சேனல் அனுமதிகள் மூலம் YouTube சேனலுக்கான அணுகலைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

உங்களிடம் பிராண்டு கணக்கு இருந்தால் உங்கள் YouTube சேனலுக்கான அணுகலைச் சேர்க்கவோ அகற்றவோ சேனல் அனுமதிகளுக்கு மாறுங்கள்.  சேனல் அனுமதிகளுக்கு மாறுவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

சேனல் அனுமதிகள் மூலம் YouTube, YouTube Studio ஆகியவற்றில் ஐந்து வெவ்வேறு நிலைகளின் அணுகலுடன் உங்கள் சேனல் தரவு, கருவிகள் மற்றும் அம்சங்களுக்கான அணுகலைப் பிறருக்கு நீங்கள் வழங்கலாம். உங்கள் Google கணக்கிற்கான அணுகல் இல்லாமலேயே பலரால் உங்கள் சேனலை நிர்வகிக்க முடியும். கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனத்தில், உங்கள் சேனலை YouTubeல் நேரடியாகவோ YouTube Studioவிலோ அவர்கள் நிர்வகிக்கலாம். யாரேனும் ஒருவருக்கு அனுமதிகளை வழங்குவது:

  • உங்கள் கடவுச்சொல்லையோ பிற பாதுகாக்கவேண்டிய உள்நுழைவுத் தகவல்களையோ பகிர்வதை விட பாதுகாப்பானது.
  • அவர்களின் அணுகல் நிலையைக் குறிப்பிட அனுமதிக்கிறது. இதன்மூலம் உங்கள் சேனலை யாரெல்லாம் பார்க்கலாம் அல்லது மாற்றம் செய்யலாம் என்பதில் கூடுதல் கட்டுப்பாட்டை நீங்கள் விதிக்கலாம்.

YouTube Studioவிலுள்ள சேனல் அனுமதிகள்: உங்கள் சேனலை நிர்வகிக்க உதவுவதற்கு மற்றவர்களை அழைக்கலாம்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

சேனல் அனுமதிகளுக்கான பொறுப்பு வகைகள்

பொறுப்பு

ஆதரிக்கப்படுபவை

ஆதரிக்கப்படாதவை

உரிமையாளர்

அனைத்துப் பிளாட்ஃபார்ம்களிலும் அனைத்தையும் செய்யலாம். இவை உட்பட:

  • சேனலை நீக்குதல்
  • லைவ் ஸ்ட்ரீம்களையும் நேரலை அரட்டையையும் நிர்வகித்தல்
  • அனுமதிகளை நிர்வகித்தல்
  • Google Ads கணக்குகளை இணைக்கலாம்
  • உரிமையைப் பிற பயனர்களுக்கு மாற்ற முடியாது

நிர்வாகி

  • சேனலின் அனைத்துத் தரவையும் பார்க்கலாம்
  • அனுமதிகளை நிர்வகிக்கலாம் (YouTube Studioவில்)
  • சேனல் விவரங்களைத் திருத்தலாம்
  • லைவ் ஸ்ட்ரீம்களை நிர்வகிக்கலாம்
  • உள்ளடக்கங்களை (வரைவுகள் உட்பட) உருவாக்கலாம் பதிவேற்றலாம் வெளியிடலாம் நீக்கலாம்
  • நேரலைக் கட்டுப்பாட்டு அறையில் அரட்டைக்குப் பதிலளிக்கலாம், அரட்டை மெசேஜ்களை மதிப்பாய்வு செய்யலாம்
  • இடுகைகளை உருவாக்கலாம்
  • கருத்து தெரிவிக்கலாம்
  • Google Ads கணக்குகளை இணைக்கலாம்
  • சேனலை நீக்க முடியாது

