ஹேக் செய்யப்பட்ட YouTube சேனலை மீட்டெடுத்தல்

ஒரு கிரியேட்டராக, உங்கள் உள்ளடக்கத்திலும் சேனல்களிலும் நீங்கள் நிறைய நேரம் செலவிடுகிறீர்கள். உங்கள் சேனல் ஹேக் செய்யப்பட்டால், உங்களுக்கு மன அழுத்தமும் கடினமான சூழலும் ஏற்படக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். அத்தகைய சூழலில் உங்கள் சேனலை மீட்டெடுப்பதற்கு நீங்கள் பின்பற்றக்கூடிய படிகள் உள்ளன.

நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, உங்கள் சேனல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

ஒவ்வொரு YouTube சேனலும் குறைந்தது ஒரு Google கணக்குடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு YouTube சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது எனில், அந்தச் சேனலுடன் தொடர்புடைய Google கணக்குகளில் குறைந்தது ஒரு கணக்கும் அபகரிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

பின்வருவனவற்றில் எதையேனும் நீங்கள் கவனித்தால், உங்கள் Google கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம், ஹைஜேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது களவாடப்பட்டிருக்கலாம்:

  • நீங்கள் செய்யாத மாற்றங்கள்: உங்கள் சுயவிவரப் படம், விளக்கங்கள், மின்னஞ்சல் அமைப்புகள், YouTubeக்கான AdSense கணக்கு இணைப்பு, அனுப்பப்பட்ட மெசேஜ்கள் ஆகியவை மாறியிருப்பது.
  • உங்களுக்குச் சொந்தமில்லாத வீடியோக்கள் பதிவேற்றப்பட்டிருத்தல்: உங்கள் Google கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டது போலவே வீடியோக்களை வேறொருவர் பதிவேற்றியிருப்பது. தவறான உள்ளடக்கத்திற்கு எதிர்ப்புகள் அல்லது அபராதங்கள் விதிக்கப்பட்டு இந்த வீடியோக்கள் குறித்த மின்னஞ்சல் அறிவிப்புகளை நீங்கள் பெறக்கூடும்.

பல்வேறு காரணங்களுக்காக Google கணக்குகள் ஹேக் செய்யப்படலாம், ஹைஜேக் செய்யப்படலாம் அல்லது அபகரிக்கப்படலாம். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கமும் (மால்வேர்) உங்களுக்கு நன்கு தெரிந்த சேவை வகை போல் காட்சியளிக்கும் ஏமாற்றக்கூடிய மின்னஞ்சல்களும் (ஃபிஷிங்) இந்தக் காரணங்களில் அடங்கும். கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல் குறித்த தகவல்களையும் பிறருடன் ஒருபோதும் பகிராதீர்கள். நம்பகமற்ற ஆதாரத்திலிருந்து ஃபைல்களையோ மென்பொருளையோ ஒருபோதும் பதிவிறக்காதீர்கள்.

ஹேக் செய்யப்பட்ட YouTube சேனலை மீட்டெடுக்க, முதலில் அந்தச் சேனலுடன் தொடர்புடைய ஹேக் செய்யப்பட்ட Google கணக்கை மீட்டெடுப்பது அவசியம்.

உங்கள் YouTube சேனலை மீட்டெடுக்க 3 படிகள் உள்ளன:

1. YouTube சேனலுடன் தொடர்புடைய ஹேக் செய்யப்பட்ட Google கணக்கை மீட்டெடுத்துப் பாதுகாத்திடுங்கள்
2. சமூக வழிகாட்டுதல்கள்/பதிப்புரிமை எதிர்ப்புகள் போன்ற கொள்கையை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க YouTube சேனலில் செய்யப்பட்டிருக்கும் தேவையில்லாத மாற்றங்களை உடனடியாக மாற்றியமையுங்கள்
3. தொடர்புடைய அனைத்துச் சேனல் பயனர்களுடனும் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் Google கணக்கில் அங்கீகாரமற்ற அணுகலால் ஏற்படும் அபாயத்தைக் குறையுங்கள்

உங்கள் Google கணக்கை மீட்டெடுத்தல்

உங்கள் Google கணக்கில் இப்போதும் உங்களால் உள்நுழைய முடிகிறது எனில்

உங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பித்து, Google கணக்கைப் பாதுகாப்பது முக்கியம். அதன் பிறகு அடுத்த படிக்குச் செல்லவும்.

உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியவில்லை எனில்

உங்கள் Google கணக்கில் மீண்டும் உள்நுழைவது தொடர்பான உதவிக்கு:

  1. Google கணக்கு அல்லது Gmailலை மீட்டெடுப்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.
  2. கடவுச்சொல்லை மீட்டமைக்கும்படி கேட்கப்படும் போது கடவுச்சொல்லை மீட்டமைக்கவும். இந்தக் கணக்கில் ஏற்கெனவே பயன்படுத்தாத வலிமையான கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும். வலிமையான கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது என அறிக.

உங்கள் சேனல் நிர்வாகிகள்/உரிமையாளர்களையும் இதே படிகளைப் பின்பற்றி அவர்களது Google கணக்கைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்துங்கள்.

