பிளாட்ஃபார்முக்கு வெளியே ரிவார்டுகளைப் பெற கணக்கை இணையுங்கள்

உங்கள் Google கணக்கைக் கூட்டாளர் கணக்குடன் இணைத்து, தகுதிபெறும் லைவ் ஸ்ட்ரீம்களை YouTubeல் பார்க்கும்போது நீங்கள் பிளாட்ஃபார்முக்கு வெளியே ரிவார்டுகளைப் பெறலாம்.

குறிப்பு: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறைகளில் இந்த அம்சம் கிடைக்காமல் போகலாம். மேலும் அறிக.

உங்கள் கணக்குகளை இணைத்தல் அல்லது இணைப்பு நீக்குதல்

YouTube அமைப்புகளிலிருந்து

கணக்கை இணைத்தல்

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப்படத்திற்குச் சென்று அமைப்புகள்   என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இணைக்கப்பட்ட ஆப்ஸ் பிரிவுக்குச் செல்லவும்.
  4. நீங்கள் இணைக்க விரும்பும் கூட்டாளருக்கு அடுத்துள்ள இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
    1. உங்களிடம் ஏற்கெனவே கணக்கு இல்லை எனில் கூட்டாளர் இணையதளத்தில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு கணக்கை உருவாக்கவும். பிறகு படி 2ஐத் தொடங்கவும்.
  5. உங்கள் கூட்டாளர் கணக்கில் உள்நுழைவதற்கான படிகளைப் பின்பற்றவும்.

கணக்கை அகற்றுதல்

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப்படத்திற்குச்  சென்று அமைப்புகள்   என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இணைக்கப்பட்ட ஆப்ஸ் பிரிவுக்குச் செல்லவும்.
  4. நீங்கள் அகற்ற விரும்பும் கூட்டாளருக்கு அடுத்துள்ள அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

YouTube முகப்புப் பக்கத்திலிருந்து

கணக்கை இணைத்தல்

  1.  YouTubeல் உள்நுழையவும்.
  2. ரிவார்டுகளுக்குத் தகுதிபெறும் ஏதேனும் வீடியோ அல்லது லைவ் ஸ்ட்ரீமிற்குச் செல்லவும்.
  3. வீடியோ முகப்புப் பக்கத்தில் பிளேயருக்குக் கீழுள்ள இணை  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் கூட்டாளர் கணக்கில் உள்நுழைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உள்நுழைவுப் பகுதி பக்கத்தின் நடுப்பகுதியில் ஒரு பாப்-அப் சாளரமாகக் காட்டப்படும்.

கணக்கை அகற்றுதல்

  1.  YouTubeல் உள்நுழையவும்.
  2. ஏதேனும் தகுதிபெறும் வீடியோ அல்லது லைவ் ஸ்ட்ரீமுக்குச் செல்லவும்.
  3. வீடியோ முகப்புப் பக்கத்தில் பிளேயருக்குக் கீழுள்ள இணைக்கப்பட்டது  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் Google கணக்கிலிருந்து

உங்கள் Google கணக்கிலிருந்து கூட்டாளர் கணக்கை அகற்ற முடியும்.

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. myaccount.google.com/accountlinking இணைப்பிற்குச் செல்லவும்.
  3. நீங்கள் இணைப்பு நீக்க விரும்பும் கணக்கிற்கு அடுத்துள்ள இணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: ​உங்கள் கணக்குகளை இணைப்பு நீக்கிய பின்பு, தகுதிபெறும் வீடியோக்களையோ லைவ் ஸ்ட்ரீம்களையோ பார்ப்பதன் மூலம் ஆப்ஸில் நீங்கள் இனி ரிவார்டுகளைப் பெற முடியாது. உங்கள் கணக்கு இணைப்பு நீக்கப்பட்டிருந்தாலும் எங்கள் கூட்டாளர்கள் அந்தப் பார்வைகளுக்கான தரவை வைத்திருக்கக்கூடும். உங்கள் தரவை நிர்வகிக்க, உங்கள் கூட்டாளர் கணக்கைப் பார்க்கவும்.

