எனது Google தரவை எப்படிப் பதிவிறக்குவது?

முக்கியம்: உங்கள் Google தரவை நீங்கள் பதிவிறக்கினால், Google சேவையகங்களில் இருந்து அது நீக்கப்படாது. உங்கள் கணக்கை எப்படி நீக்குவது அல்லது உங்கள் செயல்பாடுகளை எப்படி நீக்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் Google தயாரிப்புகளில் உள்ள உங்கள் தரவை ஏற்றலாம் பதிவிறக்கலாம். உதாரணமாக:

  • மின்னஞ்சல்
  • ஆவணங்கள்
  • கேலெண்டர்
  • படங்கள்
  • YouTube வீடியோக்கள் (உதவிக்குறிப்பு: உங்கள் YouTube வீடியோக்கள் சிலவற்றைக் கண்டறிய முடியவில்லை என்றால் உங்களிடம் பிராண்டு கணக்கு உள்ளதா என்று பாருங்கள். பிராண்டு கணக்கு உங்களிடம் இருந்தால் கணக்கை மாற்ற வேண்டியிருக்கலாம்.)
  • பதிவும் கணக்கின் செயல்பாடுகளும்

தரவை உங்கள் பதிவுகளுக்காக வைத்துக்கொள்ளவோ மற்றொரு சேவையில் பயன்படுத்தவோ ஒரு காப்பகத்தை உருவாக்கலாம்.

முக்கியம்: உங்கள் செயல்கள் ஆபத்தானதாகத் தெரிந்தால், உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்காக அவை தாமதப்படுத்தப்படலாம் அல்லது இயங்காமல் போகலாம்.

படி 1: பதிவிறக்கக் காப்பகத்தில் சேர்ப்பதற்கான தரவைத் தேர்ந்தெடுக்கவும்

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. Google Takeout பக்கத்திற்குச் செல்லவும். நீங்கள் பயன்படுத்தும் மற்றும் உங்கள் தரவை வைத்திருக்கும் Google தயாரிப்புகள் தானாகவே தேர்ந்தெடுக்கப்படும்.
    • ஒரு தயாரிப்பில் உள்ள தரவை நீங்கள் பதிவிறக்க விரும்பவில்லை என்றால் அதற்கு அருகிலுள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
    • ஒரு தயாரிப்பில் உள்ள தரவுகளில் சிலவற்றை மட்டும் பதிவிறக்க விரும்பினால், 'அனைத்து தரவும் சேர்க்கப்பட்டுள்ளது' List என்பதைப் போன்ற பட்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் உங்களுக்குக் காட்டப்படலாம். பிறகு, நீங்கள் பதிவிறக்க விரும்பாத தரவின் அருகிலுள்ள பெட்டியைத் தேர்வுநீக்கலாம்.
  3. அடுத்த படி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முக்கியம்: நீங்கள் பதிவிறக்கத்தைக் கேட்கும் நேரத்திற்கும், காப்பகம் உருவாக்கப்படும் நேரத்திற்கும் இடையே உங்கள் தரவில் செய்யப்படும் மாற்றங்கள் உங்கள் தரவு ஃபைலில் சேர்க்கப்படாமல் போகலாம். எந்தெந்தத் தரவு சேர்க்கப்படாமல் போகலாம் என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

படி 2: காப்பகத்தின் வடிவத்தைப் பிரத்தியேமாக்கவும்

வழங்கல் முறை**

பதிவிறக்குவதற்கான இணைப்பை மின்னஞ்சல் மூலம் அனுப்புதல்

உங்கள் Google தரவுக் காப்பகத்தைப் பதிவிறக்குவதற்கான இணைப்பை மின்னஞ்சல் அனுப்புவோம்.

  1. "வழங்கல் முறை" என்பதற்கு, பதிவிறக்க இணைப்பை மின்னஞ்சலில் அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஏற்றத்தை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்களுக்கு வரும் மின்னஞ்சலில், காப்பகத்தைப் பதிவிறக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் Google தரவைப் பதிவிறக்க, திரையில் காட்டப்படும் படிகளைப் பின்பற்றவும்.
Driveவில் சேர்த்தல்

உங்கள் காப்பகத்தை Google Driveவில் சேர்த்து, அது எங்குள்ளது என்பதற்கான இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம். உங்கள் தரவு உங்கள் சேமிப்பகத்தில் கணக்கிடப்படும்.

