உங்கள் YouTube கணக்கைப் பாதுகாத்தல்

நவம்பர் 1, 2021 முதல் வருமானம் ஈட்டும் கிரியேட்டர்கள் YouTube Studio அல்லது YouTube Studio உள்ளடக்க நிர்வாகியை அணுக, தங்கள் YouTube சேனலுக்குப் பயன்படுத்தும் Google கணக்கில் இருபடிச் சரிபார்ப்பை இயக்க வேண்டும். மேலும் அறிக

YouTube கணக்கைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் கணக்கு அல்லது சேனல் ஹேக் செய்யப்படுவதையோ ஹைஜேக் செய்யப்படுவதையோ களவாடப்படுவதையோ தடுக்க முடியும்.

கவனத்திற்கு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாகக் கருதினால் அதைப் பாதுகாப்பது எப்படியென அறிக.

உங்கள் YouTube கணக்கைப் பாதுகாத்தல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கி அதைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குதல்

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேறொருவர் உங்கள் கணக்கில் உள்நுழைவதைத் தடுக்கவும் வலிமையான கடவுச்சொல் உதவும்.

வலிமையான மற்றும் எளிதில் கண்டறிய முடியாத கடவுச்சொல்லை உருவாக்குதல்: 8 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளைப் பயன்படுத்தவும். எழுத்துகள், எண்கள், குறியீடுகள் ஆகியவற்றின் கலவையாகவும் அது இருக்கலாம்.

உங்கள் கடவுச்சொல்லைத் தனித்துவமானதாக அமைக்கவும்: வேறு தளங்களில் உங்கள் YouTube கணக்கின் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். வேறொரு தளம் ஹேக் செய்யப்பட்டால், அந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் YouTube கணக்கில் நுழைய முடியும்.

தனிப்பட்ட தகவல்களையும் பொதுவான வார்த்தைகளையும் தவிர்க்கவும்: உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ (பிறந்த நாள் போன்ற விவரங்கள்) “password” போன்ற பொதுவான வார்த்தைகளையோ “1234” போன்ற பொதுவான பேட்டர்ன்களையோ பயன்படுத்த வேண்டாம்.

ஹேக்கர்களிடமிருந்து உங்கள் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல்

Chromeமிற்கான 'கடவுச்சொல் எச்சரிக்கை' நீட்டிப்பை இயக்குவதன் மூலம் Google அல்லாத பிற தளங்களில் கடவுச்சொல்லை உள்ளிட்டால் அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உதாரணமாக, Googleளைப் போன்ற தோற்றமுடைய போலியான தளத்தில் நீங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டால் அதுகுறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள். அதன்பிறகு உங்கள் YouTube கணக்கின் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம்.

உங்கள் கடவுச்சொற்களை நிர்வகித்தல்

'கடவுச்சொல் நிர்வாகி' அம்சத்தின் உதவியுடன் வலிமையான, பிரத்தியேகக் கடவுச்சொற்களை உருவாக்கலாம் நிர்வகிக்கலாம். Chromeமில் உள்ள 'கடவுச்சொல் நிர்வாகி' அம்சத்தையோ வேறு மூன்றாம் தரப்பினர் வழங்கும் அதே போன்ற அம்சத்தையோ பயன்படுத்திப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள் ஏதாவது எளிதில் கண்டறியக்கூடிய வகையில் உள்ளதா, வலுவற்றதாக உள்ளதா, பவ்வேறு கணக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கடவுச்சொல் சரிபார்ப்பைப் பயன்படுத்தவும்.

உள்நுழைவுத் தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்

கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம். மின்னஞ்சல், மெசேஜ் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் YouTube ஒருபோதும் உங்கள் கடவுச்சொல்லைக் கேட்காது. அடையாள எண், நிதி சார்ந்த விவரங்கள், கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை நிரப்புமாறு கேட்கும் படிவத்தை YouTube ஒருபோதும் அனுப்பாது.