கூட்டாளர் கணக்குகள்

Activision
Call of Duty கேமை உருவாக்கியது Activision நிறுவனமாகும். உங்கள் Activision கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட Call of Duty லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
Battle.net (Blizzard)
Battle.net, Overwatch, Hearthstone ஆகிய கேம்களை உருவாக்கியது Blizzard நிறுவனமாகும். உங்கள் Battle.net கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட Blizzard கேம்களின் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
Electronic Arts 
FIFA, Madden ஆகிய கேம்களை உருவாக்கியது Electronic Arts (EA) நிறுவனமாகும். உங்கள் EA கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட EA கேம்களின் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
Epic Games
Fortnite கேமை உருவாக்கியது Epic Games நிறுவனமாகும். உங்கள் Fortnite கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட Fortnite உலகக் கோப்பை வீடியோவைப் பார்க்கவும்.
Garena
Free Fire கேமை உருவாக்கியது Garena நிறுவனமாகும்.  உங்கள் Garena Free Fire கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட Garena Free Fire வீடியோக்களைப் பார்க்கவும்.
MLBB
Mobile Legends: Bang Bang (MLBB) கேமை உருவாக்கியது Moonton நிறுவனமாகும். உங்கள் MLBB கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட MLBB லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
NFL
NFL இடம் இருந்து பிளாட்ஃபார்முக்கு வெளியே ரிவார்டுகளைப் பெற, உங்கள் NFL ஐடி கணக்கை இணைக்கவும்.
Krafton (PUBG)
PLAYERUNKNOWN’S BATTLEGROUNDS கேமை உருவாக்கியது Krafton நிறுவனம் ஆகும். உங்கள் கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளைப் பெற, தகுதிபெறும் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
PlayerUnknown's Battlegrounds Mobile (PUBG Mobile)
PlayerUnknown’s Battlegrounds (PUBG) Mobile கேமை உருவாக்கியது Tencent Games நிறுவனமாகும். உங்கள் கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட PUBG Mobile லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
Riot Games
League of Legends, Legends of Runeterra, Teamfight Tactics ஆகிய கேம்களை உருவாக்கியது Riot Games நிறுவனமாகும். உங்கள் கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளைப் பெற, தகுதிபெறும் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.
Supercell

Clash Royale கேமை உருவாக்கியது Supercell நிறுவனமாகும். உங்கள் Supercell கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட Clash Royale/Clash Royale League லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.

Ubisoft
Assassin's Creed மற்றும் Tom Clancy's Rainbow Six கேம்களை உருவாக்கியது Ubisoft நிறுவனமாகும். உங்கள் கணக்கை இணைத்த பிறகு ரிவார்டுகளுக்குத் தகுதிபெற, குறிப்பிட்ட Ubisoft கேம்களின் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கவும்.

பொதுவான கேள்விகள்

எனது கணக்குகளை இணைத்து தகுதிபெறும் லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்கிறேன். ஏன் எனக்கு ரிவார்டுகள் எதுவும் கிடைக்கவில்லை?

ஒவ்வொரு லைவ் ஸ்ட்ரீமிற்கான விதிகளின் அடிப்படையில் தகுதி பெறும் பார்வையாளர்களில் யார் ரிவார்டுகளைப் பெறுவார்கள் என்பதை எங்கள் கூட்டாளர்கள் இறுதியாகத் தேர்வுசெய்வார்கள். கூட்டாளரைப் பொறுத்து விதிகள் மாறக்கூடும்.  
நீங்கள் தகுதிபெறுவதை உறுதிப்படுத்த, உங்களிடம் இணைக்கப்பட்ட கணக்குகள் இருப்பதையும் கம்ப்யூட்டரிலோ YouTube மொபைல் ஆப்ஸிலோ எங்கள் மொபைல் வலைதளத்திலோ லைவ் ஸ்ட்ரீமைப் பார்ப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும். உட்பொதிக்கப்பட்ட பிளேயர்களிலோ YouTube ஸ்மார்ட் டிவி ஆப்ஸிலோ அலைபரப்பு மூலமாகவோ லைவ் ஸ்ட்ரீமைப் பார்த்தால் ரிவார்டுகளுக்குத் தகுதிபெற மாட்டீர்கள்.
To check if the video is eligible, you can look at the videos’ Player Settings, where eligible videos will include an option for you to review your linked account state.
Android அல்லது iOSஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், YouTubeன் சமீபத்திய பதிப்பை உபயோகிப்பதை உறுதிசெய்துகொள்ளவும். 

எனக்கு ரிவார்டுகள் கிடைத்தால் எப்படித் தெரிந்துகொள்வது?