  1. "வழங்கல் முறை" என்பதற்கு, Driveவில் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஏற்றத்தை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் Driveவில் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தயாரிப்பின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உங்கள் தரவு உள்ள ஃபோல்டர் காட்டப்படும்.
  4. தரவைப் பதிவிறக்க, திரையின் மேற்பகுதியில் உள்ள பதிவிறக்குவதற்கான Download ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
Dropboxஸில் சேர்த்தல்

உங்கள் காப்பகத்தை Dropboxஸில் பதிவேற்றி அதன் இருப்பிடத்திற்கான இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்.

  1. "வழங்கல் முறைக்கு" டிராப்பாக்ஸில் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கணக்குகளை இணைத்து ஏற்றத்தை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Dropboxஸிற்குத் திருப்பிவிடப்படுவீர்கள். கேட்கப்பட்டால் உங்கள் Dropbox கணக்கில் உள்நுழையவும்.
  4. உங்கள் Dropboxஸில் தனது "ஆப்ஸ்" ஃபோல்டரை Google Download Your Data அணுகலாமா என்று கேட்கும் Dropbox சாளரத்தில், அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, இந்த Dropbox ஃபோல்டரை நீங்கள் வேறு யாருடனும் பகிரவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  6. வரும் மின்னஞ்சலில் Dropboxஸில் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் காப்பகம் உள்ள Dropbox ஃபோல்டருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  7. தரவைப் பதிவிறக்க, ஃபைல்களைப் பதிவிறக்குவதற்கான Dropboxஸின் செயல்முறையைப் பின்பற்றவும்.
கவனத்திற்கு: நீங்கள் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்திருந்தால், உங்கள் காப்பகம் எதிர்காலத்தில் இரண்டு நாட்களுக்குத் திட்டமிடப்படும்.
Microsoft OneDriveவில் சேர்த்தல்

உங்கள் காப்பகத்தை Microsoft OneDriveவில் பதிவேற்றி அதன் இருப்பிடத்திற்கான இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்.

  1. "வழங்கல் முறைக்கு" OneDrive இல் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கணக்குகளை இணைத்து ஏற்றத்தை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Microsoftடிற்குத் திருப்பிவிடப்படுவீர்கள். கேட்கப்பட்டால் உங்கள் Microsoft கணக்கில் உள்நுழையவும்.
  4. Google Download Your Data உங்கள் தகவலை அணுகலாமா என்று கேட்கும் Microsoft சாளரத்தில், சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, இந்த OneDrive ஃபோல்டரை நீங்கள் வேறு யாருடனும் பகிரவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  6. வரும் மின்னஞ்சலில் OneDriveவில் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் காப்பகம் உள்ள OneDrive ஃபோல்டருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  7. தரவைப் பதிவிறக்க, ஃபைல்களைப் பதிவிறக்குவதற்கான OneDriveவின் செயல்முறையைப் பின்பற்றவும்.

குறிப்புகள்

  • இந்தப் படிகளைப் பின்பற்றிய பிறகு Microsoft OneDrive பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளில் உங்களின் சில தகவல்களை அணுகக்கூடிய ஆப்ஸாக Google Takeout காட்டப்படும். Googleளின் அணுகலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அகற்றலாம். (எதிர்காலத்தில் தரவை நீங்கள் OneDriveவில் பதிவிறக்கினால், Googleளுக்கு மீண்டும் நீங்கள் அணுகலை வழங்க வேண்டும்.)
  • உங்கள் காப்பகம் Microsoft OneDriveவை அடைந்ததும் Google அதற்குப் பொறுப்பாகாது. அது Microsoft விதிமுறைகள் மற்றும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படும். உதாரணமாக, Microsoft சேவைகள் ஒப்பந்தம்.
Boxஸில் சேர்த்தல்

உங்கள் காப்பகத்தை Boxஸில் பதிவேற்றி அதன் இருப்பிடத்திற்கான இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்.

