இடைநிலை மற்றும் மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகலைப் பெறுதல்

கவனத்திற்கு: இந்தக் கட்டுரையில் சேனல் சரிபார்ப்பு முத்திரைகளைப் பற்றிய விவரங்கள் எதுவுமில்லை. சரிபார்ப்பு முத்திரைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள்.

உங்கள் சேனலை அதிகச் செயல்திறனுடன் பயன்படுத்துவதற்கு உதவ பல்வேறு கருவிகளையும் அம்சங்களையும் YouTube வழங்குகிறது. பெரும்பாலான கிரியேட்டர்களிடம் இந்த அம்சங்களுக்கான அணுகல் உள்ளது. எனினும் சில அம்சங்களை அன்லாக் செய்ய கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும். இந்தக் கூடுதல் அணுகல் நிபந்தனைகள் மோசடி செய்பவர்கள், ஸ்பேமர்கள் மற்றும் பிற தவறான நோக்கமுடையவர்களைத் தீங்கு விளைவிக்க விடாமல் கடினமாக்குகிறது. கூடுதல் அம்சங்களுக்கான அணுகலைப் பெற முதன்மை சேனல் உரிமையாளர்கள் மட்டும் தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இடைநிலை அம்சங்களை அணுகுதல்

மொபைல் எண் சரிபார்ப்பை நிறைவுசெய்து அணுகலைப் பெறுதல்

மொபைல் எண் சரிபார்ப்பை நீங்கள் நிறைவுசெய்தால் இடைநிலை அம்சங்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். மேம்பட்ட அம்சங்களை அணுகுவது எப்படி என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம்.

  1. கம்ப்யூட்டரில் YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேனல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அம்சத்திற்கான தகுதிநிலை அதன் பிறகு இடைநிலை அம்சங்கள் அதன் பிறகு மொபைல் எண்ணைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல் எண்ணை உள்ளிடும்படி உங்களிடம் கேட்கப்படும். சரிபார்ப்புக் குறியீட்டை மெசேஜ் மூலமோ குரல் அழைப்பின் மூலமோ அந்த எண்ணிற்கு அனுப்புவோம்.

மேம்பட்ட அம்சங்களை அணுகுதல்

மேம்பட்ட அம்சங்கள் என்பவை YouTube அம்சங்களின் தொகுப்பாகும். கருத்துகளைப் பின் செய்யும் வசதி, அதிகமான தினசரிப் பதிவேற்ற வரம்புகள் போன்றவை இதிலடங்கும்.

மொபைல் எண் சரிபார்ப்பை முதலில் நிறைவுசெய்து மேம்பட்ட அம்சங்களை நீங்கள் அணுகலாம். அதன் பிறகு நீங்கள் போதுமான அளவிற்குச் சேனல் செயல்பாடுகளை உருவாக்கத் தேர்வுசெய்யலாம் அல்லது கீழுள்ள ஐடி/வீடியோவைப் பயன்படுத்திச் சரிபார்ப்பை நிறைவுசெய்யலாம்.

ஐடி மற்றும் வீடியோ சரிபார்ப்பைச் சில கிரியேட்டர்கள் பயன்படுத்த முடியாது. மேம்பட்ட அம்சங்களை அணுக நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளை YouTube Studioவில் உள்ள 'அம்சத்திற்கான தற்போதைய தகுதிநிலை' உங்களுக்கு எப்போதும் காட்டும்.

மொபைல் மற்றும் ஐடி/வீடியோ சரிபார்ப்பைப் பயன்படுத்தி அணுகலைப் பெறுதல்

மொபைல் எண் சரிபார்ப்பை நிறைவுசெய்தல்

  1. கம்ப்யூட்டரில் YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேனல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அம்சத்திற்கான தகுதிநிலை அதன் பிறகு இடைநிலை அம்சங்கள் அதன் பிறகு மொபைல் எண்ணைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மொபைல் எண்ணை உள்ளிடும்படி உங்களிடம் கேட்கப்படும். சரிபார்ப்புக் குறியீட்டை மெசேஜ் மூலமோ குரல் அழைப்பின் மூலமோ அந்த எண்ணிற்கு அனுப்புவோம்.

மொபைல் எண் சரிபார்ப்புப் படியை நிறைவுசெய்ததும், அடுத்த படியாக ஐடியையோ வீடியோவையோ பயன்படுத்திச் சரிபார்ப்பை நிறைவுசெய்ய வேண்டும்.