நீங்கள் வெற்றி பெற்றதும் உங்கள் கூட்டாளர் கணக்கில் ரிவார்டுகள் வழங்கப்படும். கணக்கில் இந்த ரிவார்டுகள் காட்டப்படுவதற்கு ஒருநாள் வரை ஆகக்கூடும். கூடுதல் தகவல்களுக்கு கூட்டாளர் வலைதளத்தைப் பார்க்கவும்.

இந்த அம்சம் மொபைலில் உள்ளதா?

கம்ப்யூட்டர், மொபைல் ஆப்ஸ், எங்கள் மொபைல் வலைதளமான m.youtube.comஆகியவற்றிலும்  பிக்ச்சர்-இன்-பிக்ச்சர் மூலம் பார்க்கும்போதும் ரிவார்டுகள் கிடைக்கின்றன. உட்பொதிக்கப்பட்ட பிளேயர்களில் பார்த்தால், ரிவார்டுகளுக்குத் தகுதிபெற மாட்டீர்கள்.
எனது கணக்கை இணைக்க முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
உள்நுழைந்துள்ளீர்களா என்பதை முதலில் சரிபார்க்கவும். உங்கள் கணக்குகளை இணைக்க, உங்கள் உலாவியில் பாப்-அப்களை அனுமதிக்க வேண்டியிருக்கும். Safari உலாவியில் இணைக்க முடியவில்லை எனில் வேறு உலாவியைப் பயன்படுத்தவும். 
கவனத்திற்கு: தனிப்பட்ட கணக்குகளை மட்டுமே இணைக்க முடியும், பிராண்டு கணக்குகளை இணைக்க முடியாது. இணைப்பதற்கு முயலும்போது, தனிப்பட்ட கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
வீடியோ சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்டிருந்தால் கணக்கை இணைக்க முடியாது.

எனது கணக்குகள் இணைக்கப்பட்டன என்ற மெசேஜைப் பெற்றேன். ஆனால் அவை இணைக்கப்பட்டதாகக் காட்டவில்லை. ரிவார்டுகளைப் பெற நான் இப்போதும் தகுதிபெற்றுள்ளேனா?

சில சமயங்களில், உங்கள் கணக்குகள் இணைக்கப்பட்டதற்கும் அவை இணைக்கப்பட்டதாகக் காட்டப்படுவதற்கும் இடையே காலதாமதம் ஏற்படும்.
உங்கள் கணக்குகள் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்த இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இந்தப் பக்கத்தில் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் சேவைகளையும் பார்க்கலாம். எந்தச் சேவையில் இருந்தும் இணைப்பை நீக்கவும் செய்யலாம்.
உங்கள் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளதாக இந்தப் பக்கத்தில் காட்டும் வரை ரிவார்டுகளைப் பெற தகுதிபெறுவீர்கள்.
உங்கள் கணக்குகள் இணைக்கப்படவில்லை என்று காட்டினால் கணக்குகளை இணைப்பு நீக்கம் செய்து பிறகு மீண்டும் இணைக்கவும்.

எனது கணக்குகளை இணைப்பு நீக்கம் செய்ய முயல்கிறேன். ஆனால் அவை இன்னும் இணைக்கப்பட்டதாகவே காட்டப்படுகின்றன. ஏன்?

சில சமயங்களில், உங்கள் கணக்குகள் இணைப்பு நீக்கப்பட்டதற்கும் அவை இணைப்பு நீக்கப்பட்டதாகக் காட்டப்படுவதற்கும் இடையே காலதாமதம் ஏற்படும்.
உங்கள் கணக்குகள் இணைப்பு நீக்கப்பட்டதை உறுதிப்படுத்த இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். சேவையானது இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்படவில்லை எனில் உங்கள் கணக்குகள் இணைக்கப்படவில்லை என்று அர்த்தமாகும்.

எனது கணக்கை இணைக்கும்போது Googleளுக்கும் எனது கூட்டாளர் கணக்கிற்கும் இடையே எந்த வகையான தகவல்கள் பகிரப்படுகின்றன?

YouTubeல் உங்கள் கணக்கை இணைத்ததும், YouTube நீங்கள் பார்ப்பவை பற்றிய தகவல்களையும் சந்தாவின் நிலையையும் பகிரலாம். கணக்கு தொடர்பான அடிப்படைத் தகவல்களை Googleளுடனோ YouTube உடனோ கூட்டாளர் நிறுவனம் பகிரக்கூடும் ரிவார்டுகளுக்குத் தகுதிபெறும் கணக்குகளை இந்தத் தகவல்கள் எங்களுக்குத் தெரிவிக்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10153964690625344683
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false