  1. "வழங்கல் முறைக்கு" Box இல் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கணக்குகளை இணைத்து ஏற்றத்தை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Boxஸிற்குத் திருப்பிவிடப்படுவீர்கள். கேட்கப்பட்டால் உங்கள் Box கணக்கில் உள்நுழையவும்.
  4. Google Download Your Data உங்கள் தகவலை அணுகலாமா என்று கேட்கும் Box சாளரத்தில், Boxஸிற்கு அணுகலை வழங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, இந்த Box ஃபோல்டரை நீங்கள் வேறு யாருடனும் பகிரவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும். நிறுவனக் கணக்கிற்குத் தரவை ஏற்றுகிறீர்கள் என்றால், பகிர்வதற்கான இணைப்பு உருவாக்கப்படவில்லை என்றாலும் நிர்வாகியால் உங்கள் தரவைப் பார்க்க முடியும்.
  6. வரும் மின்னஞ்சலில் Boxஸில் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் காப்பகம் உள்ள Box ஃபோல்டருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  7. தரவைப் பதிவிறக்க, ஃபைல்களைப் பதிவிறக்குவதற்கான Boxஸின் செயல்முறையைப் பின்பற்றவும்.

குறிப்புகள்

  • இந்தப் படிகளைப் பின்பற்றிய பிறகு, உங்கள் இணைக்கப்பட்ட ஆப்ஸில் உங்களின் சில தகவல்களை அணுகக்கூடிய ஆப்ஸாக Google Takeout காட்டப்படும். Googleளின் அணுகலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அகற்றலாம். (எதிர்காலத்தில் தரவை நீங்கள் Boxஸில் பதிவிறக்கினால், Googleளுக்கு மீண்டும் நீங்கள் அணுகலை வழங்க வேண்டும்.)
  • உங்கள் Box கணக்கில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச ஃபைல் பதிவேற்ற அளவு குறைவாக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பகத்திற்கான அதிகபட்ச அளவு குறையும். உங்கள் Box கணக்கில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச ஃபைல் பதிவேற்ற அளவைவிடவும் பெரியதாக உள்ள காப்பக ஃபைல்கள் Boxஸில் பதிவேற்றப்படாது.
  • உங்கள் காப்பகம் Boxஸை அடைந்ததும் Google அதற்குப் பொறுப்பாகாது. அது Boxஸின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படும். உதாரணமாக, Box சேவை விதிமுறைகள்.

பதிவிறக்க வகை

ஒருமுறை பயன்படுத்துவதற்கான காப்பகம்

நீங்கள் தேர்ந்தெடுத்த தரவிற்கான ஒருமுறை காப்பகத்தை உருவாக்கவும்.

கவனத்திற்கு: நீங்கள் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்திருந்தால், உங்கள் காப்பகம் எதிர்காலத்தில் இரண்டு நாட்களுக்குத் திட்டமிடப்படும்.

திட்டமிட்ட பதிவிறக்கங்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்த தரவிற்கான காப்பகத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை என ஒரு வருடம் வரை தானாகவே உருவாக்கலாம். முதல் காப்பகம் உடனடியாக உருவாக்கப்படும்.

கவனத்திற்கு: நீங்கள் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்திருந்தால், திட்டமிட்ட பதிவிறக்கங்கள் கிடைக்காது.

ஃபைல் வகை

ஜிப் ஃபைல்கள்

ஏறத்தாழ அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இந்த ஃபைல்களைத் திறக்கலாம்.

Tgz ஃபைல்கள்

இந்த ஃபைல்களை Windowsஸில் திறக்க, கூடுதல் மென்பொருள் தேவைப்படலாம்.

காப்பக அளவு

நீங்கள் உருவாக்க விரும்பும் காப்பகத்திற்கான அதிகபட்ச அளவைத் தேர்வுசெய்யவும். நீங்கள் பதிவிறக்கும் தரவு இந்த அளவைவிட பெரியதாக இருந்தால் பல காப்பகங்கள் உருவாக்கப்படும்.

படி 3: உங்கள் Google தரவுக் காப்பகத்தைப் பெறவும்

இவற்றில் ஏதேனும் ஒரு விருப்பத்தைப் பயன்படுத்தி உங்களின் காப்பகம் உருவாக்கப்பட்டிருந்தால், அது எங்குள்ளது என்பதற்கான இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம். உங்கள் கணக்கில் உள்ள தகவல்களின் அளவைப் பொறுத்து, இந்தச் செயல்பாட்டிற்குச் சில நிமிடங்களில் இருந்து சில நாட்கள் வரை ஆகலாம். பெரும்பாலானவர்களுக்கு, கோரிக்கையைச் சமர்ப்பித்த அன்றே காப்பகத்திற்கான இணைப்பு கிடைத்துவிடும்.

