உங்கள் YouTube சேனலுடன் இணைக்கப்பட்டுள்ள Google கணக்கைப் பாதுகாத்தல்

கடவுச்சாவிகள் ஃபிஷிங் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான பாதுகாப்பை வழங்குகின்றன. கடவுச்சாவிகள் குறித்து மேலும் அறிக.

தரமான வீடியோக்களை உருவாக்கவும் உங்கள் பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கவும் நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, உங்கள் கணக்கு அல்லது சேனல் ஹேக் செய்யப்படுவதையோ ஹைஜேக் செய்யப்படுவதையோ களவாடப்படுவதையோ தடுக்க உங்கள் YouTube சேனலுடன் இணைக்கப்பட்டுள்ள Google கணக்கைப் பாதுகாப்பது முக்கியமாகும்.

நீங்கள் சேனலின் உரிமையாளராக இருந்தால், உங்கள் சேனலுக்கான அணுகலைப் பெற்றுள்ள பிறருடன் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது முக்கியமாகும். ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான பிற உதவிக்குறிப்புகளைக் கண்டறியுங்கள்.

உங்கள் YouTube சேனல் ஹேக் செய்யப்பட்டதாக நினைக்கிறீர்களா? அதை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
பிற காரணங்களுக்காக (சேனல் ஹேக் செய்யப்படாமல்) உங்கள் Google கணக்கிற்கான அணுகலை நீங்கள் இழந்துவிட்டீர்களா? அணுகலை மீண்டும் பெறுவதற்கான வழிமுறையை அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் YouTube கணக்கைப் பாதுகாத்தல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழுசேருங்கள்.

உங்கள் Google கணக்கைப் பாதுகாத்தல்

பிரத்தியேகமான பாதுகாப்புப் பரிந்துரைகளுக்கு, பாதுகாப்புச் சரிபார்ப்புப் பக்கத்திற்குச் செல்லுங்கள். இனிமேல் உங்கள் கணக்கை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க, கீழேயுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

மால்வேரைத் தடுத்தல்

மால்வேர் என்பது ஒரு வகையான மென்பொருளாகும். இதைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிற்கான அணுகலைப் பெறலாம், உங்கள் செயல்பாட்டை உளவு பார்க்கலாம் மற்றும் குக்கீகள், கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தரவைத் திருடலாம். மால்வேரைத் தடுக்க பின்வருபவற்றைச் செய்யும்படி பரிந்துரைக்கிறோம்:

  • ஆன்ட்டி வைரஸ் மென்பொருளைப் பயன்படுத்துங்கள் 
  • Chromeமில் ஸ்பான்சர்களிடம் இருந்தோ பிற பயனர்களிடம் இருந்தோ பெறப்படும் ஃபைல்களைக் கிளிக்/பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர், மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்

மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை இயக்குதல்

உங்கள் கணக்கிற்கு ‘மேம்பட்ட பாதுகாப்பு உலாவல்’ அம்சத்தை இயக்குவது சந்தேகத்திற்குரியதாக இருக்கக்கூடிய இணைப்புகளைக் கண்டறிவதற்கான வழிகளில் ஒன்றாகும். ஆபத்தான இணையதளங்கள், பதிவிறக்கங்கள், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான, வேகமும் முன்னெச்சரிக்கையும் நிறைந்த பாதுகாப்பை வழங்க, மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் பின்னணியில் தானாகச் செயல்படும்.

Google Chromeமைப் பயன்படுத்தும்போது Google தயாரிப்புகள் அனைத்திலும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ‘மேம்பட்ட பாதுகாப்பு உலாவல்’ அம்சம் நிகழ்நேரப் பாதுகாப்பு ஸ்கேனிங்கை வழங்குகிறது.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள, பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. “உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல்” என்பதற்குச் செல்லவும்.
  4. மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் குறித்து மேலும் அறிக.

இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல் மற்றும் மாற்றுக் குறியீடுகளைப் பெறுதல்

ஹேக்கர் உங்கள் கடவுச்சொல்லைத் திருடினாலும், அவர் உங்கள் கணக்கில் உள்நுழைவதைத் தடுக்க இருபடிச் சரிபார்ப்பு அம்சம் உதவும். இந்த விருப்பங்களில் இருந்து தேர்வுசெய்யுங்கள்:
மெசேஜ் குறியீடுகளைப் பயன்படுத்தும் ஃபிஷிங் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பு விசைகளும் கடவுச்சாவிகளும் தடுக்க உதவும் என்பதால் இவையே மிகவும் உறுதியான சரிபார்ப்பு விருப்பங்களாகும்.