சீரான இடைவெளியில் பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்ளவும்

உங்கள் கணக்கிற்கான பிரத்தியேகப் பாதுகாப்புப் பரிந்துரைகளைப் பெற, பாதுகாப்புச் சரிபார்ப்புப் பக்கத்திற்குச் சென்று இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பளிக்கவும்.

கணக்கு மீட்டெடுப்பு விருப்பங்களைச் சேர்த்தல்/மாற்றுதல்

உங்கள் மீட்பு மொபைல் எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இவற்றுக்காகப் பயன்படுத்தப்படலாம்:
  • உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுப்பது
  • உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு
  • உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாத சமயத்தில் அதை மீட்டெடுப்பதற்கு

இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல்

ஹேக்கர் உங்கள் கடவுச்சொல்லைத் திருடினாலும், அவர் உங்கள் கணக்கில் உள்நுழைவதைத் தடுக்க இருபடிச் சரிபார்ப்பு அம்சம் உதவும். இதோ உங்களுக்கான விருப்பங்கள்:
மெசேஜ் குறியீடுகளைப் பயன்படுத்தும் ஃபிஷிங் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பு விசைகள் தடுக்க உதவும் என்பதால் இதுவே மிகவும் வலிமையான சரிபார்ப்புத் தேர்வாகும்.

சந்தேகத்திற்குரிய நபர்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்குதல்

உங்கள் கணக்கை நிர்வகிப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை எனில் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம். அத்துடன், ஏதேனுமொரு ஆதாயத்திற்காக வேறொருவர் உங்கள் கணக்கிற்கு உரிமையாளர் எனப் போலியாக உறுதியளிக்கலாம். உங்கள் கணக்கு வகையின் அடிப்படையில் நபர்களை மாற்றவோ அகற்றவோ முடியும்.

தேவையற்ற தளங்களையும் ஆப்ஸையும் அகற்றுதல்

உங்கள் YouTube கணக்கைப் பாதுகாக்க, முன்பின் தெரியாத ஆப்ஸையோ தெரியாத இடங்களிலிருந்து கிடைக்கும் ஆப்ஸையோ நிறுவுவதைத் தவிர்க்கவும். இணைக்கப்பட்ட கணக்குகளிலிருந்து தேவையற்ற ஆப்ஸை நிர்வகிக்கலாம் அகற்றலாம்.

உங்கள் மென்பொருளைப் புதுப்பித்து கணக்கைக் காப்புப் பிரதி எடுத்தல்

உலாவி, ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஆப்ஸ் ஆகியவை புதுப்பிக்கப்படவில்லை எனில் ஹேக்கர்களிடமிருந்து மென்பொருளைப் பாதுகாக்க முடியாமல் போகலாம். தொடர்ந்து மென்பொருளைப் புதுப்பிப்பதோடு, அவ்வப்போது கணக்கைக் காப்புப் பிரதி எடுக்கவும்.

சந்தேகத்திற்குரிய மெசேஜ்களையும் உள்ளடக்கத்தையும் கண்டறிந்து உங்கள் கணக்கைப் பாதுகாத்தல்

தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக நம்பகமான நபர் போல நடிக்கும் ஹேக்கரின் செயல்பாடே ஃபிஷிங் எனப்படும். தனிப்பட்ட தகவல்கள் இவற்றை உள்ளடக்கியது:

  • நிதி சார்ந்த விவரங்கள்
  • தேசிய அடையாள அட்டை/தேசிய அடையாள எண்
  • கிரெடிட் கார்டு எண்கள்

நிறுவனங்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக பணியாளர்கள் போன்று தங்களைக் காட்டிக்கொள்வதற்காக மின்னஞ்சல்களையோ மெசேஜ்களையோ இணையப் பக்கங்களையோ ஹேக்கர்கள் பயன்படுத்தக்கூடும்.

உங்கள் கடவுச்சொல்லையோ மின்னஞ்சல் முகவரியையோ பிற கணக்கு விவரங்களையோ YouTube ஒருபோதும் கேட்காது. YouTubeல் இருந்து உங்களைத் தொடர்புகொள்வதாக யாரேனும் கூறினால் நம்ப வேண்டாம்.
 