கவனத்திற்கு: நீங்கள் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்திருந்தால், உங்கள் காப்பகம் எதிர்காலத்தில் இரண்டு நாட்களுக்குத் திட்டமிடப்படும்.

நீங்கள் நீக்கிய தரவு

நீங்கள் தரவை நீக்கும்போது உங்கள் கணக்கில் இருந்து பாதுகாப்பாகவும் முழுமையாகவும் அதை அகற்ற, Google தனியுரிமைக் கொள்கையில் விவரித்துள்ள செயல்முறையைப் பின்பற்றுவோம். முதலில், நீக்கப்பட்ட செயல்பாடுகள் காட்டப்படுவதும், உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க அவை பயன்படுத்தப்படுவதும் நிறுத்தப்படும். அதன்பிறகு எங்கள் சேமிப்பக சிஸ்டங்களில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறையைத் தொடங்குவோம்.

நீக்குவதற்கான செயல்முறையில் உள்ள, எனது செயல்பாடுகளில் உள்ளவை, படங்கள், ஆவணங்கள் போன்ற தரவு உங்கள் காப்பகத்தில் சேர்க்கப்படாது.

முக்கியம்: இந்தக் கருவிகளில் நீங்கள் தேடும் தகவல் இல்லையென்றால் எங்கள் தனியுரிமை உதவி மையத்திற்குச் சென்று, நாங்கள் என்னென்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், எதற்காகச் சேகரிக்கிறோம் என்பதையும் நீங்கள் எப்படி உங்கள் தகவல்களை மாற்றலாம், நிர்வகிக்கலாம், ஏற்றலாம், நீக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். எங்கள் சேமிப்பக சிஸ்டங்களில் இருந்து தகவல் நீக்கப்பட்டிருந்தால் அதை மீட்டெடுப்பது கடினம்.

பொதுவான கேள்விகள்

நாங்கள் என்னென்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், எதற்காகச் சேகரிக்கிறோம் என்பதையும் நீங்கள் எப்படி உங்கள் தகவல்களை மாற்றலாம், நிர்வகிக்கலாம், ஏற்றலாம், நீக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ள எங்கள் தனியுரிமை உதவி மையத்தைப் பாருங்கள்.

If the info you are looking for is not available via the tools mentioned above, submit a data access request and specify:

  • The categories of personal info you're seeking;
  • The products or services to which the data relates;
  • Any approximate dates when you think the data may have been collected by Google.

You’ll need to sign in to your Google Account to complete the form.

Important: You can also call our toll-free number, 855-548-2777. Our representatives can answer many of your questions and help you fill out the form to ensure we are providing information to the account owner.

பதிவிறக்கப்பட்ட Takeout தரவை எப்படிக் கண்டறிவது?

தரவைப் பதிவிறக்குவதற்கான உங்கள் கோரிக்கை நிறைவடைந்ததும் மின்னஞ்சல் அறிவிப்பு உங்களுக்கு அனுப்பப்படும். உங்கள் தரவு இருக்கும் ஃபோல்டருக்கான இணைப்பு அதில் இருக்கும்.

“பதிவிறக்க இணைப்பை மின்னஞ்சலில் அனுப்பு” என்பதைத் தேர்ந்தெடுத்தால், Google Takeoutடில் உங்கள் தரவு இருக்கும் ஃபோல்டருக்குத் திருப்பிவிடப்படுவீர்கள். அங்கிருந்து உங்கள் தரவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இல்லையென்றால், நீங்கள் தேர்ந்தெடுத்த கிளவுடு இடத்தில் (Drive, Dropbox, Box, OneDrive) உங்கள் தரவு உள்ள ஃபோல்டர் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