கவனத்திற்கு: வழக்கமாக, போதுமான அளவிற்குச் சேனல் செயல்பாடுகளை உருவாக்கிய சில மாதங்களிலோ மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தவில்லை எனில் 2 வருடங்களுக்குப் பிறகோ உங்கள் ஐடி/வீடியோ சரிபார்ப்பு நீக்கப்படும்.

ஐடி சரிபார்ப்பை நிறைவுசெய்தல்

  1. YouTube Studioவில் உள்நுழையவும். 
  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேனல் என்பதைக் கிளிக் செய்யவும். 
  4. அம்சங்களுக்கான தகுதிநிலை  அதன் பிறகு  மேம்பட்ட அம்சங்கள்  அதன் பிறகு அம்சங்களுக்கான அணுகல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் ஐடியைப் பயன்படுத்துக என்பதைத் தேர்ந்தெடுத்து, மின்னஞ்சல் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். Google மின்னஞ்சலை அனுப்பும். இதற்குப் பதிலாக QR குறியீட்டையும் ஸ்கேன் செய்யலாம். 
  6. உங்கள் மொபைலில் மின்னஞ்சலைத் திறந்து, சரிபார்ப்பைத் தொடங்குக என்பதைத் தட்டவும்.
  7. உங்கள் ஐடியை Google பயன்படுத்தும் விதத்தையும் ஐடி எப்படிச் சேமித்து வைக்கப்படும் என்பதையும் குறித்த விளக்கத்தைப் படிக்கவும். சரிபார்ப்பைத் தொடர, ஏற்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும். 
  8. உங்கள் ஐடியைப் படமெடுக்க அறிவிப்புகளைப் பின்தொடரவும். குறிப்பு: உங்கள் ஐடியில் உள்ள பிறந்த தேதி உங்கள் Google கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியுடன் பொருந்துவதை உறுதிசெய்துகொள்ளவும். 
  9. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். சமர்ப்பித்ததும், உங்கள் ஐடியை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். வழக்கமாக இதற்கு 24 மணிநேரம் ஆகும்.

உங்கள் ஐடி சரிபார்ப்புத் தரவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மேலும் அறிக.

அல்லது

வீடியோ சரிபார்ப்பை நிறைவுசெய்தல்

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. அமைப்புகள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேனல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அம்சங்களுக்கான தகுதிநிலை அதன் பிறகு மேம்பட்ட அம்சங்கள் அதன் பிறகு அம்சங்களுக்கான அணுகல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வீடியோ சரிபார்ப்பைப் பயன்படுத்துக என்பதைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்து, மின்னஞ்சல் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Googleளிடம் இருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். இதற்குப் பதிலாக QR குறியீட்டையும் ஸ்கேன் செய்யலாம்.
  6. உங்கள் மொபைலில் மின்னஞ்சலைத் திறந்து, சரிபார்ப்பைத் தொடங்குக என்பதைத் தட்டவும்.
  7. ஒரு புள்ளியைப் பின்தொடர்தல், தலையைத் திருப்புதல் போன்ற செயல்களைச் செய்யும்படிக் கோரும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
  8. உங்கள் சரிபார்ப்பு வீடியோ பதிவேற்றப்பட்டதும் அதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.
    • மதிப்பாய்வு செய்ய வழக்கமாக 24 மணிநேரம் ஆகும். மதிப்பாய்வு ஏற்கப்பட்டதும் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

உங்கள் வீடியோ சரிபார்ப்புத் தரவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மேலும் அறிக.

அணுகலைப் பெற சேனல் செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்

உங்கள் சேனல் செயல்பாடுகளைப் பயன்படுத்தி மேம்பட்ட அம்சத்திற்கான அணுகலைப் பெற மொபைல் எண் சரிபார்ப்பையும் நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும்.

மொபைல் எண் சரிபார்ப்பை நிறைவுசெய்தல்

  1. கம்ப்யூட்டரில், YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேனல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அம்சத்திற்கான தகுதிநிலை அதன் பிறகு இடைநிலை அம்சங்கள் அதன் பிறகு மொபைல் எண்ணைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மொபைல் எண்ணை உள்ளிடும்படி உங்களிடம் கேட்கப்படும். சரிபார்ப்புக் குறியீட்டை மெசேஜ் மூலமோ குரல் அழைப்பின் மூலமோ அந்த எண்ணிற்கு அனுப்புவோம்.

