உங்கள் பிளேலிஸ்ட்கள் மற்றும் வீடியோக்களின் குழுக்களுக்குப் பகுப்பாய்வுகளைப் பெறுங்கள்

உங்கள் பிளேலிஸ்ட்கள் அல்லது வீடியோக்கள் குழுவின் பகுப்பாய்வுகளை எளிதாக அணுகி அவற்றின் தகவல்களை ஒன்றாகப் பார்க்கலாம்.

பிளேலிஸ்ட்கள்

உங்கள் வீடியோக்களை ஒழுங்கமைக்க பிளேலிஸ்ட்களைப் பயன்படுத்தலாம். ஒரே இடத்தில் வீடியோக்களை ஒன்றாகக் குழுவாக்கவும் உங்கள் பகுப்பாய்வுகளை எளிதாக அணுகவும் அவை உங்களை அனுமதிக்கும். உங்களின் ஒவ்வொரு பிளேலிஸ்ட்டுக்கும், பிளேலிஸ்ட்டில் உள்ள எல்லா வீடியோக்களுக்காக ஒன்றாகத் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கண்டறிய மேலோட்டப் பார்வை, உள்ளடக்கம், பார்வையாளர்கள் மற்றும் வருவாய்ப் பிரிவை அணுகலாம். உங்கள் பிளேலிஸ்ட்டை உருவாக்குவது எப்படி என அறிக.

பிளேலிஸ்ட் பகுப்பாய்வுகளை அணுகுதல்

பிளேலிஸ்ட்டின் பகுப்பாய்வுகளைப் பார்க்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
    • அல்லது YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிளேலிஸ்ட்கள் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நீங்கள் பார்க்க விரும்பும் பிளேலிஸ்ட் தலைப்பு அல்லது விளக்கத்திற்கு அடுத்துள்ள பகுப்பாய்வுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பல்வேறு பிளேலிஸ்ட்களின் பகுப்பாய்வுகளை ஒப்பிட: 

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
    • அல்லது YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. இடதுபுற மெனுவில் பகுப்பாய்வுகள்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்ளடக்கப் பிரிவுஅதன் பிறகு பிளேலிஸ்ட்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பு: இயல்பாகவே, கடந்த 28 நாட்களின் சிறந்த 5 பிளேலிஸ்ட்களைப் பார்ப்பீர்கள்.
  4. பல பிளேலிஸ்ட்களை ஒப்பிடலாம் அல்லது நீங்கள் பார்க்க விரும்பும் ஒரு பிளேலிஸ்ட்டைக் கிளிக் செய்யலாம்.

பிளேலிஸ்ட் பகுப்பாய்வுகள் எப்படி இயங்குகின்றன?

பிளேலிஸ்ட்டில் உள்ள எல்லா வீடியோக்களுக்குமான ஒருங்கிணைக்கப்பட்ட பகுப்பாய்வுகளைக் காட்ட வீடியோ குழு அறிக்கையிடலைப் பிளேலிஸ்ட் பகுப்பாய்வுகள் பயன்படுத்துகின்றன. உங்களின் ஒவ்வொரு பிளேலிஸ்ட்டுக்கும், பிளேலிஸ்ட்டில் உள்ள எல்லா வீடியோக்களுக்காக ஒன்றாகத் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கண்டறிய மேலோட்டப் பார்வை, உள்ளடக்கம், பார்வையாளர்கள் மற்றும் வருவாய்ப் பிரிவை அணுகலாம். கூடுதலாக, பார்வையாளர் செயல்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள உதவ ஒவ்வொரு பிளேலிஸ்ட்டிலும் அளவீடுகள் உள்ளன. பிளேலிஸ்ட் அளவீடுகள் குறித்து மேலும் அறிக.
பிளேலிஸ்ட் பகுப்பாய்வுகளில் இருந்து விலக்கப்பட்ட வீடியோக்கள்

பிற சேனல்கள் உரிமை கொண்டிருக்கும் வீடியோக்களை உங்கள் பிளேலிஸ்ட் பகுப்பாய்வுகளில் உள்ள பல அளவீடுகள் கொண்டிருக்காது. வீடியோவில் உள்ள பார்வையாளர் செயல்பாடுகள் அனைத்தையும் இந்த அளவீடுகள் ஒருங்கிணைக்கின்றன (வீடியோ பிளேலிஸ்ட்டில் பார்க்கப்பட்டிருந்தாலும்/YouTubeல் எங்கு பார்க்கப்பட்டிருந்தாலும்). உதாரணம்: மொத்தப் பார்வைகள், பார்வையாளர்கள் மற்றும் வருவாய்ப் புள்ளிவிவரங்களில் பிற சேனல்களின் வீடியோக்கள் இடம்பெறாது.

பிளேலிஸ்ட் பார்வைகள், பிளேலிஸ்ட் பார்த்த நேரம், பிளேலிஸ்ட் சராசரி கால அளவு போன்ற பிற அளவீடுகளில் பிற சேனல்களின் வீடியோக்கள் இடம்பெறும். உங்கள் பிளேலிஸ்ட் சார்ந்த பார்வையாளர் செயல்பாட்டை மட்டுமே இந்த அளவீடுகள் காட்டும்.

உங்கள் பிளேலிஸ்ட்களில் உள்ள வீடியோக்களை YouTube Studioவில் நீங்கள் நேரடியாக நிர்வகிக்கலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் பிளேலிஸ்ட்டை நிர்வகிப்பது எப்படி என அறிக.

குழுக்கள்

குழுக்கள் என்பவை 500 வரையிலான உங்கள் வீடியோக்களின் பிரத்தியேகத் தொகுப்பாகும். குழுக்கள் மூலம் ஒரே மாதிரியான வீடியோக்களை ஒன்றாக ஒழுங்கமைக்கலாம். அந்த உள்ளடக்கம் பற்றிய தரவை ஒரே இடத்தில் பார்க்கலாம்.

குழுக்களை உருவாக்குதல்

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பகுப்பாய்வுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விரிவான பகுப்பாய்வுகள் அறிக்கையைப் பார்க்க, மேம்பட்ட பயன்முறை அல்லது மேலும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே இடதுபுறத்திலுள்ள தேடல் பட்டியில் உங்கள் சேனல் பெயரைக் கிளிக் செய்யவும்.
  5. குழுக்கள் பிரிவைத் தேர்ந்தெடுத்து புதிய குழுவை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் குழுவிற்கென ஒரு பெயரை உள்ளிட்டு, அதில் சேர்க்க விரும்பும் வீடியோக்களைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குழுக்களை நிர்வகித்தல்

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பகுப்பாய்வுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விரிவான பகுப்பாய்வுகள் அறிக்கையைப் பார்க்க, மேம்பட்ட பயன்முறை அல்லது மேலும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேலே இடதுபுறத்திலுள்ள தேடல் பட்டியில் உங்கள் சேனல் பெயரைக் கிளிக் செய்யவும்.
  5. குழுக்கள் பிரிவைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவைத் தேர்வுசெய்யவும்.
  6. உங்கள் குழுக்களுக்கான தரவைத் திருத்தலாம் , நீக்கலாம் , பதிவிறக்கலாம்  .

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11963919354408716847
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false