எனது தரவை எந்த வடிவத்தில் பதிவிறக்க வேண்டும்?
எந்த வடிவமைப்பை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பது சேவை, தரவு வகை, உங்கள் பயன்பாட்டின் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது. இவை மிகவும் பயனுள்ளவை மற்றும் போர்ட்டபிள் என்று நாங்கள் நம்புவதால் இந்த வகைகளைத் தேர்வுசெய்துள்ளோம். உதாரணமாக, தொடர்புகளை vCard வடிவத்தில் ஏற்றுவோம். இது மின்னஞ்சல் வழங்குநர்களுக்கான பொதுவான வடிவம். உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற வகையில் கூடுதல் விருப்பங்களையும் அடிக்கடி வழங்குவோம்.
எனது தரவைப் பதிவிறக்க முடியாவிட்டால் என்ன செய்வது?
தரவைப் பதிவிறக்க முடியாவிட்டால், தயாரிப்பில் உள்ள ஃபைல்களைக் குறைவாகத் தேர்ந்தெடுத்து ஏற்றிப் பார்க்கவும் மற்றும்/அல்லது தயாரிப்புக்குள் உள்ள கீழ்தோன்றும் விருப்பங்களில் இருந்து குறைந்த காப்பகத் தரவு அளவைக் கோரவும். கூடுதல் முயற்சியாக, Box, Storage போன்ற மூன்றாம் தரப்புச் சேமிப்பகத் தளத்திற்கு ஏற்றிப் பார்க்கவும்.
குறிப்பிட்ட வடிவங்களில் உள்ள ஃபைல்களைத் திறக்க முடியாவிட்டால் என்ன செய்வது?
HTML ஃபைல்களை எந்தவொரு வழக்கமான உலாவியிலும் திறக்க முடியும்; CSV மற்றும் JSON ஃபைல்களை TextEdit மென்பொருள், தொழிற்துறைத் தரத்திலான இன்பாக்ஸ், ICS சிறப்புச் சேவை போன்றவற்றில் திறக்க முடியும்.
தரவை ஏற்றும்போது குறிப்பிட்ட கால வரையறையைத் தேர்ந்தெடுக்க முடியுமா அல்லது அனைத்து தரவையும் ஏற்ற வேண்டுமா?
குறிப்பிட்ட கால வரையறையின்படி தரவை ஏற்றும் வசதியைத் தற்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.
எனது தரவை எங்கே சேமிக்க வேண்டும்?

பாதுகாப்பும், போதிய சேமிப்பிடமும் இருக்கும் எந்த இடத்திலும் உங்கள் தரவை நீங்கள் சேமிக்கலாம். பெரும்பாலான சூழல்களில், தரவை நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்குவதே மிகவும் எளிதானது.

பொதுவான கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய Google Driveவிலோ வேறு சேமிப்பிடத்திலோ அதைச் சேமியுங்கள்.

கவனத்திற்கு: Google Driveவைப் பயன்படுத்தும் நிலையில், Google கணக்கை நீக்கிவிடலாம் என்று நீங்கள் திட்டமிட்டால், கணக்கை நீக்குவதற்கு முன் உங்கள் காப்பகத்தை வேறு சேமிப்பிடத்திற்கு நகர்த்த வேண்டும்.

பதிவிறக்கப்பட்ட எனது Takeout தரவை மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனோ இணையதளத்துடனோ எப்படிப் பகிர்வது?

உங்கள் தரவை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கியிருந்தால், மூன்றாம் தரப்பின் ஆக்சஸ் பாயின்ட்டைப் பயன்படுத்தி அந்தத் தரவை நேரடியாக அந்த மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனோ இணையதளத்துடனோ நீங்கள் பகிரலாம்.  இந்த ஆக்சஸ் பாயின்ட் வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். இவற்றில் மின்னஞ்சல் முகவரி, மூன்றாம் தரப்பு ஆப்ஸ், இணையதளத்தின் பிரத்தியேகமாக உள்ளமைக்கப்பட்ட பதிவேற்றச் செயல்பாடு (இதன் மூலம் தரவை நேரடியாகப் பதிவேற்றலாம்) ஆகியவை அடங்கும்.

