அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கை தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

கொள்கைச் சிக்கல்களையும் விளம்பரச் சேவை நிலைகளையும் புரிந்துகொள்ளுதல்

கொள்கை மையத்தில் எந்தெந்த வகையான சிக்கல்கள் விளம்பரச் சேவையைப் பாதிக்கின்றன என்பதையும் அவற்றுடன் தொடர்புடைய விளம்பரச் சேவை நிலைகள் குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.

விளம்பரச் சேவையைப் பாதிக்கும் சிக்கல்கள்

உங்கள் வலைதளத்தில் விளம்பரச் சேவையைப் பாதிக்கும் சிக்கல் இருந்தால், அது எங்கள் திட்டக் கொள்கைகளை மீறியிருக்கலாம், Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லது உறுதிசெய்யப்பட்ட கிளிக் இயக்கப்பட்டு இருக்கலாம் என்று அர்த்தம். சிக்கல்கள் உள்ள வலைதளங்களில் உட்பொதித்துள்ள உங்கள் பக்கங்களில் இருந்து விளம்பரக் கோரிக்கைகள் பெறப்படும் சூழல்களும் இதிலடங்கும்.

4 வகையான சிக்கல்கள் உள்ளன: கொள்கை மீறல்கள், வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள், உறுதிசெய்யப்பட்ட கிளிக் மற்றும் ஒப்புதல் நிபந்தனைகள். இவற்றில் கொள்கை மீறல்களை மட்டுமே நீங்கள் சரிசெய்ய வேண்டியிருக்கும். வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளை நீங்கள் சரிசெய்ய வேண்டியதில்லை. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளால் உங்கள் வலைதளத்தில் விளம்பரச் சேவை தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். உறுதிசெய்யப்பட்ட கிளிக் மற்றும் ஒப்புதல் நிபந்தனைகள் தொடர்பான சிக்கல்கள் உங்கள் வருவாயைப் பாதிக்கக்கூடும் என்பதால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

உங்கள் விளம்பரச் சேவை தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, உங்களுக்கு எச்சரிக்கையும் அனுப்பப்படலாம். இந்தச் சிக்கல் வகைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, கீழேயுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

வகை விளக்கம் விளம்பரச் சேவை நிலை உதாரணங்கள்
கொள்கை மீறல் (கட்டாயம் சரிசெய்ய வேண்டியவை)

தற்சமயம் உங்கள் வலைதளம் திட்டக் கொள்கைகளுடன் இணங்கவில்லை.

இவ்வாறு நடக்கும்போது உங்கள் வலைதளத்தை எங்கள் கொள்கைகளுடன் இணங்குமாறு மாற்ற வேண்டும்.

'நிலை' என்ற நெடுவரிசையில், கொள்கை மீறல்கள் கட்டாயம் சரிசெய்ய வேண்டியவை எனக் குறிக்கப்படும்.

முடக்கப்பட்ட விளம்பரச் சேவை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரச் சேவை மூலம் கொள்கை மீறல்கள் அமலாக்கப்படுகின்றன.

கொள்கை மீறல்களுக்கான சில உதாரணங்கள் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
  • வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்
  • ஆபத்தான அல்லது இழிவுபடுத்தும் உள்ளடக்கம்
  • கிளிக் செய்வதற்கு ஊக்குவிக்கும் தளவமைப்பு
வெளியீட்டாளர் கட்டுப்பாடு

உங்கள் வலைதளத்தின் சிக்கல் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் என்பதன் கீழ் அடங்கும்.

இந்த வகை உள்ளடக்கத்தை வருமானம் ஈட்டத் தேர்வுசெய்யலாம் என்றபோதிலும் அனைத்து விளம்பர ஆதாரங்களும் ஏலத்தில் பங்குபெறுவதில்லை என்பதால் உங்களுக்குக் குறைவான விளம்பரங்களே கிடைக்கக்கூடும்.

வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளைக் கொண்ட வலைதளங்கள் கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரச் சேவையைப் பெறும். வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கான சில உதாரணங்கள் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
  • பாலியல் உள்ளடக்கம்
  • அதிர்ச்சியூட்டும் உள்ளடக்கம்
  • ஆன்லைன் சூதாட்ட உள்ளடக்கம்
எச்சரிக்கை அறிவிப்பு

உங்கள் விளம்பரச் சேவையின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக, சில கொள்கை மீறல்களுக்கும் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கும் எச்சரிக்கைக் காலம் இருக்கிறது.