உங்கள் உள்ளடக்கமும் செயல்பாடும் தொடர்ந்து YouTubeன் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றியுள்ளனவா என்பதைத் தீர்மானிக்க சேனல் செயல்பாடுகள் தரவு பயன்படுத்தப்படும்.

சேனல் செயல்பாடுகள் என்பவை பின்வருவனவற்றின் பதிவு ஆகும்:

  • சேனல் செயல்பாடு (வீடியோ பதிவேற்றங்கள், லைவ் ஸ்ட்ரீம்கள், பார்வையாளர்கள் ஈடுபாடு போன்றவை.)
  • உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய தனிப்பட்ட தரவு.
    • கணக்கு எப்போது மற்றும் எப்படி உருவாக்கப்பட்டது.
    • எவ்வளவு முறை அது பயன்படுத்தப்பட்டது.
    • Google சேவைகளுடன் நீங்கள் இணையும் முறை.

செயலிலுள்ள பெரும்பாலான சேனல்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவிலான சேனல் செயல்பாடுகள் இருக்கும் என்பதால் மேம்பட்ட அம்சங்களைப் பெற அவை எதுவும் செய்ய வேண்டியிருக்காது. ஆனால், சில சமயங்களில் எங்கள் தரப்பிலும் தவறுகள் ஏற்படக்கூடும் என்பதை அறிவோம். எனவேதான் விரைவாக அணுகுவதற்கு நாங்கள் பிற சரிபார்ப்பு விருப்பங்களையும் வழங்குகிறோம்.

உங்கள் சேனல் செயல்பாடுகளை உருவாக்கிப் பராமரித்தல்

மேம்பட்ட அம்சங்கள் என்பவை YouTube அம்சங்களின் தொகுப்பாகும். கருத்துகளைப் பின் செய்யும் வசதி, அதிகமான தினசரிப் பதிவேற்ற வரம்புகள் போன்றவை இதிலடங்கும். தொடர்ந்து YouTubeன் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும், போதுமான சேனல் செயல்பாடுகளை உருவாக்கியும் மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகலைக் கிரியேட்டர்கள் பெறலாம். எங்கள் கொள்கைகளுடன் இணங்கவில்லை எனில் தகுதிநிலையை அடைவதற்குத் தாமதமாகும். அத்துடன், மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகலை ஏற்கெனவே கொண்டிருக்கும் சேனல்கள் அவற்றின் தகுதிநிலையை இழக்க நேரிடும்.

ஒரு சேனல், அம்சத்திற்கான அணுகலைப் பெறுவதைத் தாமதமாக்கக்கூடிய அல்லது அம்சங்களுக்கான மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பெறுவதற்கு வழிவகுக்கக்கூடிய செயல்பாடுகளுக்கான உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது முழுமையான பட்டியல் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்:

  • சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பைப் பெறுதல்
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேனல்களில் ஒரே வீடியோவைத் திரும்பத் திரும்ப வெளியிடுதல் அல்லது உங்களுக்குச் சொந்தமில்லாத & EDSA வகையில் அடங்காத வீடியோவைத் திரும்பத் திரும்பப் பதிவேற்றுதல்
  • இழிவுபடுத்தும், வெறுப்பைத் தூண்டும், ஆபத்து விளைவிக்கும், பாலியல் ரீதியான, வன்முறையான மற்றும்/அல்லது உபத்திரவத்தை ஏற்படுத்தும் வீடியோக்களையோ கருத்துகளையோ திரும்பத் திரும்ப இடுகையிடுதல்
  • ஸ்பேமிங், மோசடி செய்தல், தவறாக வழிநடத்தும் தரவுத்தகவலைப் பயன்படுத்துதல், தவறான செய்தியைத் தெரிவித்தல் அல்லது ஏமாற்றக்கூடிய பிற செயல்பாடுகள்
  • இணையவழித் துன்புறுத்தல்
  • மற்றொரு நபரைப்போல் ஆள்மாறாட்டம் செய்தல்
  • சிறுவர் பாதுகாப்பு தொடர்பான எங்களின் கொள்கையை மீறுதல்
  • கொள்கையை மீறும் வேறொரு சேனலுடன் தொடர்புடைய சேனல்களைப் பராமரித்தல் (உதாரணத்திற்கு, தொடர்ந்து ஸ்பேம் செய்பவர் அல்லது மோசடி செய்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டிருத்தல்)
  • பதிப்புரிமை எதிர்ப்புகளைப் பெறுதல்