Drive, Box, OneDrive, Dropbox போன்ற கிளவுடு சேமிப்பக இடத்தில் உங்கள் தரவைச் சேர்த்திருந்தால், கிளவுடு வழங்குநரிடம் இருந்து நேரடியாக மூன்றாம் தரப்பு ஆப்ஸுக்கோ இணையதளத்திற்கோ உங்கள் தரவைப் பகிரலாம்.  பல சூழல்களில், கிளவுடு வழங்குநரால் ஆதரிக்கப்படும் மின்னஞ்சல் முகவரி மூலம் கிளவுடு வழங்குநரிடம் இருந்து நேரடியாக மூன்றாம் தரப்பினருடன் உங்கள் தரவைப் பகிர்வது இதில் அடங்கும்.

சில சூழல்களில், மூன்றாம் தரப்பு ஆப்ஸோ இணையதளமோ கிளவுடு சேமிப்பக இடத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து, கிளவுடு இடத்தில் இருந்தே உங்கள் தரவைப் படிப்பதற்கான அணுகலை மூன்றாம் தரப்பினருக்கு வழங்க உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்.

எனது காப்பகம் ஏன் பல ஃபைல்களாகப் பிரிக்கப்பட்டது?

நீங்கள் தேர்ந்தெடுத்த அளவு வரம்பைவிட பெரிதாக இருக்கும் காப்பகங்கள் பல ஃபைல்களாகப் பிரிக்கப்படும்.

உங்கள் காப்பகம் பிரிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க, 50 ஜி.பை. அளவு வரை உள்ள ஃபைலைத் தேர்ந்தெடுக்கலாம்.

கவனத்திற்கு: tgz காப்பகத்தைத் திறக்க, அதற்கான சிறப்பு மென்பொருள் தேவைப்படலாம். இந்த வகை ஃபைல்களின் பெயர்களில் யுனிகோடு எழுத்துகள் இருக்கக் கூடாது.
எனது காப்பகங்கள் ஏன் காலாவதியாகின்றன?

உங்கள் காப்பகம் ஏறத்தாழ 7 நாட்களில் காலாவதியாகிறது. அதன்பிறகு, உங்களின் மிகச் சமீபத்திய தகவலுடன் புதிய காப்பகத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

காப்பகம் காலாவதியாவதால் உங்கள் தரவும் காலாவதியாகும் என்பதில்லை. அத்துடன், Google சேவைகளில் எந்த மாற்றமும் இதனால் ஏற்படாது.

கவனத்திற்கு: ஒவ்வொரு காப்பகத்தையும் 5 முறை மட்டுமே பதிவிறக்க அனுமதிக்கிறோம். அதன்பிறகு, வேறு காப்பகத்திற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

எனது காப்பகத்தைப் பதிவிறக்க முயலும்போது ஏன் எனது கடவுச்சொல்லை மீண்டும் வழங்க வேண்டியுள்ளது?

உங்கள் தரவின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், காப்பகத்தை நீங்கள் உருவாக்கும்போது உங்கள் தரவை நீங்கள் மட்டுமே பதிவிறக்குவதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்காக, சமீபத்தில் உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை நீங்கள் டைப் செய்திருக்கவில்லை என்றால் அதை மீண்டும் டைப் செய்யும்படி உங்களிடம் கேட்போம். இது சிரமமாக இருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும் என்றாலும், உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் படிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

கவனத்திற்கு: உங்கள் கணக்கில் இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருந்தால், கூடுதல் சரிபார்ப்புப் படியையும் நிறைவுசெய்யும்படி உங்களிடம் கேட்கப்படலாம்.

எனது காப்பகம் ஏன் செயல்படவில்லை?

உங்கள் காப்பகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ காப்பகத்தை உருவாக்க முடியவில்லை என்றாலோ வேறு ஒன்றை உருவாக்க முயலவும். இப்படிச் செய்வது பெரும்பாலும் சிக்கலைச் சரிசெய்துவிடும்.

மாற்றாக, ஒரு நேரத்தில் ஒரு தயாரிப்பு அல்லது சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சிறிய அதிகரிப்புகளில் தரவைப் பதிவிறக்க முயலவும். பெரிய அளவிலான தரவைப் பதிவிறக்க முயன்றால் இது பயனுள்ளதாக இருக்கும்.