எச்சரிக்கையைப் பெற்றால், உங்கள் வலைதளம் திட்டக் கொள்கைகளுடன் தற்போது இணங்கவில்லை அல்லது அதன் உள்ளடக்கம் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் வரம்பிற்குள் உள்ளது என்று அர்த்தம்.

இதைச் சரிசெய்ய உங்கள் வலைதளத்தில் மாற்றங்களைச் செய்து கொள்கைகளுடன் இணங்குமாறு செய்ய வேண்டும்.

அவற்றில் நீங்கள் மாற்றங்களைச் செய்யவில்லை எனில் உங்கள் வலைதளத்தின் மீதோ கணக்கின் மீதோ கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும்.

எச்சரிக்கைகளைப் பெற்றுள்ள வலைதளங்களில் விளம்பரச் சேவை நிறுத்தப்படலாம். எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெறக் காரணமாகும் சிக்கல்களின் சில உதாரணங்கள் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
  • விளம்பரங்களும் உள்ளடக்கமும் பிரித்தறிய முடியாதபடி இருப்பது
உறுதிசெய்யப்பட்ட கிளிக்

உங்கள் தளத்தில் உள்ள குறிப்பிட்ட விளம்பரங்கள் எதிர்பாராத கிளிக்குகளை உருவாக்குவதாக Google Ads தீர்மானித்துள்ளது. இது மோசமான பயனர் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பயனர்கள் தங்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாமல் விளம்பரதாரரின் முகப்புப் பக்கங்களையே பார்க்க நேரிடுகிறது.

Google Ads அதன் பாதிக்கப்பட்ட விளம்பரங்களில் உறுதிசெய்யப்பட்ட கிளிக் என்பதைச் சேர்த்துள்ளது. இந்த 'உறுதிசெய்யப்பட்ட கிளிக்' இரண்டாவது கிளிக் ஒன்றைச் சேர்க்கிறது. இதன் மூலம் விளம்பரப் பக்கத்தைப் பார்ப்பதற்கான விருப்பத்தைப் பயனர் உறுதிப்படுத்த முடிவதால், பயனர் அனுபவம் மேம்படுகிறது.

உறுதிசெய்யப்பட்ட கிளிக் சேர்க்கப்பட்டுள்ள வலைதளங்களில் உறுதிசெய்யப்பட்ட கிளிக் இயக்கப்பட்டுள்ளது என்ற மெசேஜ் காட்டப்படும். நீங்கள் சரிபார்க்க வேண்டிய செயலாக்கத்திற்கான சில உதாரணங்கள் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
  • வழிசெலுத்தும் கூறுகளுக்கு அருகிலுள்ள விளம்பரங்கள்
  • காட்சி விளம்பரங்களின் மேலே வைக்கப்பட்டுள்ள வழிசெலுத்தும் கூறுகள்
  • விளம்பரங்களுக்கு மேலே அல்லது அருகில் இருக்கும் பட்டன்கள்
  • விளம்பரங்களுக்கு மேலே அல்லது அருகில் இருக்கும் வலைதள உள்ளடக்கம்
  • குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான வலைதள உள்ளடக்கத்தின் மறுசீராக்கம்.
  • விளம்பரம் காட்சிப்படுத்துமிடம் தொடர்பான கொள்கைகளை மீறுதல்
ஒப்புதல் நிபந்தனைகள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (European Economic Area - EEA), யுனைடெட் கிங்டம் (United Kingdom - UK), சுவிட்சர்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு விளம்பரங்களை வழங்கும்போது IABயின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்புதல் கட்டமைப்புடன் (TCF - Transparency and Consent Framework) பதிவுசெய்யப்பட்டிருக்கும் சான்றளிக்கப்பட்ட ஒப்புதல் மேலாண்மைப் பிளாட்ஃபார்மை (CMP - Consent Management Platform) தற்போது நீங்கள் பயன்படுத்தவில்லை.

ஜனவரி 16, 2024 முதல், TCF தேவையைப் படிப்படியாக வெளியிட உள்ளோம்.