எடிட்டர்

  • சேனலின் அனைத்துத் தரவையும் பார்க்கலாம்
  • அனைத்தையும் திருத்தலாம்
  • உள்ளடக்கத்தைப் பதிவேற்றலாம் வெளியிடலாம்
  • லைவ் ஸ்ட்ரீம்களை நிர்வகிக்கலாம்
  • வரைவுகளை நீக்கலாம்
  • நேரலைக் கட்டுப்பாட்டு அறையில் அரட்டைக்குப் பதிலளிக்கலாம், அரட்டை மெசேஜ்களை மதிப்பாய்வு செய்யலாம்
  • இடுகைகளை உருவாக்கலாம்
  • கருத்து தெரிவிக்கலாம்
  • Google Ads கணக்குகளை இணைக்கலாம்
  • சேனலையோ வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தையோ நீக்க முடியாது
  • அனுமதிகளை நிர்வகிக்க முடியாது
  • ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது
  • திட்டமிடப்பட்ட/நேரலையில் உள்ள/நிறைவடைந்த ஸ்ட்ரீம்களை நீக்க முடியாது
  • ஸ்ட்ரீம் குறியீடுகளை நீக்கவோ ரீசெட் செய்யவோ முடியாது

எடிட்டர் (வரையறுக்கப்பட்ட அணுகல்)

  • எடிட்டருக்கு உள்ள அதே அனுமதிகள் இருக்கும்
  • எடிட்டருக்கு உள்ள அதே வரம்புகள் இருக்கும்
  • வருவாய்த் தரவை அணுக முடியாது (அரட்டை வருவாய், பார்வையாளர் செயல்பாட்டுப் பிரிவு ஆகியவை உட்பட)
சப்டைட்டில் எடிட்டர்
  • தகுதிபெறும் வீடியோக்களில் சப்டைட்டில்களைச் சேர்க்கலாம் திருத்தலாம் வெளியிடலாம் நீக்கலாம்
  • எடிட்டருக்கு உள்ள அதே வரம்புகள் இருக்கும்
  • எதையும் திருத்த முடியாது (வீடியோ சப்டைட்டில்களைத் தவிர)
  • வருவாய்த் தரவை அணுக முடியாது (அரட்டை வருவாய், பார்வையாளர் செயல்பாட்டுப் பிரிவு ஆகியவை உட்பட)
  • உள்ளடக்கத்தைப் பதிவேற்றவும் வெளியிடவும் முடியாது (வீடியோ சப்டைட்டில்களைத் தவிர)
  • லைவ் ஸ்ட்ரீம்களை நிர்வகிக்க முடியாது
  • வரைவுகளை நீக்க முடியாது
  • நேரலைக் கட்டுப்பாட்டு அறையில் அரட்டைக்குப் பதிலளிக்கவோ அதைக் கண்காணிக்கவோ முடியாது
  • லைவ் ஸ்ட்ரீம்களை நிர்வகிக்க முடியாது
  • திட்டமிடப்பட்ட/நேரலையில் உள்ள/நிறைவடைந்த ஸ்ட்ரீம்களை நீக்க முடியாது
  • நேரலைக் கட்டுப்பாட்டு அறையில் அரட்டைக்குப் பதிலளிக்கவோ அதைக் கண்காணிக்கவோ முடியாது
  • சேனல் தரவை முழுமையாகப் பார்க்க முடியாது

பார்வையாளர்

  • சேனல் விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம் (ஆனால் மாற்ற முடியாது)
  • YouTube பகுப்பாய்வுகள் குழுக்களை உருவாக்கலாம் திருத்தலாம்
  • வருவாய்த் தரவைப் பார்க்கலாம் (அரட்டை வருவாய், பார்வையாளர் செயல்பாட்டுப் பிரிவு ஆகியவை உட்பட)
  • உருவாக்கப்பட்ட ஸ்ட்ரீம்களை நேரலைக்கு முன்பும் நேரலையின்போதும் பார்க்கலாம்/கண்காணிக்கலாம்
  • ஸ்ட்ரீம் குறியீட்டைத் தவிர எல்லா ஸ்ட்ரீம் அமைப்புகளையும் பார்க்கலாம்
  • லைவ் ஸ்ட்ரீம்களை நிர்வகிக்க முடியாது
  • திட்டமிடப்பட்ட/நேரலையில் உள்ள/நிறைவடைந்த ஸ்ட்ரீம்களை நீக்க முடியாது
  • நேரலைக் கட்டுப்பாட்டு அறையில், அரட்டையில் பங்கேற்கவோ அதைக் கண்காணிக்கவோ முடியாது