Takeoutடில் இருந்து பதிவிறக்கிய ஃபைல்களைத் திறப்பது எப்படி?
Takeout ஏற்றங்களை மொபைல் சாதனத்தில் அல்லாமல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவிறக்குவதும் பார்ப்பதும் சிறந்தது. காப்பகத்தில் archive_browser.html என்ற பெயரில் ஒரு ஃபைல் இருக்கும். ஃபைல் வடிவங்கள் குறித்தும், ஃபைலை எப்படித் திறந்து தரவைப் பார்ப்பது என்பது குறித்தும் கூடுதல் தகவல்களை அதில் பெறலாம்.
சமீபத்தில் செய்த சில மாற்றங்கள் ஏன் எனது காப்பகத்தில் சேர்க்கப்படவில்லை?

நீங்கள் பதிவிறக்கத்தைக் கேட்கும் நேரத்திற்கும், காப்பகம் உருவாக்கப்படும் நேரத்திற்கும் இடையே உங்கள் தரவில் செய்யப்படும் மாற்றங்கள் இந்த ஃபைலில் சேர்க்கப்படாமல் போகலாம். சில எடுத்துக்காட்டுகள்:

  • Drive ஃபைலுக்கான பகிர்தல் வகை அல்லது அனுமதிகளில் செய்யப்படும் மாற்றங்கள்
  • Drive ஃபைலில் பதிலளிக்கப்படும் கருத்துகள்
  • சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும் படங்களும் ஆல்பங்களும்
எனது மின்னஞ்சல் தரவைப் பதிவிறக்கும்போது எனது Gmail லேபிள்களை எப்படி அழியாமல் பாதுகாப்பது?

நீங்கள் Gmailலில் இருந்து மின்னஞ்சலைப் பதிவிறக்கும்போது ஒவ்வொரு மின்னஞ்சலுக்கான லேபிள்களும் உங்களின் பதிவிறக்க ஃபைலில் சிறப்பு X-Gmail-Labels தலைப்பில் சேமிக்கப்படும். இப்போது எந்த மின்னஞ்சல் கிளையண்ட்டும் இந்தத் தலைப்பை அடையாளம் காண முடியாது என்றாலும், பெரும்பாலான மின்னஞ்சல் கிளையண்ட்டுகள் இந்த லேபிள்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நீட்டிப்புகளை எழுத அனுமதிக்கின்றன.

எனது YouTube வீடியோக்கள் சிலவற்றை ஏன் என்னால் கண்டறிய முடியவில்லை?

உங்களின் சில YouTube வீடியோக்களைப் பதிவிறக்க முடியவில்லை என்றால் உங்கள் YouTube சேனல் பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். இணைக்கப்பட்டிருந்தால்:

  • பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • YouTubeல் வீடியோக்களைப் பதிவேற்ற நீங்கள் பயன்படுத்திய பிராண்டு கணக்கிற்கு மாறவும்.

உதவிக்குறிப்பு: உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பிராண்டு கணக்குகள் இருந்தால், உங்களின் பிற பிராண்டு கணக்குகளில் இருந்து வீடியோக்களைப் பதிவிறக்க இதே படிகளைப் பின்பற்றலாம்.

எனது பள்ளி/பணிக் கணக்கிலிருந்து ஏன் தரவைப் பதிவிறக்க முடியவில்லை?

பயனர்கள் பல்வேறு தயாரிப்புகளிலிருந்து தரவைப் பதிவிறக்கலாமா என்பதை Google Workspace நிர்வாகிகளால் நிர்வகிக்க முடியும். உங்கள் நிர்வாகி யார் என்பதைக் கண்டறியுங்கள்.

Takeout பயனர் இடைமுகத்தை எனது ஆப்ஸால் பிரத்தியேகமாக்க முடியுமா?

Takeout பயனர் இடைமுகம் அளவுருக்களை ஆதரிப்பதால் பயனர் இடைமுகத்தை ஆப்ஸால் பிரத்தியேகமாக்க முடியும். உதாரணமாக, குறிப்பிட்ட தயாரிப்புகள், கிளவுடு பதிவிறக்கங்களுக்கான இடம், திட்டமிட்டுப் பதிவிறக்குவதற்கான கால இடைவெளி ஆகியவற்றை ஆப்ஸ் தேர்ந்தெடுக்கலாம்.

