இருபடிச் சரிபார்ப்பில் ஏற்படும் பொதுவான சிக்கல்களைச் சரிசெய்தல்

மொபைல் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுவிட்டது

இவற்றைப் பரிந்துரைக்கிறோம்: சூழ்நிலைகளைப் பொறுத்து உங்கள் கணக்கை மீட்டெடுக்கப் பல்வேறு வழிகள் உள்ளன. காப்புப் பிரதி விருப்பங்களைப் பயன்படுத்துதல்
உங்கள் முதன்மை மொபைலுக்கான அணுகலை இழந்துவிட்டால், உள்நுழைய முயல்வது நீங்கள்தான் என்பதை இவற்றால் உறுதிசெய்யலாம்:
  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ள வேறொரு மொபைல் மூலம்.
  • உங்கள் Google கணக்கின் இருபடிச் சரிபார்ப்புப் பிரிவில் நீங்கள் சேர்த்துள்ள வேறொரு மொபைல் எண் மூலம்.
  • நீங்கள் முன்பு சேமித்த மாற்றுக் குறியீட்டின் மூலம்.
  • உங்கள் Google கணக்கின் இருபடிச் சரிபார்ப்புப் பிரிவில் நீங்கள் சேர்த்துள்ள பாதுகாப்பு விசையின் மூலம்.
நம்பகமான சாதனத்தில் இருந்து உள்நுழைதல்
ஒரு சாதனத்தில் நீங்கள் ஏற்கெனவே உள்நுழைந்திருந்து “இந்தக் கம்ப்யூட்டரில் மீண்டும் கேட்க வேண்டாம்” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்திருந்தால் இரண்டாவது சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தாமலேயே அந்தச் சாதனத்தின் மூலம் உள்நுழையலாம். உங்கள் Google கணக்கில் உள்நுழைந்த பிறகு உங்களின் சரிபார்ப்பு முறைகளை நிர்வகிக்கலாம்.
மொபைல் நிறுவனத்திடம் இருந்து புதிய மொபைலைப் பெறுதல்
மொபைல் தொலைந்துவிட்டால் உங்கள் மொபைல் எண்ணைப் புதிய மொபைலுக்கோ புதிய சிம் கார்டுக்கோ மாற்றும்படி மொபைல் நிறுவனத்திடம் கேட்கலாம்.
உங்கள் கணக்கை மீட்டெடுத்தல்
உங்களால் உள்நுழைய முடியவில்லை எனில் உங்கள் கணக்கை மீட்டெடுக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும். சிக்கல்கள் இருந்தால் கணக்கு மீட்டெடுப்புப் படிகளை நிறைவுசெய்வதற்கான உதவிக்குறிப்புகளை முயலவும்.

எனது பாதுகாப்பு விசை தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுவிட்டது

பின்வருவன போன்ற வேறொரு இரண்டாவது படியை அமைத்திருந்தால் உங்கள் கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற சரியான படிகளைத் தேர்வுசெய்யவும்:
  • சரிபார்ப்புக் குறியீடுகள்
  • Google அறிவிப்புகள்
  • மாற்றுக் குறியீடுகள்
  • உங்கள் கணக்கில் சேர்த்துள்ள மாற்றுப் பாதுகாப்பு விசை
  • சரிபார்ப்புக் குறியீட்டைக் கேட்க வேண்டாமென நீங்கள் தேர்வுசெய்த, பதிவுசெய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டர்
முக்கியம்: உங்கள் கணக்கில் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பைச் சேர்த்திருந்தால் மாற்றுப் பாதுகாப்பு விசையை மட்டுமே பயன்படுத்த முடியும். உங்களிடம் மாற்றுப் பாதுகாப்பு விசை இல்லை எனில் உங்கள் கணக்கை மீட்டெடுக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

வேறொரு இரண்டாவது படியை அமைத்திருந்தால்

  1. கடவுச்சொல்லையும் அந்த இரண்டாவது படியையும் பயன்படுத்தி உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. தொலைந்த பாதுகாப்பு விசையைக் கணக்கில் இருந்து அகற்றுவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
  3. புதிய பாதுகாப்பு விசையைப் பெறவும். கூடுதலாக ஒரு பாதுகாப்பு விசையையும் நீங்கள் பெறலாம். அதைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
  4. உங்கள் கணக்கில் புதிய பாதுகாப்பு விசையைச் சேர்க்கவும்.