சந்தேகத்திற்குரிய கோரிக்கைகளைத் தவிர்த்தல்
  • உங்கள் தனிப்பட்ட அல்லது நிதிசார்ந்த தகவல்களைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், உடனடி மெசேஜ்கள், இணையப் பக்கங்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றுக்குப் பதிலளிக்க வேண்டாம்.
  • நம்பகத்தன்மையற்ற இணையதளங்கள் அல்லது அனுப்புநர்களிடமிருந்து பெறப்படும் மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், இணையப் பக்கங்கள், பாப்-அப்கள் ஆகியவற்றில் இருக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • @youtube.com, @google.com ஆகிய டொமைன்களிலிருந்து மட்டுமே YouTube மின்னஞ்சல்கள் அனுப்பப்படும்.

மின்னஞ்சல் முகவரிகளில் சிறியளவிலான எழுத்துப்பிழைகள் உள்ளனவா எனப் பாருங்கள்

சந்தேகத்திற்கிடமான ஃபிஷிங் மின்னஞ்சலுக்கான ஓர் உதாரணம்

சந்தேகத்திற்கிடமான இணையப் பக்கங்களைத் தவிர்த்தல்

சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கம் மற்றும் தேவையற்ற மென்பொருள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கும் வகையில் Google Chrome, Search ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
Chrome உலாவியிலும் Search தளத்திலும் இந்த எச்சரிக்கைகளை எப்படி நிர்வகிப்பது என்பதை அறிக.

ஸ்பேம் அல்லது ஃபிஷிங் குறித்துப் புகாரளித்தல்

ஃபிஷிங்கில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, myaccounts.google.com தளத்தின் பக்கத்தைத் தவிர வேறெந்தப் பக்கத்திலும் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டாம். நீங்கள் ஸ்பேம் அல்லது ஃபிஷிங் எனக் கருதும் வீடியோக்களை YouTubeல் கண்டால், YouTube குழுவினர் அவற்றை மதிப்பாய்வு செய்யக் கொடியிடவும். ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் குறித்த கூடுதல் தகவல்களுக்கு National Cyber Security Alliance பக்கத்திற்குச் செல்லவும்.
உதவிக்குறிப்பு: எங்கள் ஃபிஷிங் வினாடி வினா மூலம் ஃபிஷிங் பற்றி மேலும் அறிக.

உங்கள் சேனலில் அனுமதிகளை அமைத்துச் சரிபார்த்தல்

நீங்கள் ஒரு கிரியேட்டர் என்றால், உங்கள் Google கணக்கிற்கான அணுகலை வழங்காமலேயே உங்கள் YouTube சேனலை நிர்வகிப்பதற்காக வேறொருவரை அழைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் சேனலை அணுகுவதற்கு ஒருவரை அழைக்கலாம்:

  • நிர்வாகி: மற்றவர்களைச் சேர்க்கலாம் நீக்கலாம், சேனல் விவரங்களை மாற்றலாம்.
  • எடிட்டர்: சேனல் விவரங்கள் அனைத்தையும் மாற்றலாம்.
  • பார்வையாளர்: சேனல் விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம் (ஆனால் மாற்ற முடியாது).
  • பார்வையாளர் (வரையறுக்கப்பட்ட அணுகல்): வருவாய்த் தகவல்களைத் தவிர சேனல் விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம் (ஆனால் மாற்ற முடியாது).

உங்கள் சேனல் அனுமதிகளை அமைத்துச் சரிபார்ப்பது எப்படி என்பதை அறிக.

கவனத்திற்கு: உங்களிடம் பிராண்டு கணக்கு இருந்தால் உங்கள் Google கணக்கையும் YouTube சேனலையும் நிர்வகிக்க வேறொருவரை அழைக்கலாம். உங்களிடம் பிராண்டு கணக்கு உள்ளதா என்பதைப் பார்த்து பிராண்டு கணக்கு அனுமதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1897475760333877427
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false