அம்சங்களுக்கான அணுகலை மீண்டும் பெறுதல்

ஏதேனும் மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகல் உங்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். சேனல்கள் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியோ சரிபார்ப்பை வழங்கியோ அணுகலை மீண்டும் பெறலாம். எப்போதும் YouTubeன் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தொடர்ந்து செயலில் இருக்கும் சேனல்கள் போதுமான சேனல் செயல்பாடுகளை 2 மாதங்களுக்குள் மீண்டும் உருவாக்கலாம்.

கவனத்திற்கு: சில கிரியேட்டர்களால் ஐடி மற்றும் வீடியோ சரிபார்ப்பைப் பயன்படுத்த முடியாது. மேம்பட்ட அம்சங்களை அணுக நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளை YouTube Studioவில் உள்ள 'அம்சத்திற்கான தற்போதைய தகுதிநிலை' உங்களுக்கு எப்போதும் காட்டும்.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

  • "மேம்பட்ட YouTube அம்சங்களை இந்தக் கணக்கில் பயன்படுத்த முடியாது" என்ற மெசேஜைப் பெற்றால்:
    நீங்கள் முதன்மை உரிமையாளராக இல்லாத கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்று அர்த்தம். பெற்றோரால் கண்காணிக்கப்படும் கணக்கிலோ பிராண்டு கணக்கிலோ நீங்கள் உள்நுழைந்திருந்தால் இவ்வாறு நிகழலாம்.
  • "உலாவியைச் சரிபாருங்கள்" என்ற மெசேஜைப் பெற்றால்:
    உங்கள் உலாவி இணக்கமாக இல்லை என்று அர்த்தம். உங்கள் சாதனத்தின் ஆப்ரேட்டிங் சிஸ்டமும் உலாவியும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 
  • "இந்த மொபைலின் கேமரா மூலம் ஐடியைச் சரிபார்க்க முடியவில்லை" என்ற மெசேஜைப் பெற்றால்:
    உங்கள் கேமரா இணக்கமாக இல்லை என்று அர்த்தம். உங்கள் ஐடியைச் சமர்ப்பிக்க, முழு HD பின்பக்கக் கேமராவைக் கொண்ட மொபைலைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • "உங்கள் கேமராவை மற்றொரு ஆப்ஸ் பயன்படுத்தக்கூடும். திறந்திருக்கும் ஆப்ஸை மூடிவிட்டு மீண்டும் முயலவும்" எனும் மெசேஜைப் பெற்றால்:
    உங்கள் கேமராவை மற்றொரு ஆப்ஸ் பயன்படுத்துகிறது என்று அர்த்தம். திறந்திருக்கும் ஆப்ஸை மூடிவிட்டு மீண்டும் முயலவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது மொபைல் எண் / வீடியோ சரிபார்ப்பு / செல்லுபடியாகும் ஐடியை YouTube எதற்காகக் கேட்கிறது?

கொள்கைகளை மீறும் உள்ளடக்கம் மற்றும் நடத்தையின் காரணமாக ஓர் ஆண்டுக்கு லட்சக்கணக்கான சேனல்களை YouTube முடக்குகிறது. இவற்றில் பல சேனல்கள் ஒரே குழுக்களாலோ தனிநபர்களாலோ உருவாக்கப்படுகின்றன. இந்தச் சேனல்கள் ஒரே வகையான அம்சங்களைப் பயன்படுத்தியோ அவற்றை அதிகப்படியாகப் பயன்படுத்தியோ பார்வையாளர்கள், கிரியேட்டர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரை ஏமாற்றவோ, மோசடி செய்யவோ, இழிவுபடுத்தவோ முனைகின்றன. தவறான உபயோகத்தைத் தடுப்பதற்கும், YouTube கொள்கைகளை இதற்கு முன்பு மீறியிருக்கிறீர்களா என்று பார்ப்பதற்கும், சேனலை உருவாக்குவதற்கு மீண்டும் விண்ணப்பிப்பதைக் கட்டுப்படுத்துவதற்குமான ஒரு வழியாக அடையாளச் சரிபார்ப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம். 