வேறொரு இரண்டாவது படியை அமைக்காமல் இருந்தால் அல்லது கடவுச்சொல்லை மறந்திருந்தால்

முக்கியம்: கணக்கு உங்களுக்குச் சொந்தமானதுதான் என்பதை நிரூபிக்க இருபடிச் சரிபார்ப்பில் கூடுதலாக ஒரு படியை முடிக்க வேண்டும். இந்தக் கூடுதல் பாதுகாப்பு காரணமாக, நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதை Google உறுதிப்படுத்த 3 முதல் 5 வணிக நாட்கள் ஆகலாம்.

கணக்கை மீட்டெடுப்பதற்கான படிகளைப் பின்பற்றவும். கணக்கு உங்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான கேள்விகள் கேட்கப்படும்.

முடிந்தளவு சிறப்பாகப் பதிலளிக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

இவற்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம்:

  1. உங்களைத் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்.
  2. உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறியீடு. நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணை உங்களால் அணுக முடிவதை உறுதிப்படுத்த இந்தக் குறியீடு உதவுகிறது.

பாதுகாப்பு விசையை இரண்டாவது படியாக அமைத்தல்

இருபடிச் சரிபார்ப்பை இயக்கி, தகுதியுள்ள மொபைலில் உள்நுழைந்தால் Google அறிவிப்புகளைப் பெறலாம். தேவைப்படும் இரண்டாவது படியாகப் பாதுகாப்பு விசையை மாற்ற மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பில் பதிவுசெய்யவும்.

இழந்த மாற்றுக் குறியீடுகளை ரத்துசெய்தல்

உங்கள் மாற்றுக் குறியீடுகளை இழந்துவிட்டால் அவற்றை ரத்துசெய்து புதிய குறியீடுகளைப் பெறலாம்.
  1. உங்கள் Google கணக்கின் இருபடிச் சரிபார்ப்புப் பிரிவுக்குச் செல்லவும்.
  2. குறியீடுகளைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய குறியீடுகளைப் பெறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறவில்லை

  • அதற்குப் பதிலாக Google அறிவிப்பைப் பெற்றிருக்கலாம். மெசேஜ் (SMS) சரிபார்ப்புக் குறியீடுகளுக்குப் பதிலாக Google அறிவிப்புகளை ஏன் பரிந்துரைக்கிறோம் என அறிக.
  • நீங்கள் வழக்கமாக உள்நுழையும் விதத்தில் (எ.கா. இருப்பிடம்) ஏதேனும் வேறுபாட்டை நாங்கள் கவனித்தால் மெசேஜ் மூலம் சரிபார்த்தல் குறியீட்டை உங்களால் பெற முடியாமல் போகலாம்.
  • சரிபார்ப்புக் குறியீடு இருக்கும் மெசேஜ் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டால் அதை டெலிவரி செய்வதை உங்கள் சேவைத் திட்டமும் மொபைல் சாதனமும் ஆதரிப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
    • இருப்பிடத்தையும் சேவை வழங்குநரையும் பொறுத்து டெலிவரி செய்யப்படும் வேகமும் கிடைக்கும் தன்மையும் மாறுபடக்கூடும்.
  • குறியீடுகளைப் பெற முயலும்போது உங்கள் இணைய இணைப்பு போதுமானதாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • பின்வரும் சூழ்நிலைகளில் சரிபார்ப்புக் குறியீட்டை உங்கள் மொபைலில் குரல் அழைப்பின் மூலம் பெறுவீர்கள்:
    • அழைப்பிற்கு உங்களால் பதிலளிக்க முடியாதபோது.
    • உங்கள் இணைய இணைப்பு போதுமானதாக இல்லாதபோது.
உதவிக்குறிப்பு: நீங்கள் பலமுறை சரிபார்ப்புக் குறியீடுகளைக் கோரியிருந்தால், சமீபத்தில் வந்த குறியீடு மட்டுமே வேலைசெய்யும்.

