பதிப்புரிமை நிர்வாகக் கருவிகள் குறித்த அறிமுகம்

YouTubeல் தங்கள் பதிப்புரிமை பெற்ற வீடியோவைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் பதிப்புரிமையாளர்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் YouTubeல் உள்ளன. அவ்வப்போது பதிவேற்றுபவர்கள் முதல் பிரபல மீடியா நிறுவனங்கள் வரை வெவ்வேறு வகையான கிரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை எங்கள் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகளாகும்:

இயல்பாகவே, பதிப்புரிமை சார்ந்த அகற்றுதலுக்கான இணையப் படிவத்தை YouTubeல் உள்ள அனைவராலும் பயன்படுத்த முடியும். பிற பதிப்புரிமை நிர்வாகக் கருவிகள் இவற்றின் அடிப்படையில் கிடைக்கும்:

  • தொடர்ச்சியான பதிப்புரிமை நிர்வாகத்திற்கான தேவை இருப்பது
  • உங்கள் உரிமைகளையும் வீடியோவையும் நிர்வகிப்பதற்கு உள்ள வழிகள்
  • YouTubeன் பதிப்புரிமை சிஸ்டத்தைப் பற்றிய அறிவு

எங்கள் கருவிகளின் கிடைக்கும் நிலையை விரிவாக்கும் அதே வேளையில், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க இடையூறுகளிலிருந்து பாதுகாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அவ்வப்போதைய பதிப்புரிமை நிர்வாகத் தேவைக்கு

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதலுக்கான இணையப் படிவம்

YouTube கணக்கை வைத்திருக்கும் அனைவரும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதலுக்கான எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்த முடியும். பதிப்புரிமை பெற்ற உங்கள் படைப்பு அனுமதியின்றிப் பதிவேற்றப்பட்டிருந்தால் YouTubeல் இருந்து அதை அகற்றக் கோருவதற்கு, எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்தி பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

பெரும்பாலான பதிப்புரிமையாளர்களுக்கு, பதிப்புரிமை சார்ந்த அகற்றுதலைக் கோருவதற்கு இணையப் படிவமே விரைவான மற்றும் எளிமையான வழியாக உள்ளது. பதிப்புரிமையாளரோ அவர் சார்பாகச் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டோ இணையப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பது குறித்து மேலும் அறிக.

தொடர்ச்சியான பதிப்புரிமை நிர்வாகத் தேவைக்கு

உங்களின் தொடர்ச்சியான பதிப்புரிமை நிர்வாகத் தேவைகளுக்குப் பொருத்தமான கருவியைக் கண்டறிய, இந்தப் படிவத்தை நிரப்புங்கள். எங்கள் இணையப் படிவம் மூலம் அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்திய அதே YouTube கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் பதில்கள் பதிப்புரிமை நிர்வாகத்திற்கான உங்கள் தேவைகள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்கும். இதன் மூலம் உங்களுக்கேற்ற கருவியை எங்களால் கண்டறிய முடியும். படிவத்தைச் சமர்ப்பித்ததும், பின்வருபவற்றின் அடிப்படையில் உங்கள் பதில்களை மதிப்பாய்வு செய்து எங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் மூலம் உங்களுக்குத் தெரிவிப்போம்:

  • எவ்வளவு கால இடைவெளியில் வீடியோக்களைப் பதிவேற்றுகிறீர்கள்?
  • எவ்வளவு கால இடைவெளியில் உங்கள் வீடியோக்கள் மீண்டும் பதிவேற்றப்படுகின்றன?
  • நிறுவனத்தின் சார்பாக ஒரு கணக்கை நிர்வகிக்கிறீர்களா இல்லையா என்பது குறித்த விவரங்கள்
  • எங்கள் இணையப் படிவம் மூலம் நீங்கள் இதுவரை சமர்ப்பித்த கோரிக்கைகள். குறிப்பாக உங்கள் முந்தைய இணையப் படிவக் கோரிக்கைகள் பதிப்புரிமை குறித்த புரிதலையும் தொடர்ச்சியான அகற்றுதல்களுக்கான தேவையையும் எவ்வாறு காட்டுகின்றன என்பது குறித்த தகவல்கள்.

தொடர்ச்சியான பதிப்புரிமை நிர்வாகத்திற்கான எங்கள் கருவிகள் குறித்த கூடுதல் தகவல்களைக் கீழே அறியலாம்:

Copyright Match Tool

YouTubeல் பிற வீடியோக்களின் நகல்களாக விளங்கும் வீடியோக்களையோ நகல்களாக இருப்பதற்கான சாத்தியமுள்ள வீடியோக்களையோ Copyright Match Tool தானாகவே அடையாளம் காண முடியும். YouTubeல் ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட அல்லது அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக அகற்றப்பட்ட பிற வீடியோக்களுடன் பொருந்தும் வீடியோக்களை இந்தக் கருவி கண்டறியும். பொருந்தும் வீடியோக்கள் கண்டறியப்பட்டதும், பின்வருபவை போன்று அவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தேர்வுசெய்யலாம்:

  • பொருந்தும் வீடியோவைப் பதிவேற்றியவருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்
  • வீடியோவை அகற்றக் கோருதல்
  • பொருந்தும் வீடியோவைக் காப்பிடுதல்

Content ID பயன்படுத்தும் அதே பொருத்தமறியும் தொழில்நுட்பத்தையே Copyright Match Tool பயன்படுத்துகிறது. ஆனால் இதை எளிதாக நிர்வகிக்கலாம், குறைவான தகவல்களே தேவைப்படும்.