எனது ஐடி மற்றும் வீடியோ சரிபார்ப்புத் தரவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

மொபைல் எண்

நீங்கள் மொபைல் எண்ணைச் சமர்ப்பிக்கத் தேர்வுசெய்தால், அதை இதற்குப் பயன்படுத்துவோம்:

  • சரிபார்ப்புக் குறியீட்டை உங்களுக்கு அனுப்புதல்.

ஐடி சரிபார்ப்பு

செல்லுபடியாகும் ஐடியை நீங்கள் சமர்ப்பித்ததும் (பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை) பின்வருபவற்றை உறுதிப்படுத்த அதைப் பயன்படுத்துவோம்:

  • உங்கள் பிறந்த தேதி
  • உங்கள் ஐடி தற்போதையது மற்றும் செல்லுபடியாகக்கூடியது
  • YouTubeன் கொள்கைகளை மீறியதற்காக இதற்கு முன்பு நீங்கள் இடைநீக்கப்படவில்லை

மோசடி மற்றும் தவறான உபயோகத்தில் இருந்து பாதுகாக்கவும் இது உதவும். மேலும் எங்கள் சரிபார்ப்பு முறைகளை மேம்படுத்தவும் இது பயன்படுத்தப்படலாம்.

உங்கள் ஐடி/வீடியோ சரிபார்ப்பு சார்ந்த தகவல்கள் உங்கள் Google கணக்கில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தானாகவே நீக்கப்படும். வழக்கமாக, போதுமான சேனல் செயல்பாடுகளை உருவாக்கிய சில மாதங்களுக்குப் பிறகோ மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தவில்லை எனில் 1 ஆண்டிற்குப் பிறகோ இது நீக்கப்படும். உங்கள் சரிபார்ப்புத் தரவை நீக்குவதற்கான வழிமுறை குறித்து மேலும் அறிக.

வீடியோ சரிபார்ப்பு

வீடியோ சரிபார்ப்பு என்பது ஒருவரின் முகத்தைச் சிறிய வீடியோவாக ரெக்கார்டு செய்வதாகும். பின்வருபவற்றைச் சரிபார்க்க இந்த வீடியோவை நாங்கள் பயன்படுத்துவோம்:

  • நீங்கள் உண்மையான நபர்தான்
  • நீங்கள் Google சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வயதை எட்டியவர்
  • YouTubeன் கொள்கைகளை மீறியதற்காக இதற்கு முன்பு நீங்கள் இடைநீக்கப்படவில்லை

மோசடி மற்றும் தவறான உபயோகத்தில் இருந்து பாதுகாக்கவும் இது உதவும். மேலும் எங்கள் சரிபார்ப்பு முறைகளை மேம்படுத்தவும் இது பயன்படுத்தப்படலாம்.

உங்கள் ஐடி/வீடியோ சரிபார்ப்பு சார்ந்த தகவல்கள் உங்கள் Google கணக்கில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தானாகவே நீக்கப்படும். வழக்கமாக, போதுமான சேனல் செயல்பாடுகளை உருவாக்கிய சில மாதங்கள் கழித்தோ மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தவில்லையெனில் ஒரு வருடத்திற்குப் பிறகோ இது நீக்கப்படும். உங்கள் சரிபார்ப்புத் தரவை நீக்குவதற்கான வழிமுறை குறித்து மேலும் அறிக.

தரவைத் தக்கவைத்தல் மற்றும் நீக்குதல்

எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்கிலிருந்து ஐடி அல்லது வீடியோ சரிபார்ப்பை நீக்கிக்கொள்ளலாம். போதுமான அளவிற்கு YouTube சேனல் செயல்பாடுகளை உருவாக்குவதற்கு முன்பே ஏதேனும் ஒன்றை நீக்கினால், பின்வருபவற்றைச் செய்யும் வரை மேம்பட்ட YouTube அம்சங்களை உங்களால் பயன்படுத்த முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்:

  •  உங்கள் YouTube சேனல் செயல்பாடுகளை உருவாக்குதல்

அல்லது

  • ஐடி அல்லது வீடியோ சரிபார்ப்பை மீண்டும் நிறைவுசெய்தல்

புதிய கணக்குகளைத் தொடங்குவதன் மூலம் தனிநபர்களோ குழுக்களோ எங்கள் கட்டுப்பாடுகளை மீறாமல் இருப்பதை உறுதிசெய்ய, இதற்கு முன்பு நீங்கள் YouTube கொள்கைகளை மீறியுள்ளீர்களா என்பதை நாங்கள் மதிப்பாய்வு செய்து மீண்டும் சேனல்கள் உருவாக்கப்படுவதைக் கட்டுப்படுத்துகிறோம். தவறான உபயோகத்தில் இருந்து பாதுகாக்க உங்கள் முகமறிதல் தரவையும் உங்கள் ஐடி/வீடியோவையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு Google சேமிக்கக்கூடும்.

