உங்கள் கணக்கை மிகவும் பாதுகாப்பானதாக்குதல்

Googleளில் ஆன்லைன் பாதுகாப்பிற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். உங்கள் Google கணக்கைப் பாதுகாக்க இந்த வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றும்படி பரிந்துரைக்கிறோம்.

முக்கியம்: உங்கள் Google கணக்கில் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கையைப் பரிந்துரைக்க, சிவப்பு, மஞ்சள் அல்லது நீல நிற ஆச்சரியக்குறி ஐகானை Google பயன்படுத்தலாம். மேலும் தெரிந்துகொள்ள, பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கவும்.

பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள்

"பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள்” என்பதற்கு அடுத்து ஆச்சரியக்குறி இருந்தால், உங்கள் கணக்கைப் பாதுகாக்க உடனே நடவடிக்கைகள் எடுக்கும்படி Google பரிந்துரைக்கிறது என்று அர்த்தம். அவை எவ்வளவு தீவிரமானவை என்பதை அவற்றின் நிறத்தை வைத்துப் புரிந்துகொள்ளலாம். பாதுகாப்பு உதவிக்குறிப்புகளுக்கு ஐகான் நீல நிறத்திலும், முக்கிய நடவடிக்கைகளுக்கு மஞ்சள் நிறத்திலும், அவசர நடவடிக்கைகளுக்குச் சிவப்பு நிறத்திலும் இருக்கும். தேர்வுக்குறியுடன் பச்சை நிறத்தில் கேடயம் ஐகான் காட்டப்பட்டால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்றும் உடனடி நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும் அர்த்தம்.

அறிவிப்புகளைப் பார்க்க:

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • இது பாதுகாப்புச் சரிபார்ப்புத் தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும், அங்கு உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தனிப்பட்ட பரிந்துரைகளைப் பெறலாம்.

பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள் காட்டப்படவில்லை என்றால், உங்களுக்கான பாதுகாப்புப் பரிந்துரைகள் எதுவும் Googleளிடம் இல்லை என்று அர்த்தம். இருப்பினும், உங்கள் Google கணக்கில் உங்கள் பாதுகாப்பு நிலையைப் பார்க்கலாம்:

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. உங்கள் கணக்கை நிர்வகியுங்கள் and then பாதுகாப்பு என்பதற்குச் செல்லவும்.
    • அனைத்து பரிந்துரைகளும் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தப் பக்கத்தின் மேற்புறம் பச்சை நிறத்தில் கேடயம் ஐகான் காட்டப்படும்.
    • இந்தப் பக்கத்தில் பச்சை நிறத்தில் கேடயம் ஐகான் காட்டப்பட்டால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்த, பரிந்துரைகளைப் பகிரும் பாதுகாப்பு தொடர்பான உதவிக்குறிப்புகளும் காட்டப்படலாம்.

உதவிக்குறிப்பு: நீங்கள் பத்திரிகையாளராகவோ சமூக செயல்பாட்டாளராகவோ ஆன்லைனில் குறி வைத்துத் தாக்கப்படும் அளவுக்கு ஆபத்தில் உள்ளவராகவோ இருந்தால் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

படி 1: பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்ளவும்

பின்வருபவை உட்பட உங்கள் Google கணக்கிற்கான பிரத்தியேகப் பாதுகாப்புப் பரிந்துரைகளைப் பெற பாதுகாப்புச் சரிபார்ப்புத் தளத்திற்குச் செல்லவும்:

கணக்கு மீட்டெடுப்பு விருப்பங்களைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

உங்கள் மீட்பு மொபைல் எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் வலிமையான பாதுகாப்புக் கருவிகள். இந்தத் தொடர்புத் தகவல்கள் இவற்றுக்கு உதவலாம்:

  • உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு
  • உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு
  • உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாத சமயத்தில் அதை மீட்டெடுப்பதற்கு

மீட்பு மொபைல் எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் எப்படிச் சேர்ப்பது அல்லது மாற்றுவது என்பதை அறிக.

இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல்

உங்கள் கடவுச்சொல்லை ஒரு ஹேக்கர் திருடினாலும் அவர் உங்கள் கணக்கில் உள்நுழைவதைத் தடுக்க இருபடிச் சரிபார்ப்பு அம்சம் உதவும். மெசேஜ் குறியீடுகளுடன் தொடர்புடைய வழக்கமான ஃபிஷிங் முயற்சிகளை முறியடிக்க உறுதியான இரண்டாவது சரிபார்ப்புப் படியைத் தேர்வுசெய்யவும்:

அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு: மேம்பட்ட பாதுகாப்பு

நீங்கள் ஒரு பத்திரிகையாளராகவோ சமூக செயல்பாட்டாளராகவோ ஆன்லைனில் குறி வைத்துத் தாக்கப்படும் அளவுக்கு ஆபத்தில் உள்ளவராகவோ இருந்தால் கூடுதல் பாதுகாப்புக்கு மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்வதைக் கருத்தில்கொள்ளவும். மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் ஃபிஷிங்கில் இருந்து காக்க, பாதுகாப்பு விசைகளைப் பயன்படுத்துகிறது. பாதுகாப்பற்ற ஆப்ஸைத் தடுப்பது போன்ற பிற பாதுகாப்புகளையும் வழங்குகிறது.

உங்கள் தரவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அணுகலை அகற்றுதல்

பாதுகாக்கவேண்டிய தகவல்களை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க உங்கள் கணக்குத் தகவல்களை எந்த ஆப்ஸ் பயன்படுத்தலாம் என்பதைச் சரிபார்த்து தேவையற்ற ஆப்ஸை அகற்றுங்கள்.

திரைப் பூட்டுகளை இயக்குதல்

உங்கள் அனுமதியின்றி உங்கள் சாதனங்களைப் பிறர் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாக்க திரைப் பூட்டுகள் உதவும். Android சாதனத்தில் திரைப் பூட்டுகளை அமைப்பது எப்படி என அறிக.

உதவிக்குறிப்பு: பிற சாதனங்களிலும் கம்ப்யூட்டர்களிலும் திரைப் பூட்டைச் சேர்ப்பது குறித்த தகவலுக்கு உற்பத்தியாளரின் உதவித் தளத்தைப் பார்வையிடவும்.

படி 2: உங்கள் மென்பொருளைப் புதுப்பிக்கவும்

உலாவி, ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஆப்ஸ் போன்றவை புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அவை ஹேக்கர்களால் தாக்கப்படலாம். உங்கள் கணக்கைப் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளைத் தொடர்ந்து புதுப்பிக்கவும்.

உங்கள் உலாவியைப் புதுப்பித்தல்

உலாவியின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும்.

Google Chromeமைப் புதுப்பிப்பது எப்படி என அறிக.

உதவிக்குறிப்பு: பிற உலாவிகளை எப்படிப் புதுப்பிப்பது என்பது குறித்து அறிய டெவெலப்பரின் உதவித் தளத்தைப் பார்வையிடவும்.

உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைப் புதுப்பித்தல்

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது சாதனத்தில் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும்.

உதவிக்குறிப்பு: பிற சாதனங்களையும் கம்ப்யூட்டர்களையும் புதுப்பிப்பது எப்படி என அறிய உற்பத்தியாளரின் உதவித் தளத்தைப் பார்வையிடவும்.

உங்கள் ஆப்ஸைப் புதுப்பித்தல்

உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ஆப்ஸின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும்.

உதவிக்குறிப்பு: பிற சாதனங்களிலும் கம்ப்யூட்டர்களிலும் உள்ள ஆப்ஸைப் புதுப்பிப்பது எப்படி என அறிய உற்பத்தியாளரின் உதவித் தளத்தைப் பார்வையிடவும்.

படி 3: தனித்துவமான, வலிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்

ஒரே கடவுச்சொல்லைப் பல தளங்களில் பயன்படுத்துவது ஆபத்தானதாகும். ஒரு தளத்தில் உங்கள் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் அதைப் பயன்படுத்தி பல தளங்களில் உங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்படலாம்.

ஒவ்வொரு கணக்கிற்கும் வலிமையான, தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்குவதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் கடவுச்சொற்களை நிர்வகித்தல்

வலிமையான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் கடவுச்சொல் நிர்வாகி உதவும். Chrome வழங்கும் கடவுச்சொல் நிர்வாகியைப் பயன்படுத்தலாம் அல்லது நம்பகமான பிற கடவுச்சொல் நிர்வாகிகளையும் பயன்படுத்தலாம்.

