அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் AdSense கணக்கைப் பயன்படுத்தத் தொடங்குதல்

AdSense கணக்கிற்குச் செல்லுதல்

AdSenseஸை முதல் முறையாகப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் கணக்கு குறித்து அறிவதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன. சிறிது நேரம் ஒதுக்கி முகப்பு, விளம்பரங்கள், வலைதளங்கள் போன்ற முதன்மைப் பக்கங்களைப் பாருங்கள். அத்துடன் பேமெண்ட்டுகள், கணக்கு ஆகிய பக்கங்களையும் பாருங்கள். உங்கள் பேமெண்ட்டுகள் மற்றும் அமைப்புகளுக்கான விருப்பங்களை இந்தப் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: மார்ச் 2022 முதல், சில மாதங்களில் AdSenseஸில் YouTube வருமானத்திற்கு என்றே தனி முகப்புப்பக்கமும் பேமெண்ட் கணக்கும் இருக்கும். YouTube முகப்புப்பக்கம் மற்றும் பேமெண்ட் கணக்கு குறித்து மேலும் அறிக.

முதன்மைப் பக்கங்கள்

உங்கள் AdSense கணக்கில் உள்ள வழிசெலுத்தல் பேனலில் பின்வரும் முதன்மைப் பக்கங்களை அணுகலாம்:

AdSense navigation panel
  • முகப்பு: AdSense கணக்கில் நீங்கள் முதலில் உள்நுழையும்போது முகப்புப் பக்கத்திற்குச் செல்வீர்கள். உங்கள் வருமானம், கணக்கின் செயல்திறன் ஆகியவற்றின் ஸ்னாப்ஷாட்டை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம், விரிவான அறிக்கைகளுக்கான இணைப்புகளும் இதில் வழங்கப்பட்டிருக்கும்.
  • விளம்பரங்கள்: இந்தப் பக்கத்தில் உங்கள் விளம்பரங்களை அமைத்து நிர்வகிக்கலாம்.
  • வலைதளங்கள்: AdSenseஸில் பயன்படுத்த விரும்பும் உங்கள் வலைதளங்களின் பட்டியலை இந்தப் பக்கத்தில் உருவாக்கலாம்.
  • தனியுரிமை & மெசேஜிங்: ஐரோப்பாவின் பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR - General Data Protection Regulation), கலிஃபோர்னியா தனியுரிமைச் சட்டம் (California Privacy Rights Act - CPRA) போன்ற ஒழுங்குமுறைகளின் நிபந்தனைக்கிணங்க, உங்கள் பயனர்களிடமிருந்து ஒப்புதல் பெறப் பயன்படுத்தும் மெசேஜ்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
  • பிராண்டு பாதுகாப்பு: உங்கள் வலைதளங்களில் காட்டப்படும் விளம்பரங்களைத் தடைசெய்வதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் உள்ளன.
  • அறிக்கைகள்: அறிக்கைகள் தொடர்பான விருப்பத்தேர்வுகள் அனைத்தையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.
  • மேம்படுத்துதல்: AdSense மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்—உங்கள் கணக்கின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அனைத்துத் தகவல்களும் இதில் உள்ளன.
  • கொள்கை மையம்: உங்கள் வலைதளங்களில் விளம்பரச் சேவையைப் பாதிக்கும் சிக்கல்களைக் கண்டறியவும் புரிந்துகொள்ளவும் அவற்றைத் தீர்க்கவும் கொள்கை மையத்தைப் பயன்படுத்தலாம். எங்கள் திட்டக் கொள்கைகளுடன் நீங்கள் இணங்குவதற்கு இது உதவும்.
  • பேமெண்ட்டுகள்: உங்கள் பேமெண்ட்டுகளைப் பார்ப்பதற்கும் பேமெண்ட் அமைப்புகளை நிர்வகிப்பதற்கும் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
  • கணக்கு: இந்தப் பக்கத்தில் உங்கள் கணக்கு அமைப்புகளை அணுகலாம் நிர்வகிக்கலாம், உங்கள் கணக்கின் நிலையைப் பார்க்கலாம்.

பயனுள்ள மற்ற பக்கங்கள்

  • கருத்து: சிக்கல் குறித்த புகார்கள், அம்சங்கள் தொடர்பான யோசனைகள், பொதுவான கருத்துகள் ஆகியவற்றை இந்த இணைப்பின் மூலம் எங்களுக்கு அனுப்பலாம்.
  • உதவி: AdSense உதவிக்கான விட்ஜெட்டை இந்த பட்டன் Help icon திறக்கும். உங்கள் கணக்கை விட்டு வெளியேறாமலே AdSense தொடர்பான கேள்விகளுக்குப் பதில்களை இதில் கண்டறியலாம். AdSense உதவி மையத்தில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் இங்கிருந்தே உலாவலாம், AdSense உதவி மன்றத்தையும் அணுகலாம்.

அறிவிப்புகள்

முக்கியமான மெசேஜ்களையும் கணக்கு விழிப்பூட்டல்களையும் கண்காணிக்க, உங்களுக்கான அறிவிப்புகளை Notifications பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17406714433437030578
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false