YouTubeஐ நீங்கள் கடைசியாகப் பயன்படுத்தியதில் இருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் இந்தத் தரவு தக்கவைக்கப்படும்.

மேம்பட்ட அம்சங்களை அன்லாக் செய்ய ஐடி அல்லது வீடியோ சரிபார்ப்பைச் சமர்ப்பிக்க விரும்பவில்லையெனில் நீங்கள் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, போதுமான அளவிலான சேனல் செயல்பாடுகளை எந்த நேரத்திலும் உருவாக்கலாம். நீங்கள் மேம்பட்ட அம்சங்களை அன்லாக் செய்யத் தயாராக இருக்கும்போது எப்படியும் போதுமான அளவிலான செயல்பாடுகளை மேற்கொண்டிருப்பீர்கள்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தகவல்களை எங்களை நம்பி வழங்குகிறீர்கள். இது மிகப்பெரிய பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் தகவல்களைப் பாதுகாக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் உரிமையை உங்களுக்கு அளிக்கவும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்களின் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் அம்சங்களுக்கும் பொருந்துவதுபோல Googleளின் தனியுரிமைக் கொள்கை இதற்கும் பொருந்தும். 

கவனத்திற்கு: உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் ஒருபோதும் யாருக்கும் விற்கமாட்டோம். 

நான் ஏற்கெனவே சரிபார்ப்பை வழங்கிவிட்டேன், எதற்காக மீண்டும் சரிபார்ப்பை வழங்குமாறு என்னிடம் கேட்கப்படுகிறது?

அவசியமான தரவு நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுவதை உறுதிசெய்ய, நீங்கள் தேவையான அளவு சேனல் செயல்பாடுகளை அடைந்ததும் உங்கள் ஐடி/வீடியோ சரிபார்ப்பு தானாகவே நீக்கப்படும் அல்லது 1 வருடத்திற்கு மேம்பட்ட அம்சங்களை நீங்கள் பயன்படுத்தவில்லை எனில் அது நீக்கப்படலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்கில் உங்கள் ஐடி/வீடியோ சரிபார்ப்பை நீக்கலாம்

உங்கள் சரிபார்ப்பு நீக்கப்பட்டால், மேம்பட்ட அம்சங்களைத் தொடர்ந்து பயன்படுத்த உங்களிடம் தேவையான அளவு சேனல் செயல்பாடுகள் இருக்க வேண்டும் அல்லது ஐடி/வீடியோ சரிபார்ப்பை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். 

எனது சரிபார்ப்புத் தரவை நான் எப்படி நீக்கலாம்?

முக்கியம்: சேனல் செயல்பாடுகளை உருவாக்குவதற்கு முன்பே உங்கள் ஐடி அல்லது வீடியோ சரிபார்ப்பை அகற்றினால் மேம்பட்ட அம்சங்களுக்கான அணுகலை இழந்துவிடுவீர்கள்.
  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அடையாள ஆவணம் என்பதையோ வீடியோ சரிபார்ப்பு என்பதையோ கிளிக் செய்யவும்.
  4. நீக்கு Delete என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்மார்ட்ஃபோன் ஏன் தேவைப்படுகிறது? எனது ஐடியின் வீடியோவையோ படத்தையோ மட்டும் பதிவேற்ற முடியாதா?

மோசடி செய்பவர்களும் ஸ்பேமர்களும் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் காரணத்தால் ஸ்மார்ட்ஃபோன் தேவைப்படுகிறது.

எனது மொபைலில் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறவில்லை. என்ன சிக்கல் ஏற்பட்டது?