ஒப்புதல் நிபந்தனைகள் தொடர்பான சிக்கல்கள் உள்ள வலைதளங்கள் கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரப் பிரத்தியேகமாக்கலைப் பெறும்.

ஒப்புதல் நிபந்தனைகள் தொடர்பான சிக்கல்கள்:

  • CMP இல்லை: EEA, யுனைடெட் கிங்டம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உங்கள் இருப்பில் உள்ள சில விளம்பரக் கோரிக்கைகளில் TCF ஸ்ட்ரிங் இல்லை.
  • CMP சான்றளிக்கப்படவில்லை: EEA, யுனைடெட் கிங்டம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உங்கள் இருப்பில் உள்ள சில விளம்பரக் கோரிக்கைகளில் சான்றளிக்கப்பட்ட CMPயைச் சார்ந்த TCF ஸ்ட்ரிங் இல்லை.

விளம்பரச் சேவை நிலையைப் புரிந்துகொள்ளுதல்

சிக்கல்களினால் உங்களுடைய வலைதளங்கள் எவ்வாறு பாதிப்படைந்துள்ளன என்பதை உங்கள் விளம்பரச் சேவை நிலை மூலம் தெரிந்துகொள்ளலாம். கீழிருக்கும் அட்டவணையில் விளம்பரச் சேவையின் நிலைகளையும் அதற்கான விளக்கங்களையும் பார்க்கலாம்.

நிலை விளக்கம் நீங்கள் செய்ய வேண்டியவை
விளம்பரச் சேவை முடக்கப்பட்டுள்ளது உங்கள் வலைதளத்தில் அனைத்து விளம்பரப்படுத்துதலும் தடைசெய்யப்பட்டுள்ளன. கொள்கை மீறல் காரணமாக உங்கள் வலைதளம் விளம்பரச் சேவைகளை வழங்குவதில்லை.

நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைத் தெரிந்துகொள்ள, கொள்கை மையத்தில் சிக்கல் தொடர்பான விளக்கத்தைப் படிக்கவும்.

உங்கள் வலைதளத்திலுள்ள கொள்கை மீறல் சிக்கல்களைச் சரிசெய்த பிறகு விளம்பரச் சேவையை இயக்க மதிப்பாய்வைக் கோரலாம்.

விளம்பரச் சேவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

உங்கள் தளத்தின் இருப்பில் விளம்பரதாரர்கள் ஏலம் கோருவதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அனைத்து விளம்பர ஆதாரங்களும் ஏலத்தில் பங்குபெற முடியாது என்பதால் உங்கள் வலைதளத்திற்கு வாங்குபவர்கள் குறைவாக இருக்கலாம் அல்லது யாருமே வாங்காமல் போகலாம்.

நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அவை குறித்துத் தெரிந்துகொள்ள, கொள்கை மையத்தில் உள்ள சிக்கல்கள் தொடர்பான விளக்கத்தைப் படித்துப் பாருங்கள்.

கவனத்திற்கு: கொள்கை மீறல்களை நீங்கள் கட்டாயம் சரிசெய்ய வேண்டும். ஆனால் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளைச் சரிசெய்வது உங்கள் விருப்பத்தைப் பொறுத்ததாகும். சிக்கல்களின் வகைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

விளம்பரச் சேவை நிறுத்தப்படலாம்

இன்னும் விளம்பரச் சேவை பாதிக்கப்படவில்லை. ஆனால் விளம்பரச் சேவை தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய உங்கள் வலைதளத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

எச்சரிக்கை அறிவிப்பு பெற்றதன் காரணமாக இவை செய்யப்படுகின்றன. அமலாக்கத் தேதிகள், அடுத்தகட்ட நடவடிக்கை எப்போது எடுக்கப்படும், விளம்பரச் சேவை பாதிக்கப்படுதல் போன்றவை எச்சரிக்கை அறிவிப்புகளில் அடங்கும்.

விளம்பரச் சேவை கட்டுப்படுத்தப்படுவதிலிருந்தோ முடக்கப்படுவதிலிருந்தோ தடுக்க அமலாக்கத் தேதிக்கு முன்பாகவே சிக்கல்களைச் சரிசெய்யுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைத் தெரிந்துகொள்ள, கொள்கை மையத்தில் சிக்கல் தொடர்பான விளக்கத்தைப் படிக்கவும்.