பார்வையாளர் (வரையறுக்கப்பட்ட அணுகல்)

  • பார்வையாளருக்கு உள்ள அதே அனுமதிகள்
  • பார்வையாளருக்கு உள்ள அதே வரம்புகள்
  • வருவாய்த் தரவை அணுக முடியாது (அரட்டை வருவாய், பார்வையாளர் செயல்பாட்டுப் பிரிவு ஆகியவை உட்பட)

ஆதரிக்கப்படும் செயல்கள்

குறிப்பு: பிரதிநிதியாகச் செயல்படும்போது சில செயல்களைச் செய்ய முடியாமல் போகலாம்.
வகை Access level / Public actions YT Studio on a computer YT Studio ஆப்ஸ் YouTube
பலவகை அனுமதிக் கட்டுப்பாடு Manager role
Editor role
எடிட்டர் (வரையறுக்கப்பட்ட அணுகல்)
பார்வையாளர் மட்டும்
பார்வையாளர் (வரையறுக்கப்பட்ட அணுகல்)
பார்வையாளர் மட்டும்
வீடியோக்களை நிர்வகித்தல் வீடியோக்கள் / Shorts வீடியோக்களைப் பதிவேற்றுதல்
Shorts வீடியோக்களை உருவாக்குதல்
Understand video performance in YouTube Analytics or Artist Analytics
வீடியோக்களை நிர்வகித்தல் (தரவுத்தகவல், வருமானம் ஈட்டுதல், தெரிவுநிலை)
பிளேலிஸ்ட்டை உருவாக்குதல்
Add a video to an existing public playlist
பிளேலிஸ்ட்களை நிர்வகிக்கவும்
சேனலாக லைவ் ஸ்ட்ரீம் செய்தல்
Captions, private video sharing
சேனல் நிர்வாகம் சேனல் முகப்புப்பக்கத்தைப் பிரத்தியேகமாக்குதல் / நிர்வகித்தல்
சமூக ஈடுபாடு இடுகையை உருவாக்குதல்
சமூக இடுகைகளை நிர்வகித்தல் (இடுகைகளை நீக்குவது உட்பட)
Delete Community posts [Manager only] [Manager only]
YouTube Studioவில் இருந்து சேனலாகக் கருத்துகளுக்குப் பதிலளித்தல்
Comment and interact with comments on another channel's videos as the channel
Use Live Chat as the channel
கலைஞர்கள் சார்ந்தது கலைஞரின் அதிகாரப்பூர்வச் சேனல் அம்சங்கள் (உதாரணத்திற்கு, இசை நிகழ்ச்சிகள்)
கலைஞரின் இசைத் தொகுப்பு நிர்வாகியைப் பயன்படுத்துதல் [உரிமையாளர்கள், நிர்வாகிகள், எடிட்டர்கள் மற்றும் எடிட்டர்கள் (வரையறுக்கப்பட்ட அணுகல்)]

YouTubeல் பொது vs. தனிப்பட்ட செயல்பாடு

YouTubeல் நேரடியாக ஒரு சேனலின் பிரதிநிதியாகச் செயல்படும்போது, பொது மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு இடையே வேறுபாடு இருக்கும்.

  • பொதுச் செயல்பாடுகள்: பிரதிநிதிகள் சேனல் உரிமையாளர்களுக்காக இந்தச் செயல்பாடுகளைச் செய்யலாம், அந்தச் செயல்பாட்டுக்குச் சேனல் பொறுப்பாகும்.
    • மேலே உள்ள அட்டவணையில் பொதுச் செயல்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • தனிப்பட்ட செயல்பாடுகள்: பிரதிநிதிகள் தாங்கள் உள்நுழைந்துள்ள தனிப்பட்ட கணக்கில் இருந்து இந்தச் செயல்பாடுகளைச் செய்யலாம்.