உதவிக்குறிப்பு: Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல் ஏதேனும் பாதுகாப்பு இழந்துள்ளதா, சுலபமாகக் கண்டறியும்படி உள்ளதா, பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள கடவுச்சொல் சரிபார்ப்பு அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

உங்கள் கடவுச்சொல்லை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க எங்களுக்கு உதவுதல்

Google கணக்கின் கடவுச்சொல்லை Google அல்லாத தளத்தில் உள்ளிடும்போது அதுகுறித்த அறிவிப்பைப் பெற Chromeமில் உள்ள கடவுச்சொல் எச்சரிக்கை அம்சத்தை இயக்கவும். இதைச் செய்தால் ஏதேனும் ஒரு தளம் Google தளம் போன்ற தோற்றத்தில் மோசடி செய்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதுடன் கடவுச்சொல் திருடப்பட்டால் உங்களால் அதை உடனடியாக மாற்றவும் முடியும்.

உதவிக்குறிப்பு: கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க இருபடிச் சரிபார்ப்பை இயக்கவும்.

படி 4: தேவையற்ற ஆப்ஸையும் உலாவி நீட்டிப்புகளையும் நீக்கவும்

ஒரு சாதனத்தில் அதிக ஆப்ஸ் இருந்தால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம். பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் உள்ள சாதனங்களில் உங்களுக்குத் தேவையான ஆப்ஸையும் உலாவி நீட்டிப்புகளையும் மட்டும் நிறுவவும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க, தெரியாத ஆப்ஸையோ அறியப்படாத மூலங்களில் உள்ள ஆப்ஸையோ நிறுவ வேண்டாம்.

உங்கள் சாதனத்தில் ஆப்ஸையும் நீட்டிப்புகளையும் நிறுவல் நீக்குவது எப்படி என அறிக:

உதவிக்குறிப்பு: பிற சாதனங்கள் மற்றும் உலாவிகளில் இருந்து ஆப்ஸையும் நீட்டிப்புகளையும் நீக்குவது எப்படி என அறிய, சாதனம் அல்லது உலாவியின் உதவித் தளத்தைப் பார்வையிடவும்.

படி 5: சந்தேகத்திற்குரிய மெசேஜ்கள், உள்ளடக்கம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கவும்

மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், ஃபோன் அழைப்புகள், இணையப் பக்கங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் ஏதேனும் ஒரு நிறுவனம், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் போல ஏமாற்றலாம்.

சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகளைத் தவிர்த்தல்
  • கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம். மின்னஞ்சல், ஃபோன் அழைப்பு, மெசேஜ் போன்றவற்றின் மூலம் உங்கள் கடவுச்சொல்லை Google ஒருபோதும் கேட்காது.
  • உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், உடனடி மெசேஜ்கள், இணையப் பக்கங்கள், ஃபோன் அழைப்புகள் போன்றவற்றுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
  • நம்பகத்தன்மையற்ற இணையதளங்கள் அல்லது அனுப்புநர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், இணையப் பக்கங்கள், பாப்-அப்கள் ஆகியவற்றில் இருக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் தவிர்த்தல்

உங்கள் கணக்கைப் பாதுகாக்க, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை Gmail தானாகவே கண்டறியும். இந்த உள்ளமைந்த பாதுகாப்பை இன்னும் வலுவாக்க, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களையும் அமைப்புகளையும் நீங்களும் கண்டறியலாம்:

உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டரில் Gmailலைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் ஒரு இணைப்பைக் கிளிக்செய்வதற்கு முன் அதன் மீது கர்சரைக் கொண்டுசெல்லுங்கள். கீழே இடது பக்கம் காட்டப்படும் இணைய முகவரியைப் பார்த்து நீங்கள் பார்க்க விரும்பும் தளம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

சந்தேகத்திற்கிடமான இணையப் பக்கங்களைத் தவிர்த்தல்

சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கம் மற்றும் தேவையற்ற மென்பொருள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கும் வகையில் Google Chrome, Search ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

Chrome, Search ஆகியவற்றில் இந்த எச்சரிக்கைகளை நிர்வகிப்பது எப்படி என அறிக.

உங்கள் கணக்கில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் பார்த்தால்

உங்கள் கணக்கைப் பாதுகாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1633302311037011531
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false