டுகள் குறித்து அதிகம் கேட்கப்படும் பொதுவான கேள்விகள் சிலவற்றுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேமெண்ட்டுகள் பற்றிய பொதுவான கேள்விகள்

அனைத்தையும் விரிவாக்கு  அனைத்தையும் சுருக்கு எப்போது எனக்குப் பேமெண்ட் செலுத்தப்படும்?

AdSense பேமெண்ட் மாதாந்திரச் சுழற்சி முறையில் செலுத்தப்படுகிறது. பணம் பெறுவதற்கான படிகளை நீங்கள் முடித்திருந்தால், மாதத்தின் 21 - 26ம் தேதிக்குள் பேமெண்ட் வழங்குவோம். அச்சமயத்தில் "பணப் பரிமாற்றங்கள்" பக்கத்தில் உங்களின் பேமெண்ட் செயல்பாட்டிலுள்ளது என்ற நிலையைக் காண்பீர்கள். பேமெண்ட் கால அளவுகள் பற்றி மேலும் அறிக.

EFT பேமெண்ட் செயலாக்கம் தொடங்கி உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிற்குப் பணம் வந்துசேர 4-10 நாட்கள் வரை ஆகும். பேங்க் பணப் பரிமாற்றம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை வந்தடைய 15 வணிக நாட்கள் வரை ஆகலாம். மேலும் வழிகாட்டுதலுக்கு, EFT பிழையறிந்து திருத்தும் கருவி மற்றும் பேங்க் பணப் பரிமாற்றம் தொடர்பான பிழையறிந்து திருத்தும் கருவி ஆகியவற்றைப் பாருங்கள்.

எனக்கு முன்னதாகவே பேமெண்ட் கிடைக்குமா?

கிடைக்காது, எங்கள் வழக்கமான பேமெண்ட் அட்டவணைப்படியே பேமெண்ட்டுகளை வழங்க முடியும்.

வேறு பேமெண்ட் முறை ஏதேனும் உள்ளதா?

"பேமெண்ட் முறையைச் சேர்த்தல்" எனும் பக்கத்தில் பேமெண்ட் வகை இல்லையெனில் அந்தப் பேமெண்ட் வகை உங்கள் நாட்டில் கிடைக்காது. ஏதேனும் புதிய பேமெண்ட் முறை உங்கள் நாட்டில் கிடைத்தால் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

பல பேமெண்டுகளின் விவரங்களை எனது "பணப் பரிமாற்றங்கள்" பக்கத்தில் பார்க்க முடியவில்லை. எனது முழுமையான பணப் பரிமாற்ற வரலாற்றை எப்படிப் பார்க்கலாம்?

"பணப் பரிமாற்றங்கள்" பக்கத்தின் இயல்புநிலைக் காட்சி உங்கள் கணக்கில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த பணப் பரிமாற்றங்களைக் காட்டும். உங்கள் முழுமையான பணப் பரிமாற்ற வரலாற்றைப் பார்க்க, தேதி வரம்புத் தேர்வியில் அனைத்துத் தேதிகளும் எனத் தேர்ந்தெடுக்கவும்.

மூடப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டிற்கு என் EFT பேமெண்ட் செலுத்தப்பட்டுள்ளது, இப்போது நான் என்ன செய்வது?

உங்களின் பேமெண்ட் முறை EFTயாக இருந்து, சமீபத்தில் மூடப்பட்ட பேங்க் அக்கவுண்டிற்குப் பேமெண்ட் செலுத்தப்பட்டிருந்தால், சில நாட்களில் தானாகவே பேமெண்ட் திருப்பியளிக்கப்பட்டு, உங்கள் வருமானம் கணக்கில் மீண்டும் சேர்க்கப்படும்.

உங்கள் கணக்கில் புதிய சரிபார்க்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் இருந்தால், திருப்பியளிக்கப்பட்ட வருமானம் சில நாட்களில் உங்கள் புதிய அக்கவுண்டில் செலுத்தப்படும். ஒரு வாரத்திற்குள் இந்தச் செயல்பாடு முடியக்கூடும்.

எனக்கு உள்ளூர் கூரியரில் காசோலை அனுப்பப்படும்போது, அதற்கான கண்காணிப்பு எண் எப்போது கிடைக்கும்?

நாங்கள் காசோலைகள் அனுப்பும்போது, அதற்கான கண்காணிப்பு எண்களை வழங்குவதில்லை.

பழைய முகவரிக்கு எனது காசோலை அனுப்பப்பட்டது. புதிய காசோலையை நான் எப்படிப் பெறுவது?
இணைப்பிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி காசோலையை மீண்டும் வழங்கக் கோரவும்.
Western Union பேமெண்ட்டுகளுக்கான அனுப்புநர் முகவரி என்ன?

உங்கள் பேமெண்ட் ரசீதில் அனுப்புநர் முகவரி இருக்கும். Western Union மூலம் பணம் பெறுவது பற்றி மேலும் அறிக.

பேங்க் பணப் பரிமாற்றம் மூலம் பேமெண்ட்டுகளைப் பெறுவதற்கு, டெபாசிட் பரிசோதனை செய்து என்னுடைய பேங்க் அக்கவுண்ட்டைச் சரிபார்க்க வேண்டுமா?