Copyright Match Tool குறித்து மேலும் அறிக.

உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்டம்

நீங்கள் அடிக்கடி வீடியோவை அகற்ற வேண்டியிருக்கும்பட்சத்தில் ஏற்கெனவே சரியான அகற்றுதல் கோரிக்கைகள் பலவற்றைச் சமர்ப்பித்துள்ளீர்கள் எனில் எங்கள் உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்டத்திற்கு நீங்கள் தகுதிபெறக்கூடும். பதிப்புரிமையை மீறுவதாகக் கருதும் வீடியோவைத் தேடுவதற்கும் ஒரே நேரத்தில் பல்வேறு வீடியோக்களை அகற்றக் கோருவதற்குமான ஒரு கருவியை இந்தத் திட்டம் பதிப்புரிமையாளர்களுக்கு வழங்குகிறது. 

தொடர்ச்சியான முறையில் பல்வேறு வீடியோக்களைத் தேடி அவற்றை அகற்ற வேண்டிய தேவையில்லையெனில் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதலுக்கான இணையப் படிவத்தைப் பயன்படுத்துவதே சிறந்த தேர்வாகும்.

உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்டம் குறித்து மேலும் அறிக.

Content ID

ரெக்கார்டு லேபிள்கள், திரைப்பட ஸ்டூடியோக்கள் போன்ற மிகவும் சிக்கலான பதிப்புரிமை நிர்வாகத் தேவைகளைக் கொண்டுள்ள பதிப்புரிமையாளர்களுக்கு Content ID கிடைக்கும். Content IDக்குத் தகுதிபெற, பிற நிபந்தனைகளுடன் கூடுதலாக பதிப்புரிமையாளர்கள் ஏற்கெனவே பல சரியான அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அத்துடன், Content IDயை நிர்வகிப்பதற்குத் தேவையானவற்றை வைத்திருக்க வேண்டும்.

Content ID என்பது பதிப்புரிமையை மீறக்கூடிய வீடியோவைத் தானாகவே அடையாளம் காணும் பொருத்தமறியும் சிஸ்டமாகும். YouTubeல் வீடியோக்கள் பதிவேற்றப்படும்போது, பதிப்புரிமையாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோக்களின் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு அவை ஸ்கேன் செய்யப்படும். உங்கள் வீடியோக்களில் ஒன்றுடன் பொருந்தும் வீடியோவை Content ID கண்டறிந்தால், பின்வருபவை போன்று அவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தேர்வுசெய்யலாம்:

  • பார்க்க முடியாதபடி ஒரு முழு வீடியோவைத் தடைசெய்தல்
  • வீடியோவில் விளம்பரங்களை இயக்கி அதன் மூலம் வருமானம் ஈட்டுதல், சில சமயங்களில் பதிவேற்றியவருடன் வருவாயைப் பகிர்தல்
  • வீடியோவின் பார்வையாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் கண்காணித்தல்

இந்த நடவடிக்கைகள் நாடு/பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடலாம். உதாரணமாக, ஒரு நாடு/பிராந்தியத்தில் வீடியோ மூலம் வருமானம் ஈட்டப்படக்கூடும். அதுவே வேறொரு நாடு/பிராந்தியத்தில் தடைசெய்யப்படக்கூடும் அல்லது கண்காணிக்கப்படக்கூடும்.

Content ID குறித்து மேலும் அறிக.

குறிப்புகள்

  • உள்நோக்கமின்றி Content IDயைத் தவறாகப் பயன்படுத்தினால் கூட YouTubeக்கும் கிரியேட்டர்களுக்கும் கடுமையான பின்விளைவுகள் ஏற்படலாம்.
  • தொடர்ந்து செயலிலுள்ள நிர்வாகமும் பதிப்புரிமை குறித்த மேம்பட்ட புரிதலும் தேவைப்படும் சிக்கலான கட்டுப்பாடுகள் Content IDயில் உள்ளன.
  • Content IDயைப் பயன்படுத்தும் பதிப்புரிமையாளர்கள் தங்கள் வீடியோ Content IDக்குத் தகுதிபெறுவதையும் தானியங்குப் பொருத்தமறியும் தொழில்நுட்பத்திற்குப் பாதுகாப்பானது என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
  • Content IDயைப் பயன்படுத்தி தங்கள் உரிமைகளை நிர்வகிக்க, பெரும்பாலான பதிப்புரிமையாளர்கள் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநரையே பயன்படுத்த விரும்புகிறார்கள். கட்டண அடிப்படையில் இந்த Content ID சேவை வழங்குநர்கள் பதிப்புரிமையாளர்களின் சார்பாகச் செயல்படுவார்கள். இந்த டைரக்டரியில் Content ID சேவை வழங்குநரைக் கண்டறியலாம்.
நினைவில் கொள்ளவும்:
  • அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு இந்தப் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகளில் எதையேனும் பயன்படுத்துவது சட்டரீதியான செயல்முறையைத் தொடங்கும்.
  • இந்தக் கருவிகளில் எதையேனும் தவறாகப் பயன்படுத்தினால் (தவறான தகவல்களைச் சமர்ப்பிப்பது போன்றவை), உங்கள் கணக்கு இடைநீக்கப்படக்கூடும் அல்லது பிற சட்டரீதியான பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.
  • அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் முன், ஒவ்வொரு சூழலிலும் நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் அல்லது பதிப்புரிமைக்குப் பொருந்தும் இதுபோன்ற பிற விதிவிலக்குகள் உள்ளனவா என்பதைக் கவனத்தில் கொள்வது மிக முக்கியமாகும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2716863192897385671
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false