செயல்பாடு எப்படித் தொடர்புபடுத்தப்படுகிறது என்பதைப் பிரதிநிதியாகச் செயல்படும் பயனர்களுக்குத் தெரியப்படுத்த விஷுவல் இண்டிகேட்டர்கள் உதவுகின்றன.

அனுமதிகளைப் பயன்படுத்தி உங்கள் சேனலுக்கு அணுகலை வழங்குதல்

உங்களிடம் பிராண்டு கணக்கு இருந்தால், முதலில் நீங்கள் சேனல் அனுமதிகளுக்கு மாற வேண்டும்.

கம்ப்யூட்டரில் அணுகலைச் சேர்த்தல்

  1. studio.youtube.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அனுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அழை என்பதைக் கிளிக் செய்து நீங்கள் அழைக்க விரும்புபவரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  5. Click Access and select the role you’d like to assign to this person from the table below.
  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கவனத்திற்கு: அழைப்பு அனுப்பப்பட்டு 30 நாட்களுக்குப் பிறகு அது காலாவதியாகிவிடும்.

சேனலுக்கான அணுகலை அகற்றுதல்

  1. studio.youtube.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அனுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீக்க விரும்புபவரின் பெயருக்குச் சென்று கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
  5. புதிய பொறுப்பைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது அணுகலை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: YouTubeன் சில அம்சங்களைச் சேனல் அனுமதிகள் இன்னமும் ஆதரிப்பதில்லை. உரிமையாளரால் இந்த அம்சங்களை அணுக முடிந்தாலும் அழைக்கப்பட்ட பயனர்களால் இவற்றை அணுக முடியாது:

  • YouTube Music
  • YouTube Kids ஆப்ஸ்
  • YouTube APIகள்

YouTubeல் தனிப்பட்ட செயல்பாடுகள்

தனிப்பட்டதாகக் கருதப்படும், பிரதிநிதியின் தனிப்பட்ட கணக்குடன் தொடர்புடைய செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வீடியோக்களை நிர்வகித்தல்

சமூகம் ஈடுபாடு

  • இடுகைக்கு விருப்பம் தெரிவித்தல், விருப்பமில்லை எனத் தெரிவித்தல் அல்லது வாக்களித்தல்.

Curation/consumption

  • Searching for content or accessing search history.
  • Watching a video or accessing watch history.
  • Blocking users on channel.
  • Viewing subscriptions.
  • Purchases (for example: Movies and Shows, Premium).
  • இதுவரை வாங்கியவை.

சேனல் உரிமையாளரின் விவரங்களைக் கண்டறிதல்

கம்ப்யூட்டரில் சேனல் உரிமையாளரின் பெயரையும் மின்னஞ்சலையும் கண்டறிதல்

நீங்கள் ஒரு சேனலை நிர்வகித்தால் சேனல் உரிமையாளரின் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்களால் கண்டறிய முடியும். உதாரணமாக, குறிப்பிட்ட சில அம்சங்களுக்கான அணுகலைப் பெற சேனலை மொபைல் மூலம் சரிபார்க்குமாறு அவரிடம் கேட்க உங்களுக்கு இந்தத் தகவல்கள் தேவைப்படக்கூடும்.

கவனத்திற்கு: சேனலுக்கான அணுகலைப் பெற்றவர்களின் பெயர்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் சேனலின் உரிமையாளரும் நிர்வாகிகளும் மட்டுமே பார்க்க முடியும்.
  1. studio.youtube.com தளத்திற்குச் செல்லவும்
  2. அமைப்புகள் அதன் பிறகு அனுமதிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இந்தச் சேனலுக்கான அணுகலைப் பெற்றவர்களின் பெயர்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் பார்ப்பீர்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9886875472694140032
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false