மாற்றுக் குறியீடுகளின் தொகுப்பை உருவாக்குதல்

கணக்கு உங்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்த மாற்றுக் குறியீடுகள் உதவுகின்றன. உங்கள் மொபைலோ கம்ப்யூட்டரோ தொலைந்துவிட்டாலோ உங்கள் வழக்கமான இருபடிச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்த முடியவில்லை என்றாலோ உங்கள் கணக்கில் மீண்டும் உள்நுழைவதற்கான வழி இதுவாகும். உங்கள் மாற்றுக் குறியீடுகளை எங்கேனும் பாதுகாப்பாகச் சேமிக்க, அவற்றின் நகலை அச்சிடலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் பாதுகாப்பு  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்" என்பதன் கீழுள்ள “இருபடிச் சரிபார்ப்பு” அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. "மாற்றுக் குறியீடுகள்" என்பதன் கீழுள்ள, தொடர்க அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. இங்கே இவற்றைச் செய்யலாம்:
    • மாற்றுக் குறியீடுகளைப் பெறுதல்: மாற்றுக் குறியீடுகளைச் சேர்க்க மாற்றுக் குறியீடுகளைப் பெறுங்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் மாற்றுக் குறியீடுகளை அச்சிடுதல்: குறியீடுகளை அச்சிடுங்கள் Print Icon என்பதைக் கிளிக் செய்யவும்.
      மேலும் பிற செயல்களைச் செய்யலாம்.

மாற்றுக் குறியீடுகள் குறித்து மேலும் அறிக.

வலிமையான கடவுச்சொல்லை அமைத்தல் மற்றும் கடவுச்சாவிகளை உருவாக்குதல்

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேறொருவர் உங்கள் கணக்கில் உள்நுழைவதைத் தடுக்கவும் வலிமையான கடவுச்சொல் உதவும். Google Password Managerரைப் பயன்படுத்தி Google கணக்கில் வலிமையான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கிச் சேமிக்கலாம். இதனால் கடவுச்சொற்களை நினைவில்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

வலிமையான மற்றும் எளிதில் கண்டறிய முடியாத கடவுச்சொல்லை உருவாக்குதல்: 8 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளைப் பயன்படுத்தவும். எழுத்துகள், எண்கள், குறியீடுகள் ஆகியவற்றின் கலவையாகவும் அது இருக்கலாம்.

உங்கள் கடவுச்சொல்லைத் தனித்துவமானதாக அமைக்கவும்: வேறு தளங்களில் உங்கள் YouTube கணக்கின் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். வேறொரு தளம் ஹேக் செய்யப்பட்டால், அந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் YouTube கணக்கில் நுழைய முடியும்.

தனிப்பட்ட தகவல்களையும் பொதுவான வார்த்தைகளையும் தவிர்க்கவும்: உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ (உங்கள் பிறந்த நாட்கள் போன்ற விவரங்கள்) பொதுவான வார்த்தைகளையோ (“password” போன்றவை) பொதுவான பேட்டர்ன்களையோ (“1234” போன்றவை) பயன்படுத்த வேண்டாம்.

கடவுச்சாவிகளை உருவாக்குதல்

கடவுச்சாவிகள் என்பவை கடவுச்சொற்களுக்கான ஓர் எளிமையான, பாதுகாப்பான மாற்று வழியாகும். கடவுச்சாவியின் மூலம் உங்கள் கைரேகை, முக ஸ்கேன் அல்லது சாதனத் திரைப் பூட்டை ('பின்') பயன்படுத்தி உங்கள் Google கணக்கில் உள்நுழையலாம்.

ஃபிஷிங் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான பாதுகாப்பைக் கடவுச்சாவிகள் வழங்குகின்றன. ஒருமுறை ஒரு கடவுச்சாவியை உருவாக்கிவிட்டால் அதைப் பயன்படுத்தி உங்கள் Google கணக்கிலும், சில மூன்றாம் தரப்பு ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றிலும் சுலபமாக உள்நுழையலாம் மற்றும் முக்கியமான மாற்றங்களைச் செய்யும்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.

கடவுச்சாவியை அமைக்க, உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டியிருக்கலாம் அல்லது உள்நுழைவது நீங்கள்தான் என உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம்.

உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் கடவுச்சாவியை உருவாக்குதல்

  1. https://myaccount.google.com/signinoptions/passkeys தளத்திற்குச் செல்லவும்.

  2. கடவுச்சாவியை உருவாக்கு அதன் பிறகு தொடர்க என்பதைத் தட்டவும்.
    • உங்கள் சாதனத்தை அன்லாக் செய்ய வேண்டியிருக்கலாம்.

பல சாதனங்களில் கடவுச்சாவிகளை உருவாக்க ஒவ்வொரு சாதனத்திலும் இந்தப் படிகளைச் செய்யவும்.

கடவுச்சாவிகள் குறித்து மேலும் அறிக.

கணக்கு மீட்டெடுப்புக்கான அவசரத் திட்டத்தை உருவாக்குதல்

உங்கள் மீட்பு மொபைல் எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இவற்றுக்காகப் பயன்படுத்தப்படலாம்:
  • உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுப்பது
  • உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு
  • உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாத சமயத்தில் அதை மீட்டெடுப்பதற்கு
உங்கள் மீட்பு மொபைல் எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் அடிக்கடி சரிபார்த்து மாற்றுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18246129400863116302
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false