வேண்டாம், பேங்க் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள உங்கள் அக்கவுண்ட்டை சரிபார்க்க வேண்டியதில்லை. பேங்க் பணப் பரிமாற்றம் மூலம் பேமெண்ட்டுகள் பெறுவது பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

எனது பேமெண்ட்டுகள் அமைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்லாமல், வேறொரு நாட்டில் எனது பேங்க் அமைந்திருந்தால் பேங்க் பணப்பரிமாற்றம் முறையில் பேமெண்ட்டுகளைப் பெற முடியுமா?

முடியாது. உங்கள் பேங்க் (அல்லது அதன் கிளை) உங்கள் பேமெண்ட்டுகள் அமைப்புகளில் உள்ள முகவரி இருக்கும் நாட்டில் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். பேங்க் அதே நாட்டில் இல்லை என்றால் வேறொரு பேமெண்ட் முறைக்கான விவரங்களை உள்ளிடும்போது SWIFT குறியீடு ஏற்றுக்கொள்ளப்படாது.

EEA பகுதியைச் சேர்ந்த வணிகர்கள்: SEPA (ஒற்றை யூரோ கட்டணப் பகுதி) பேமெண்ட் முறை உங்கள் நாட்டில் இருந்தால் அதற்கு நீங்கள் பதிவுசெய்யலாம். SEPA மூலம் பேமெண்ட்டுகளைப் பெறுவது குறித்து மேலும் அறிக.

எனது பேமெண்ட்டிற்கான நாணய முறையை மாற்ற முடியுமா?

உங்கள் பேமெண்ட் நாணய முறையை மாற்ற முடியாது.

AdSense மூலம் கிடைக்கும் வருமானத்தை அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கலாமா?

தற்சமயம், AdSenseஸில் கிடைக்கும் வருமானத்தை நேரடியாக உங்கள் கணக்கில் இருந்து அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கும் வசதி இல்லை. எனினும் நீங்கள் AdSense பேமெண்ட்டுகளைப் பெற்றதும் உங்கள் விருப்பம்போல வருமானத்தைச் செலவு செய்யலாம்.

நட்பு ரீதியாக நினைவூட்டுகிறோம், உங்கள் வருமானத்தை நன்கொடையளிக்கத் தேர்வு செய்தீர்களானால், விளம்பர வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை அல்லது முழு வருமானமும் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் என்ற உரையை உங்கள் வலைதளங்களில் சேர்ப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இதுபோன்ற வரிகள் உங்கள் விளம்பரங்களின் மேல் அளவுக்கு மீறிய கவனத்தை ஏற்படுத்தும், மேலும் உங்களுக்குக் கிடைத்த வருமானத்தை எவ்வாறு செலவு செய்தீர்கள் என்று எங்களால் சரிபார்க்க முடியாது என்பதால் எங்களின் AdSense திட்டக் கொள்கைகளால் இந்த அறிக்கைகள் அனுமதிக்கப்படாது.

என்னுடைய இன்வாய்ஸை எங்கு அனுப்ப வேண்டும்?

நீங்கள் அயர்லாந்து நாட்டில் வரி நோக்கங்களுக்காகப் பதிவுசெய்த வெளியீட்டாளராக இருந்தால் மட்டுமே இன்வாய்ஸை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதாவது, AdSenseVAT@google.com எனும் முகவரிக்கு உங்கள் இன்வாய்ஸை மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இன்வாய்ஸின் அச்சு நகலை எங்களுக்கு அனுப்ப வேண்டாம்.

அதிகாரப்பூர்வப் பேமெண்ட் ஆவணங்களை Google AdSense வழங்குகிறதா?

ஆம், உங்களுக்குக் கிடைக்கும் பேமெண்ட்டுகள் அனைத்திற்கும் பேமெண்ட் ரசீது வழங்கப்படும். உங்கள் பேங்க் அல்லது வரி நிர்வாகத்திடம், AdSenseஸில் இருந்து பேமெண்ட் கிடைத்ததற்கு ஆதாரமாக இந்தப் பேமெண்ட் ரசீதுகளைக் காட்டலாம். பேமெண்ட் ரசீதைப் பார்க்க, பேமெண்ட்டுகள், பேமெண்ட் தகவல்கள் என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு "பணப் பரிமாற்றங்கள்" பிரிவிலுள்ள, தானியங்குப் பேமெண்ட் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

AdSense உடனான உங்கள் ஒப்பந்தத்தைக் காட்ட வேண்டுமென்றால் AdSense விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் AdSenseஸிற்காகப் பதிவுசெய்தவுடன், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். மேலும் இது உங்களுக்கும் (உங்கள் வணிகத்திற்கும்) AdSenseஸுக்கும் இடையிலுள்ள பங்கேற்புகளுக்குச் சட்டரீதியான அடிப்படையாக அமைகிறது.

கவனத்திற்கு: அச்சிடப்பட்ட, கையொப்பமிட்ட அல்லது முத்திரையிடப்பட்ட ஆவணங்களை எங்களால் வழங்க முடியாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5095018218577759182
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false