ஹேக் செய்யப்படுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு உங்கள் சேனலை மாற்றியமைத்தல்

ஹேக் செய்யப்படுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு உங்கள் சேனலை மாற்றியமைப்பதற்கான உதவிக்கு:

  1. சேனல் பெயர்/ஹேண்டிலை அகற்றவும்
  2. சேனல் பேனர்/லோகோவை மாற்றவும்
  3. வீடியோவின் பார்வையாளர் அனுமதி அமைப்புகளை மாற்றவும்
  4. தெரியாத சேனல் பயனர்களையோ பிராண்டு கணக்குப் பயனர்களையோ அகற்றவும்
  5. பதிப்புரிமை எதிர்ப்புகளைத் தீர்க்கவும்

அங்கீகாரமற்ற அணுகலால் ஏற்படும் அபாயத்தைக் குறைத்தல்

மேலுள்ள படிகளை நிறைவுசெய்த பிறகு, சேனலுடன் தொடர்புடைய உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்:

  1. மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை இயக்கவும்
  2. உங்கள் கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் இருபடிச் சரிபார்ப்பை இயக்கவும்
  3. மீட்பு மொபைல் எண்ணையோ மின்னஞ்சல் முகவரியையோ அமைக்கவும் அல்லது மாற்றவும்
  4. Google கணக்கின் பாதுகாப்புச் சரிபார்ப்பைப் பார்க்கவும்
  5. ஃபிஷிங் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பைப் பெற கடவுச்சாவியை அமைக்கவும்
  6. மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்

உங்கள் Google கணக்கு ஹேக் செய்யப்பட்ட பிறகு உங்கள் சேனல் முடக்கப்பட்டிருந்தால்

உங்கள் Google கணக்கை மீட்டெடுத்த பிறகு, சேனல் முடக்கத்தை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பது குறித்த கூடுதல் விவரங்களுடனான மின்னஞ்சலை உங்கள் இன்பாக்ஸில் பார்க்கலாம். ஹேக் செய்யப்பட்ட உங்கள் Google கணக்கை மீட்டெடுத்த பிறகு, மறுபரிசீலனை செய்யும்படி இந்தப் படிவம் மூலம் கேட்கலாம். கணக்கு மீட்டெடுப்பு நிறைவடையவில்லை எனில் உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை ஏற்கப்படாமல் போகலாம்.

கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுதல்

உங்கள் சேனல் தகுதிபெற்றிருந்தால் (உதாரணமாக, நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்தால்), உங்கள் Google கணக்கை மீட்டெடுத்த பிறகு உதவிக்கு YouTube கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்வது எப்படி என்பதை அறிக.

பொதுவான கேள்விகள்

எனது சேனலை மீட்டுவிட்டேன். ஆனால் ஹேக்கர் அகற்றப்பட்டாரா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

ஹைஜேக்கர் அகற்றப்பட்டாரா என்பதைச் சில சமயங்களில் எங்களால் தீர்மானிக்க முடியாது. எதிர்காலத்தில் ஹேக் செய்யப்படுவதைத் தடுக்க, உங்கள் YouTube சேனலைச் சரிபார்த்து உங்கள் Google கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.  

YouTube சமூக வழிகாட்டுதல்களை மீறும் வகையில் வீடியோக்களை ஹேக்கர் பதிவேற்றினால் எனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? எனது சேனல் முடக்கப்படுமா?

YouTubeல் உள்ள அனைத்து வீடியோக்களும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களுடன் இணங்க வேண்டும் என்பதால் நீங்கள் பதிவேற்றாத வீடியோக்களை உடனடியாக நீக்குங்கள். ஹேக் செய்யப்பட்ட காரணத்தால் உங்கள் சேனல் முடக்கப்பட்டிருந்தால், உங்கள் Google கணக்கை மீட்டெடுத்தவுடன் மறுபரிசீலனைக் கோரிக்கையை இங்கே சமர்ப்பிக்கலாம். கணக்கு மீட்டெடுப்பு நிறைவடையவில்லை எனில் உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை ஏற்கப்படாமல் போகலாம். கூடுதல் கேள்விகள் இருந்தால், கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.

எனது சேனலை நிர்வகிக்கும் நபர்களில் ஒருவருடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஹேக் செய்யப்படுவதிலிருந்து தடுக்க நான் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாகவே YouTubeல் உள்ள சேனல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பார்கள். பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சேனலின் பாதுகாப்பை மேம்படுத்தலாம்: 

  • நீங்களும் உங்கள் குழுவில் உள்ள மற்றவர்களும் உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். 
  • அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் மட்டுமே உங்கள் சேனலை நிர்வகிப்பதற்கான அணுகலைப் பெற்றுள்ளது என்பதையும் அதுவும் நீங்கள் விரும்பும் அனுமதி நிலையில் மட்டுமே அவற்றால் அணுக முடியும் என்பதை உறுதிசெய்துகொள்ள, சேனல் அனுமதிகள் கருவியையும் பிராண்டு கணக்கு கருவியையும் பயன்படுத்துங்கள். கடவுச்சொற்கள் அல்லது உள்நுழைவுத் தகவலை யாருடனும் பகிராதீர்கள். சேனல் அனுமதிகள் அம்சம் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளின் மூலமாக மட்டுமே உங்கள் சேனலை அணுக வேண்டும்.
  • தரவு மீறல்களைத் தடுப்பதற்கு உதவ, உங்கள் பிற கணக்குகளுக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறுபட்ட மின்னஞ்சல் முகவரியை YouTube சேனலுக்குப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரே மின்னஞ்சல் முகவரியை அனைத்துப் பிளாட்ஃபார்ம்களிலும் பயன்படுத்தியிருந்து, யாருக்கேனும் அதற்கான அணுகல் கிடைத்திருந்தால், அவர்களால் உங்கள் YouTube மற்றும் பிற கணக்குகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையகப்படுத்த முடியும்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12397499445779755077
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false