குறியீட்டை உடனடியாகப் பெற்றிருக்க வேண்டும். பெறவில்லையெனில், புதிய குறியீட்டைக் கேட்கலாம். பொதுவான இந்தச் சிக்கல்களில் எதையும் நீங்கள் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்:

  • மெசேஜைப் பெறுவதில் தாமதமாகலாம். மக்கள் தொகை அதிகமான பகுதிகளிலோ மொபைலில் சரியாக சிக்னல் இல்லையென்றாலோ தாமதமாகலாம். சில நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தும் மெசேஜைப் பெறவில்லையெனில், குரல் அழைப்பு விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
  • 1 மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஏற்கெனவே 2 சேனல்களைச் சரிபார்த்திருந்தால், வேறொரு மொபைல் எண்ணை நீங்கள் சரிபார்க்க வேண்டும். தவறான உபயோகத்தைத் தடுப்பதற்கு உதவ, ஒவ்வொரு மொபைல் எண்ணுடன் இணைக்கப்படக்கூடிய சேனல்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளோம்.
  • சில நாடுகள்/பிராந்தியங்களும் மொபைல் நிறுவனங்களும் Googleளில் இருந்து வரும் மெசேஜ்களை ஆதரிப்பதில்லை. பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் Googleளில் இருந்து வரும் மெசேஜ்களை ஆதரிக்கின்றன. உங்கள் மொபைல் நிறுவனம் Googleளில் இருந்து வரும் மெசேஜ்களை ஆதரிக்கவில்லையெனில், குரல் அழைப்பு விருப்பத்தையோ வேறு மொபைல் எண்ணையோ பயன்படுத்தவும்.
எனது செல்லுபடியாகும் ஐடி / வீடியோ சரிபார்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் என்ன செய்வது?

உங்கள் முதல் முயற்சி நிராகரிக்கப்பட்டால், மின்னஞ்சல் மூலம் அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்கள் மின்னஞ்சலில் உள்ள உதவிக்குறிப்புகளைப் படித்துப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

இரண்டாவது முயற்சி நிராகரிக்கப்பட்டால், மீண்டும் ஏதேனுமொரு சரிபார்ப்பு முறையை முயல்வதற்கு முன்பு நீங்கள் 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். உங்களின் இரண்டாவது வீடியோ சரிபார்ப்பு ஏற்கப்பட்டிருக்க வேண்டுமென நீங்கள் கருதினால், அதை மறுபரிசீலனைக்குச் சமர்ப்பித்து அதற்கான காரணத்தை எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

மாறாக, காத்திருந்து சேனல் செயல்பாடுகளையும் உருவாக்கலாம்.

ஐடி அல்லது வீடியோ சரிபார்ப்பை நிறைவுசெய்வதற்கான விருப்பத்தை என்னால் ஏன் பார்க்க முடியவில்லை?

ஐடி மற்றும் வீடியோ சரிபார்ப்பைச் சில கிரியேட்டர்கள் பயன்படுத்த முடியாது. இந்தச் சூழலில், மேம்பட்ட அம்சங்களை அணுக நீங்கள் போதுமான சேனல் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். மேம்பட்ட அம்சங்களை அணுக நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளை YouTube Studioவில் உள்ள 'அம்சத்திற்கான தற்போதைய தகுதிநிலை' உங்களுக்கு எப்போதும் காட்டும்.
பல பயனர்களைக் கொண்ட சேனல்களுக்கு இது எப்படிச் செயல்படுகிறது?

உங்களிடம் பிராண்டு கணக்கு இருந்தால்:

சேனலின் முதன்மை உரிமையாளர் மட்டுமே அடையாளச் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தகுதிபெறுவார். அவரது சரிபார்ப்பு நிலையைப் பொறுத்து, அவர் எந்தெந்த அம்சங்களுக்கான அணுகலைப் பெறுகிறாரோ அதே அணுகலைச் சேனலின் அனைத்துப் பயனர்களும் பெறுவர்.

உங்களிடம் பிராண்டு கணக்கு இல்லையெனில்:

சேனலின் உரிமையாளர் மட்டுமே அடையாளச் சரிபார்ப்பைச் மேற்கொள்ளத் தகுதிபெறுவார். அவரது சரிபார்ப்பு நிலையைப் பொறுத்து, அவர் எந்தெந்த அம்சங்களுக்கான அணுகலைப் பெறுகிறாரோ அதே அணுகலைச் சேனலின் அனைத்துப் பயனர்களும் பெறுவர்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11338884099537942653
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false