வரம்பிற்குட்பட்ட விளம்பரச் சேவை

இது உங்கள் AdSense கணக்கைப் பாதிக்கும். வரம்பிற்குட்பட்ட விளம்பரச் சேவை என்பதன் அர்த்தம் உங்கள் AdSense கணக்கால் காட்டப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கைக்கு Google ஒரு வரம்பை விதித்துள்ளது என்பதாகும்.

விளம்பரச் சேவை வரம்புகள் குறித்து மேலும் அறிக.

உங்கள் விளம்பர டிராஃபிக்கையும் பயனர்களையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் சொந்த விளம்பரங்களைக் கிளிக் செய்ய வேண்டாம், உங்களுக்கு நம்பிக்கை இல்லாதவர்களுடனோ குறைவான தரமுடைய விளம்பரத் தரப்பினர்களிடமோ கூட்டுச்சேர வேண்டாம்.

தவறான செயல்பாடுகளைத் தடுப்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உறுதிசெய்யப்பட்ட கிளிக் இயக்கப்பட்டுள்ளது உங்கள் இருப்பில் உள்ள சில விளம்பரங்கள் எதிர்பாராத கிளிக்குகளைப் பெறுகின்றன. எனவே, இந்த விளம்பரங்களில் 'உறுதிசெய்யப்பட்ட கிளிக்கை' Google சேர்த்துள்ளது.

உங்கள் விளம்பரச் செயலாக்கங்களைச் சரிபார்க்கவும். அனுமதிக்கப்படாத செயலாக்கங்கள் மற்றும் பரிந்துரைக்கப்படும் செயலாக்கங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் விளம்பரங்களில் தற்செயலான கிளிக்குகள் கண்டறியப்பட்டால், உறுதிசெய்யப்பட்ட கிளிக் செயல்முறையை சிஸ்டம் தானாகவே பயன்படுத்தும். அதேபோன்று உங்கள் விளம்பரங்களில் தற்செயலான கிளிக்குகள் கண்டறியப்படவில்லை என்றால், உறுதிசெய்யப்பட்ட கிளிக் செயல்முறையை சிஸ்டம் தானாகவே முடக்கிவிடும்.

கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரப் பிரத்தியேகமாக்கல்

பயனர்களின் ஒப்புதலைக் கேட்பதற்குச் சில வலைதளங்கள் சான்றளிக்கப்பட்ட CMPயைப் பயன்படுத்தவில்லை.

அதாவது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விளம்பரங்கள் மட்டுமே EEA, யுனைடெட் கிங்டம் மற்றும் சுவிட்சர்லாந்தில் காட்டுவதற்குத் தகுதிபெறும். சான்றளிக்கப்பட்ட CMPயைப் பயன்படுத்தும் வலைதளங்கள் பிரத்தியேகமான விளம்பரங்கள் அல்லது பிரத்தியேகப்படுத்தப்படாத விளம்பரங்களை (NPA - non-personalized ads) காட்டுவதற்குத் தகுதிபெறும்.

CMP இல்லை:

  1. ஏற்கெனவே தேர்வுசெய்யவில்லை எனில் TCF மூலம் பதிவுசெய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட CMPயை இப்போது தேர்வுசெய்யவும்.
  2. CMP தீர்வைச் செயல்படுத்தவும்.

சான்றளிக்கப்பட்ட CMP விருப்பங்கள் குறித்து மேலும் அறிக.

CMP சான்றளிக்கப்படவில்லை:

  1. உங்களிடம் சொந்த CMP இருந்தால், சான்றிதழைப் பெறுவதற்குப் பதிவுசெய்யவும்.
  2. சான்றளிக்கப்படாத மூன்றாம் தரப்பு CMPயை நீங்கள் பயன்படுத்தினால், சான்றிதழைப் பெறுவதற்கு உங்கள் CMPயைப் பதிவுசெய்வதற்குப் பரிந்துரையுங்கள். சான்றளிக்கப்பட்ட CMPகளின் பட்டியலையும் நீங்கள் பார்க்கலாம்.
குறிப்பு: சான்றளிக்கப்பட்ட CMPயைச் சமீபத்தில் பயன்படுத்துகிறீர்கள் எனில், இந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டு கொள்கை மையத்தில் இருந்து அகற்றப்பட 48 மணிநேரம் வரை ஆகலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
554493165621758471
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false