மூன்று அளவுருக்களையும் பயன்படுத்தும் URL வடிவத்திற்கான உதாரணம்:

https://takeout.google.com/settings/takeout/custom/google_account,my_activity,fit,youtube?dest=drive&frequency=2_months

உதவிக்குறிப்பு: இந்த உதாரணம் இறுதியானது அல்ல. இது அவ்வப்போது மாற்றப்படலாம். ஆப்ஸ் அல்லது பிற தயாரிப்புகளுக்கு, சேர்ப்பதற்குச் சாத்தியமுள்ள மதிப்புகள் “data-id” என்ற CSS பண்புக்கூறுகளுக்குள் ரெண்டர் செய்யப்பட்ட HTMLலின் மூலத்தில் இருக்கலாம்.  உதாரணமாக, “dest” என்ற அளவுருவிற்கான சாத்தியமுள்ள மதிப்புகளில் "box", "dropbox", "drive", "onedrive" ஆகியவை அடங்கும். “கால இடைவெளி” என்ற அளவுருவிற்கான சாத்தியமுள்ள மதிப்புகளில் “2_months” என்பது அடங்கும்

Google தயாரிப்புகளில் உள்ள தரவைப் பதிவிறக்குவது பற்றிய பொதுவான கேள்விகள்

எனது YouTube வீடியோக்கள் எந்த வடிவத்தில் பதிவிறக்கப்படும்?

வீடியோக்கள் அவற்றின் அசல் வடிவத்திலோ H264 வீடியோ மற்றும் AAC ஆடியோ உள்ள MP4 ஃபைல் வடிவத்திலோ பதிவிறக்கப்படும்.

நான் Google குழுவின் உறுப்பினர். அந்தக் குழுவிலிருந்து மெசேஜ்களையும் மெம்பர்ஷிப் தகவலையும் நான் எப்படிப் பதிவிறக்கலாம்?

குழுவின் மெசேஜ்களையும் மெம்பர்ஷிப்பையும் உரிமையாளர்கள் மட்டுமே பதிவிறக்க முடியும்.

நீங்கள் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ இருந்தால், உங்களுக்குத் தேவையான தகவலைப் பதிவிறக்கி உங்களுடன் பகிரும்படி உரிமையாளரைக் கேட்கவும். மின்னஞ்சல் மூலம் நீங்கள் மெசேஜ்களைப் பெற்றால், உங்களுக்கு இதுவரை வந்த மெசேஜ்களை உங்கள் மின்னஞ்சல் காப்பகத்திலிருந்து பதிவிறக்கலாம்.

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களைக் கால வரையறையின்படி பதிவிறக்க முடியுமா அல்லது இன்பாக்ஸில் உள்ள ஒட்டுமொத்த மின்னஞ்சல்களையும் பதிவிறக்க வேண்டுமா?
கால வரையறையின்படி ஏற்றுவதைத் தற்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.
நான் Google Workspace நிர்வாகி. எனது நிறுவனத்தின் தரவை எப்படிப் பதிவிறக்குவது?

மின்னஞ்சல்கள், கேலெண்டர்கள், ஆவணங்கள், தளங்கள் உள்ளிட்ட உங்கள் நிறுவனத்தின் தரவை நீங்கள் பதிவிறக்கலாம் அல்லது நகர்த்தலாம். உங்கள் நிறுவனத்தின் Google Workspace தரவைப் பதிவிறக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

**இந்தப் பட்டியலில் Google அல்லாத சேவை வழங்குநர்கள் உள்ளனர். Google அல்லாத சேவை வழங்குநர் விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்யும்போது:

1. உங்கள் சார்பாக இந்தச் சேவை வழங்குநருக்கு ஃபைல்களை நகர்த்த Googleளை அனுமதிக்கிறீர்கள்.

2. இந்தச் சேவை வழங்குநருக்கு ஃபைல்களைப் பதிவேற்றிய பிறகு Google அவற்றுக்குப் பொறுப்பேற்காது. பதிவேற்றும் உள்ளடக்கம் சேவை வழங்குநரின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

உதவிக்குறிப்பு: எது பகிரப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள தரவை நீங்களே பார்க்கலாம்.

கருத்தை அனுப்புங்கள்

உங்கள் Google தரவைப் பதிவிறக்குவது தொடர்பான உங்கள் அனுபவம் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்தைப் பகிர்வதன் மூலம், உங்களுக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் Google இந்தத் தயாரிப்பை மேம்படுத்த உதவுகிறீர்கள்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4873587448482544136
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false