என் Google Authenticator குறியீடுகள் வேலை செய்யவில்லை

உங்கள் Google Authenticator ஆப்ஸில் நேரம் சரியாக ஒத்திசைக்கப்படாமல் இருக்கக்கூடும்.

சரியான நேரத்தை அமைக்க:

  1. உங்கள் Android சாதனத்தில் Google Authenticator ஆப்ஸின் முதன்மை மெனுவுக்குச் செல்லவும்.

  2. மேலும் மேலும் அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு குறியீடுகளுக்கான நேரத் திருத்தம் அதன் பிறகு இப்போது ஒத்திசை என்பதைத் தட்டவும்.

அடுத்த திரையில் நேரம் ஒத்திசைக்கப்பட்டதை ஆப்ஸ் உறுதிசெய்யும். இப்போது நீங்கள் உள்நுழைய முடியும். இந்த ஒத்திசைவு உங்கள் Google Authenticator ஆப்ஸில் இருக்கும் நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். சாதனத்தின் தேதி மற்றும் நேர அமைப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது.

இருபடிச் சரிபார்ப்பை இயக்கிய பிறகு ஆப்ஸ் வேலை செய்யவில்லை

இருபடிச் சரிபார்ப்பை இயக்கிய பிறகு சில ஆப்ஸில் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.

உதவிக்குறிப்பு: இருபடிச் சரிபார்ப்பைச் சேர்த்த பிறகு ஆப்ஸில் உள்நுழைய முடியவில்லை எனில் ஆப்ஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற Google Voice சேவையை ஏன் பயன்படுத்தக்கூடாது?

சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற Google Voiceஸைப் பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாத நிலை ஏற்படலாம்.

உதாரணத்திற்கு Google Voice ஆப்ஸில் இருந்து வெளியேறிவிட்டீர்கள் எனில், மீண்டும் அதில் உள்நுழைய சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படலாம். ஆனால் குறியீடு உங்கள் Google Voice சேவைக்கு அனுப்பப்பட்டு இருப்பதால் உங்களால் குறியீட்டைப் பெற முடியாது.

பணி, பள்ளி அல்லது பிற நிறுவனக் கணக்குகள்

பணி, பள்ளி அல்லது இருபடிச் சரிபார்ப்பு மூலம் பாதுகாக்கப்பட்ட பிற குழு மூலம் கணக்கைப் பயன்படுத்தும் சூழலில் உங்களால் உள்நுழைய முடியவில்லை எனில் நீங்கள்:

உள்நுழைய இரண்டாவது படியைப் பயன்படுத்த முடியவில்லை

நம்பகமான சாதனம் என நீங்கள் குறித்திருக்கும் சாதனத்தின் மூலம் கணக்கு மீட்டெடுப்பு அம்சத்திற்குச் செல்லவும்.

மெசேஜ்கள் மூலம் எனது மாற்று மொபைல் எண்ணில் உள்நுழைய முடியவில்லை

நீங்கள் வழக்கமாக உள்நுழையும் விதத்தில் (எ.கா. இருப்பிடம்) ஏதேனும் வேறுபாடு இருந்தால் இவ்வாறு நிகழலாம். உங்கள் மாற்று மொபைல் எண்ணில் உள்நுழைய உங்கள் முதன்மை ஃபோன் அல்லது வேறொரு நம்பகமான சாதனத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11000458145290084051
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false